துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது திடீரென்று ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர். அப்போது ஆளும் கட்சியின் ஜாபர் இசிக், எதிர்க்கட்சியை சேர்ந்த உசேன் ஓர்சின் என்பவரின் முகத்தில் பலமாக அடித்தார். இதில் அவர் […]
Tag: #துருக்கி
துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை […]
துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]
துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]
துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]
துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]
துருக்கியில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் பணி அனுமதி இல்லாமலும் வேலை செய்ய முடியும் என்று ஆனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கியில் பணியாற்ற சென்ற பிற நாட்டை சேர்ந்த மக்களுக்கு அந்நாட்டின் பணியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நல்ல தகவலை வெளியிட்டுள்ளது. துருக்கியில் பிற நாட்டைச் சேர்ந்த மக்கள், பணி அனுமதியின்றி வேலை செய்வதை எளிதாக்கும் விதத்தில் துருக்கி அரசு, புதிதாக வேலைவாய்ப்பு ஆணையை அமல்படுத்திருக்கிறது. அதன்படி, பிற நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் […]
துருக்கி நாட்டில் அமஸ்ரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடி விபத்தால் ஒரு பகுதி முழுவதும் தீயினால் பற்றி எரிந்தது. மேலும் மற்றொரு பகுதி இடிந்து விழுந்து நாசமானது. இந்த இடிப்பாடுகளுக்குள் அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]
துருக்கி நாட்டில் பொய்யான செய்திகளை பரப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாட்டின் அதிபர் எர்டோகன் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றது என குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்நாட்டில் அரசு சார்பில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை அந்தந்த வாரம் வெளியான பொய்யான செய்திகள் மற்றும் அதனுடைய உண்மைத்தன்மைகளை குறித்து பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் […]
நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நாட்டில் பர்டிசன் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று சுமார் 110 தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]
துருக்கியின் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியின் வடக்கில் பார்டின் நகருக்கு அருகே இந்த சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கப் பணியின் போது வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்துடன் மீத்தேன் வாயு கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 300 அடி ஆழத்தில் நடந்த இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 185 நாட்கள் முடிவுற்றுள்ளது. பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை இரு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தானிய ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த உக்ரைனுக்கு பேரு உதவியாக துருக்கியும் ஐக்கிய நாடுகள் களமிறங்கிய நிலையில் இதுவரை ஒரு மில்லியன் டன் தானியங்கள் உக்ரைன் […]
துருக்கியில் நடைபெற்ற சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு அடுத்தடுத்த சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்திருக்கின்ற நிலையில் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இதுவரை தெரியவில்லை. சனிக்கிழமை காலை காஜியாண்டெப் மாகாணத்தின் தெற்கு நகரமான நிசிப் அருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல் விபத்தில் ஏற்பட்ட […]
உக்ரைன் நாட்டின் துறைமுகத்திலிருந்து தானியங்கள் ஏற்றப்பட்ட கப்பல்கள் புறப்படுவதற்கு தயாராகி விட்டதாக துருக்கி அறிவித்திருக்கிறது. உலகிலேயே உக்ரைன் நாட்டில் தான் அதிக அளவில் தானியங்கள் ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா, கருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் மூலமாக கடல் வழியே தானியங்களை மற்ற நாடுகளுக்கு உக்ரைன் ஏற்றுமதி செய்வதை தடுத்தது. இதனால், சர்வதேச அளவில் உணவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஐ.நா உக்ரைன் நாட்டில் […]
துருக்கியின் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் என்ற பகுதிக்கு சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணிகளோடு சென்றது. அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. இதில் அலுவலக நண்பர்களோடு பயணம் செய்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்துள்ளது. இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. […]
உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது உணவு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் சேர்ந்து துருக்கி முக்கிய […]
துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ […]
துருக்கி நாட்டில் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்கின்றனர். துருக்கி நாட்டில் டிரோன்களில் பொருத்தும் சிறிய வகை ஏவுகணைகளை பெருமளவில் தயாரிக்க தொடங்கியுள்ளது. மேலும் துருக்கி பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள துபிதாப் எனப்படும் போசோக் லேசர் ஏவுகணை வழிகாட்டியை கொண்டு இயக்குவதுடன், அருகில் உள்ளவற்றை உணரும் திறன் மற்றும் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது. இதனுடைய தாக்குதல் திறனை 9 கிலோ மீட்டரில் இருந்து 15 கிலோ மீட்டராக […]
துர்சான்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்வுக்காக பயணிகளை மினி பஸ் ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது துருக்கியில் உள்ள பலிகேரியில் உள்ள சிட்டி சென்டரில் சென்று கொண்டிருந்த மினிபஸ் பால் ஏற்றி வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்ப பட்டத. இந்த விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பலிகேசரி கவர்னர் ஹசன் சில்டாக் கூறியது, கனமழை மற்றும் […]
துருக்கியின் வட மேற்கு மாகாணமான பலிகேசிரில் நேற்று மினி பஸ் மீது டிரக் மோதிய கோரவிபத்தில் 8 பேர் இறந்தனர். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர். துர்சன்பே மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற மினிபஸ், புறப்பட்ட சிறிதுநேரத்தில் சிட்டி சென்டரில் பால் ஏற்றிவந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்பு குழுக்கள் விபத்து நேர்ந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. இதனிடையில் விபத்து நடந்த சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து […]
துருக்கி நாட்டுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி படையின் ஹசன் சையத் கொடே மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் கர்னல் பதவி வகித்தவர். இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் ஹசனை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் ஈரான் நாட்டை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் காரணம் என […]
துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான […]
ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மேனியா போன்ற நாடுகளில் எல்லை பகுதிகளில் வசிப்பவர்கள் குர்து மொழி பேசும் குர்திஷ்கள். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை குர்திஸ்தான் எனும் தனி தேசமாக உருவாக்க இவர்களுடைய போராட்ட குணம் மிக்க அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பல வருடங்களாக போராடி வருகிறது. ஆனால் இதனை விரும்பாத துருக்கி அரசு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளின் கூடாரங்கள் […]
உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் போர் காரணமாக உருக்குலைந்த நிலையில், அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற துருக்கி நாட்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையில் பொதுமக்கள் பெரும்பாலானோர் காயமடைந்து இருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக இருப்பதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் அகர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடல்வழி பாதையில் ஆபத்தை உருவாக்கக்கூடிய கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் துருக்கி […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வகையில் துருக்கியில் இன்று இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நாளை மறுதினம் முடிகிறது. இந்த செய்தியை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் இதுவரை […]
துருக்கியில் நேற்று மிக பெரிய தொங்கும் பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி மற்றும் தென்கொரியாவில் பிரதமர் திறந்து வைத்தனர். ஐரோப்பிய மற்றும் ஆசிய நகரங்களை சேர்பதற்கு உலகில் மிக பெரிய தொங்கும் பாலம் டார்டனெல்லஸ் பகுதியில் அமைகப்பட்டுள்ளது. இந்த பாலத்தை நேற்று துருக்கியின் ஜனாதிபதி மற்றும் தென்கொரியா பிரதமர் திறந்து வைத்தனர். இதற்கிடையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் 1915 கனக்கலே பாலதின் கோபுரங்களுக்கு இடையே 2023 மீட்டர் (6,637 அடி) இடைவெளியுடன் உலகின் மிக பெரிய […]
செல்போனை பார்த்துக்கொண்டே வந்த ஒரு இளைஞர் மேல் தளத்தில் விழுந்து கீழ் தளத்தில் எழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணியாளர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் இருக்கக்கூடிய குடோனில் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்துள்ளனர். எனவே, பொருட்கள் வைக்க சிறிதாக ஒரு அடைப்பு திறந்திருந்தது. அந்த சமயத்தில் 19 வயதுடைய அப்துல்லாஹ் என்ற இளைஞர் செல்போனை பார்த்தவாறு வந்திருக்கிறார். This […]
துருக்கியில் இருக்கும் ஒரு கோவிலில் மனிதர்கள் மர்மமாக உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் பல வருடங்கள் பழமை வாய்ந்த கோவில்கள் நிறைய இருக்கின்றன. ஆய்வாளர்கள் பூமிக்குள் புதைந்த நிலையில் இருக்கும் கோவில்களை தோண்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டு, மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அதன்படி, துருக்கியில் இருக்கும் Hierapolis என்ற நகரத்தில் மிகப்பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருக்கிறது. அந்த கோயிலை நரகத்தின் நுழைவு வாயில் என்பார்கள். அதாவது இந்த கோயிலுக்குள் செல்பவர்கள் இதுவரை திரும்பி வந்ததே […]
துருக்கி நாட்டின் அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் லேசான உடல்நல பாதிப்புகள் கூடிய ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறத. இந்நிலையில் துருக்கியின் அதிபரான தயீப் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு மிக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, லேசான உடல்நல பாதிப்புடன் […]
துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த […]
துருக்கியில் எண்ணெய் குழாயில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் கிர்குக்கின் என்ற பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து, குழாய் மூலமாக துருக்கி நாட்டின் செயான் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் என்னும் மாகாணத்தில் இருக்கும் பசார்சிக் நகரத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் எண்ணெய் குழாயில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பற்றி எரிந்தது. எனவே, பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதற்கு முன்னதாகவே எண்ணெய் […]
துருக்கியில் பிசிஆர் பரிசோதனை இனி விமான பயணிகள் உட்பட உள்ளூர் மக்களுக்கும் தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது துருக்கியில் இதுவரை நாடக மேடைகள், திரையரங்குகள், பேருந்துகள், கச்சேரி அரங்குகள், உள்நாட்டு விமான சேவைகள், ரயில்கள் என எங்கு சென்றாலும் கொரோனா பிசிஆர் சோதனை முடிவுகள் கட்டாயம் என்ற விதி நடைமுறையில் இருந்தது. ஆனால் துருக்கி அரசாங்கம் தற்போது அந்த விதியை நீக்கியுள்ளது. அதாவது தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மட்டுமே இது போன்ற விதிகள் பொருந்தும் […]
தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக். இவர் பெர்பின் ஒசிக் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், காதலர்கள் இருவருக்குமிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் […]
துருக்கியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட் துருகோவேக் எனப்படும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. துருக்கியில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட துருகோவேக் எனப்படும் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார் இதற்கு முன்னர் துருக்கியில் சீன தயாரிப்பான சினோவேக் மற்றும் சைபர் தடுப்பூசிகளை துருக்கி மக்கள் […]
துருக்கியில் 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு குழந்தைகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள எசென்யுர்ட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள 5 அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெட் வேகத்தில் பரவிய தீயானது அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் வெளிநாட்டு குழந்தைகள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் […]
துருக்கியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 4 பேர் பலியானதுடன் அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற நகரத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழை பெய்திருக்கிறது. இதில், கடல்கா மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியதில் மிக பிரம்மாண்டமான மணிக்கூண்டு இடிந்து விழுந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த மணிக்கூண்டு அருகில் எந்த நபர்களும் இல்லாததால் பாதிப்புகள் இல்லை. மேலும், புயல் […]
துருக்கி நாட்டில் பூனைக்குட்டி ஒன்று நான்கு காதுகளுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில், ஒரு பூனைக்கு 6 குட்டிகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குட்டி 4 காதுகளுடன் பிறந்திருக்கிறது. அந்த பூனை குட்டிக்கு மிடாஸ் என்று பெயரிட்டுள்ளனர். மரபணு குறைபாட்டால் நான்கு காதுகளுடன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடாஸை ஒரு தம்பதியர் வளர்த்து வருகிறார்கள். இந்த பூனைக்குட்டிக்கு மரபணு குறைபாடு தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாதாரணமாக, பிற பூனைகள் போன்று இதற்கும் காதுகள் […]
துருக்கியில் பாராகிளைடிங் செய்த மூவர் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கடலில் விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியது. துருக்கியின் தென்மேற்கு கடலோரே பகுதியில் Oludeniz என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் 21 ஆவது சர்வதேச வான்வெளி விளையாட்டு விழா நடைபெறுகிறது. மேலும் 5 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோர் பாராகிளைடிங் செய்தனர். இந்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த 3 […]
சிரியாவில் உள்ள குர்துப் படையினர் எங்கள் மீது நடத்தும் தாக்குதலை தடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறி விட்டதாக துருக்கி அரசானது குற்றம் சாட்டியுள்ளது. சிரியா குர்துப் படையினர் துருக்கியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை அமெரிக்காவும் ரஷ்யாவும் தடுக்காததன் காரணத்தால் துருக்கி அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை சிரியாவின் மீது மேற்கொள்ளலாம் என அச்சம் நிலவி வருகிறது. இதனைக் குறித்து துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது, “குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு […]
போஜி என்ற தெருநாய் பயணம் செய்யும் வீடியோ காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நம் அனைவருக்கும் செல்லப்பிராணிகளை கண்டாலே அலாதியாக இருக்கும். அதிலும் நாயைக் கண்டவுடன் அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அது போன்று துருக்கியில் போஜி என்ற தெருநாயானது பொது போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் போஜி தினமும் இஸ்தான்புல்லில் உள்ள பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் மனிதர்களோடு பயணம் செய்து வருகிறது. மேலும் இது மனிதர்களுக்கு எந்தவொரு இன்னலையும் […]
துருக்கி நாட்டில் மீட்புக்குழுவினருடன் சேர்ந்த ஒருவர் தன்னைத்தான் தேடுகிறார் என்பதை கூட அறியாமல் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார். துருக்கி நாட்டின் புர்ஷா மாகாணத்தை சேர்ந்த முட்லு என்ற 50 வயதுடைய நபர், தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வழிதவறி காட்டுக்குள் போய் விட்டார்கள். இந்நிலையில் முட்லுவின் மனைவி தனது கணவரை வெகு நேரமாகியும் காணாததால் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மீட்புக்குழுவினர் இவரை தேடி காட்டு பகுதிக்குள் சென்றனர். இதனையடுத்து தேடுதல் […]
ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்திருப்பதாக துருக்கி அதிபர் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து துருக்கி அரசானது எஸ் 400 ரக ஏவுகணை அமைப்பை வாங்கி உள்ளது. இதனால் அமெரிக்க அரசானது தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. மேலும் ரஷ்யாவின் ஏவுகணையானது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்கா கூறியிருந்தது. இதனால் அமெரிக்கா கடந்த ஆண்டு நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடான துருக்கியின் மேல் பொருளாதார தடையை விதித்திருந்தது. இந்நிலையில் துருக்கி அரசானது […]
நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்தியா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகான் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். அதாவது 74 வருடங்களாக தொடர்ந்து நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறோம் என பேசியுள்ளார். இதற்கு இந்தியா துருக்கி அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் […]
ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் துருக்கி அதிபர் சீண்டும் விதமாக பேசியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 193 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் ” காஷ்மீர் எல்லையில் 74 வருடங்களாக தொடர்ந்து வரும் எல்லை பிரச்சினையில் ஐ.நா.சபை தலையிட்டு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் […]
துருக்கியில் தந்தையே தனது மகளை உயிருடன் தீயிட்டு கொளுத்திய ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டில் அஹ்மத் முகமது த்வாலா என்ற தந்தை ஒருவர் தனது 13 வயதுடைய மகளான அமரா த்வாலா என்பவரை குளியல் அறையில் உயிருடன் கொளுத்தி விட்டு மாயமாகியுள்ளார். அந்த சம்பவத்தின் போது அமரா த்வாலாவின் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வீட்டில் பாட்டு சத்தத்தை அதிக அளவில் ஒலிக்க வைத்துள்ளார். அதன்பின் தனது இன்னொரு 12 வயதுடைய மகளுடன் […]
துருக்கி அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. கொரோனா, பல்வேறு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காக்க, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு வரும் இந்திய மக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மக்கள் துருக்கிக்கு […]
துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் […]
துருக்கி நாட்டில் மனிசா மாகாணத்தில் பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருடைய நிலைமை […]
17 மாகாணங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். துருக்கி நாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 7 நாட்களாக காட்டுத்தீயானது எரிந்து வருகிறது. இதனால் மிலாஸ், அடானா,ஆஸ்மானியா,மெர்சின் போன்ற பகுதிகள் உட்பட 17 மாகாணங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீயினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 800 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தினால் […]