தூத்துக்குடியில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பின் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர்கள் நேற்று(ஆகஸ்ட் .11) கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுகாதார அலுவலர்கள் காவலர்களிடம் தெரிவித்த பின் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி […]
Tag: #தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்களை பார்த்து நரிக்குறவ மக்கள் கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற திரைப்பட பாடலுக்கு இனங்க மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரையும், மாண்புமிகு அம்மாவையும் அடித்தட்டு மக்கள் தெய்வமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் மாத கோவில் திருவிழாவையொட்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்கள் சுவர்களில் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று மனு அளித்தனர்.
முயல் வேட்டைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஒருவர் மீது ஈட்டி தவறுதலாக பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் அம்பலசேரி மேல தெருவை சேர்ந்த தங்கதரையினுடைய மகன் இசக்கிமுத்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அங்குள்ள காட்டு பகுதியில் முயல் ஓடுவதை கண்டு இசக்கிமுத்து நண்பர்களில் ஒருவர் ஈட்டியை அந்த முயல் மீது வேகமாக வீசியுள்ளார். அப்போது அந்த ஈட்டி எதிர்பாராத விதமாக தவறி இசக்கிமுத்துவின் தலையில் குத்திவிட்டது. […]
துணை தாசில்தார் மீது இருந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை அறிந்து மகிழ்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் சுவாமிநாதன் துணை தாசில்தாராக பணியாற்றி கடந்த 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணியில் இருந்தபோது தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு போலி பட்டா வழங்கியுள்ளதாக 2003-ம் ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தனியாக குற்ற வழக்கையும் அவர் மீது போலீசார் பதிவு செய்தனர். […]
டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி கூலித் தொழிலாளியிடம் முப்பதாயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேய்க்குளம் என்ற ஊரில் விறகு கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் மனுவேல்(60). அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் பணியாற்றுவதாகவும் அதில் ஓட்டுநர் வேலை காலியாக உள்ளது என கூறி நம்பவைத்து மனு வேலுக்கு அந்த வேலையை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் […]
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஜாகீர்உசேன் நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவருக்கு வயது 33. கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முருகவள்ளி (28). இவர்களுக்கு தமிழ்செல்வன் (6), ரபிஷியா (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சண்முகராஜூம், முருகவள்ளியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதற்கு முன் சண்முகராஜ் தூத்துக்குடி இந்திரா நகரில் தங்கி உள்ளார். அப்போது […]
மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவருக்கு 16 வயதான மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக முருகன் தனது நண்பர் தங்கமுருகன் (23) என்பவரிடம் கூறியுள்ளார். தங்க முருகன் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர். முருகன் தன்னுடைய மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
கொரோனா சிகிச்சையில் சித்தமருத்துவதிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் ஆங்கில மருத்துவதிற்கு மேலாக சித்த மருத்துவம் சிறந்த பலனை கொடுக்ககிறது.எனவே ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியர் இருவர் விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசால் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்ட து. ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு […]
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்க இருப்பதால் பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டிய பட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், […]
சாத்தான்குளத்தில் காவல் நிலையம் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இதில் தொடர்புடைய 10 போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த பென்னிக்ஸ் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உத்தரவும் தமிழகமுதல்வர் பிறப்பித்திருந்தார். அதன் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரும் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், […]
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவனுக்கு நேற்று தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து மாநகராட்சி சார்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குகொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல அவரின் மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவரை சேர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி […]
திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ டிரைவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (27) மற்றும் விக்னேஸ்வரன் (28).. இதில் பிரேம்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். விக்னேஸ்வரன் பழ வியாபாரம் செய்து வருகிறார்.. இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர்.. இதில் விக்னேஸ்வரன் மனைவிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த 5 மாதங்களாக நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை…. கொரோனாவுக்கு எதிரான சிறப்பு சுகாதார தடுப்பு நடவடிக்கையால் தற்போது மீண்டு வருகிறது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடியும் ஓன்று. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சென்னையில் தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு எடுத்த தளர்வில்லாத பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்ட முயற்சியின் காரணமாக பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே குறைந்து காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]
தூத்துக்குடி அருகே பிரபல தேவாலயத்தின் உச்சியின் மேல் நின்று ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை அடுத்த தூய யோவான் தேவாலயத்தின் கோபுரத்தின் உச்சியில் நின்று ஊழியராக வேலை பார்த்து வந்த அகஸ்டின் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை […]
சாத்தான்குளம் அருகே 7 வயதுடைய சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்திருக்கும் வடலிவிளை இந்திராநகரில் வசித்து வரும் சேகர் என்பவரது 7 வயது மகள் இன்று விளையாடச்சென்றார்.. நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் தண்ணீர் டிரம்மிற்குள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு […]
தூத்துக்குடி அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்தாள். 7 வயதே ஆன இவர் காலையில் வெளியே விளையாட சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்றதும், அவரைத் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பிறகு கல்வலை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கிடப்பதாக காவல் நிலையத்தில் தகவல் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்களுக்கு 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் பாதிக்கபட்டவர்களின் குடும்பம் உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சிபிசஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் விசாரணை நடத்திய நிலையில், குற்றம் […]
நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த 3லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடிஇலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கடத்தல் செயலை தடுக்கவும், கடலோர காவல் படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆதேஷ் ரோந்து கப்பலில், இந்திய […]
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]
தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]
நேற்று மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்த தலைநகர் சென்னை தற்போது கட்டுக்குள் இருக்கின்றது. அங்கு பல்வேறு விதமான முன்னெடுப்புகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு 15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு வந்து, பின்னர் சாத்தான்குளம் […]
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் […]
சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மதுரையில் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள். சாத்தான்குளம் தந்தை – மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லி சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பான 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். மேஜிஸ்ட்ரேட் விசாரணை என்ற அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோதமாக பிடித்து வைத்தல், கொலை தடயங்களை அழித்தல் போன்ற சந்தேகங்கள் இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிந்து விசாரணை துவங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா நேரடி பார்வையில் விசாரணை நடைபெற உள்ளது. டெல்லி சிபிஐ இரண்டாம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஏற்கின்றனர். தந்தை – மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 176 1-A ( 1 ) என்ற பிரிவில் காவல் மரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி காவல்நிலையத்தில் பதிவு […]
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]
விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட்டில் 44 வியாபாரிகளுக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதியானது. அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று இரவு பரிசோதனை முடிவு வெளிவந்தது அதில் 24 பேருக்கு தொற்று உறுதி ஆன நிலையில் இன்று காலை மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் 104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 44 பேருக்கு தொற்று […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]
காவல்நிலையத்தில் மரணமடைந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் போலீஸ் விசாரணையில் இருந்தபொழுது மரணமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மரணமடைந்த ஜெயராஜ் வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்து பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கு குறித்த விசாரணைக்கு பென்னிக்ஸ் நண்பர்கள் […]
சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் […]
சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள். இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று […]
சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பியி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகள் தொடரவேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் உளவியல் ரீதியாக உடல் ரீதியாக உறுதியாக இருந்தால் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் […]
தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி […]
தூத்துக்குடி மாவட்டம் காரைக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதாக 4 பேரும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை – மகன் இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு காவலர்கள் அப்ரூவலாக மாறி இருக்கின்றார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை […]
தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் மிகவும் துணிவோடு சாட்சியமளித்த அந்த பெண் காவலர் ரேவதி தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அந்த பெண் காவலர் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களாக பிரிந்து, சாத்தான்குளம் காவல் நிலையம் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை, ஜெயராஜ் பென்னிக்ஸ் வீடு, கடை சாத்தான்குளம் மருத்துவமனை, கோவில்பட்டி மருத்துவமனை என பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டார்கள், ஆய்வுகளை நடத்தினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை […]