உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. […]
Tag: தூதரகம்
உக்ரைனில் கிவ் நகரத்திற்குள் தென் கொரியா தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் காரணமாக மூடப்பட்ட தென் கொரிய தூதரகம் உக்ரைனின் கீவ் நகரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் நகரத்திற்கு திரும்பியுள்ளனர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக தென் கொரியா கடந்த பிப்ரவரி […]
கொலம்பியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்ட வாழைப் பழங்கள் அடங்கிய ஒரு பார்சலில் டன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் எல்லை பாதுகாப்பு படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய எல்லை பாதுகாப்பு படையும் தேசிய குற்றவியல் ஏஜென்சியின் இணைந்து நடத்திய சோதனையில் சுமார் 3.7 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்கள் வாழைப் பழங்கள் அடங்கிய பார்சலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 302 மில்லியன் பவுண்டுகள் ஆகும். […]
உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரத்தை கடந்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவதால் தங்கள் நாட்டு தூதரகத்தை உக்ரைனின் மேற்கே உள்ள லிவ் நகரத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
உக்ரைன் தலைநகர் கீவ் வில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்களின் உக்ரைன் எல்லையை கடந்து […]
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. தற்போது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடின் […]
அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 8 அடி உயர முழு வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை அவருடைய 8 அடி முழு வெங்கல சிலை ஒன்றை நிறுவியுள்ளது. இதனை மர்ம நபர்கள் மிக கடுமையாக சேதப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் […]
அமெரிக்க நாட்டு தூதரகம், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயமும் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம். இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்களை […]
அரசு ஊழியர்களான தாங்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் அதற்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் அதற்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அரசு ஊழியர்களான தாங்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி பணத் தட்டுபாட்டின் காரணத்தால் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது […]
செர்பியாவில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து வெளியான சர்ச்சைக்குரிய பதிவிற்கு அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானே கடந்த 3 மாதங்களாக செர்பியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் தாங்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமின்றி தங்களுக்கு வரவேண்டிய சம்பள […]
கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் முத்தரப்பு போர் பயிற்சி “தோஸ்தி” என்னும் பெயரில் நடைபெறுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு பாதுகாப்பு மாநாடு தலைமையின் கீழ் 2 நாட்கள் இலங்கை, இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளின் முத்தரப்பு கூட்டு பயிற்சி போர் மாலத்தீவு கடல்பகுதியில் வைத்து நடைபெறுவதாக இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த 2 நாள் முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்புவிலுள்ள இந்தியத் […]
காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்று விடுங்கள் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொதுமக்களையும், வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டி காபூல் விமான நிலையத்தின் முன்பாகயிருக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் உடனடியாக […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பிரிட்டனுக்கு தப்பிவந்த 5 வயது சிறுவன் ஓட்டலின் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் 5 வயதுடைய சிறுவன், தன் குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்துள்ளார். அங்கு, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் ஷெஃபீல்ட் பெருநகரத்தின் ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, நேற்று அந்த சிறுவன் எதிர்பாராமல், […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் முக்கிய பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்து வருகின்றனர், இதில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத் துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலாளராக இவரை நியமித்துள்ளனர். உளவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் […]
சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி வருவதால் சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்களும் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விசா அல்லது சீன குடியிருப்பு அனுமதி அட்டை பெற்றவர்கள் தற்காலிகமாக நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக இந்தியாவில் அமைந்துள்ள சீன தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுகாதார நற்சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் தூதரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுப்பதற்காக […]
லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு இதனை உறுதியாக மறுத்தது. அது மட்டுமல்லாமல் உய்குர் இன இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க அங்கு பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனையும் சீன அரசு மறுத்தது. இந்நிலையில் ஆதாரத்துடன் அறிவிப்பு ஒன்றை […]
அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் சீன தூதரகத்தின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அமெரிக்காவின் அறிவுசார்ந்த வளங்களைக் திருடுவது, அமெரிக்காவை உளவு பார்ப்பது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க- சீன உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் சீனாவின் உடைய ஹூஸ்டன் தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவு கொடுத்ததை அடுத்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செங்டுவில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூட சீனா […]
சீன தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்ட சில மணி நேரங்களில் தீ விபத்து ஏற்பட்டது அந்நாட்டின் மீது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் இருக்கின்ற சீன தூதரகம் சர்வதேச சட்ட விதியினை மீறிய குற்றத்திற்காக அத்தகைய தூதரகத்தை உடனே மூட வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தகைய முடிவை மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த இயலாத […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூலிகை மருந்துகளின் மூலம் 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தில் பேசியுள்ள அவர் கொரோனா வைரஸால் ஏற்படும் நெஞ்சடைப்பு, நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை நிலவேம்பு கருங்காலிக் மரப்பட்டை, கருமத்தை பூ, உள்ளிட்ட நோய்களை குணபடுத்த முடியும் என தெரிவித்தார். கருமத்தையின் பூவை வெந்நீரிலோ அல்லது சூடாக காய்ச்சிய பாலில் இந்த […]