கொரோனா தாக்கிய ஒரு நபருக்கு ஆன்டிபயாடிக் 50 நாட்கள் வரை தான் நீடிக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பொதுவாக மனிதனின் உடலில் எந்த நோய் தாக்கினாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி தானாகவே உருவாகி விடும். தற்போது பரவிவரும் கொரோனா நோய்க்கு எதிராகவும் எதிர்ப்பு சக்திகள் மனித உடலில் உருவாகி வருகின்றன. இவ்வாறு உருவாகும் எதிர்ப்பு சக்திகள் சிலருக்கு ஆயுள் முழுவதும் நீடிக்கும். […]
Tag: தேசியம்
பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் […]
விமானங்களில் செல்லும்பொழுது ஸ்மார்ட்போன்களை wi-fi மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என விமானத்துறை தெரிவித்துள்ளது. விமானங்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயம் மொபைல் போன்களை ஃப்ளைட் மோடில் போட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது அதில் சிறிய ஒரு விலக்கு கொடுத்துள்ளது விமானத்துறை அமைச்சகம். அதாவது விமானங்கள் 3000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளை wi-fi மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை […]
கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த வகையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருந்தாலும், மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. […]
ஆந்திராவில் ஆதார் அட்டையில் மோசடி செய்ததாக ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த 45 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களின், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்தும் நோக்கில், 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த ஆதாரில் பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் அரசு நிதியுதவி பெறும் நோக்கில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து மோசடியில் […]
ரிலையன்ஸ் நிறுவனம், பொருட்களை வாங்கும் ஜியோ மார்ட் போன்ற போலி செயலி வலம் வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கி வருகின்றனர். ஆனாலும் இதில் அவ்வப்போது சில சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாகவும் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் சில்லறை […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து 3 பேர் கொண்ட குழு இணைய உள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் அதிக திருப்பங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் உயிர் இழந்த சம்பவத்தில் துபாயைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கண்ணோட்டத்தில் விசாரிக்க டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு நேற்றிரவு மும்பைக்கு வந்துள்ளது. மேலும் சுஷாந்த் சிங் காதலி, […]
என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் நிலையில், என்சிசி மாணவர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி, அப்பொழுது கேட்கப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு […]
கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டை இரு வாய்ப்புகள் மூலம் மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் , தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குமாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நடப்பு நிதியாண்டில், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், மாநில அரசுகள் தங்களது […]
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காவலர்களை குறிவைத்து அதிகமாக தாக்கி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இந்தத் தொற்று பெரும்பாலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை அதிகம் தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சென்ற 24 மணி நேரத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை […]
மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் […]
போலீஸ் அதிகாரி ஒருவர் தாயிடம் சொத்தை வாங்கிவிட்டு வெளியில் அவரை அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. IRBN போலீஸ் அதிகாரி பதவியில் இருந்து வந்த கோபிநாத் என்பவர் தன் தாய் மங்கையர்கரசி உடன் புதுச்சேரி மாவட்டம் தேங்காய்த்திட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார். தன் தாயிடம் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, மங்கையர்க்கரசியின் மனையை தன் பெயருக்கு மாற்றி விட்டு 8 லட்சத்திற்கு விற்றுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டதும் கோபிநாத் முழுமையாக மாறி தாயை […]
பல்வேறு இடங்களில் உள்ள திருப்பதி ஆலயம் தற்போது ஜம்முவில் உதயமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு இடங்களில் காணப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு இந்த கோயில் கட்டுவதற்காக தனியாக ஒரு நிலத்தை ஒதுக்கி வைத்துள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் திருப்பதி, ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், வட இந்தியாவில் மும்பை, ரிஷிகேஷ், குருஷேத்திரம், புதுடெல்லி ஆகிய இடங்களில் ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலைக் கட்டியுள்ளது. அதோடு நிற்காமல் […]
நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதங்கள் வந்துள்ளன. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் அல்லல்பட்டு கொண்டிருக்கிறது. இன்னிலையில் மாணவர்களுக்கு உரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்து இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் மாணவர்களின் நலனைக் கருதி கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை பிரதமருக்கு […]
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தீவிரமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தற்பொழுது பிரசாந்தின் தந்தை தன்னுடைய மகனை ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என பகீர் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுஷாந்த் சிங்கின் […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பிரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த போதைப்பொருள் விவகார வழக்கை விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் இவர்களைத் தவிர, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது […]
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். […]
முன்னாள் குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது மருத்துவம் நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை […]
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மம்தா பேனர்ஜி மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய மருத்துவ தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் திமுக […]
டெல்லியில் சிக்கிய தீவிரவாதியின் வீட்டில் சிறப்பு போலீஸ் இன்று சோதனை மேற்கொண்டு நிறைய வெடிபொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தை சீர்கலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதி ஒருவர் திட்டம் தீட்டியுள்ளார். அதனை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சண்டை நடத்தி, அதன் பிறகு அவனை பிடித்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். மேலும் அந்த தீவிரவாதியிடம் […]
பத்ரிநாத் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆனால் மே மாதம் திறக்கப்பட்ட பத்ரிநாத் கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினர் முகாம்கள் அமைத்து அங்கு தங்கியுள்ளனர். நேற்றிரவு திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பாதிப்படைந்தன. […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒரு பயணியிடம் 1.69 கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் தற்போது அடிக்கடி தங்க கடத்தல் விவகாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கடத்தல்காரர்களை கைது செய்து தான் வருகின்றனர். அந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் பயணிகளிடம் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த விமான நிலையத்தில் இருந்து வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்து பார்த்தபோது அவர் மறைத்து எடுத்துவந்திருந்த […]
கொரோனாவை மையமாக கொண்டு 9 ஆம் வகுப்பு மாணவர் ஒரு கேமை தயாரித்து வெளியிட்டுள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே மணிப்பூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். பல்தீப் நிங்தோஜம் என்ற இந்த மாணவர் அவர் உருவாக்கியுள்ள கேமிர்க்கு கொரோபாய் என பெயரிட்டுள்ளார். ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேமை டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம் […]
படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு வசதிகள் கட்டுக்குள் இருக்கின்றன. இதனடிப்படையில் சினிமா துறைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறுப்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருகின்றனர். இந்த நிலையை போக்குவதற்காக சினிமா துறையினர் மத்திய மற்றும் மாநில அரசிடம் மனு […]
தலைவரை நியமிக்க நாளை காங்கிரஸ் கட்சி கூட்டம் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி சரியான வழியில் நடத்திச் செல்வது யார் என்பது குறித்து விவாதிக்க நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியினுடைய கமிட்டி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, போன்ற காங்கிரஸ் கட்சியினுடைய முதன்மையான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தகவல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை. மாநில அரசுகளின் இந்த செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]
காவல் துறையினர் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு பணியில் சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட டானிக் பாட்டிலகளை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனர். திரிபுராவில் உள்ள சந்திராபுர் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்து பார்த்தனர். அதில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான எஸ்கேஃப் என்ற டானிக் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அந்த பாட்டில்களை பறிமுதல்செய்த காவல் […]
நீட் தேர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திட்டமிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நேற்று 19 வயது உள்ள மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பல் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில […]
அருங்காட்சியத்தில் இருந்து 2400 வருடங்கள் பழமையான மம்மி வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கி விட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்பட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மம்மி சுமார் […]
பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது. கடந்த வாரம் திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தகட்டுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது வரை அவரது உடல்நிலை எந்த ஒரு முன்னேற்றமும் […]
பிரதமர் மோடிக்கு பதிலாக சுஷ்மா ஸ்வராஜ் பிரதமராக தேர்ந்தெடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக சுஷ்மா ஸ்வராஜ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருந்தால் அவரது தலைமையில் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2014ஆம் ஆண்டு பாஜக, மோடிக்கு பதில் சுஷ்மா ஸ்வராஜை பிரதமராகத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார், […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றி முடிவெடுக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பரிமாறினர். இக்கூட்டத்தில் தேசிய வேலைவாய்பபு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4 ல் பணியாளர்களை […]
ஊரடங்கு காரணமாக பல கோடி மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டு இருக்கும் ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் […]
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா கோட்டகபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது ஷோபாராணி. இவருக்கு திருமணம் ஆகி விஷால்(7) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் விஷாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் விஷாலை, ஷோபாராணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உள்ளார். ஆனாலும் விஷாலுக்கு சரியாகவில்லை. இதன்காரணமாக ஷோபாராணி மன உளைச்சலோடு காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அதிகார அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சென்ற 2018-ம் ஆண்டு மே மாதம் ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பல திடுக்கிடும் புதிய நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் சென்ற ஜூன் மாதம், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் காதலி ரியா, தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது பெயரை, […]
டெல்லியிலுள்ள நொய்டா நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 148வது செக்டாரில் உள்ள “Noida Power Company Limited” மின் நிலையம் அருகே இன்று காலை மழை பெய்தது. அப்போது துணைமின் நிலைய மின்மாற்றியில் தீப்பிடித்து விட்டது. இந்த திடீர் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தால் ஏராளமான […]
நடிகர் அமீர்கானை இரண்டு வார காலம் தனிமைப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய ’பாரஸ்ட் கம்ப்’ திரைப்படம், அமீர்கான் நடிப்பில் ’லால் சிங் சத்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊரடங்கிற்கு முன்பே முடிந்திருந்தாலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகாக அமீர் கான் துருக்கி சென்று இருக்கிறார் மேலும், துருக்கி அதிபரின் மனைவி எமினி எட்டோகனை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் […]
நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதை நாங்களும் ஆமோதிப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார். அடுத்த தலைமுறை( Next Generation) அரசியல்வாதிகள் என்ற புத்தகத்திற்காக பிரியங்கா அளித்துள்ள பேட்டியில்,” நேரு குடும்பத்தை சாராதவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலும் அவரது கட்டளைக்கு தான் கீழ்படிவேன்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி கூறுகையில், உத்தரபிரதேசத்தை தவிர்த்து அந்தமானின் பொதுச்செயலாளராக தன்னை நியமித்தாலும், மகிழ்ச்சியுடன் அங்கு சென்று பணியாற்றுவேன் எனவும் பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் […]
கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் யாரும் பேசாத காரணத்தால் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவேதலா கிராமத்தை சேர்ந்த நரசய்யா என்பவர் ஆகஸ்ட் 16-ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் நரசய்யா குடும்ப உறுப்பினர்களிடம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசய்யா மனைவி சுனிதா (50), மகன் பணிகுமார் (25) அவரது மகள் லட்சுமி […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக செயற்கை குளங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொதுமக்கள், மண்டல்களை அறிவுறுத்தி இருக்கிறது. இந்தநிலையில் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி செயற்கை குளங்களை அமைத்து உள்ளது. அதன்படி மும்பையில் 167 செயற்கை குளங்களை அமைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மாநகராட்சி செயற்கை குளம் […]
முகநூலில் அவதூறுகளை பரப்புவோர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பான பேச்சுகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் கண்டுகொள்வதில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் முகநூலில் வெறுப்பை பரப்பும் வகையிலும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்கள் மட்டும் செயல்படுவர்கள் மீதும் கட்சி பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. மேலும் இது பற்றி அந்த […]
ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளில் சிறுபான்மையான மாணவர்கள் 145 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் தேர்வு பெற்றிருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறுபான்மையின இளைஞர்களின் திறமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உகந்த நேர்மறையான சூழலை மோடி அரசு […]
மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தற்போது 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் சென்ற 7-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. அந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்த 78 பேர் மண்ணுக்குள் புதையுண்ட னர். அவர்களில் 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மண்ணுக்குள் புதைந்தவர்களை […]
பி.எம்.கேர்ஸ் தொடர்பாக வந்த உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பெரிய அடி என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வேண்டுமென வைத்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பதிவிட்டு இருப்பதாவது: “ராகுல் காந்தி குடும்பம் பல பத்தாண்டுகளாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியை தங்கள் குடும்ப சொத்தாகவே கருதியது. அதில் உள்ள நிதியை அப்பட்டமாக […]
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்ற 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர்நகரில் 11 பேரும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசு பிராமணர்களை குறிபார்த்து என்கவுண்ட்டர் […]
கோவா கவர்னர் சத்யபால் மாலிக் மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு நிக்கிறார். காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு முன்பு, அதன் கடைசி கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் சென்ற ஆண்டு கோவா கவர்னராக மாற்றப்பட்டார். இந்நிலையில், மேகாலயா கவர்னர் ததகதா ராயின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், சத்யபால் மாலிக் மேகாலயா மாநில கவர்னராக மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷியாரி, கோவா கவர்னர் பொறுப்பை கூடுதலாக […]
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தென்மேற்கு பருவமழையானது நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், “வெப்ப மண்டல நோய்கள் உள்ளிட்ட […]
ஊரடங்கு காலத்திலும் கோவா விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டும் மே 25-ந்தேதி முதல் தொடங்கியது. எனினும் கொரோனா அச்சுறுத்தலால் விமான பயணங்களுக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கோவா சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் மாதத்தில் இருந்தே தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]
நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் சிகிச்சைக்காக கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சஞ்சய் தத்துக்கு சென்ற 9-ம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் நலம் பெற்று திரும்பி வர வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே, சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்று நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. […]