தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி உபகோட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் கூறியுள்ளதாவது, புதியதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் இலவச மின்சாரம் வழங்கி இருக்கின்றார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே […]
Tag: #தூத்துக்குடி
திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் […]
விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]
கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]
குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில் ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் […]
புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் அருகே இருக்கும் முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 1 1/4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை ஏற்று கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திமுக செயலாளர், யூனியன் கவுன்சிலர், […]
சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐந்தாவது மண்டல அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இதில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டிச் சென்றார்கள். இதில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர், இயக்குனர், தலைமை ஆசிரியர், சிலம்பம் பயிற்சியாளர், ஆசிரியர்கள் என […]
மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ 20,000 நிதி உதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார். பின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் மாநில அளவிலான தடகளைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பள்ளி மாணவி ராதிகாவுக்கு ரூ.20,000 எம்எல்ஏ வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். […]
உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா […]
தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி […]
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பங்கேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா சென்ற 22ஆம் தேதி முதல் ஏவிஎம் திருமண மஹாலில் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகதாரர் மூலம் புத்தகங்கள் கண்காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கியும் செல்கின்றார்கள். இது போலவே சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியும் வருகின்றார்கள். அந்த […]
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிப்சன்புரம் பகுதியில் மார்பளவு எம்.ஜி.ஆர் சிலை இருக்கின்றது. இந்த சிலையின் பீடத்தில் சென்ற ரெண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் சில நிர்வாகிகளின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அந்த பெயர்களை அழித்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். […]
மேஜைபந்து, கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தூத்துக்குடியில் இருக்கும் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிஷாந்த் முதலிடமும் இரட்டையர் பிரிவில் நிஷாந்த், பிரேம்குமார் உள்ளிட்டோர் முதலிடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள். கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் […]
வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு […]
தூத்துக்குடி கடற்கரையில் 80 கிலோ எடை கொண்ட ராட்சத பச்சை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஒரு அரிய வகை உயிரினமான பச்சை கடல் ஆமை தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரகர் தலைமையிலான குழு இறந்து கிடந்த பச்சை கடல் ஆமையை மீட்டார்கள். இந்த ஆமை சுமார் 80 கிலோ […]
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது. […]
தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூரு மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா எட்டு வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றிருக்கின்றார். இந்த சாதனையை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி […]
புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணிற்கு புகார் ஒன்று வந்தது. இதனால் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தில் இருக்கும் ஒரு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 201 கிலோ காலாவதியான லேபிள் இல்லாமலும் போலி முகவரியுடனும் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது […]
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு […]
தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெறுகின்றது. தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இரு வார விழா சென்ற 21ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றது. அதிக ஆண்கள் […]
தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் […]
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு […]
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு […]
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவபெருமாள் என்பவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடியிருக்கின்றார்கள். பின்னர் […]
தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் […]
இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி கலை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியுள்ளதாவது, தமிழக அரசு இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை […]
கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் செவல்பட்டி கிராமத்தில் இருக்கின்ற மாந்தோப்பு விநாயகர் கோவிலை வருவாய் துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை கண்டித்தும் அந்த கோவிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர் அவர்கள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து […]
கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு […]
பிளஸ்-1 படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்1 படித்து வருகின்றார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் தற்போது வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்கின்றார். இந்த நிலையில் சென்ற பதினைந்தாம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற மாணவி காலை 11:30 மணியளவில் பள்ளியின் மாடிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் திடீரென […]
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து காமராஜ் ராஜினாமா செய்தார். கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஆகிய […]
உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் கைப்பற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் சிலர் திமிங்கலத்தின் உமிழ் நீரை விற்பனைக்காக எடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்து காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூன்று பேர் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை செய்ததில் முன்னுபின் முரணாக பேசினார்கள். இதன்பின் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் […]
படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் பிரண்டார்குளம் பள்ளி தெருவை சேர்ந்த டேவிட் மனக்காஸ் என்ற இளைஞர் நாசரேத்தில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் சம்பவத்தன்று காலையில் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணித்திருக்கின்றார். அப்போது பேருந்து வேகத்தடையை கடந்த போது இவரின் கால் சாலையில் உரசி இருக்கின்றது. […]
தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக தூத்துக்குடி வட்டார விவசாயிகள் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி வளர்ப்பு பற்றி பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமார், சுமதி, அலுவலர் ஆனந்தன், சுடலை மணி உள்ளிட்டோர் எடுத்துரைத்தார்கள்.
திருச்செந்தூர் கடற்கரையில் பழமையான சேதமடைந்த சிலை கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோவிலில் பழமையான சேதமடைந்த சிலைகளை சரி செய்வதும் அதற்கு மாற்றாக புதிய சிலையை அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சேதமடைந்த சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக காற்றழுத்த […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயத்தாறு அருகே இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக ஆல்பர்ட் கென்னடி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் சம்பவத்தைன்று அந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். பின் அவரின் அறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்று […]
பல்கலைக்கழக கல்லூரி அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி வெற்றி பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதற்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமாரி ஜெரோம் கல்லூரி அணியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் மோதியது. இதில் 80-55 என்ற புள்ளிக் கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி […]
ஸ்ரீவைகுண்டம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் சென்ற தீபாவளி விடுமுறையின் போது தனது சொந்த ஊர் ஈரோடுக்கு சென்று விட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரிக்கு வந்தார். ஊருக்கு சென்று இருந்த போது, அவர் வீட்டில் […]
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் பயிற்சி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற மீனவர் இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார்கள். நேற்று பயிற்சி நிறைவு பெற்ற ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 14 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தார்கள். தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றது. இதனால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சுமார் 60 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக நான்கு படகுகள் நின்று கொண்டிருந்தது. இதனால் கடலோர காவல் படையினர் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு […]
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்ற 2008 ஆம் வருடம் மும்பையில் கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினார்கள். இதன்பின் கடலோர பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகையால் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போல வேடமணிந்து முக்கிய பகுதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவார்கள். […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் 352 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியாரிடம் மனு கொடுத்தார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் […]
உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கழிவுகளிலிருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம், நாட்டுப்புற கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று கழிவு பொருட்களைக் கொண்டு கலைநயத்துடன் உபயோகம் உள்ள பொருட்களை செய்தார்கள். இதுபோல நெருப்பை உபயோகிக்காமல் சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் […]
கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில் போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் […]
தூத்துக்குடியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு முகமானது சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட முழுவதும் இருக்கும் 1919 வாக்கு சாவடிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிரேஸ்வரம் பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் […]
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை பகுதியில் கழுகாலமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஜம்புலிங்கேஸ்வரர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கவனித்துக் கொண்டனர்.