Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு கிடையாது…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இயங்காது என்றும் நடப்பு டிக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

20-ம் தேதி முதல் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற 20ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை எழும்பூர் -தாம்பரம் வரையிலான பகுதியில் ரத்து செய்யப்பட்டு இரவு 7.30மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவித்துள்ளது. நாகர்கோவில்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12688) வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை தாம்பரம் -எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

இனி ரயிலில் பயணம் செய்ய இது கட்டாயம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. மேலும் கொரோனா காரணமாக டிக்கெட் முன் பதிவு செய்வதன் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனாவிற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! புத்தாண்டு அன்று… ரயில்கள் இப்படி தான் இயங்கும்…. அறிவிப்பு…!!!

கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து  பாதிப்பு படிப் படியாக குறைந்ததால் மீண்டும் சென்னையில் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு விடுமுறை நாட்களில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேசிய விடுமுறை நாளான அன்று  மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. முன்பதிவில்லா ரெயில் பயணிகளுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே 41 ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் இணைத்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கி இந்த ரயில்களில் பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில், கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயில், நாகர்கோவில் – கோவை உள்ளிட்ட 41 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விரைவு ரயில்களில் இருந்து முன்பதிவில்லா […]

Categories
மாநில செய்திகள்

வைகை ரயில் சென்னைக்கு வராது…. பாதியில் நிறுத்தம்….!!!!

மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் 12636 ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்துடன் சேவை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில் ஜனவரி 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து மாலை 6: 10 மணிக்கு புறப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையைஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 1 முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் முத்த நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4-ம் தேதி முதலும், சென்னை – கோவை இடையேயான […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….   தெற்கு ரெயில்வே அதிரடி….!!!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, * காக்கிநாடா-கொல்லம் (வண்டி எண்: 07139) இடையே இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.35 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காக்கிநாடா (07140) இடையே நாளை மறுதினம் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பொங்கல் பண்டிகை…. இந்த ஊர்களுக்கு எல்லாம் சிறப்பு ரெயில்கள்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கீழ்க்கண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, * தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 06601) இடையே வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி இரவு 9.45 மணிக்கும், நெல்லை-தாம்பரம் (06002) இடையே வருகிற ஜனவரி மாதம் 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு குட் நியூஸ்….! 543 ரெயில் நிலையங்களில்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில்களில் பயணிகள் வசதிக்காக வை-பை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளஅறிக்கையில், இதன் மூலமாக அரை மணி நேரத்திற்கு பயணிகள் இலவசமாக வைஃபை வசதியை பயன்படுத்தலாம். அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, மதுரை – 95, பாலக்காடு – 59, திருவனந்தபுரம் – 70 என மொத்தம் 543 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை-பழனி, பழனி-கோவை ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்பட்டு வருகிறது. அதாவது, மதுரையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ந்து கோவைக்கும் செல்லும். அதேபோன்று கோவையில் இருந்து பழனிக்கு செல்லும் ரயில் அங்கிருந்து தொடர்ச்சியாக பழனி-மதுரை சிறப்பு ரயிலாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சி வழியே இயங்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது. பகுதி நேர அட்டவணைப்படி, இந்த ரயில் கோவையில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2;33 மணிக்கு புறப்படும். […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே…. 14, 18, 21 ஆகிய தேதிகளில்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல்-லக்னோ  இடையில் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் – லக்னோ இடையில் 16093 எண் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. டிசம்பர்-15 முதல்…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!!

பொள்ளாச்சி – திருச்செந்தூர், மதுரை வழியாக மற்றும் செங்கோட்டை – கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் – பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி – திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே செம ஹேப்பி நியூஸ்….!!!!

முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காரணமாக ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவில்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்கள் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்கள் இன்று (3ஆம் தேதி முதல்) […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு கட்டண ரயில்கள்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம்  கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்(06005) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமுனையில் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 3.10மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் (06006), மறுநாள் காலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதனுடன் சென்னை தாம்பரம்- […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதன்படி ரயில் சேவைகளும் முடக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் மக்களின் தேவைகளுக்காக குறைந்த அளவிலான சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்துள்ள நிலையில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனிடையே ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டது. அப்போது ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னை மும்பை உள்ளிட்ட 250 ரயில் நிலையங்களில் கடந்த 2020 மார்ச் முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலில் இருந்தது. கொரோனா காலகட்டத்தில் ரயில் நிலைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது….. வெளியான செம மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!

பண்டிகைக்கால ரயில்களில் இனி தட்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்னும் 5 நாட்களில் அனைத்து ரயில் எண்களும் வழக்கமான எண்களாக மாற்றப்பட உள்ளது. இந்திய ரயில்வே வாரியம் கடந்த 12ஆம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில்களிலும் இயங்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி…. 40 விரைவு ரயில்கள் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 40க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் கடந்த சில நாட்களாகவே ரத்து செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஹவுரா – சென்னை சென்ட்ரல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சேவைகள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளை பாதிப்பால் சென்னை- புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615) உட்பட 15 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -விஜயவாடா பினாகினி ரயில் (12712), சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயில் (12967), ஹைதராபாத் டெக்கான் (12603), ஹைதராபாத் சார்மினார் (12759) இன்றும், நாகர்கோவில் ஷாலிமார் இரயில் (12659) நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மண் சரிவு – 4 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. அதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாகர் கோவில் -திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம் – திருவனந்தபுரம், நாகர்கோவில்- திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- நாகர்கோவில், திருவனந்தபுரம் – […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 25 முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் சேவை முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், முன் பதிவு செய்யாமல் உடனடி டிக்கெட் மூலம் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை எழுந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தண்டவாளத்தில் மண்சரிவு…. 17 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாகர்கோவிலிலிருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி – நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாகவும், 17 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில், கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு- குமரி, குருவாயூர் […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்களுக்கு இரவு நேர ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை கோட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பிரிவில் வருகின்ற நவம்பர் 20, 24,27, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 11.45 மணி வரை 4 நாட்களுக்கு பாதை புதுப்பித்தல் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட போக்குவரத்து தடைகள் காரணமாக ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ரயில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் எல்லாம் ரயில்கள் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களில் மழைநீர் வைத்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதனை சீரமைக்கும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் -நாகர்கோவில் பிரிவில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே செல்லும் சிறப்பு ரயில்கள், கொல்லம் – […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தினசரி விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் கன்னியாகுமரி வழியாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் தினசரி விரைவு ரயில், அதேபோல் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் விரைவு ரயில் ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன. இது தவிர சென்னை, வெளி மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஒரு வாரத்திற்கு ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை 6 மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 20-ந் தேதி வரை செயல்படாது…. மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு தர மேம்பாட்டு மற்றும் புதிய எண்கள் புதுப்பித்தல், ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 நாட்களுக்கு இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் பயணச்சீட்டு முன்பதிவு உள்ளிட்ட சில சேவைகள் இயங்காது. நாட்டில் பயணிகள் ரயில் சேவை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை அடுத்த 7 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில்கள் இன்று முதல்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் இன்று முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 293 எக்ஸ்பிரஸ் ரயில்களும்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு… !!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் மீண்டும் வழக்கமான பெயர்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பு கால அட்டவணைப்படி வழக்கமான பெயர்களில், வழக்கமான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில்கள் நாளை முதல்…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் நாளை முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு சிறப்பு ரயில்…. எந்த வழியாக போகுது தெரியுமா?…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கொரோனா கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறை பொதுமக்களின் நலனுக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் ரயில்களில்  பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பீகார் மாநிலம் கான்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம் வழியாக் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT- சென்னையில் இருந்து ரயில்கள் இயங்காது…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக நாளை காலை 9 […]

Categories
மாநில செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பு…. ரயில் சேவையில் மாற்றம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி ரயில் 07237, 07238 சென்னை சென்ட்ரல்-பித்ர குண்டா சிறப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

புறநகர் ரயில்கள் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.அதுமட்டுமல்லாமல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் பல்வேறு இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி சூலூர் பேட்டை அருகே கலங்கிய நீர் தேக்கத்தில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே மின்சார ரயில் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ரயில்கள் இயக்கம் தொடர்பாக பயணிகள் விவரம் அறிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 8300052104 என்ற எண்ணில் ரயில்கள் இயக்கம் தொடர்பான தகவல்களை அறியலாம். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

தொடர் கனமழை காரணமாக நாளை சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை புறநகர் ரயில் சேவைகளான சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், […]

Categories
மாநில செய்திகள்

காரைக்குடி -மதுரை சிறப்பு ரயில்கள்…. வழக்கம்போல் இயங்கும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

காரைக்குடி- மதுரை சிறப்பு ரயில்கள் எப்போதும் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை -செங்கல்பட்டு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காரைக்குடி- சென்னை, எழும்பூர்- மதுரை, புதுச்சேரி- டெல்லி சிறப்பு ரயில்கள் இன்று எழும்பூர்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட ரயில்கள் தற்போது வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, காரைக்குடி […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – கடற்கரை ரயில் வழக்கம் போல் தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!! இயங்கும்….

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் ஒரு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வரும் மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை தாம்பரம் -கடற்கரை புறநகர் ரயில்கள் என்று வழக்கம்போல் […]

Categories
மாநில செய்திகள்

முன்பதிவில்லா ரயில் இயக்கப்படாது…. சற்றுமுன் தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா ரெயில் ஞாயிறு அன்றும்,பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை அன்றும் ஏற்கப்படாது என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி இடையே வருகிற 13-ஆம் தேதி முதல் தினசரி மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சியை அடையும். பொள்ளாச்சியில் இருந்து 14-ஆம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.40 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் பயணிகள் வசதி, பராமரிப்பு பணிகள், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனால் ரயில் புறப்படும் நேரம் மற்றும் வருகை புரியும் நேரம் ஆகியவை மாற்றியமைக்கப்படும். அவ்வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று 8ம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படுமா என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

முன்பதிவில்லா ரயில்களில் இனி மொபைல் டிக்கெட் வசதி…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதனால் பயணம் செய்வோர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் முன்பதிவு இல்லாத ரயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ரயில் நிலையத்திலோ வேறு எந்த பகுதியிலும் இருந்து கொண்டே டிக்கெட்டுகளை பெற முடியும்.ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ஆலப்புலா ரயில் இரவு 10.55-மணிக்கு பதில் இரவு 12.30 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில்கள்…. எந்தெந்த ஊருக்கு தெரியுமா?….. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை எழும்பூரில் நவம்பர்  , 3 இரவு 10:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06037) மறுநாள் காலை 11:00 மணிக்கு நாகர்கோவில் செல்லும். […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இன்று  முதல் சில சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . அதன்படி நவம்பர் 4 முதல் மதுரையில் புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06655) மானாமதுரையில் இரவு 7.30, சூடியூரில் 7.42, பரமக்குடியில் 7.55, சத்திரக்குடியில் 8.10, ராமநாதபுரத்தில் 8.25, உச்சிப் புளியில் 8.47, மண்டபத்தில் 9.02, பாம்பனில் 9.20 மணிக்கு பதில் முறையே இரவு 7.15, 7.25, 7.40, 7.56, 8.10, 8.32, 8.52, 9.10 மணிக்கு புறப்படும். புனலுார் – […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரயில்களில் முன்பதிவில்லா பயணம்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று  முதல் முன்பதிவு இல்லா 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயக்க படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் மக்களின் தேவைக்காக முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நவம்பர் 4ஆம் தேதி முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் இருந்து […]

Categories

Tech |