Categories
உலக செய்திகள்

“7 வருடங்களாக தேடப்பட்ட திருடன்” தானாகவே சென்று சிக்கிய வேடிக்கை…. எப்படி தெரியுமா….?

தென்னாப்பிரிக்காவில் தாமஸ் கோபோ என்ற நபரை டம்பஸ்ட் கிரிமினல் என கடந்த 7 வருடங்களாக காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இவரை 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹாட்வேர்டு பொருட்களை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் வலைவீசி தேடி உள்ளனர். இந்நிலையில் 7 வருடமாக காவல்துறையினர் தேடியும் கிடைக்காத தாமஸ் கோபோ தானாகவே சென்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அதாவது தாமஸ் கோபோ தான் விண்ணப்பித்திறந்த போலீஸ் வேலை குறித்து கேட்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.‌ அப்போது தான் அவர் தேடுதல் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதி…. இந்திய வம்சாவளி நபர்…. பெருமை சேர்த்த நீதிபதி…. !!!!

தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பனை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த நீதித்துறை ஆக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க வருகிறார். நீதி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க விருக்கிறார். 64 வயதுடைய ராஜேந்திரன் ஜோடி […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை மாறுபாடு எதிரொலி!”…. 8 நாடுகளுக்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா….!!

அமெரிக்க அரசு, புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் 8ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு வரும் 29ஆம் தேதியிலிருந்து 8 நாடுகளுக்கான பயணத்தடை  நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. போஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் Omicron என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, ஜிம்பாப்வே, மலாவி, லெசோதா, ஈஸ்வதினி, போஸ்வானா, நமீபியா, மொசாம்பிக் மற்றும் தென்னாப்ரிக்கா […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 8 வயது சிறுமி… ஷாப்பிங் மாலில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்… மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு…!

தென்னாப்பிரிக்காவில் காணாமல் போன 8 வயது சிறுமி ஷாப்பிங் மாலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் சில நாட்களுக்கு முன்பு 8 வயதுடைய லிஹிலுமோ மிசினி என்ற சிறுமி காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரபல ஷாப்பிங் மாலான ஹெமிங்வேஸ் என்ற மாலில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி காணாமல் […]

Categories
உலக செய்திகள்

என்னது…80 வயசு தாத்தாவுக்கும்,29 வயசு மாணவிக்குமா… காதலை வளர்த்து திருமணம். வைரலாகும் புகைப்படம்…!

காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு ஒரு ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். காதலுக்கு வயதில்லை என்றும், வயது வித்தியாசம் இல்லை என்றும் நாம் பல கவிதைகளில் படித்திருக்கிறோம். அதேபோல இங்கு ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கேப்டவுனை சேர்ந்த 29 வயதுடைய டெர்ஸல் என்ற பெண் 80 வயதுடைய வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து காதலி டெர்ஸல் கூறியதாவது, அவர் என்னை மிகவும் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கு…. இந்த நாட்டு பிரதமர் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

எஸ்தினி நாட்டு பிரதமர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல முக்கிய புள்ளிகளும் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள சிறிய எஸ்வதினி விநாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு சுவாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் 2 வது மிகப்பெரிய” எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்…. ஏற்பட்ட வெடி விபத்து…. வெளியான வீடியோ…!!

டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால்  7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

“செல்லமாக வளர்த்து சிங்கங்கள்” நடைப்பயிற்சியில் முடிந்த வாழ்க்கை பயணம்….!

செல்லமாக வளர்த்த இரண்டு சிங்கங்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தாக்கியதில் மேத்யூசன் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேஸ்ட் மேத்யூசன் என்பவர் இரண்டு வெள்ளை சிங்கங்களை குட்டிலிருந்து வளர்த்து வந்துள்ளார். 2 சிங்கங்களையும் புதன்கிழமையன்று சஃபாரி லாட்ஜில் நடை பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது திடீரென இரண்டு சிங்கங்களும் அவரை தாக்கியது. இதை பார்த்த அவரது மனைவி ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகள் வீணானது. இரண்டு சிங்கங்களையும் மேத்யூசன் வேட்டையாடுவதற்கு பதிவு […]

Categories

Tech |