மும்பை ரயில் நிலையத்தில் கூண்டு போன்ற தோற்றம் கொண்ட நவீன தங்கும் அறைகள் பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளன. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறிய அளவிலான போர்ட் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் ரயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறிய அறைகள் ஏசி,டிவி மற்றும் வைபை ஆகிய வசதிகளுடன் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் சிறிய அளவில் படுக்கைகள் மற்றும் அமர்ந்திருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன .இந்த அறையில் […]
Tag: தேசியச்செய்திகள்
இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் திருந்தாமல் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய சுதந்திரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது எனவும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 கட்டணத்தில் அடுத்த இரு மாதங்களுகாண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்தில் டிக்கெட்டுகள் பெற நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் இலவச தரிசன டிக்கெட் நாளை மறுதினம் ஆன்-லைனில் வெளியிடப்படும் […]
பொருள் வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி ஆரியன் கான் மும்பை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் […]
தசரா திருவிழாவில் சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து யானை ஊர்வலமாக கொண்டு சென்றது. உலக புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக தசரா திருவிழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட்டது. மேலும் மைசூர் அரண்மனையில் மட்டும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. விழாவின் போது விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டன. விழாவின் உச்ச நிகழ்வான தசரா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக […]
கேரளாவில் மண்சரிவில் தன் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாயை ஒருவர் மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்அஷ்ரப். இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பின்புறம் நாயொன்று ஆறு குட்டிகளுடன் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் சில நாட்களாக அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நாய் தனது குட்டிகளுடன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த நாய் […]
மின்சார உற்பத்திக்கு தேவையைவிட அதிகமாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் நிலக்கரி பிரச்சனை குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நிலக்கரி பிரச்சனை குறித்து அரசியல் செய்ய தான் விரும்பவில்லை என்று அவர் […]
நிலக்கரி தட்டுப்பாட்டு எதுவும் இல்லை தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்திருந்ததனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரஅமித்ஷா, நிலக்கரித்துறை […]
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை வந்த ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரம் கொடுத்து வழிபட்டார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கருடசேவை நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்தார். ஆறாவது நாளான இன்று ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக திருப்பதி வந்த ஜெகன் மோகன் ரெடி புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதையை திறந்து வைத்தார். பின்பு […]
சீரடி சாய்பாபா கோயில் திறக்கப்பட்ட முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா நெருக்கடி காரணமாக பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நேற்று முதல் சீரடி கோயில் திறக்கப்படும் என ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன்டிரஸ்ட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் கூட்ட […]
தடுப்பூசி போடாத டெல்லி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று டெல்லி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமானது அம்மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் யாரும் அக்டோபர் 16ந்தேதி முதல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் […]
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு வழக்கறிஞராக சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆஜராகிறார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆரியன் கானுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதீஷ் மானஷிண்டே மும்பையில் சட்டம் […]
புனேவை சேர்ந்த பைக் பிரியர் ஒருவர் 30 ஆண்டுகளில் 550 பைக்குகளை சேகரித்து பராமரித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் வினித். 55 வயதாகும் இவர் தனது பத்து வயதில் இருந்து பைக் மற்றும் ஸ்கூட்டர் மீது ஏற்பட்ட தீராத மோகத்தால் அன்று முதல் தன் வாழ்நாளில் எத்தனை பைக்குகளை வாங்க முடியுமோ அத்தனை பைக்குகளை வாங்கி வருகிறார். இவரிடம் தற்போது 550 பைக்குகள் இருக்கின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். 1940ஆம் ஆண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட […]
பெலகாவி மாவட்டத்தில் பஜ்ஜி சாப்பிட்ட தாய் மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் ஹீதளி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி(55 வயது) இவருடைய மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயிகள் ஆவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தோட்டத்தில் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் பார்வதி பஜ்ஜி செய்துள்ளார். தாய் மகன் இருவரும் அந்த பஜ்ஜியை சாப்பிட்டுள்ளனர். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]
ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமலேஷ் மீனா. 25 வயது வாலிபரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மாதம் 26 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கமலேஷ் மீனாவை மறுநாளே கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் […]
பெங்களூரு அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளதது. பெங்களூர் புறநகர் மாவட்டம் தியாமகொண்டலுவை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெய் ஸ்ரீ ராம். இவர் தனது நண்பர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இந்திரா நகர் மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி ஜெய் ஸ்ரீ ராம் கீழே விழுந்தார் . இந்நிலையில் காரிலிருந்து […]
பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு திடீரென்று 30 அடியில் ஒரு பள்ளம் உருவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூரு டோனரி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நேற்று முன்தினம் 30 அடியில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு படையினர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கொட்டிகேரேயில் இருந்து நாக சந்திரா பகுதிக்கு மெட்ரோ ரயில் பாதைக்காக […]
பெங்களூருவில் விதவையை கற்பழித்துக் கொன்ற வழக்கில் தண்டனையை குறைக்க கோரிய முன்னாள் போலீஸ்காரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் உமேஷ் ரெட்டி. இவர் பெங்களூரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போது விதவைப் பெண் ஒருவரை கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ம் தேதி கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தார். இது தவிர சில பெண்களையும் […]