எப்போ பார்த்தாலும் தூங்கி வழியாக என்று வீட்டில் பெரியவர்கள் திட்டியதை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் Wakefit என்ற நிறுவனம் நன்றாக தூங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது.இந்த தூங்கும் போட்டிக்காக நாடு முழுவதிலும் இருந்து 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குள் ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான தூக்கம் என பல கட்டங்களாக தூங்கும் போட்டி வைக்கப்பட்டது.இதில் கொல்கத்தாவை சேர்ந்த திரிபர்ண சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து ஐந்து லட்சம் ரூபாய் பரிசு தொகை வென்றுள்ளார்.
Tag: தூங்கினால் பரிசு
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேக்பிட் எனும் நிறுவனம் நன்றாக தூங்கினால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு இன்டர்ன்ஷிப் திட்டமாகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10 லட்சம் பரிசு மட்டுமல்லாமல் இந்தியா ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டமும் கிடைக்கும். இதற்கு போட்டியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் இதுவரை போட்டியிட 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிரபல மெத்தை நிறுவனம் ஒன்று நன்றாக தூங்கி எழுபவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக போட்டியை அறிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள Wakefit.co என்ற நிறுவனம் “ஸ்லீப் இண்டர்ஷிப்2” என்ற போட்டியை அறிவித்து உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு எனவும் அறிவித்துள்ளது. தூங்குவது தான் எளிதான ஒன்று என்று நாம் நினைத்தாலும், இதில் இன்டர்ன்ஷிப் பெறுவது எளிதல்ல. தூங்குவதே தங்களின் முன்னுரிமை என்பதையும், எப்போதும் தூங்குவதையே விரும்புகிறோம் என்பதை போட்டியாளர்கள் உண்மையிலேயே நிரூபிக்க […]