சட்டவிரோதமாக ரேஷன் அரிசினை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசினை கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் போன்றோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலுவைபட்டி பகுதியில் இருந்த ஒரு குடோனில் இருந்து டெம்போ வேனில் சில பேர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை […]
Tag: #தூத்துக்குடி
தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி தலைமையில் தசரா திருவிழா மற்றும் சூரசம்ஹாரத்தை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மேலும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது […]
மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது. […]
இடி விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி 4 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ. வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி விவசாயி முருகையா என்பவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது முருகையா மீது இடி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சர் நிதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 4 லட்சம் ரூபாய் நிதியை முருகையா குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது ஒட்டப்பிடாரம் தி.மு.க. […]
அனுமதியின்றி காரில் வெடிப்பொருட்கள் கொண்டுவந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை பகுதியில் தானியல் மகன் பாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரையில் வெடி குடோன் அமைத்து திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை கொடுத்து வருகிறார். இவர் தனது காரி சீட்டுக்கு அடியில் 30 ஆயிரம் மதிப்பிலான வெடிகளை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை அடைத்தார். அப்போது […]
திடீரென மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் புதூர் பகுதியில் கணேசன் மகன் செல்வம் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது பந்தல் அமைப்பதற்கு உதவியாக நின்று கொண்டிருந்த செல்வம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் துடிதுடித்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் […]
பஞ்சாயத்து தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே சுந்தரேஸ்வர புரத்தில் சோலையப்பன் மகன் போஸ் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கின்றார். இதில் போஸ் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கின்றார். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த […]
நர்சிங் மாணவி திடீரென காணாமல் போனது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் வடக்குத் தெருவில் சிலுவை அந்தோணியின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஜோயல் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வருகிறார். கடந்த 18-ஆம் தேதி விடுதியில் இருந்து ஜோயல் ஊருக்கு செல்வதாக வந்துள்ளார் . ஆனால் ஜோயல் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனையடுத்து […]
வரதட்சனை கேட்டு துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு புறையூர் கிராமத்தில் அழகுராஜ்-ஜெயராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகுராஜ், மனைவியை துன்புறுத்தினார். இதற்கு அழகுராஜின் தாயார் கசங்காத்தா மற்றும் அவரது அக்கா மாரியம்மாள் உடந்தையாக இருந்துள்ளனர். […]
குழந்தைகளுக்கான இருதயநல சிகிச்சை முகாம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வருகின்ற 26-ம் தேதி குழந்தைகளுக்கான இலவச இருதயநல சிகிச்சை முகாம் நடைபெற இருக்கின்றது. இதுகுறித்து டாக்டர் நெவில் சாலமன் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் சென்ட்ரல் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் குழந்தைகள் இருதய சிகிச்சை முகாம் வருகின்ற 26-ம் தேதி காலை 8 மணி […]
தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் இருந்த பட்டாசு வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே தட்டார்மடம் அருகேயுள்ள சிறிய கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் சிறிய அளவில் அணைக்கரை என்ற பகுதியில் பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் கோவிலுக்கு தேவையானது, அரசு நிகழ்ச்சிகளுக்கு, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வாணவேடிக்கை […]
கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. 3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு […]
தூத்துக்குடி வட்ட கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஈடுபடும் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சுவரிடிந்ததில் ஜார்கண்டை சேர்ந்த பகிரத் முகலி அவரது நண்பர் அமித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீரோவில் இருந்த நகையை திருடிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை இந்திராநகரில் சத்தியமூர்த்தி மகன் ராஜேந்திரன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் கட்டிட வேலைக்காக பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சந்தணகுமார் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டில் இருந்த பீரோவை சந்தணகுமார் மெதுவாக திறந்து அதில் இருந்த 3 1/2 பவுன் நகையை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்படி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சந்தணகுமாரை கைது […]
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் உன்ன முனியசாமி கோவில் தெரு, பெரியார்நகர், தோப்புத்தெரு போன்ற சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக கை, கால்களில் கட்டு போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் முத்து ராஜா தலைமை தாங்கினார். இதனையடுத்து போராட்டத்தை மாவட்ட செயலாளர் முத்து தொடங்கி வைத்து பேசினார். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவில் அம்மமுத்து மகன் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கணேஷ் கஞ்சா விற்பனை செய்ததை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கணேஷை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதா நகர் சந்திப்பு பகுதியில் வந்த ஒரு லாரியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் சரள் மண் கடத்தி வந்தது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் பெருமாள் என்பவரை கைது செய்ததோடு, லாரி மற்றும் மணலை […]
கந்துவட்டி வசூலிப்பதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளத்தில் திருமணி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மல்லிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதிநிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு உரிய வட்டியை மல்லிகா செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மல்லிகா மொத்தம் […]
லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்னர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் 2வது தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரையண்ட் நகர் 12-வது தெருவில் லாட்டரி சீட்டு எண்களை எழுதிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனை கையும் களவுமாக பிடித்தார். அதன்பின் அவரிடம் இருந்த லாட்டரி எண்கள் அடங்கிய […]
உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் போன்றோர் வந்தனர். இவர்கள் அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து அவரது உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் கீழே தெருவில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தார். இதில் மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன், ஜீவாவுக்கு இங்கிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகளை […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆத்தூர் ஐயாநகர் பகுதியில் கந்தசாமியின் மகன் முருகன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் முருகனின் மகன் கார்த்திக் என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கார்த்திக்கிற்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. […]
தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தேரடி தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்தார். இவர் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் செல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பா கடந்த 11ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குப்பைத் தொட்டி அருகில் விழுந்து படுகாயமடைந்தார். மேலும் செல்லப்பா போதையில் பீடி பற்ற […]
பொறியாளர் வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரராகவபுரம் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொறியாளராக இருக்கின்றார். இவர் கடந்த 10-ஆம் தேதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க […]
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தனது வீட்டிற்கு கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்தார். அப்போது நண்பர்களுக்கும் உள்ளூரை சேர்ந்த சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களை […]
ஆதித்தமிழர் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் நடைபெற்றது. மேலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்திய கடல்சார் மீன்வள புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு வடக்கு […]
வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காந்திநகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் மகேஷ் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் மகேஷிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி […]
தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த வழக்கினை முடித்து வைத்தது. ஆனால், ஒரு சில சமூக ஆர்வலர்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் மனித உரிமை ஆணையம் மறுபடியும் வழக்கை எடுத்து நடத்த வேண்டும் எனவும், அவர்கள் நடத்தும் விசாரணை முறையானதாக கிடைக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் […]
விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை 3 நாட்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் பொன் ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இதனையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். […]
தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற 14 பேர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பாக முத்தையாபுரம் பகுதியில் 300 வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் செல்வ விநாயகர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்த சிலைகளை கரைப்பதற்காக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர் .இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். இதனையடுத்து நகர துணை […]
28 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பேருந்து நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவை கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் 28 கோடியே […]
விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் ரமேஷ் திருமண வீடுகளுக்கு சென்றும் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் கடந்த […]
கொரோனா தடுப்பூசி செலுத்திய 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரபஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்பப்பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மேல் நடுநிலைப்பள்ளி போன்ற 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நகரபஞ்சாயத்து சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக […]
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருசெந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்ட அமைப்பாளரான ரகுவரன், மாநில துணை செயலாளரான தமிழ்க்குட்டி, ஒன்றிய துணை செயலாளரான சுரேந்தர், தொகுதி அமைப்பாளரான லட்சுமணன் மற்றும் பெரும்பாலானோர் […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்கு தெருவில் மூதாட்டி செல்வபூரணம் வசித்து வந்தார். இவர் கண் அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி செல்வபூரணத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
கார் செட்டுக்கு தீவைத்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி இணை அமைப்பாளராகவும், பள்ளிவாசல் செயலை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள செட்டில் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி […]
சாலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த கம்பிகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீளவிட்டான் 4-வது ரயில்வே கேட் அருகில் சாலை அமைப்பதற்காக 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் தினேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை […]
மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடியில் மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பால்குடம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதன்பின் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம் கொடை விழாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமண பெருமாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு […]
திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் அருணாச்சலம்-ராமலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு போஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக போஸ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதனையடுத்து கடந்த […]
பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் காதலனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகில் 15 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவியின் தாய்- தந்தை இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மாணவியின் தாயார், மகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பிரியாணி கடை பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இரண்டு பிரியாணி பார்சலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டோக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு பிரியாணி பார்சல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தூத்துக்குடி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து […]
திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கோவிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சாத்தான்குளத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகதின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாத்தான்குளத்தில் தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், […]
மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடுக்காடு ஊரில் சுடலமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அவருடைய உறவினரை சாயர்புரம் புதுக்கோட்டை தேனி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இதனையடுத்து உறவினரை அங்கு இறக்கி விட்டு சுடலைமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி […]
விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் சுடலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் சுடலைமுத்து இரவில் நாற்கர சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வேன் எதிர்பாராத விதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதனையடுத்து […]
கொரோனா விதிமுறைகளால் முத்தாரம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று நேற்று (வெள்ளிக்கிழமை) பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழக அரசு சனி, ஞாயிறு போன்ற நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அங்கு பக்தர்கள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். மேலும் […]
விளாத்திகுளம் பகுதியில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூரங்குடி காவல்துறையினர் கடந்த 28-ம் தேதி வேம்பார் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஆற்று மணல் கடத்தியதாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முத்தழகு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இததேபோன்று கடந்த மாதம் 10-ம் தேதி விளாத்திகுளம் மீரான் பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் அம்மன் […]
அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் எம்.பி கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து கனிமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, கிருமிநாசினி, முகக் கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் […]
கந்து வட்டிகாக பெண்ணை மிரட்டிய 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி இருக்கிறார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலையில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனா பலரிடம் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலும் கடன் […]
திருமண நிகழ்ச்சியில் அரிவாளுடன் நடனமாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் கிராமத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் அரிவாளுடன் நடனம் ஆடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சாத்தான்குளம் பகுதியில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து பொதுஇடத்தில் பொதுமக்களுக்கு பயம் ஏற்படுத்தியதாக சாத்தான்குளம் முஸ்லிம் மேல தெருவைச் சேர்ந்த செல்லப்பா, கிங்ஸ் […]