ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான விசா 89.4 எப்எம் மேலாண்மை இயக்குனரான ரமணி என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி 106.5 கில்லி எஃப் எம் மேலாண்மை இயக்குனரான கனகராஜ் என்பவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
Tag: துபாய்
தமிழ் சினிமாவினுடைய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்மையில் நடந்த தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பார்த்திபன் பெற்றார். தற்போது அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார். மேலும் இரவின் நிழல் எனும் தமிழ் திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசை […]
மக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரத்தை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று நடத்தியுள்ளது. உலகில் உள்ள பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரங்களை தேர்வு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தியது. அந்த ஆய்வானது சராசரி மழைப்பொழிவு, வெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உலகிலேயே பொதுமக்கள் அதிகம் […]
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் டிஸ்னி திரைப்படங்களில் வருவது போல அதிசய உலகம் அலங்கரிக்கப்பட்டதற்கு நடுவே வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் நெருங்கிவரும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிஸ்னி திரைப்படங்களில் வரும் அதிசய உலகம் போன்று அல்-வாஸ்ல்-பிளாசா வால்ட் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் 65 அடி உயர கிறிஸ்மஸ் மரம் ஒன்று வண்ணமயமாக ஓளிரூட்டப்பட்டுள்ளது. […]
துபாயில் அமீரக சுகாதார மந்திரியான அப்துல் ரஹ்மான் பிறகு முகம்மது அல் ஒவைஸ் உடன் இந்திய சுகாதார மந்திரியான டாக்டர் மன்சுக் மாண்டவியா சந்தித்து பேசினார். அமீரகம் வந்து உள்ள இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா துபாயில், அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைசை சந்தித்து பேசினார். இந்நிலையில் சுகாதாரத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் […]
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் சுமார் 22 நிமிடம் ஒரே நிலையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த தமிழக பெண்மணிக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. துபாயில் எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியிலுள்ள இந்திய அரங்கத்தில் கலாச்சாரம், வர்த்தகம், விளையாட்டு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தமிழ் தொழில் முனைவோர் சங்கம் யோகா உலக சாதனை நிகழ்ச்சிக்கு […]
நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு வழக்கத்தைவிட 8 மடங்கு கூடுதலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துபாய் நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. துபாய் நாட்டில் ஏற்கனவே எக்ஸ்போ 2020 என்னும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெருங்கி வரும் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு துபாயில் வழக்கத்தை விட 8 மடங்கு கூடுதலாக வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த இசையுடன் கூடிய […]
பொதுவாக அலுவலக பணி என்றாலே, காகித பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்தநிலையில், அலுவல் பணிகளுக்கு 100% காகிதத்தை பயன்படுத்தாத முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாறியுள்ளது. துபாய் அரசின் அனைத்து உள் மற்றும் வெளி தொடர்புகள் பரிவர்த்தனைகள், சேவைகள் இவை அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறியுள்ளதாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி துபாய் உலகின் முன்னணி டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காகித […]
துபாயில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. துபாயில் வாழும் இந்திய வம்சாவளியினரான Harun Sheikh என்பவருக்கு Big Ticket Abu Dhabi நிறுவனம் வாரந்தோறும் நடத்தும் மில்லியன் லாட்டரி குலுக்களின் மூலம் 2 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. Big Ticket Abu Dhabi நிறுவனம், தன் முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, “எங்களின் லாட்டரி குலுக்களில் 1 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ள Harun Sheikh-ற்கு […]
பிற நாட்டினரின் சிறப்பான வாழ்க்கைக்கும், பணி சூழலுக்கும் சிறந்த நகரங்களில் துபாய் 3-ஆம் இடத்தையும், அபுதாபி 16-ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது. சர்வதேச நிறுவனம் உலகில் இருக்கும் 57 நகரங்களில், பிற நாட்டினர் சிறப்பாக வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கு எது சிறந்த நகரம் ? என்பது தொடர்பில் புள்ளி விவரங்களை சேகரித்து இருக்கிறது. இதில், சுமார் 12,420 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, சிறந்த நகரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் துபாய் நகரத்திற்கு கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் 20வது […]
துபாயில் நேற்று 26 உலக நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி பிரமாண்டமாக தொடங்கியது. துபாயில் நேற்று பிரபல பொழுதுபோக்கு கண்காட்சியில் ஒன்றான குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் 26 ஆவது ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி, ஏமன் உள்ளிட்ட 26 நாடுகள் அரங்குகள் அமைத்துள்ளது. மேலும், இந்த ஆண்டு புதியதாக ஈராக் நாடும் அரங்கினை அமைத்துள்ளது. இந்த கண்காட்சியில், 80 நாடுகளின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் […]
துபாயில் மிகப்பெரிய ராட்டின விழா பிரம்மாண்டமாக வானவேடிக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள புளூ வாட்டர்ஸ் தீவில் Ain Dubai ferris wheel என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு துபாயின் கண் என்று பொருள். இந்த ராட்டின துவக்க விழாவானது நேற்று முன்தினம் இன்னிசை கச்சேரி, உணவுக் கடைகள் மற்றும் கண்களை பறிக்கும் வான வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மேலும் இது 11,210 டன் எஃகு கொண்டு உலகின் மிகப்பெரிய இரண்டு கிரேன்கள் மூலம் […]
பிறக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய தம்பதிகள் புலியை பயன்படுத்திய வீடியோ கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. துபாயில் வசித்து வரும் தம்பதியினர் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் வகையில் விருந்து ஒன்றை கொடுத்தனர். இதற்காக அந்த தம்பதியினர் கடற்கரைப் பகுதியில் இரண்டு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்கள் சிலவற்றை கயிற்றில் கட்டி வானில் பறக்க விட்டனர். பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியை பயன்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற […]
எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சியில் ஏழு நாட்டு தூதர்கள் துணை அதிபர் முன்பாக பதவியேற்றுக் கொண்டனர். பொதுவாக தூதர்கள் பதவியேற்கும் பொழுது தங்கள் நாட்டிலிருந்து வழங்கப்பட்ட பதவி நியமனத்திற்கான ஆவணத்தை அதிபர் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ளவர்களிடம் ஒப்படைத்து பணியாற்ற வேண்டும் என்ற மரபு அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அமீரகத்துக்கான ஜோர்டான், ஸ்பெயின், டிஜிபவுட்டி, ஜிம்பாவே, கம்போடியா, ஹாண்டுராஸ், பூட்டான் போன்ற ஏழு நாடுகளுக்கான தூதர்கள் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் […]
துபாயில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளருக்கு காணொளி காட்சி மூலமாக மனித நேயத்திற்கான விருது வழங்கப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த முதுவை ஹிதாயத் என்ற நபர் துபாயில் வசித்து வருகிறார். அங்கு ஊடகத் துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனிதநேய பணிகள் மேற்கொண்டதற்கான விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் மனிதநேயம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதன்பின்பு, மனித நேயத்திற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி […]
மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிப் பூக்கள் துபாயில் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றது. மதுரை மல்லியின் வாசம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் மதுரை மல்லிகை கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி அதனை அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது இல்ல நிகழ்ச்சிக்காகவும், அலங்காரங்கள் செய்யவும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மல்லிகை மலர்களை மதுரையிலிருந்து துபாய்க்கு அதிக அளவில் இறக்குமதி செய்து விற்பனை […]
அமீரகத்தின் துணை அதிபர் எக்ஸ்போ 2020 கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நாட்டின் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். துபாயில் மிக பிரமாண்டமாக தொடங்கிய ‘எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில்’ 192 நாடுகள் பங்கேற்றன. மேலும் கண்காட்சியின் 3 ஆவது நாளை, அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் பார்வையிட்டார். அப்போது பல நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அமீரக துணை அதிபருடன் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு […]
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் வந்துள்ளார். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றின் சார்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரையிலும் மெட்ரோ ரயிலின் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி “ரூட் 2020” என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், […]
எக்ஸ்போ கண்காட்சியின் வளாக கட்டுமான பணியில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த தகவலை அமீரகம் தற்போது வெளியிட்டுள்ளது. உலகின் மிக பிரமாண்டமான ‘துபாய் எக்ஸ்போ-2020’ கண்காட்சி அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் தொடங்கியது. இந்த விழாவில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டன. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 1000 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தை அமீரக அரசு கட்ட தொடங்கியது. இந்தக் கட்டுமானப் பணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் 2 லட்சம் பேர் […]
துபாயில் ஆறு மாதம் நடக்கவுள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நேற்றிரவு தொடங்க பட்டுள்ளது. துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது. இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் […]
துபாயில் அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது உலக கண்காட்சியானது அடுத்த மாதத்தில் துபாயில் துவங்கவுள்ளது. இந்த Expo 2020யில் இந்தியா உள்ளிட்ட 192 உலக நாடுகள்பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட ஒருவருக்கு கட்டணத் தொகையாக 95 திர்ஹாம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 2 கோடிக்கும் மேல் மக்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது அங்குள்ள முதலீட்டு பூங்காவில் சுமார் 1080 ஏக்கர் […]
துபாய் மற்றும் ஜெய்ப்பூருக்கு இடையேயான விமான சேவை விரைவாக தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, விமான போக்குவரத்து தொடர்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு, துபாயிலிருந்து இயக்கப்பட்ட விமான போக்குவரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஜெய்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, விமான […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய அணி வீரர்களுக்கும் 2முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .இந்த பரிசோதனையில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற நெகட்டிவ் முடிவு வந்தாலும் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் 2-வது பாதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக […]
நான் நன்றாக இருக்கிறேன். என்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்துக்கு தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கோளாறு, தொண்டையில் தொற்று உள்ளிட்ட உடல் நல பாதிப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவரால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இதனையடுத்து அவர் தனது உடல் நல பாதிப்புகளுக்காக சிங்கப்பூரில் இருக்கும் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.. அதேபோல சென்னை மற்றும் […]
துபாயில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 3.352 கிலோ எடை கொண்ட தங்கம் 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்க இலாகா பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இரண்டு பேரிடமும், சார்ஜாவில் இருந்து வந்த ஒருவரிடமும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு வந்த பயணி ஒருவர் 1600 சிகரெட் மட்டும் முகம் பூசும் கிரீம், ஆய்த்த ஆடைகள் ஆகியவற்றை கடத்தி வந்துள்ளார். அதையும் அதிகாரிகள் […]
துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் ஒரு பிரம்மாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐன் துபாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப் பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம். இந்த ராட்டினம் 250 மீட்டர் உயரம் ஆகும். பிரிட்டனின் லண்டனிலுள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது. இந்நிலையில் இந்த ராட்டினம் […]
அமீரகத்தில் நேற்று, பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருக்கும் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. அமீரகத்தில், மருத்துவர்கள், திறனாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு கோல்டன் விசா என்ற தலைப்பில் 10 வருடங்களுக்கான விசா அளித்து வருகின்றனர். இதில், எப்போதாவது, சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கோல்டன் விசா அளிக்கப்படும். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், துபாயில் வாழ்ந்து வரும் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா […]
இந்தியா,இலங்கை உட்பட நாடுகளிலிருந்து சுற்றுலா விசா மூலமாக துபாய் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்தியா ,இலங்கை ,நேபாளம் ,பாகிஸ்தான் , உட்பட 6 நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் படி குடியிருப்பு விசா உள்ளவர்கள் பரிசோதனை முடிவுடன் மத்திய அடையாளம் ,குடியுரிமை ஆணையம் ,குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தில் முன் அனுமதியுடன் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு […]
முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மத் பின் ராஷித் மக்தூம் துவங்கி வைத்துள்ளார். துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவங்கி வைப்பதற்க்கு விழா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் என அனைவரையும் மின்சாரம் மற்றும் குடிநீர் […]
துபாய் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 5 நாட்டு பயணிகள் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவையில்லை என்ற தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகம் உறுதி செய்துள்ளது. துபாய் அரசாங்கம் வெளிநாட்டு பயணிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியா போன்ற 5 நாடுகளிலிருந்து துபாய் நாட்டிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா தடுப்பூசியை சான்றிதழை வைத்திருக்கத் தேவையில்லை […]
ஆயர்வேத பெண் மருத்துவருக்கு துபாயில் கிடைத்துள்ள கௌரவமானது அனைருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திண்டிவனத்தை சேர்ந்தவர் டாக்டர் நஸ்ரின் பேகம். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நஸ்ரின் மருத்துவ பணிக்காக 2013 இல் துபாய் சென்றுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு மருத்துவ உரிமம் பெற்றுள்ளார். இதனை அடுத்து சபீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஆயுஸ் […]
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் ஏறி நின்ற பெண்ணைக் கண்டு அனைவரும் உறைந்துபோய் நின்றனர். உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலிஃபா உச்சியின் மீது பெண் பணியாளர் ஒருவர் ‘Fly Better’ என்ற வாசகம் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விளம்பர சேவைக்காக அவ்வாறு நின்றுள்ளார். இந்த காட்சியானது கமெரா வரை செல்லும் பொது அந்த பெண் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் நிற்பது தெளிவாக தெரிந்தது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி வேலை தேடி வந்த இடத்தில் தற்போது தனது புகைப்படம் வரும் அளவிற்கு உயர்ந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய் சேதுபதி ஆரம்ப காலங்களில் பல துன்பங்களையும் சந்தித்துள்ளார். ஆனால் விடா முயற்சியின் காரணமாக சிறு வேடங்களில் நடித்து பிறகு பல படங்களிலும் […]
நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம் துபாயின் எதிர்கால அருங்காட்சியகத்தை உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது. துபாய் நகரின் ஷேக் ஜாயித் சாலையில் கட்டிடக் கலைக்காக சர்வதேச விருது பெற்ற எதிர்கால அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அதன் கட்டிட கலையையும் கொண்டதாக திகழ்கிறது. இந்நிலையில் நேஷனல் ஜாக்ரஃபிக் எனப்படும் தேசிய பூகோளவியல் நிறுவனம், உலகின் 14 அழகான அருங்காட்சியகத்தில் ஒன்றாக, துபாயிலுள்ள கட்டிடக்கலையின் அதிசயமாக திகழ்ந்து […]
மிகப்பெரிய நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கடற்படை வீரர்கள் குளத்தின் ஆழமான பகுதி வரை சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். துபாய் நாத் அல்செபா பகுதியில் டீப் டைவ் என்ற நிறுவனம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்ட நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளது. இந்த நீச்சல் குளமானது ஒலிம்பிக் நீச்சல் குளத்தை போல ஆறு மடங்கு அகலத்தை உடையது. மேலும் நீச்சல் குளத்தில் ஹைபர்பரிக் என்ற ஒரு நகரம் மூழ்கும் அளவு ஆழமான […]
துபாயில் அமைக்கப்பட்டிருக்கும் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல்குளம் இன்றிலிருந்து மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. துபாயில் இருக்கும் நாத் அல் செபா என்ற பகுதிக்கு அருகில் டீப் டைவ் நிறுவனம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை அமைத்திருக்கிறது. இது மொத்தமாக 197 அடி ஆழமும் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீரும் கொண்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவை கொண்டிருக்கிறது. இதில் ஹைபர் பேரிக் என்ற பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு […]
துபாயில் ஒரு நிறுவனத்தில் 60,000 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் விற்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் அதிகமானோர் விரும்பி உண்ணக்கூடிய உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது. எனவே உலகின் பல்வேறு இடங்களில், பல வகைகளில், பல நிறங்களில் அதிக ருசியுடன் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் துபாயில், “ஸ்கூப்பி கபே” என்ற நிறுவனம் சுமார் 60,000 ரூபாய்க்கு ஒரு ஐஸ்கிரீமை விற்கிறது. இது என்ன? தங்கத்தின் விலை போன்று இவ்வளவு அதிகமாக உள்ளது என்று ஆச்சரியப்படலாம். ஆம், இந்த ஐஸ்கிரீமில் தங்க இழைகளை […]
எந்த விலங்கினத்தில் உள்ள ஆண்டிபாடி நோய் எதிர்ப்பு பொருள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் ? என்ற ஆய்வினை துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் மேற்கொண்டு வருகிறது. துபாய் மத்திய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் சார்பில் கொரோனா வைரஸை விலங்குகளின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு பொருள் எதிர்த்துப் போராடுமா ? என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மான், சிங்கம், ஒட்டகம், புலி, பூனை, குதிரை, ஆடு, நாய் உள்ளிட்ட 18 வகையான […]
துபாயில் உள்ள ஸ்கூப்பி கபே என்ற நிறுவனத்தில் சமீபத்தில் “பிளாக் டைமண்ட்” என்ற ஐஸ்கிரீமை தயாரித்துள்ளனர். இதன் விலை 840 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ60 ஆயிரம் ). இந்த ஐஸ்கிரீமிற்கு இந்த விலை வந்ததற்கு முக்கியமான காரணம் இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தான். இந்த ஐஸ்கிரீமில் 23 கேரட் தங்க இழைகள், சாப்ரான், பிளாக் ட்ரூபிள் ஆகிய பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஐஸ்கிரீம் வெர்சேஸ் வகை பவுலில் பரிமாறப்படுகிறது. இதை சாப்பிட வெள்ளி […]
துபாயில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலையில் Gulf Air மற்றும் FlyDubai ஆகிய 2 விமானங்களும் திடீரென்று ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுளள்ளது. அதாவது விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லக்கூடிய சாலையில் மோதியிருக்கிறது. இதில், FlyDubai என்ற விமானத்தின் இறக்கை, மற்றும் Gulf Air என்ற விமானத்தின் பின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக […]
துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி டிக்கெட்டில் இந்தியர் ஒருவருக்கு 7 கோடி பணம் பரிசாக விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம். மும்பையை சேர்ந்தவர் கணேஷ் சிண்டே, ஒரு கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது துபாய்க்கு சென்று வந்தபோது லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார். துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவிலிருந்து துபாய்க்கு வருகிற 21 ஆம் தேதி வரை விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. துபாய் நாட்டிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலீட்டு விசா, கோல்டன் விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ […]
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியானது, வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அரங்கிற்காக 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. துபாயில் கடந்த வருடம் உலக கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் இந்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் அமீரகம் உட்பட சுமார் 192 நாடுகள் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கென்று துபாய் முதலீட்டு பூங்காவிற்குரிய பகுதியில் […]
2020-ஆம் ஆண்டு இறுதி வரையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்களின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. துபாயில் கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு புள்ளியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், துபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 34, 11,200 பேர் உள்ளனர். அதில் 23 ,62 ,255 பேர் ஆண்களும், 10,48 ,945 பேர் பெண்களும் உள்ளனர். இதையடுத்து ஆண்கள் எண்ணிக்கையில் 69.25 சதவீதமும், […]
துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென வெடித்து சிதறியதில் கட்டிடங்கள் அதிர்ந்தன. துபாய் நாட்டில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு கப்பல் திடீரென வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தினால் துறைமுகத்திற்கு 25 கி.மீ தொலைவில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் அதிர்ந்ததில் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதனை அடுத்து கப்பலினுள் ஏதேனும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருந்தனவா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருக்கும் Jebel Ali என்ற துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து தீ பற்றி எறிந்துள்ளது. கோடைகாலம் என்பதால் அதிக வெப்ப நிலை நிலவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரியும் வகையில் இருந்த பொருட்கள் உள்ள கண்டெய்னர்கள் வெடித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/disclosetv/status/1412867416191819778 இது வழக்கமாக நிகழும் விபத்து தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், […]
துபாயின் பட்டத்து இளவரசரான, மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை திறந்து வைத்திருக்கிறார். துபாயில் இருக்கும் நாத் அல் செபா பகுதிக்கு அருகில் மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை டீப் டைவ் என்னும் நிறுவனமானது வடிவமைத்திருக்கிறது. இது சுமார் 197 அடி ஆழமுடையது. இந்த நீச்சல் குளமானது சுமார் ஒரு கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடையது. இது சுமார் 6 […]
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் டிக்கெட்கள் வரும் 18 ஆம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 ஆம் வருடத்திற்கான கண்காட்சியின் அதிகாரிகள், டிக்கெட் விலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து 2022 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை சுமார் ஆறு மாதங்களுக்கு துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனை காண்பதற்கு, உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து 2 கோடி பேர் […]
இந்தியாவை சேர்ந்த தம்பதிகள் அபுதாபியில் அவர்களுடைய வீட்டியில் வளர்த்து வரும் காய்கறி தோட்டம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவை சேர்ந்த அத்வைதா சர்மா – பிராசி தம்பதியினர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் பணிமாற்றம் காரணமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளனர் . அவர்கள் தங்கியிருந்த வீட்டில்ஒரு தோட்டத்தை ஏற்படுத்தி காய்கறி , பழங்களை வளர்த்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அத்வைதா ஷர்மா கூறுகையில், என் மனைவி பிராசி கர்ப்பமாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஜூலை 1 ஆம் தேதி) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் […]