Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே உஷார்… வாட்ஸ் அப் டிபி மூலம்….. ரூ.2 லட்சம் கொள்ளை….!!!!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு, முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் சந்திராவின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியாக வைத்த கணக்கு ஒன்றிலிருந்து நேற்று மெசேஜ் வந்தது. அதில், “எனக்கு அவசரமாக ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது. பணம் அனுப்புங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய அலுவலர் ரூ. 2 லட்சம் பணத்தை அனுப்பினார். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அலுவலருக்கு தெரியவந்தது. உடனே அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

தெலுங்கானாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண் ஸ்ரீவாணி. இவருக்கு வரும் 13 ஆம் தேதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீவாணி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். ஸ்ரீவாணி குணமடைந்து வீடு திரும்புவார் என்று மணமகன் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய நோயாளிகள்… வலைவீசி தேடிவரும் காவல்துறை..!!

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு கட்டடங்கள் மருத்துவமனை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பல்வேறு இடங்களில் மன அழுத்தத்திற்குள்ளாகும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடுவதும் தொடர் கதையாகிக் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1,100 கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்..!!

தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் 1,100 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழப்பதால்  தற்கொலை செய்து கொள்வதாக ஹைதராபாத் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையொட்டி  சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்திய தெலங்கானா காவல்துறை, சீனாவை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த இளைஞர்… அச்சத்தில் சடலத்தை எடுக்க மறுத்த மக்கள்… ஜேசிபியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவலம்..!!

கொரோனாவால் இறந்த இளைஞரின் சடலத்தை, மயானத்திற்கு ஜேசிபியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்று வந்தார்.. கொரோனா‌ சம்பந்தமான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அந்த இளைஞருக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடல்… பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா?… போலீசார் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில், பெண்ணின் உடல் ஒன்று மிதந்துவந்தது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை அங்கிருந்து வெளியே எடுத்து கொண்டு வந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமான மகள்… கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்..!!

ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய திவ்யா என்பவர் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு காலேஜில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படுவதற்கு 2  நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்…. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!

தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் உருவத்தில் கார் வடிவமைப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த ஹைதராபாத் புது முயற்சி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்களிடையே COVID19 குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கொரோனா வைரஸ் போன்ற உருவம் கொண்ட காரை சுதா கார்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்டது. சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தை சொந்தமாகக் நடத்தும் சுதாகர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த கார் 100 சிசி எஞ்சின் கொண்டது. இது நான்கு சக்கரங்களை கொண்ட ஒற்றை இருக்கை கார். இந்த காரில் ஒருவர் 40 கி.மீ வரை வசதியாக பயணிக்க முடியும். இந்த மாதிரியைத் தயாரிக்க அருங்காட்சியத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: காந்தி மருத்துவமனையில் போலீசார் கண்காணிப்பு

ஹைதராபாத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, காந்தி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பினை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தூண்டியுள்ளது. உயிரிழப்பு 60 ஆக உயர்ந்துள்ளது.இது ஒருபுறம் இருக்க மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக சென்ற மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இரு மாநிலங்களுக்கு ரூ 20,00,00,000 வழங்கிய ராமோஜி ராவ்!

கொரோனா தடுப்பு பணிக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 கோடியை ராமோஜி குழும நிறுவனத்தின் தலைவர் ராமோஜி ராவ் (ramoji rao) வழங்கினார். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. மேலும் அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை […]

Categories

Tech |