சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ முருக ராஜேந்திர மடத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்ற போது மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், அவருக்கு திருநீறு அணிவித்து நாட்டின் அடுத்த பிரதமராவார் என ஆசீர்வதித்தார். அப்போது, மடத்தின் தலைமை துறவி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா ஷாரனரு குறுக்கிட்டு, “தயவுசெய்து இதைச் சொல்லாதீர்கள்… இது மேடையல்ல. மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார். அந்த மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தவர்களுக்கானதாகும். கர்நாடகாவில் 17% லிங்காயத்துகள் உள்ளனர். […]
Tag: துறவி
10 க்கும் மேலான நூல்களை எழுதிய 16வது வயதில் துறவி பூண்ட வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 95 ஆவது அகவையில் காலமாகியுள்ளார். வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 16 ஆவது அகவையில் துறவி பூண்டுள்ளார். இவர் வியட்நாம் போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பௌத்தமதம் குறித்து போதித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் சமூக உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங்கை […]
மகாத்மா காந்திக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்ட துறவி காளிசரண் மகாராஜ் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து சமயத் துறவி காளிசரணை ஜனவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது ஐபிசி பிரிவுகள் 505(2) மற்றும் 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பின்னர் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் […]
தாய்லாந்து நாட்டில் பௌத்த துறவி புத்தருக்கு காணிக்கையாக தன்னுடைய தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு தாய்லாந்திலிருக்கும் புகிங்காங் மடத்தினுடைய மடாதிபதியாக 68 வயதான தம்மகோர்ன் வாங்க்பிரீச்சா இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய தலையை வெட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவருடைய சீடர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் தம்மகோர்னும் அவருடைய தலையை வெட்டி புத்தர் பீடத்திற்கு அருகில் வைத்து விட்டு உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, புத்தரை திருப்திப்படுத்தவே தன்னுடைய தலையை […]