Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசான திரிஷாவின் தெலுங்கு படம்…. உற்சகத்தில் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரிஷாவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவர் தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் ”வர்ஷம்”. 2004 இல் வெளியான இந்த திரைப்படம் 18 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு திரைப்படத்தில் கால்பதிக்கும் யோகி பாபு…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு கைநிறைய திரைப்படங்கள் வைத்து நடித்து வருகிறார். அத்துடன் இவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்போது இந்தி படத்திலும் யோகிபாபு கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தி திரைப்படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக யோகிபாபு மும்பை சென்று தன் காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. பிரபாஸ் இப்போது பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்க்கு பதில் மிரட்டப் போகும் பிரபல நடிகர்… வெங்கட் பிரபு படத்தின் புதிய அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெங்கட் பிரபு கவர்ந்தார். சமீபத்தில் மாநாடு, மன்மத லீலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தமிழில் பிசியாக திரைப்படங்களை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தற்போது முதல் முறையாக தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நினைக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க! டோலிவுட்டிலும் கலக்கும் தனுஷ்…. முதல் தெலுங்கு படம் SIR….!!!!

தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் தற்போது கோலிவுட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்துக்கு SIR என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. தமிழில் வாத்தி என்ற தலைப்பில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் இயக்கும் தெலுங்கு படம்….. வெளியான புதிய தகவல்…..!!!

லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, அஞ்சான், ரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து, இவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் ராம் பொத்தினேனி, ஆதி பினிசெட்டி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
இந்திய சினிமா சினிமா

21 ஆண்டுகளுக்குப் பிறகு…. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மீனா…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகை மீனா 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். சொல்லப்போனால் அவரது திறமையான நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை மீனா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் நான்காவது படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர்களது கூட்டணி நான்காவது முறையாக இயக்குகிறது என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அப்படத்திற்கு இயக்குனராக அட்லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா…. வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை ராஜமவுலி இயக்கி உள்ளார். இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் இப்படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா…. முதலாவது எப்போதுமே சிறப்பு என்று ட்வீட்…!!!

பிரபல நடிகை நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான நய்யாண்டி, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இப்படி பிரபல நடிகையாக வலம் வந்து இவர் திடீரென கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். இதை தொடர்ந்து சினிமா பக்கம் எட்டிப் பார்க்காது இருந்து நஸ்ரியா கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

ராம் சரண் தயாரிப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி…. தெலுங்கிலும் குவியும் பட வாய்ப்புகள்…!!

பிரபல இயக்குனர் ராம் சரண் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மலையாளத் திரையுலகில் வெளியான “டிரைவிங் லைசன்ஸ்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் ராம்சரண் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். அதன்படி ராம்சரண் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகியுள்ளார். டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தின் வந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

இவர்கள் இணைவது இதுவே முதல்முறை…. உறுதிப்படுத்திய பிரபல இயக்குனர்…!!

பிரபல இயக்குனர் லிங்குசாமியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் முதல்முறையாக படத்தில் இணைய உள்ளனர். தமிழில் சினிமாவின் பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் படம் எடுக்க உள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிக்க உள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்ற தகவலை லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிங்குசாமி இப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஆதியுடன் இணையும் நிக்கிகல்ராணி…. டுவிட்டரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

பிரபல நடிகர் ஆதியுடன் சேர்ந்து மீண்டும் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. அதன்பின் இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிவுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஃபர்ஸ்ட் தெலுங்கு படம்…. அப்புறம்தான் ரஜினி படம்…. இயக்குனரின் முடிவு…!!

அண்ணாத்த படம் முடிவடைய தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் தற்போது தெலுங்கில் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜயை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதற்கு முன் “மாநகரம்”,”கைதி ” என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியதற்கு அப்படங்களின் வெற்றியே காரணம். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதற்கடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். […]

Categories

Tech |