தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான […]
Tag: #தூத்துக்குடி
சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி […]
உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகர்நகர் 2-வது தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உப்பள அதிபராக இருக்கின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மீண்டும் செந்தில்குமார் வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த கம்மல், வளையல், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை திருட்டு போனது கண்டு […]
திருமண விழாவின் போது மண்டபங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.. தமிழத்தில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் 3ஆவது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.. அந்தந்த மாவட்ட அரசு, பொதுவெளியில் அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என்று விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் கூறி வருகிறது.. இதற்கிடையே திருமண […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கோரிக்கைகளை பி.ராமர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது போராட்டத்தில் முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கவேண்டும் மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு முதலான ஓய்வுதிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். அதன்பின் மருத்துவ படியை […]
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி வெள்ளம், அபாய காலங்கள் மற்றும் பருவமழையால் ஏற்படும் பேரிடர் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தாங்கள் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு தங்களையும், குழந்தைகளையும் முதியோர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று நடைபெற்றது. அப்போது தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையம் அலுவலர் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் பாதுகாப்பு ஒத்திகையை […]
மதுகுடிக்க பணம் கொடுக்காததால் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருக்கின்றான். இவர் கூலி வேலை பார்த்து வருகின்றார். இதில் சந்தன குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனகராணி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த […]
கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் வியாபாரிகள் தெருவில் செந்தில்முருகன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு வேளாங்கண்ணி என்ற மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் வேளாங்கண்ணி தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வேளாங்கண்ணிக்கும் ஈரோட்டில் வசித்து வரும் யுவராஜ் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். […]
கொலை வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு நாணல்காடு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு இசக்கி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முறப்பநாடு பக்க பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.. இந்த ஆணையத்தின் கால அவகாசம் வருகின்ற 22ம் தேதியுடன் முடியும் நிலையில் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 22ஆம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு அவகாசம் அளித்துள்ளது தமிழக அரசு முன்னதாக அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால விசாரணை அறிக்கையை கடந்த மே 14 ஆம் தேதி மு.க ஸ்டாலினுக்கு […]
ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி மக்கள் போராடினர்.. அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உட்பட பலர் வழக்கு தொடுத்தனர்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க கோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் […]
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களில் டோக்கன் வழங்கப்பட்டு கோவிட் […]
அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீரான் பாளையம் பகுதியில் முத்துமாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் முத்துமாரி காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்றபோது அங்கு முன்பகுதியின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் […]
ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளம்பெண் மற்றும் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் கில்டா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரின் வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் உறவினர் பெண்ணான ஜெனிலா என்பவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவ்வாறு ஜெனிலா கில்டாவின் வீட்டிற்குச் சென்று அவரின் ஏ.டி.எம். கார்டை திருடிக்கொண்டு தனது நண்பரான அஸ்வந்திடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜெனிலா மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் இணைந்து கில்டாவின் […]
குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் டிரைவரான சுடலை மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுடலை மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி வெளியில் சென்று விட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுடலைமணி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் […]
பெண் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலைகனி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைகனி தனது கணவரை வேலைக்கு அனுப்புவதற்காக வேகவேகமாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுடலைகனியின் சேலையில் தீப்பொறி பட்டதால் மளமளவென்று அவரின் உடல் முழுவதும் தீயானது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் சுடலைகனி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த […]
மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டு என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு அஜித் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறில் பட்டு, வேல்முருகன் விட்டு பிரிந்து தனது மகனுடன் தற்போது தனியாக வசித்து வருகின்றார். இவருடைய மகன் அஜீத் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் […]
ரவுடியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக கோவிலின் அருகில் நின்றுகொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்ததில் அவர் அரிவாளை மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜதுரை அப்பகுதியில் நடந்து சென்ற ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததும் […]
விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் சின்னமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு விவசாயியான பட்டு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே பட்டு ராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இவ்வாறு பட்டுராஜா மது குடித்துவிட்டு தனது மனைவியான தங்கத்திடம் தகராறு […]
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மாரிச்செல்வம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் சாம் ஜோயல் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து நின்றுகொண்டிருந்த சதீஷ்குமார் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரநல்லூர் பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேல்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்ராஜ் தனது தந்தையான வேலுசாமியிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு வேலுசாமி இப்போது வாங்கித் தர முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேல்ராஜ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல்ராஜ் வீட்டில் யாரும் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முள்ளக்காடு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் செல்வதைப் பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சுனாமி காலனி பகுதியில் வசிக்கும் முனீஸ் என்பதும், அவர் […]
மோட்டார் சைக்கிளின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சோட்டையன் தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லோடு ஆட்டோ திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் முத்துக்குமார் பலத்த காயமடைந்து […]
தடையை மீறி கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பது […]
உடல்நலக்குறைவால் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிபாறை பகுதியில் வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரிந்த மாடசாமி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்சாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ படையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு மாரிச்சாமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மாரிச்சாமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை […]
ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென காணாமல் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேம்பார் கிராமத்தில் காட்டுப் பகுதி அமைந்துள்ளது. அந்தக் காட்டுப் பகுதிக்கு அங்கு வசிக்கும் மக்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு 65 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அவரின் அருகில் விஷ பாட்டில் இருப்பதாகவும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு […]
பஞ்சாயத்து தலைவி,பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூப்பன்பட்டி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தலைவியாக லிங்கேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரியின் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பஞ்சாயத்து தலைவி லிங்கேஸ்வரி கூறும்போது அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிபவர் அடிக்கடி வேலைக்கு வருவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]
கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஊர் தலைவரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நசரன் விளை பகுதியில் அருள்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அருள்குமார் அப்பகுதியில் ஊர் தலைவராக இருந்துள்ளார். அங்கு சந்தனமாரியம்மன் என்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கொடை விழாவின் போது ஆடுகளை வெட்டுவதை வழிவழியாக அருள் குமாரின் குடும்பத்தினர் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் […]
பட்டப்பகலில் பெண்ணிடமிருந்தது தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நந்தகோபாலபுரம் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செந்தமிழ் ஜெயா அமலி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் செந்தமிழ் ஜெயா அமலி தனது கடையில் இருந்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் […]
டிரைவரான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் காலனி பகுதியில் டிரைவரான கிருஷ்ணசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நந்தினி பிரபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு1 1/2 வயதுடைய மனோஜ் என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியான நந்தினி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு நந்தினி பிரபா தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்து […]
தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி குழந்தை பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தனசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ஜோஸ் துரை என்ற குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா குழந்தையை தனது பெற்றோரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையான ஜோஸ்துரை அங்கு […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை சற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ப னிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை சற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ப னிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
நன்னீரில் வாழக்கூடிய நட்சத்திர ஆமைகள் கடற்கரையில் இறந்து கிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை மீன்கள், ஆமைகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடல் பகுதியில் வாழ்ந்த பல அரியவகை உயிரினங்கள் அழிந்து விட்டது. இதனை அறிந்த உயிர்கோளக் காப்பக வனத்துறையினர், வன உயிரின சட்டத்தின்படி கடலில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவைகளை பாதுகாத்து வருகின்றனர். […]
மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துக்கிளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமான மகன் மற்றும் மகள்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் துரைப்பாண்டி மற்றும் முத்துக்கிளி மட்டுமே வாழவல்லான் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துக்களி தனது வீட்டின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கான காலையில் சென்றுள்ளார். அப்போது […]
உதவி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் உதவி கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு வில்லிசேரி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் இணைந்து காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் திடீரென போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் சங்கரநாராயணர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் […]
சிறுவன் பெயிண்டரின் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் நகர் பகுதியில் பொய்யாமொழி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த மாதம் மதன்குமார் அப்பகுதியில் உள்ள குளத்தின் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் 17 வயதுடைய சிறுவன் பெயிண்டரான மதன் குமாரை கொலை செய்தது […]
வாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்காளியம்மன் கோவில் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவருக்கு சிவ கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிவ கிருஷ்ணன் வேலையில் இருக்கும்போது தாளமுத்துநகர் பகுதியில் வசிக்கும் முத்து மல்லையாராஜ், லயோ மற்றும் ரமேஷ் ஆகிய மூன்று பேரும் […]
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு கோவில்பட்டிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுவிற்கு அதிகாரிகள் […]
தடையை மீறி புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கடையை சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிராஜூதீன் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளையரசனேந்தல் பகுதியில் ஜோசப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அந்தோணிசாமி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அந்தோணிசாமி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பரான ராஜ்குமார் என்பவருடன் இணைந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று திடீரென ராஜ்குமாரின் மீது மோதி […]
கிரேனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்ததில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் கணேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள கப்பலில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணேஷ் கப்பலின் ஏழாவது தளத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் இடறியதால் மேலே இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் கணேஷ் பலத்த காயம் அடைந்து […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கில் சிறப்பு பூஜை செய்வதும் அதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அந்த பூஜை நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி பெருக்கும், அமாவாசையும் ஒன்றாக வருவதால் அந்த பூஜையில் கலந்து கொள்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கில் ஏராளமான பொதுமக்கள் ஒரே […]
காரானது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்தில் 2 பேர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ஹரி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதுடைய கிருபாளினி என்ற பெண் குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக தனது தாத்தாவான கணபதி, மனைவி, மகள், […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் கடைக்காரர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து வேல்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் காய்கறி மற்றும் டீக்கடையை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவருக்கு ஆவுடை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துவேல் குமார் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக குடும்பம், உறவினர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அழகாபுரி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே தங்கம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தங்கம்மாள் மண்ணெண்ணெய் எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வேல்முருகன் தனது மனைவி உடல் முழுவதும் […]
பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை மோசடி செய்தவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாரைக்கிணறு பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உலகாண்ட ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி வெகு நாட்களாகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை. இதனால் உலகாண்ட ஈஸ்வரி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்து நகர் […]