பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]
Tag: #துப்பாக்கிசூடு தாக்குதல்
இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]
ஜெருசலேமில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் மூவர் உயிரிழந்ததோடு, ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பின் நடந்தே தப்பி […]
மொண்டெனேகுரோ நாட்டில் குடும்ப பிரச்சனையால் இளைஞர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பலியாகியுள்ளனர். மொண்டெனேகுரோ நாட்டில் இருக்கும் மெடொவினா நகரில் வசிக்கும் 34 வயது இளைஞர், குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளால், தன் துப்பாக்கியை எடுத்துச் சென்று, குடும்பத்தினர் மற்றும் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என்று பலரை சுட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றார்கள். எனினும், அந்த நபர் மேற்கொண்ட […]
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.நாவின் அமைதி காப்பாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பல பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது. காங்கோ நாட்டில் பல வருடங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இதனை தடுத்து ஐ.நா அமைதி காப்பாளர்கள் குழு மக்களை காக்கவில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஐ.நா அமைதி காப்பாளர்கள் மூவர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சர்வதேச […]
நைஜீரிய நாட்டின் தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயிர் தப்பியவர்களை கொல்வதற்கு வெளிப்பகுதியிலும் தீவிரவாதிகள் நின்றதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். நைஜீரிய நாட்டின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 50 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு தாக்குதலை நேரில் பார்த்த ஒரு நபர் தெரிவித்ததாவது, தேவாலயத்தின் வாசலிலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். அந்த ஆலயத்திற்கு மூன்று நுழைவு […]
நைஜீரியாவின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலிருக்கும் ஓவோ என்னும் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்தது. அதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 50 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் துல்ஷா என்னும் நகரத்தின் செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் 4 பேர் பலியானதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் பல பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? என்று […]
பாகிஸ்தான் நாட்டில் புலனாய்வுத்துறை அதிகாரி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர் நகரத்தின் யகதூத் பகுதியில் காவல்துறையினர் இரவு உணவிற்குப்பின் வாகனத்தில் ஏற சென்றிருக்கிறார்கள். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நஜ்பீர் ரகுமான் என்ற புலனாய்வுத்துறை உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமனுல்லா என்ற அதிகாரியும் அவரின் சகோதரரும் […]
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் சமீப நாட்களாக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் ஏரியல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் […]
மெக்சிகோ நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் இருக்கும் துலா நகரத்தில் கிரஸ் அசூல் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 2 தரப்பினருக்கு இடையில் நெடுங்காலமாக போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சீனாவை சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சரான வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, உக்ரைன் நாட்டில் இருக்கும் சீன தூதரகம் காயமடைந்த அந்த நபருடன் தொடர்பில் இருக்கிறது. அவர் […]
நைஜர் நாட்டில் வேன் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 18 நபர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகள், மக்கள் மற்றும் அரச படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதே போன்று பண்டிட்ஸ் என்னும் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் அந்நாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள டில்லபெரி என்னும் மாகாணத்தின், […]
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் குர்ரம் மாவட்டத்தில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு […]
பாகிஸ்தானின் மந்திரி, ஷிப்லி பராஸின் வாகனத்தை மர்மநபர்கள் சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மந்திரி சபையில், அறிவியல், தொழில்நுட்பத்தின் மந்திரியாக இருக்கும் ஷிப்லி பராஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் கைபர் பக்துங்வா என்னும் மாகாணத்தில் இருக்கும் கோட் மாவட்டத்தில் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவரின் வாகனத்தை வழி மறித்து சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், நூலிழையில் […]
நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தால் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். ஆனால், பாதுகாப்பு படை அதிகாரிகள், தீவிரவாதிகள் என்று கருதி பொதுமக்கள் மீது தவறுதலாக துப்பாக்கிசூடு தாக்குதல், நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பொது மக்கள் பலியான சம்பவம், அங்கு பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாகலாந்தில் இணையச்சேவை முடக்கப்பட்டிருப்பதாக […]
அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலியான மூன்று மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள Michigan என்ற மாகாணத்தின் Detroit பகுதியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியானதோடு, ஒரு ஆசிரியர் உட்பட ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் நான்கு நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், […]
சூடானில் மக்கள் ராணுவ அதிகாரத்தை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடானில் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து ராணுவம் மற்றும் மக்கள் கலந்த கூட்டணி ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், அப்துல்லா ஹம்டோ நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஃபடக் அல்-பர்ஹன் என்ற ராணுவ தளபதி ஜெனரல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல், சில கிளர்ச்சியாளர்களின் குழுவும் தலிபான்களை எதிர்த்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காபூல் நகரில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது மேலும் […]
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் உள்ள கிழக்கு தியாலா என்ற மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட சுமார் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 13-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள், கிராமத்திற்குள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். அதன்பின்பு, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் ஒரு பல்கலைக்கழகத்தில், மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் 8 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டிலுள்ள பெர்ம் மாநிலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மர்ம நபரால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது ஆறு நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பல்கலைகழகம், இணையதளத்தில், தற்போது, வளாகத்தில் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு வெளியேறி விடுமாறு, தெரிவித்துள்ளது. இல்லையெனில், ஒரு அறையில் பாதுகாப்பாக […]
இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஓன்று நடந்துள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்ததால் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அதிலும் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக […]
நைஜீரியாவின் ஒரு சிறைசாலையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு சிறைக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். நைஜீரிய நாட்டில் இருக்கும் கோகி மாகாணத்தின், கப்பா என்ற நகரத்தில் இருக்கும் ஒரு சிறையில், விசாரணை கைதிகள் 224 பேரும், குற்றவாளிகள் 70 பேரும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில், அந்த சிறையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள், பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு, சிறைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த […]
ஈராக்கில் காவல்துறையினர் வாகன அணிவகுப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் 12 காவல்அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் இராணுவமானது, அமெரிக்க படையின் உதவியைக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து, ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மொத்தமாக தோற்றதாக கடந்த 2017-ம் வருடம் தெரிவித்தது. எனினும் சமீப நாட்களாக ஈராக்கில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில், தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றி அமைந்திருக்கும் நகர்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு […]
பிரிட்டனில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையிலும் பெண் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Plymouthஐச் பகுதியை சேர்ந்த Jake Davison என்பவர் பெண்களின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் Lee Martyn (43) என்ற தந்தையும், அவரது மகளான Sophie (3) என்ற குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு நடக்கும்போது Lee Martyn தான் காயமுற்ற நிலையிலும் தன் […]
ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு அமெரிக்காவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தின் மீது எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்ததோடு மட்டுமின்றி ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார். அதிலிருந்தே இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9Reaper […]
ஈரானில் கடும் வெயிலினால் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கத்தால் முடியாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை குறிவைத்து காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக நிலவுவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டதால் தண்ணீருக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தாலும் நீரை வழங்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக […]
பாகிஸ்தானில் உள்ள மாவட்டம் ஒன்றில் கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிசூடு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள வசீரிஸ்தான் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடந்த […]
அமெரிக்காவில் நேற்று திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிறுமி உட்பட 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலையில் சுமார் ஐந்து மணிக்கு நான்கு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிப்படைந்தவர்களுக்கு இதில் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் அதில் ஒரு நபர் தன் குடும்பத்தினருடன் […]
பாரிஸ் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் Michel Ange பகுதியில் உள்ள Michel Ange மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு ஆண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. https://twitter.com/i/status/1381583141744283648 இதனைத் தொடர்ந்து காயமடைந்த […]
பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1381583141744283648 இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் […]
அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்சு நகரில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 202W லிங்கன் அவென்யூவில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது என்றும் அதிகாரிகள் சென்ற […]