கோவில் தெப்பக்குளத்தில் குளித்தவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள செஞ்சேரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு வயது 44. இவர் தனது நண்பருடன் துறையூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு உள்ள காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில் அவர் குளித்து கொண்டு இருந்தார். அப்போது சாமிநாதன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார். தண்ணீரில் மூழ்கிய அவர் வெகுநேரமாகியும் வெளியே […]
Tag: தெப்பக்குளம்
ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் வாலிபரின் சடலம் கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் “உயிரிழந்தவர் மன்னார்குடி தெப்பக் குளம் பாரதிதாசன் […]
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் கோடை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தெப்பகுளத்தில் இந்த வருடம் பெய்த கன மழையால் நீர் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள […]
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் ஜனவரி 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தெப்பத்திருவிழா உற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வருவார். திருவிழாவின் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை […]