தென் ஆப்பிரிக்காவில் இன்கார் வாலண்டின் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மணி நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனி தயாரிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பெண் அசுர வேகத்தில் 249 தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Tag: தென்னாபிரிக்கா
வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் குறித்து ஒரு சில தகவல்களை பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் வெள்ளை இன மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். ஒரானியா என்ற பகுதியில் டச்சு வம்சாவளியை சேர்ந்த வெள்ளை இன மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் கறுப்பின மக்களை சேராமல் தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். […]
தென்னாப்பிரிக்காவில் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுன் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கம்மை பாதித்துள்ளது. இது குறித்து தென்னாபிரிக்கா சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை பரவுவதை தடுப்பது குறித்து பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் […]
பூமியில் டைனோசர்கள் என்ற ஒரு வகை உயிரினம் பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்துள்ளது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான பல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அவற்றில் நிலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் காலகட்டத்தில் உருவில் பெரிய பறக்கக்கூடிய டைனோசர்கள் இருந்து உள்ளன அவை டேரோசார் என அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிற பள்ளி பேருந்து ஒன்றை போன்று 30 அடி நீளத்தில் பெரிய உருவம் கொண்ட அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அர்ஜென்டினாவின் […]
தென்னாப்பிரிக்காவில் 40 வயதுடைய நபரொருவர் மருத்துவமனை வளாகத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனிலிருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையிலுள்ள நபரை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அந்த நபர் தன்னை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி மருத்துவமனை வளாகத்தில் பலமுறை சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையிலிருந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து அருகிலிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அந்த 40 வயது […]
தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த மழை பெய்ததில் பலி எண்ணிக்கை 306 ஆக அதிகரித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் என்ற கடற்கரை நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சுமார் 60 வருடங்களில் இல்லாத வகையில் அதிகமாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதில், துறைமுகம், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்திருக்கின்றன. மேலும் வெள்ளம் ஏற்பட்டதில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த […]
நேற்று முன்தினம் முதல் தென்ஆப்பிரிக்காவில் உள்ள குவாஹுலு-நடாலா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்ததோடு, சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் […]
தென் ஆப்பிரிக்காவில் சென்ற வருடம் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று தொடர்ந்து மரபணு மாற்றமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது பல நாடுகளில் ஒமிக்ரான் எக்ஸ்.இ. என்ற புதியவகை வைரஸ் பரவிவருகிறது. இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் மரபணுமாற்றமடைந்த 2 புதிய ஒமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு தொற்றுநோய் தடுப்பு மையத்தின் இயக்குனர் துலியோ டி ஒலிவேரா கூறியதாவது “தென் ஆப்பிரிக்காவில் புதியவகை ஒமிக்ரான் வைரஸ்கள் […]
மயக்க நிலையில் இருந்த காண்டாமிருகம் திடீரென விழித்துக் கொண்டதால் ஆராய்ச்சியாளர்கள் பயந்து மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாபிரிக்காவில் டாம் ஃப்ரூ என்பவர் காண்டா மிருகங்கள் குறித்த ஆராய்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஆய்வில் காண்டாமிருகங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவைகளுக்கு காலர் ஐடி பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட காண்டாமிருகம் ஒன்று திடீரென மயக்கம் தெளிந்து அவரையும் அவரது உதவியாளரையும் விரட்டி […]
தென்னாப்பிரிக்காவில் அதிக ஆபத்தான நியோகோவ் என்னும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நியாகோவ் என்ற புதிய வைரஸானது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு வேகமாக பரவும் தன்மை உடையது என்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரின் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த, நியாகோவ் வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் தான் ஒமிக்ரான் தொற்று முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அது குறித்து அச்சம் ஏற்பட்டாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை என்று […]
தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் பரவல் அங்கு மிகவேகமாக இருந்தாலும்கூட அந்நாட்டில் 2 வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த மாதம் 24ஆம் தேதி ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்தத் தொற்று உருமாற்றமடைந்த நாள் முதலிலிருந்தே அந்நாட்டில் ஓமிக்ரானின் வேகம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரே நாளில் 27,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது தான் அந்நாட்டின் உச்சமாக […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் பாதித்து மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 85% குறைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு மையமானது, 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 69 ஆயிரம் சுகாதார ஊழியர்களை, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்தது. ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கா இந்த தடுப்பூசியை நம்பியிருக்கிறது. எனவே இந்த தகவல் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ஜான்சன் அண்ட் […]
தென்னாப்பிரிக்காவில் ஜனாதிபதி சிரில் ராமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் ஜனாதிபதியின் அறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராமபோசா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார். இந்த நிலையில் ராமபோசா ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா […]
தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை ஓமிக்ரான் வைரஸ் பாதித்ததையடுத்து அவரும், அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு திரும்பிய நபரை மரபணு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகையினால் சீனாவிலிருந்து […]
தென்னாப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு வறட்டு இருமல் உட்பட காய்ச்சலுக்கு நிகரான அறிகுறிகளே தென்படுகிறது என்று அந்நாட்டில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்து வரும் மருத்துவரான உன்பென் பிள்ளை ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு […]
தென்னாப்பிரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால் அதனை விளக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு நகரில் மருத்துவமனைகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/07/13/9039936751629713711/636x382_MP4_9039936751629713711.mp4 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த […]
தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு அதிகாரி கடையிலிருந்து பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைதானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 72 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் கடைகளை அடித்து நொறுக்கி அதிலிருந்து பொருட்களை திருடி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு கடையிலிருந்து, பால், சமையல் […]
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கிற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்தனர். தற்போது அவருக்கு 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Some Indian and White property owners resorted to firing to protect their […]
தென்னாப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண் மனநல சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் பிறப்பது தான் இயற்கை. ஆனால் அதையும் தாண்டி 4 குழந்தைகளுக்கு மேலாக பெற்றெடுப்பது இயற்கைக்கு மாறானது. கருவுறுதல் சிகிச்சை காரணமாக இவ்வாறு நடக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும். மேலும் வெற்றி வாய்ப்புகளும் குறைவு. நான்கிற்கு மேல் ஒரே சமயத்தில் பெறப்படும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சிதோலே என்ற பெண் […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக பிரத்தியேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் 501.V2 அல்லது B.1.35 1 எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் மற்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியம் கொண்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை […]
இந்தியாவின் தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா திருப்பி அனுப்பப் போவதாக வெளியான தகவல் ஒரு வதந்தி என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜகா இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா, “கோவிட் ஷில்டு”என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்களை தென்னாபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் தடுப்பு மருந்து குறைந்தபட்ச பலனை அளித்தது. அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தினர். […]
தென்னாபிரிக்கா இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு முடிவு கொண்டுவர தடுப்பூசிகளை தயாரித்துள்ளனர். பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்ட்ரோஜெனேகாவும் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரித்துள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷில்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமுடன் சேர்ந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த அந்த தடுப்பூசிகளை தென்னாபிரிக்கா […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய 4 பேருக்கும் உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களை மத்திய அரசு தனிமை படுத்தியுள்ளது மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த விமான பயணிகளில் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் இதுவரை 187 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒரு […]
பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மனி, வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரையில் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு தடையை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. மேலும் ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வரும் ரயில், பேருந்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளின் […]