Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தவறான பாதையில் இளைஞர்கள்…! பள்ளி சிறுவனை கட்டாயபடுத்தி போதைப்பொருள்…. கொடூரத்தின் உச்சம்….!!!!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு  சொந்தமான வேன் ஒன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பள்ளி சிறுவன் ஒருவனை வேனிற்க்குள் அழைத்து அந்த சிறுவனுக்கு போதை பொருளை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை சிறுவன் தன்னுடைய வாயில் வைத்து விட்டு வலியால் துடித்த பிறகு அதனை தூக்கி எறிந்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் சமைத்த 2 பேர்…. போலீசாருக்கு கிடைத்த தகவல்…. நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்…!!

உடும்பை பிடித்து வனப்பகுதியில் வைத்து சமைத்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியில் பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பை வேட்டையாடி அங்கு வைத்து சமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் உடனடியாக வனப்பகுதிக்கு விரைந்து சென்று பிரகாஷ் மற்றும் பாலகிருஷ்ணனை பிடித்தனர். இதனையடுத்து அவர்களை புளியங்குடி வனசரகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் பிரகாஷ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாஞ்சாங்குளம் பள்ளியில் தீண்டாமை கொடுமை…..? கடும் துன்பத்தில் மாணவர்கள்….. கண்டுகொள்ளாத ஆசிரியர்கள்…..!!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தீண்டாமை கொடுமை நடப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதாவது இருக்கையில் அமர்வது மற்றும் சாப்பாட்டுக்கு தட்டு வழங்குதல் போன்றவற்றில் தீண்டாமை பார்க்கப்படுவதாக குழந்தைகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த தீண்டாமை கொடுமைகளை ஆசிரியர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் மாணவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் பாஞ்சாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் பட்டியல் இனத்தைச் மாணவரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்….. தென்காசியில் பரபரப்பு…..!!!!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே துப்பாக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியை உலுக்கிய தொழிலதிபர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் தொழிலதிபரான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் பிரபு, வைத்திலிங்கம், ராஜ்முருகன், அருள் பெருமாள், ராஜசேகரன், முத்துராஜ், செல்வராஜ், சுரேஷ், ராஜ் ஆகிய 9 பேருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் விற்பனை செய்து வந்தார்கள். இந்நிலையில் திடீரென சுரேஷின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மஞ்சள் பை விழிப்புணர்வு” பள்ளி மாணவர்கள் கையில் பாதாகை ஏந்திக் கொண்டு ஊர்வலம்…!!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீராணம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை ஊர்வலம் நடந்தது. இதற்கு துணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி, முஸ்லீம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி, வீராணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒன்றிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்…. அர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குடும்பத்துடன் உற்சாக குளியல்…!!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு லேசான சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள்  குடும்பத்துடன் வந்து அருவியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய படகுப் போக்குவரத்து…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு  குற்றாலத்திற்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக குண்டாறு அணையில் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த மாணவர்…. தென்காசியில் கோர விபத்து….!!

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனை…. பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நகை கடன் தள்ளுபடியில் அரசு கடும் நிபந்தனை விதித்ததை கண்டித்து, பயனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதியை குறிப்பிட்டிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்த கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்வதில் பல நிபந்தனைகளை […]

Categories
மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பயங்கர விபத்து…. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு…!!

சங்கரன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் தி.மு.க பிரமுகர் காளைப்பாண்டியன், அந்த ஊரில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தை ஓட்டி வந்தவர், கட்டநார்பட்டியில் வசிக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதிதாக பொறுப்பேற்ற…. மாவட்ட கல்வி அலுவலர்…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

ஏற்கனவே பணியாற்றிய கல்வி அலுவலர் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கல்வி அலுவலராக சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுடலை என்பவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிமாக பொறுப்பு கல்வி அலுவலராக செந்தூர் பாண்டியன் என்பவர் பணியாற்றினார். இந்நிலையில் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அதிகாரியாக தற்போது ஆர்.சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் செய்த ரகளை…. பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது….!!

மது அருந்திவிட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக ஊர்த்திக்கு அனுமதி மறுப்பு…. மத்திய அரசை கண்டித்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!

குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி…. திராவிட தமிழர் கட்சியினர் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திராவிட தமிழர் கட்சியினர் சார்பில் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரனூரில் உயிரிழந்த அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் உடலை பொதுபாதை வழியாக எடுத்து சென்றதால் சிலர் அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆக இதனை கண்டித்தும், வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்பவே கல்யாணம் பண்ணலாமா…? வாலிபரின் அத்துமீறிய செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை …!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நாரணம்மாள்புரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 17 வயது சிறுமியை சில நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் அந்த சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பேரில் போக்சோ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… எரிந்து சாம்பலான பொருட்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

 குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் வடக்கு பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரின் கடைக்கு எதிர்ப்புறமே பொருட்கள் வைக்கும் குடோன் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அதை நான் பார்க்கணும்” தொடரும் இளம் பெண்ணின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் குடிநீர் தொட்டியின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பாவை தாக்கிய காவல்துறையினர்… செல்போன் டவர் மீது இளம்பெண் ஆர்ப்பாட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

தந்தையை தாக்கிய காவல்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை தாட்கோ நகரில் மாற்றுத்திறனாளியான பிரான்சிஸ் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜுன் 18 – ஆம் தேதியன்று தனது வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசியை சித்தப்பா வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது புளியரை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற பிரான்ஸ் அந்தோணியை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்து கொடுங்கள்… தொழிலாளர் நல சங்கத்தினரின் பெட்டிஷன்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை …!!

கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் நிவாரண நிதியுதவி கேட்டு மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவிவரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி உள்ள விழுந்திருக்கும்… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் தவறி விழுந்த மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிதம்பரப்பேரி கிராமத்தில் தனி ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அப்போது இதனை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தொலைபேசி மூலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிற்றைக் கட்டி இறக்கி அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொத்தம் 10 அடி நீளம்…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

கரும்பு தோட்டத்திற்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பெரியகுளம் கரைக்கு அருகே அய்யர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அய்யர் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு சாகுபடிக்கு தயாரான நிலையில் அறுவடை செய்வதற்காக பணியாளர்கள் தோட்டத்திற்கு வந்துள்ளனர். அப்போது அந்த தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை  பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக  வாசுதேவநல்லூர் தீயணைப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற கோரி… மத்திய அரசை கண்டித்து… த.மு.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி த.மு.மு.க கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மேலூர் பள்ளிவாசல் பகுதி, பம்புஹவுஸ் ரோடு மற்றும் கீழத்தெரு பள்ளிவாசல் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பபெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகி முஹிலாஷா இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கள் விற்பனை செய்த இளைஞன்… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 50 லிட்டர் கள் பறிமுதல்…!!

தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் கள்-ஐ பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளையில் அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த செபஸ்தியான் என்பவருடைய மகன் ராபர்ட்(25) கள் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படி நின்றுகொண்டிருந்த இளைஞர்கள்… போலீசார் நடத்திய விசாரணையில்… வெளிவந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.  தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த மனோஜ்(23), மணிகண்டன்(22), சதீஷ்(21) என்பது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீசிய பலத்த காற்றால்… சரிந்து விழுந்த மின்கம்பம்… சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றால் விழுந்த மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை நகரத்திற்கு உட்பட்ட ஆலம்பட்டி பகுதியிலிருந்து ஆனைகுளம் விலக்கு செல்லும் வழியில் மின்கம்பம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மின் கம்பம் சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாக  துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மின் இணைப்பை சீர் செய்ய வேண்டும் என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகம்… கட்டித்தர கோரி நாடாளுமன்ற உறுப்பினரிடம்… மனு அளித்த பொதுமக்கள்…!!

தென்காசி திப்பணம்பட்டியில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் திப்பனம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் ஏற்பட்டுள்ளதால், தற்போது சில மாதங்களாக தற்காலிக கட்டிடத்தில் அலுவலகம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாராயம் காய்ச்சிய 3 பேரை… கைது செய்த போலீசார்… 70 லிட்டர் சாராயம் பறிமுதல்…!!

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்து, 70 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்துள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் 3 பேர் சாராயம் காய்ச்சுவதாக சேர்ந்தமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உடனடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சாம்பவர்வடகரை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரும் கடையாலுருட்டியை  சேர்ந்த சாமிசங்கர் (55), மயில்ராஜ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட கருமமே…! இப்படியா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுவ ? – தென்காசியை பதற வைத்த ”மகா பிரபு”

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வாட்ஸ் அப் ஸ்டேடஸை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதால் தான் மரணமடைந்து விட்டதாக இளைஞர் ஒருவர் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களுக்கு டார்சல் கொடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆவடையாபுரத்தை  சேர்ந்தவர் மகாபிரபு. இந்த மகாபிரபு அப்பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடன் வாழ்க்கை நடத்தி வந்த மகாபிரபு,  வாட்ஸ்அப் ஸ்டேடஸை அடிக்கடி மாற்றி தன்னை எத்தனை பேர் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் தலையணை அருவியும், கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், மதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,367 பேர். செண்பகவல்லி […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் தொகுதி தென்னை மரங்கள், திராட்சை தோட்டங்கள், மாமரங்கள் ஆகியவற்றோடு வெங்காயம், தக்காளி அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கயிறு தயாரிப்பு மற்றும் மூங்கில் நாற்காலிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடையநல்லூர் தொகுதியில் அதிகளவாக 6 அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இருமுறை தொகுதியை வசபடுத்தியுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபூபக்கர் ஆவர். கடையநல்லூர் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!

ஆலமரங்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரே ஆலங்குளம் எனக்கூறப்படுகிறது. ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வனவாசம் சென்ற போது வந்து சென்ற பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆலங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்கள் இராமாயணத்தோடு தொடர்புடையதாகவே உள்ளன. இங்குள்ள ஒரு மலையில் ராமனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. விவசாய மற்றும் பீடி சுற்றுதல் இப்பகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புகழ்பெற்ற சங்கரநயினார் கோவில் அமைந்துள்ள பகுதியே சங்கரன்கோவில் ஆகும். மலர் விவசாயமும், விசைத்தறியும் முக்கிய தொழில்களாக உள்ளன. தென்காசி மாவட்டத்தில் ஒருபுறம் குற்றால அருவியால் செழிக்கும் இடங்கள் இருந்தாலும் மிக வறண்ட பகுதியான சங்கரன்கோவில் காட்சியளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது அதிமுகவின் ராஜலட்சுமி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னர் காசிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய நகரமே தென்காசி ஆனதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றால அருவிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏ […]

Categories
தென்காசி தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போன தேங்காய் வியாபாரி…! நோட்டமிட்டு புகுந்த கொள்ளையர்கள்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும்  புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யம்மாடியோவ்!” அத்தனை வழக்குகளும் ரத்தா…? சூப்பராக அறிவித்த முதல்வர் எடப்பாடி…!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் மக்களிடையே உரையாற்றிய போது அவர் பேசியதாவது, கொரோனோ தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பல விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ரகளை… முதியவர் செய்த அட்டகாசம்… வைரலாகும் வீடியோ…!!!

அரசு பேருந்து மீது முதியவர் ஒருவர் ஏறி ரகளை செய்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கீழ கரும்புலியுத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வயது 60 இவர் கூலி தொழில் செய்துவருகிறார் . இரண்டு நாட்களுக்கு முன் ஆலங்குளம் செல்வதற்காக கரும்புலியுத்து  பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. எனவே காளிமுத்து அடுத்து […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

சின்னத்துக்கு தான் ஓட்டு போடுவோம்…! பல எதிர்பார்ப்பில் அதிமுக கோட்டை… சங்கரன்கோவில் தொகுதி ஓர் பார்வை …!!

சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மூன்று முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரையில் இது ஒரு தனித் தொகுதி என்பதனால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் இங்கு வெற்றியை தீர் மாணிக்க கூடிய முக்கிய சக்திகளாக உள்ளனர். நகரின் பெருவாரியாக  வருவாய் ஈட்ட  இங்கு  விசைத்தறி தொழிலையே நம்பி இருக்கிறது. மேலும் சங்கரன்கோயில் தொகுதியில்  உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி பூக்கள் விவசாயமும் செய்யப்படுகிறது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலத்தில் வெள்ளம் – சுற்றுலாப் பயணிகள் குளிக்‍கத்தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்கொட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் …!!

சங்கரன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட விவசாயத்துறை ராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கங்கானே கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் இவருக்கும், இவரிடம் பால் எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துரைராஜை சரமாரியாக வெட்டி அவர் மீது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காட்டு விலங்குகள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழப்பு …!!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணையில் அடைக்கப்பட்டு இருந்த 6 ஆடுகள் காட்டு விலங்குகள் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 6 ஆடுகளும் புளியரை பகவதி புரத்தைச் சேர்ந்த சோமன் என்பவனுக்கு சொந்தமானதாகும். ஆட்டு பண்ணை ஒன்றை உருவாக்கி அதில் 6 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆட்டு தொழுவத்திற்கு சென்ற சோமன் ஆங்காங்கே ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் அனைத்தும் மிருகங்கள் கடித்து இருந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் மீண்டும் அட்டகாசம்… கரடியை பிடிக்க வனத்துறையினர் முகாம் ….!!

தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர். தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர்  மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை […]

Categories

Tech |