தென் கொரியாவில் உள்ள குவாச்சியோன் நகரில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் உள்ள சுரங்க பாதை வழியாக சென்ற பேருந்து மற்றும் ட்ரக் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதோடு 35 பேருக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் […]
Tag: தென் கொரியா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் […]
190 அடி குகைக்குள் சிக்கிய 2 முதியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தென்கொரியாவில் சிங் மைன் உடைப்பின் போது 56 மற்றும் 62 வயதுடைய 2 முதியவர்கள் பாதாள குழிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 2 முதியவர்களும் 190 அடி குகைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 9 நாட்களாக வெறும் காபித்தூளை மட்டும் கலக்கி குடித்து அவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். இவர்களை தற்போது மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் 2 முதியவர்களையும் பரிசோதனை செய்த […]
தென் கொரியாவின் இடோவான் மாகாணத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய்திருவிழா வருடம் தோறும் அக்டோபர் மாத இறுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த வருடம் திருவிழா நடந்த நிலையில் பேய் வேடம் அணிந்த மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்திருப்பதனால் மூச்சு திணறி பல பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 தாண்டி உள்ளது. 19 வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் […]
தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 149 ஆக […]
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இது என்பதால், ஒரே இடத்தில் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
தென் கொரியாவின் இச்சியொன் நகரில் இருந்து 173 பயணிகளுடன் விமானம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து மெச்சன் நகருக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது விமானம் நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மெச்சன் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்தது ஆனால் அங்கு கன மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு முறை விமானத்தை தரை இறக்க நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் மூன்றாவது முறையாக விமானத்தை விமானி தரையிறக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியதால் […]
அணு ஆயுதங்களை தாக்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வபோது வடகொரியா அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை மேற்கொண்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியாகவும் […]
வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை […]
தென் கொரியா அதிபர் யோன் சுக் இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவ தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தென்கொரியா அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்து இருக்கின்றது. மேலும் இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கிம் ஜோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் […]
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா […]
திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இச்சியான் நகர் அமைந்துள்ளது. இங்கு 4 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு ஹோட்டலும், 2,3-வது தளத்தில் அலுவலகமும், 4-வது தளத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் […]
வட கொரியா நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பாதுகாப்புத் திறனை அதிகரிக்க போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா நாட்டின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்கள் நாட்டு பாதுகாப்புத் திறனை அதிகரிக்கப் போவதாக தென்கொரியா நாடு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில்ண ஆசியா பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை வடகொரியா நாட்டில் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]
இந்தியாவில் பிரிட்ஜ் மார்க்கெட்டின் மதிப்பு மட்டும் 5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் தென் கொரியாவை சேர்ந்த சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு நிறுவனங்களான வோல்டாஸ், காட்ட்டரேஸ் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை குறைப்பதற்காகவும், உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்க்காகவும் பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் […]
தென் கொரியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றி பேசிய தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ, தடுப்பூசி செலுத்தாமல் தென்கொரியா வரும் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் நடைமுறை வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் குழு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என […]
உக்ரைனில் கிவ் நகரத்திற்குள் தென் கொரியா தூதரகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் காரணமாக மூடப்பட்ட தென் கொரிய தூதரகம் உக்ரைனின் கீவ் நகரத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கான தென் கொரிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் கீவ் நகரத்திற்கு திரும்பியுள்ளனர் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக தென் கொரியா கடந்த பிப்ரவரி […]
# தென் கொரியாவில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அங்கு இருக்கக்கூடிய பாஸ்ட் ரெஸ்டாரன்ட் அனைத்தும் இரவு 11 மணிக்கு அடைத்துவிடுவார்கள். ஆனால் ஷாப்பிங் மால் மட்டும் அதிகாலை 4 மணி வரை இருக்கும். # இதையடுத்து தென்கொரியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மிகவும் பிரபலமானது. மேலும் அனைத்து விதமான முக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. உலகத்தில் உள்ள பல மக்கள் தென்கொரியாவுக்கு செல்வதற்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை காரணம் ஆகும். # […]
ஒமிக்ரான் வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருகிறது. அதாவது தென்கொரியாவில் கடந்த 9ஆம் தேதி அன்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 481ஆக சரிந்தது. தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை […]
வடகொரியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தாலும் கூட, உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதன் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள போதும் அது தன் ஏவுகணை சோதனைகளை நிறுத்திய பாடில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாடு ஐசிபிஎம் என அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்யும் வல்லமை கொண்ட […]
தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் 3 வது அலை, 4 வது அலைக்கு காரணமாகியுள்ளது. இதற்கிடையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் 5 லட்சத்தை கடந்து வந்த நிலையில் சற்று குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,87,213 பேருக்கு […]
தென் கொரியா 100 கோடி வோன் மதிப்பில் 20 உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென் கொரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக பத்திரிகையாளர் போ சியூங் சான் கூறுகையில். “உக்ரைனுக்கு 12 உபகரணங்கள், போர் வகைகள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், உணவு மற்றும் மருத்துவம் […]
தென்கொரிய நாட்டில் அதிபர் தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் ஆளும் கட்சித் தலைவர் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆளும் கட்சித் தலைவரானா சாங் யங்-கில்- பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரின் பின் பக்கத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை சுத்தியைக்கொண்டு பலமாக அடித்தார். இதில் அவரின் மண்டை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரை […]
தென்கொரியாவில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி 2,66,838 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தென்கொரியாவில் வருகின்ற 9 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சுமார் 3,500 க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் […]
மூக்கை மட்டும் மறைக்கும் வகையில் புதுவிதமான முககவசம் ஒன்றை தென் கொரியாவின் அட்மன் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முகக் கவசம் என்பது நம் அனைவரின் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. அதிலும் வித்தியாசமான முகக் கவசங்கள் வெளியாகி நம்முடைய கவனத்தை ஈர்த்து வந்த நிலையில், தற்போது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை முகக்கவசம் என்று சொல்வதைவிட மூக்குக் கவசம் என […]
தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 8,000-த்தை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 8, 571 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியிருந்த நிலையில், நேற்று 8,000-த்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது வரை, மொத்தமாக சுமார் 66,565 நபர்கள் கொரோனா பாதிப்பு […]
பைசர் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தென் கொரியா இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய paxlovid என்னும் மாத்திரையை கண்டறிந்துள்ளார்கள். இந்த மாத்திரை கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 90% வரை கம்மிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த paxlovid மாத்திரைகளை தென் கொரிய அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்த அந்த மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், 65 […]
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் குடும்பங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தென்கொரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதாகவும், அதற்கு காரணம் செல்லப்பிராணிகள் தான் என்று கூறப்படுகிறது. மேலும் சியோல் பெருநகர தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2021-ஆம் ஆண்டு வரையில் சுமார் […]
தென்கொரியாவில் பணிப்பெண் ஒருவர் முதலாளி வந்ததை கூட கவனிக்காமல் “ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா” என்று குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்கொரியாவில் இளம்பெண் ஒருவர் தேநீர் விடுதியில் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். பின்னர் கையில் இருந்த துடைப்பானை கீழே போட்டு விட்டு பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு “ஏ டண்டனக்கா… டணக்குனக்கா” என்று சூறாவளி வேகத்தில் நடனமாடியுள்ளார். மேலும் முதலாளி கதவைத்திறந்து உள்ளே வருவதை கூட கவனிக்காமல் அந்தப் இளம்பெண் நடனத்தில் […]
தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை நகர்புற விமான சேவைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. தென்கொரியாவிலுள்ள சியோல் நகரத்தில் வைத்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானம் வானிலிருந்து செங்குத்தாக வந்து தரையிறங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை எதிர்வரும் காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்தில் இணைக்க சியோல் அரசு திட்டமிட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரியஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவலின்படி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரியஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நிரந்தரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரியஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2022-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்திலிருந்து கேலக்ஸி நோட் சீரியஸ் நீக்கப்பட்டிருந்தது […]
தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 4 ஆயிரமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,116 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கொரியாவின் […]
நேற்று தென்கொரியாவின் முன்னாள் அதிபர் சுன் டூ-ஹ்வான் திடீரென மாரடைப்பினால் பரிதாபமாக உயிரிழந்தார். தென்கொரியாவின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் அந்நாட்டில் 1979-ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தை தன்வசம் கொண்டு வந்துள்ளார். மேலும் ராணுவ வீரரான சுன் டூ-ஹ்வான் ஜனநாயக போராட்டங்களை ஆட்சியில் இருந்த போது ஒடுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ரோஹ் என்பவர் 1987-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பதவியை ஏற்றார். இந்த நிலையில் அல்சைமர் என்ற நோயால் […]
தென் கொரியாவில் Esports துறை ஆன்லைன் கேம் விளையாட்டில் ஏற்பட்டுள்ள சில தளர்வுகளால் வளர்ச்சி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் கேம் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தடையானது தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் Esports துறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக அடுத்த ஆண்டு பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் […]
தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரிய அதிபரின் சகோதரி கிம் ஜோ ஜங் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “கொரிய போரை அதிகாரப்பூர்வமான முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை செயற்கையான புன்னகையுடன் இரண்டு படங்கள் எடுத்துக் கொள்வதால் மட்டும் உண்மை நிலவரம் மாறிவிடாது. வடகொரியாவுக்கு எதிரான […]
வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு தரப்பினருக்குமான உறவை வலுப்படுத்த இரண்டு நாடுகளும் சம்மதித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா, கடந்த 1950 ஆம் வருட காலகட்டத்தில் இரண்டு நாடுகளாக பிரிந்திருக்கிறது. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்பின்பு இருநாடுகளும் சமாதானம் ஆனது. எனினும் மீண்டும் மோதல் உருவானது. அதாவது வடகொரியாவை எதிர்க்கும் நபர்கள் தென்கொரியாவிற்கு சென்று வடகொரியாவின் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை எழுதி ஹீலியம் பலூன்களில் […]
தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தினால் அதை சரிசெய்யும் முயற்சியில் விசித்திரமான திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் தம்பதியினர் மூன்று குழந்தை பெற்றால் 70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா நாட்டில் உள்ள south Gyeongsang என்ற மாகாணத்தில் changwon என்ற நகரில் பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை ஈடு செய்வதற்கு திருமணமான தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை […]
தென்கொரிய அதிபர் மூஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சர்வதேச விவகாரங்கள் குறித்து உரையாடினார். தென் கொரிய குடியரசின் அதிபர் முஞ்சே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று உரையாடினார். அப்போது கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் சர்வதேச மதிப்பு சங்கிலிகலின் தற்போதைய பரவல் வளர்ச்சி சார்ந்த மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பின் முக்கியப் பங்கு ஆகிய சர்வதேச விஷயங்கள் […]
சொந்த நாட்டிற்கு திரும்ப நினைத்த மாணவி விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த ஜோஷ்-ஷெர்லி தம்பதியின் மகள் லிஜோ ஜோஸ் இவர் தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்காக 4 ஆண்டுகள் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவிற்கு வந்த லிஜோ மீண்டும் தனது படிப்பைத் தொடர ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தென் கொரியாவிற்கு சென்றுள்ளார். கொரோனா காரணமாக லிஜோ 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நாட்களில் […]
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் சில பேர் காணாமல் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் சில நாள்களாக கனமழை மழை பெய்த நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இதில் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது. தலைநகர் சியோலில் […]
தென் கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து பகை உணர்வு குறைந்து இணக்கமான சூழல் உருவாகியது. ஆனால் தற்போது மீண்டும் தென் கொரியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியா சென்றவர்கள் துண்டு பிரசுரங்களை […]
இனி வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் எங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது சில தினங்களாக தென்கொரியாவை மிகவும் கடுமையாக வடகொரியா மிரட்டி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் பொதுவான தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும், இனி இரு நாட்டிடையே எந்த உறவும் இல்லை என்றும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே தென் கொரியா எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் ராணுவத்தினரிடம் நடவடிக்கை […]
தென் கொரியா மீது ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக வட கொரிய அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரியாவின் அரசும் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி ராணுவ தளபதிக்கு தென் கொரியா மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நாட்டு மக்களின் கோபத்தை குறைக்க ராணுவம் கண்டிப்பாக நடவடிக்கைகளை […]
தென் கொரியாவின் அனைத்து தொடர்புகளையும் வடகொரியா துண்டித்து கொள்ள முடிவு எடுத்துள்ளது. வடகொரியா தென்கொரியாவிற்கு இடையிலான இராணுவ மற்றும் அரசியல் தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் என வடகொரிய அரசு அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. ஹனோய் நகரில் கடந்த ஆண்டில் கிம் மற்றும் அமெரிக்க அதிபருக்கு இடையே நடந்த உச்சி மாநாடு தோல்வியில் முடிந்ததால் தென்கொரியா உடனான தொடர்பை துண்டித்ததுடன், அணுசக்தி பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது. மேலும் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடன் கையெழுத்தான […]
கொரோனா பரிசோதனை செய்ய தென் கொரியாவில் இருந்து கூடுதலாக 1,50,000 பிசிஆர் தமிழகம் வந்தடைந்தன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத னால் நாள்தோறும் 13,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் […]
தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் இரவு விடுதிக்குச் சென்று வந்த 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே முறையான சமூக இடைவெளியை தென் கொரிய மக்கள் கடைப்பிடித்து வந்தனர். இதனால் கொரோனா பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தென் கொரியா கொரோனா கட்டுப்படுத்ததில் உலக அளவில் முன் உதாரணமாக விளங்கியது. ஆனால் தற்போது […]
வடகொரிய அதிபர் கிம் வந்ததும் கொரிய எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஒரே நாடாக இருந்த கொரியா வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்து சென்று விட்டது. அதை தொடர்ந்து தான் இருநாடுகளுக்கும் இடையே பகை உருவானது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. 2011 ஆம் ஆண்டில் வடகொரியாவின் அதிபராக 36 வயதான கிம் ஜாங் உன் பொறுப்பு […]
தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) சார்ந்த ஆளுங்கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து மிரட்டி வரும் நிலையிலும் தென்கொரியாவில் நேற்று பொதுத் தேர்தல் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆளும் ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை […]
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4,800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4, 800ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 29ஆக உயர்ந்துள்ளது சீனாவுக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தென் கொரியாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அதிபர் மூன் ஜேயிங் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தென் கொரியாவில் […]
வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]