தமிழகம் முழுவதும் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரையும் காலாண்டு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: தூத்துக்குடி மாவட்டம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளையும்எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி எழுத்தாளர்களையும் ஊக்குவித்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ராவுக்கு நினைவு அரங்கம், நூலகம் மற்றும் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்டு பேசிய கனிமொழி எம்பி, “மற்ற மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் தங்கம் கிடைத்த நிலையில் சிவகளையில் வாழ்விடப் பகுதியில் கிடைத்துள்ளது. இதனால் தமிழர்களின் வரலாறு காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்விடப் பகுதியில் தங்கப் பொருள் கிடைப்பது இதுவே முதல்முறை…
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என […]
மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே அமலிநகர் பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம், பால்ராஜ், பிரசாத் மற்றும் அஸ்வின் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சில மீனவர்கள் கடலில் தத்தளித்த நித்தியானந்தம் […]
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று […]
மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எம்எம்சி காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த போது திடீரென கல்லூரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெற்றி செல்வன் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு வெற்றி செல்வன் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைப்பார்த்து […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலகரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாரித்தாய். இவருடைய ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை அதை கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளது. வீட்டு வேலை செய்து கொண்டிருந்த மாரித்தாய் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின் வீட்டிலிருந்த குழந்தை காணவில்லை என்று தேடிய போது பாத்ரூமில் உள்ள வாளிக்குள் குழந்தை விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் ஏற்கனவே […]
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை சீரமைத்து தரவேண்டும், நாலாட்டின்புதூரில் உள்ள மந்தை குளத்தை தூர்வார வேண்டும், நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும், பாண்டவர்மங்கலத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக […]
மளிகை கடையின் பூட்டை உடைத்து 22,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாளமுத்துநகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் கலையில் கடையை திறக்க முத்துசாமி வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைதொடர்ந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் […]
10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசுகளை வழங்கியுள்ளார். தமிழக காவல்துறை சார்பாக 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த காவல்துறையினரின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்குவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் […]
விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் இருக்கும் விவசாய சங்க அலுவலகத்தின் முன்பு அனைத்து விவசாயிகளும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது விவசாய சங்கத் தலைவர் ராமையா என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பாலமுருகன், […]
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் எதன் அடிப்படையில் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 10-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊரடங்குக்கு பிறகு கொரோனா பரவல் தமிழகத்தில் பெருமளவில் குறைந்துள்ளது எனவும், சென்னையில் மிக வேகமாக குறைந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார். ஸ்டெராய்டு இன்ஜக்சன் எடுத்துக் கொண்டவர்களுக்கு கருப்புப் பூஜ்சை நோய் வருவதாக கூறப்படுகிறது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 9 பேரையும், அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர், தாளமுத்து நகர், திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ பிடித்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை அண்ணா புது தெருவில் சிங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகன் ஆனந்த்(27) ஒரு ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று மலையில் பழங்கோட்டை ரோட்டில் உள்ள தனது ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆனந்த் தனது நண்பரை பார்ப்பதற்காக கரடிகுளம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் பலகட்ட ஆய்வுக்கு பின் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தொடங்கவுள்ளது. இந்தியா முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரிம் கோர்ட் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு கடந்த 29ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க அரசாணையை […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் சேர்மனுமான சுரேஷ்குமார் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்துகொண்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் அம்பேத்கர் தெருவில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிமுத்து(21). இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மாரிமுத்து காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த கயத்தாறு ஒன்றிய சமூகநல அலுவலர் பூங்கொடி கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோதிடர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ரஜீவகாந்தி நகரில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான திலக்(43) கோவில்பட்டி மாதாங்கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திலக் வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அன்று இரவு மீண்டும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது குமாரபுரம் அருகே திடீரென இருசக்கரவாகனம் கட்டுப்பாட்டை […]
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,50,053 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 69.82% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா 73,110 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. மோகன் 64,600 […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,64,900 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 67.43% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜூ 68,556 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அமமுக சார்பில் போட்டியிட்ட டிடிவி […]
ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,23,764 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 72.34% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் 76,843 வாக்குகள் பெற்று முன்னிலை […]
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். […]
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,15,543 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 76.52% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் தலா 90,348வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சின்னப்பன் தலா 51,799 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாம் […]
கொரோனா இரண்டாவது அலையால் புனித நீராட தடை விதிக்கப்பட்டு, திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க….. தடுப்பு வேலிகள் கொண்டு […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அண்மையில் பெய்த மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நகர், கணேஷ் நகர், சிங்கப்பூர் ராமையா நகர், ஆசிரியர் காலணி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழைநீர் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீரை அகற்ற […]
திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் விளங்குகிறது. திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆன்மீக தலங்களாகவும், மணப்பாடு மற்றும் காயல்பட்டினம் சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றது. விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 7 தேர்தல்களில் வென்று கைப்பற்றியுள்ளது. அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்எல்ஏ திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,375 ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் விவசாயத்தை முழுமையாக சார்ந்துள்ள பகுதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை உள்ளடக்கிய தொகுதியாகும். சுதேசி கப்பலை இயக்கிய வ.உ. சிதம்பரனார் பிறந்த ஊர் இதுதான். வீரன் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரை தந்ததும் ஓட்டப்பிடாரம் தான். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. திமுக 2 முறை தொகுதியை கைப்பற்றியது. […]
தாமிரபரணி ஆற்றின் ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். நவ திருப்பதி பெருமாள் கோவில்கள், நவகைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் சிவன் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களும் இங்கு உள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றி உள்ளனர். தற்போது அதிமுகவின் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவாக உள்ளார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,23,764 […]
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். விவசாயம் கால்நடை வளர்ப்பு தீப்பெட்டி உற்பத்தி முக்கிய தொழில்களாக உள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய் தனி சுவையும், தனி புகழும் கொண்டது. நூற்பாலை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்களும் இங்கு உள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை வேட்பாளர் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக […]
விளாத்திகுளம் தொகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. கடற்கரை ஓரத்தில் உள்ள சில கிராம மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரம் இந்த தொகுதியில் தான் உள்ளது. வாரம் இருமுறை நடைபெறும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை தென்மாவட்டங்களில் புகழ்பெற்றதாகும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதே எம்எல்ஏ அதிமுகவின் சின்னப்பன். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை […]
விடுதலைப் போராட்டத்தின் போது வ. உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் இயக்கிய ஊர் தூத்துக்குடி. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களில் ஒன்றாகவும் தூத்துக்குடி துறைமுகம் விளங்குகிறது. தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி தொகுதியின் முக்கிய தொழில்களாக இருக்கின்றன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பின் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போது திமுகவின் கீதாஜீவன் எம்எல்ஏவாக […]
திருச்செந்தூரில் தங்க நகையை திருட முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருச்செந்தூருக்கு மாசி திருவிழா தேரோட்டம் காண்பதற்காக தனது சித்தி மற்றும் தாயை அழைத்து சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது சித்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது. அறுந்த சங்கிலியை பாலமுருகன் ஒரு காகிதத்தில் மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் […]
62 கோடி ரூபாய் திட்ட பணிகளை வ. உ. சி. துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம் நேற்று(பிப்25) திறந்துவைத்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் […]
குருணை மருந்தை சாப்பிட்டு மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் மத்திமான்விளை பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இவர் சைக்கிள் கடை வைத்து வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால் இவர் கடன் வாங்கி குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் இவரால் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உட்பட 8 பேர் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம் எடப்பாடி நடுத்தெருவில் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் வாடகை காரில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டி வந்தார். கார் ஆத்தூர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் […]
நிவர் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் எச்சரிக்கையாக தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் மூன்றாயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் நேற்று […]
லடாக்கில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங் குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி கடந்த 19-ஆம் தேதி பணி நிமித்தமாக லடாக் கெளஷியர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை மாவட்ட […]
தீபாவளி பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டு வரும் அரிசி மாவு மூலம் செய்யப்படும் கை சுற்று முறுக்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, பட்டாசு போன்றவை நினைவுக்கு வருவது போல் பதார்த்தங்களும் முக்கியத்துவம் வகிக்கின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்களில் கை சுற்று முறுக்கு முக்கிய பதார்த்தமாக உள்ளது. அரிசி மற்றும் உளுந்து மாவில் எல் சேர்த்து இந்த முறுக்கு தயாரிக்கப்படுகிறது. எந்தவித உபகரணங்களும் இன்றி கையினாலேயே தயாரிக்கப்படுவதால் இதனை கை சுற்று முறுக்கு […]
தூத்துக்குடி அருகே ரவுடிகளால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்தினருற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் அரசு வேலைக்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார். கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் அரசின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றார். முன்னதாக வல்லநாடு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே சாலையோரம் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்ட முதலமைச்சர் அப்பெண்ணை அழைத்து பேசினார். அப்போது குட்டய்யபுரம் பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்ற அந்தப் பெண் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் இதனால் தமது குடும்ப ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரிடம் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண்ணை நிலையை அறிந்த […]
தூத்துக்குடி மாவட்டம் சிவகலை உட்பட 6 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகாநாத் சிங் படைகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். மேலும் இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்யும் குழுவில் […]
தூத்துக்குடி அருகே ஆபத்தான சாலையில் உயிர் பயத்துடன் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தில் இருந்து வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தட்டார்மடம் கடைவிதியிலிருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள சாலை தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஆபத்தான நிலையில் பயணம் […]
தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை முத்தையாபுரம் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சள் நீர் காயல் ஊராட்சியில் சுமார் 500 நூற்றுக்கு குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் […]
மறைந்த பின்னணி பாடகர் திரு. எஸ்.பி.பி-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் இன்று இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேடை இசை கலைஞர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் திரு. எஸ்.பி.பி-யின் பாடல்களைப் பாடி இசை அஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் சிவகளை மற்றும் கோர்க்கை பகுதிகளில் அடுத்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இதேபோல் சிவக்களையிலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 1-ம் தேதி முடிவு பெற்றது. இதில் ஆதிச்சநல்லூரில் 27 முதுமக்கள் தாழியும், சிவக்களையில் 34 முதுமக்கள் தாழியும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இந்த இடங்களில் தமிழ் பிராமி […]
தூத்துக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் உதவியுடன் ஓராண்டில் 6,000 மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி நகரம் தொழிற்சாலை மிகுந்த பகுதி என்பதால் இங்கு மற்ற நகரங்களை விட ஆக்சிஜன் அளவு குறைவாகவே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நகர் முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளது. தற்போது நான்கு வழிச்சாலையில் […]