தெலுங்கானாவில் சங்காரெட்டி மாவட்டத்தில் பதன்செரு என்னும் பகுதியில் இளம் பெண் ஒருவர் அரசு பேருந்தில் ஏறினார். அதன் பின் செகந்திராபாத் ஜூப்ளி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பேருந்து விட்டு அனைத்து பயணிகளும் இறங்கிய பின் அதில் பர்ஸ் ஒன்று கிடந்ததை நடத்துனர் ரவிந்தர் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பர்ஸை திறந்து பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பரிசில் அதன் உரிமையாளர் விவரங்கள், ரூ.403 பணம் மற்றும் ஒரு கடிதம் போன்றவை இருந்துள்ளது. அந்த […]
Tag: #தெலுங்கானா
தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் ராஜண்ணா பகுதியில் வசித்து வந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். இதற்கிடையில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஷாலினியை கடத்தியதாக ஜானி மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வேறொருவருடன் நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக […]
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப காலமாக வயதானவர்களும் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று வரும் சம்பவங்கள் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது நபர் கால் ரெட்டி. இவர் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்து வருகிறார். ஆனால் கிராம பஞ்சாயத்து தலைவராவதற்கு பத்தாவது வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று அரசு […]
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைடெக் விபச்சாரம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சல்மான்கான் என்கிற சமீர் என்பவர் வசித்து வருகிறார். முதலில் இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஹோட்டலில் தங்குவதை கவனித்துள்ளார். இந்நிலையில் சுலபமாக சம்பாதிக்க இதுதான் சிறந்த வழி என […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை […]
பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய வருகையை பதிவேடுகளின் மூலமாகவோ அல்லது பயோ மெட்ரிக் மூலமாகவோ பதிவு செய்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு வருகைபதிவு ஆன்லைன் மூலமாக உள்ளிடுவதற்கு செல்போன் செயலி ஒன்றை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தங்களுடைய செல்ஃபி புகைப்படங்களை பள்ளி கட்டடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை ஆகிய தகவல்களோடு உள்ளிட வேண்டும். இதில் வருகை புரிந்திருக்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். […]
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய முதல்வர் சந்திரசேகர் ராவ் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பார். அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன் நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும். அதன்பின் வருமான வரி சோதனை என்பதே இருக்காது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தலாம். தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தும் முறையை […]
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியது. அதனைப் போலவே கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹனம்கொண்டாவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பெண் ஊழியர்கள் சிலர் மது பாட்டிலோடு பிறந்தநாள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இந்த வீடியோ தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த வீடியோ மருத்துவமனையில் இருந்த நோயாளியின் உறவினரால் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் பணியில் […]
தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள் கட்சி மாறுவதற்கு பெரும் பணம் ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜிஸ் நகரில் அமைந்துள்ள […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. இந்த 4 வாகனங் களையும் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 2 கார்களிலும் 35 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் 30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த […]
டிஆர்எஸ் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்பி பூரா நரசய்யா பாஜகவில் இணை இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்மையில் தான் தேசிய அரசியலில் களமிறங்கும் விதமாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் பெயரை பாரதராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 3ஆம் தேதி மூனு கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த […]
தெலுங்கானா மாநிலத்தில் பாலப்பூரில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்ட அமைப்பான தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட டெட்டனேஷன் ஸ்பிரே கோட்டிங் மற்றும் குளிர்ந்த வாயு ஸ்பிரே தொழில்நுட்பம் குறித்து ஒரு நாள் வர்த்தக பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. மின்சாரம், விண்வெளி, பெட்ரோலியம் அல்லது எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தொடர்புடைய பல்வேறு […]
தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக முன்னதாக செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வருகின்ற 24 ஆம் தேதி தீபாவளி வர உள்ளதால் தொடர் விடுமுறைகள் அளிக்க வேண்டி உள்ளது. இடையில் சில நாட்கள் மட்டுமே மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தீபாவளி வரை தொடர் விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தெலுங்கானா அரசு தற்போது […]
தெலுங்கானா மாநிலத்தில் 2022-23 ஆம் நடப்பு நிதி ஆண்டின் நாட்காட்டியின் படி மொத்தம் 230 வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக ஜூலை 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதோடு தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக 7 நாட்கள் வரை கல்வி கற்பித்தலில் மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்னதாக மாநில அரசு அனைத்து பள்ளிகளுக்கும் தசராவை முன்னிட்டு […]
தெலுங்கானா மகபூகப்நகரில் 80 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பிள்ளாலமரி ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் ஆசியாவிலேயே 2 வது பெரிய மரமாக உள்ளது. இந்த மரத்தை பாதுகாப்பதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரிய சாமிதி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் ரூ.2 கோடி நிதி அறிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த மரம் அழியும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது பசுமையாக செழித்து வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவள் இவர் அரசியலிலும் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயனர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் […]
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநில பாஜக சார்பில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு முக்கிய பிரபலங்களிடம் பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்த ஆதரவு திரட்டி வருகின்றனர். வாக்குகளை முன்வைத்து நடத்தப்படும் பாஜக தேர்தல் யாத்திரையில் பிரபலங்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் […]
தெலுங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை காவல்துறையினர் உறுதி செய்தனர். நேற்று வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையே அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞானேந்திர பிரசாத் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
இந்தியாவில் பருவமழை தொடங்கி பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட பாதிப்பு, பல்வேறு நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி இடைவிடாத பெய்து வரும் மழையினால் உயிர் மற்றும் உடைமை சேதங்களை தடுப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்க வேண்டும் என்று அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதல்வர் […]
தெலுங்கானா மாநிலத்தில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவர் பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் வசித்து வரும் அனில்குமார் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் அவர் குடித்தனம் நடத்தி வந்தார். திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை […]
சொகுசு காரில் வைத்து 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிகுந்தமிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே 28 ம் தேதி அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் […]
தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் முடிந்து 20 நாட்களில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயையும்,தந்தை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 8ஆம் தேதி திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சரஸ்வதி என்ற பெண் சென்றுள்ளார். அதன் பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு தந்தை […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த முதல் கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளது. அதன் பின் என்ன காரணத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு முதலில் பதில் கூறத் […]
தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் வசித்து வருபவர் வீரமல்லா ராமலட்சுமையா (56). இவர் ஐதராபாத் நகரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சென்று கடந்த 6 மாதங்களாக இடுப்புக்கு சற்று மேலே இடது புறத்தில் கடுமையான வலி உள்ளது என கூறியுள்ளார். இதனால், மருத்துவர்கள் அவரது கடந்தகால மருத்துவ குறிப்புகளை வாங்கி பார்த்துள்ளனர். அதில், கடந்த காலங்களில் உள்ளூரில் உள்ள சுகாதார பயிற்சியாளர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் சில மருந்துகளை வாங்கி ராமலட்சுமையா சாப்பிட்டுள்ளார். அது குறுகிய காலத்திற்கு நிவாரணம் […]
நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்டது என் நிலையில் தெலுங்கானா அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து வகை பீர்களும் குறைந்தபட்சம் பத்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மதுபானங்களின் புதிய விலை […]
நாடு முழுதும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்போது வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடைவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுத்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவிலுள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதி மீண்டுமாக ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு […]
மதம் மாறி திருமணம் செய்ததால் மனைவி கண்முன்னே கணவனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி என்னும் பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ ( 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோடாட் நகரில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை ஆடைகள் களையப்பட்டு இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை […]
தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றார். அன்று முதல் தற்போது வரை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணை செயலாளராகவும் இரண்டு […]
தெலுங்கானாவில் இரண்டு இளம் ஆண்கள் குடி போதையில் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர், அண்மையில் மெடேக் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்திருக்கிறார். முன்னதாக, இந்த இருவரும் துமாபலாபேட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு எதார்த்தமாக இருவரும் பேசித் தொடங்க, உடனடியாக அது நட்பாக மாறியது.இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில், ஜோகிநாத் […]
தெலங்கானா ஹனுமகொண்டா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். தெலுங்கானா ஷியாம்பேட்டை மண்டலத்திலுள்ள மந்திரபேட்டா கிராமம் அருகில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து 4-வது நபர் வாரங்கலிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொழிலாளர்கள் விவசாய நிலங்களுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்வாறு […]
தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரம் கோடியில் கோகோ-கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை செயல்பட இருப்பதாகவும் யாரால மாணவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைக்கும் என்றும் 50% வேலை வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கோகோ கோலாவின் இந்த அறிவிப்பிற்கு தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. ஒருநாள் கூட ஏன் குறைந்தது ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் […]
தெலுங்கானா மாநில அரசு ரம்ஜான் மாதத்தையொட்டி அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கி அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை என வருடம்தோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் நோன்பு ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும் ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ரமலான் மாதத்தை பொருத்தவரை […]
தெலுங்கான மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்திலுள்ள சிட்டபோயன்ன கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் சசிகாந்த் எனும் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அவர் பணிக்கு சேர்ந்தது முதல் தினசரி குடித்துவிட்டு பள்ளிக்கு செல்வதும், மது போதையில் வகுப்பறையில் படுத்து உறங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் சென்று ஆசிரியர் சசிகாந்த் தினசரி குடித்து விட்டு வந்து, பாடம் ஏதும் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திகுல் என்ற கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன. இதையடுத்து கொல்லப்பட்ட தெரு நாய்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த கிராமத்தில் சுமார் 200 தெரு நாய்கள் கடந்த 3 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளன. இந்த […]
இந்தியாவிலுள்ள ஏராளமான தென்மாநிலங்களில் வழக்கம்போல் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தான் கோடை வெப்பம் ஆரம்பமாகும். இதன் காரணமாக அந்த நாட்களில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி விடுமுறைகள் அறிவிப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் சமீபம் காலங்களாக மே மாதத்திற்கு முன்பாகவே கோடை வெயில் தொடங்கி விடுவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தை சந்திக்க முடியாமல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களில் பகல்நேர வெப்பம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளின் […]
உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது 20-வது நாளாக தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அதிக அளவு தாக்குதல் நடத்தி வருகின்றது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ஆக்ரோஷமான தாக்குதல்களை ரஷ்ய படைகளின் மீது நடத்தி வருகின்றனர். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிற சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை குறைக்க அம்மாநில பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 16 புதன்கிழமை தொடங்கி மாநிலத்தில் பள்ளிகள் காலை 7:45 முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு மே 20 அன்று கடைசி வேலை நாள் வரை தற்போது […]
தெலுங்கானாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் டீச்சர் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில் தனது ஆசிரியர் சனி,வெங்கட் ஆகியோர் அடிப்பதாக மகப்பூர் மாவட்டம் பயாராம் நகர […]
வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யூசுப்க்குடா என்ற பகுதியில் சாய் குரூடா உயர்நிலை பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது காகிதத்தாலான பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்சூர் என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது பந்தை வீசியுள்ளார். […]
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குதூர் போலீஸ் நிலையத்தில் கூட்டு பாலியல் செய்யப்பட்ட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்னின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் இரவு தங்குவதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அதே தோழியை மீண்டும் சந்திக்க சென்ற போது […]
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியேட்டர்களில் எஃப்.ஐ.ஆர் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது எஃப்.ஐ.ஆர் படத்திற்கு மலேசியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் சென்சார் போர்டு அனுமதி கிடைக்காததால் அங்கு வெளியாகவில்லை. மேலும் எஃப்.ஐ.ஆர் படத்திற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் AIMIM என்ற கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் Cinematography மினிஸ்டர் தலசனி ஸ்ரீநிவாஸ் யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமானுஜரின் 1,000 வது பிறந்தநாள் நிறைவை ஒட்டி, ஐதராபாத்தில் விமான நிலையம் அருகே 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவிடத்தில், 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி நேற்று மாலை திறந்துவைத்தார். செம்பு (80 %) வெள்ளி, தங்கம்,டைட்டானியம்,ஆகிய ஐம்பொன்னால் சீனாவின் ஏரோசன் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூபாய் 135 கோடி செலவில் சிலை உருவாக்கியுள்ளது. […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ […]
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகையினை வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58-லிருந்து 61-ஆக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த அகவிலைப்படி பாக்கி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் பள்ளிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அதேபோல் ஜனவரி இறுதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பெரும்பாலான மாநிலங்களில் அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை […]