Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுதலை… உற்சாக ஆட்டம் போட்ட குடும்பம்… வைரலாகும் வீடியோ…!!

கொரோனாவில் இருந்து மீண்டதால்  குடும்பத்துடன் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் மனித குலத்தை கதி கலங்க வைத்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடையும் போது, அது அவர்களுக்கு மிகுந்த உற்சாக கொண்டாட்டமாக மாறி விடுகிறது. அப்படித்தான் ஒரு சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

103 வயது முதியவர்… கொரோனாவிலிருந்து மீண்டும் சாதனை… மலர் கொத்து கொடுத்து வழியனுப்பிய மருத்துவ ஊழியர்கள்…!!

103 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்டதை அடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற மாதம் முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 48,000ஐ நெருங்குகிறது. மேலும் 175 பேர் உயிரிழந்து விட்டனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… உபா சட்டத்தில் நடவடிக்கை… எடியூரப்பா அதிரடி…!!

பெங்களூர் வன்முறையை கருத்தில்கொண்டு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை கலவரக்காரர்களிடமே வசூலிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி மற்றும் காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலான  பொருட்கள் சேதமடைந்து விட்டன. அப்போது போலீஸ் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில… சுகாதாரத்துறை அமைச்சருக்கு… கொரோனா தொற்று…!!

ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக அவதூறு காணொளி… காஷ்மீரில் தொடரும் போராட்டங்கள்… !!

இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பரவிய காணொலியால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தும் விதத்திலும் ஒரு காணொலி உருவாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்செயலைக் கண்டிக்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் டோடா, ரிச்சி மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதையடுத்து, அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கோதாவரி ஆற்றங்கரை… சூழ்ந்து கொண்ட வெள்ளம்… மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர்…!!

கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

68ஆவது மான் கி பாத் நிகழ்ச்சி… “என்ன தலைப்பு பேசலாம்?”… மக்களிடம் ஆலோசனை கேட்ட மோடி…!!

68ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்ற தலைப்பு குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார். ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனத்தின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே, வரும் 30ஆம் தேதி 68ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், உரையாற்ற என்ன தலைப்பு எடுக்கலாம் என நாட்டு மக்களிடம் மோடி ஆலோசனை கேட்டுள்ளார். நமோ செயலி மூலமாகவோ […]

Categories
தேசிய செய்திகள்

ஹோடான் விமான தளத்தில்… வீரர்களை திருட்டுத்தனமாக நிறுத்திய சீனா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ஹோடான் விமான தளத்தில் சீனா யாருக்கும் தெரியாமல் ராணுவ வீரர்களை நிறுத்தியிருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய- சீன எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் ஹோடான் விமான தளம் அமைந்து இருக்கிறது. இந்தத் தளம் இந்தியாவின் வடப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சீனா தனது ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்த படைத் தளத்தில் ஜே-10 மற்றும் ஜே-11 படை வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சர்தார் படேல் மருத்துவமனை… நேற்று மட்டும் 161 பேர்… கொரோனாவிலிருந்து மீண்டனர்…!!

சர்தார் மருத்துவமனையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். டெல்லியில் உள்ள உலக புகழ்வாய்ந்த மிகப்பெரிய கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நேற்று ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த 161 பேரில் 39 பெண்களும் அடங்குவர். குணமடைந்தவர்களுக்கு இந்தோ-திபெத்தியன் எல்லை கூடுதல் காவல் இயக்குநர் அமிர்த் மோகன் குணமடைந்ததற்கான சான்றிதழ்களையும், ரோஜா பூவையும் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார். உலகின் மிகப்பெரிய கோவிட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிறந்த நாளை முன்னிட்டு… 2 கிராமங்களை தத்தெடுத்த… பிரபல பாலிவுட் நடிகை… இதுதான் காரணமா?

பிரபல பாலிவுட் நடிகை இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் வேலை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், […]

Categories
தேசிய செய்திகள்

13 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை விரிவுபடுத்த… இந்தியாவுடன் பேச்சுவார்த்தை…ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு…!!

விமான போக்குவரத்தை 13 நாடுகளுக்கு தொடங்கி வைக்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 23ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து, உள்நாட்டு விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மே 25ஆம் தேதி திரும்பவும் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை ஏர் இந்தியா  வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியாவுக்கு கட்டணம் வசூலித்து அழைத்து வந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையில் இன்று மட்டும்… 370 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 8,000ஐ கடந்தது…!!

புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை நான் அவமதிக்கவில்லை… “உலக சுகாதார அமைப்பு தனது வேலையை சரியாக செய்து இருக்கலாம்”…. சஞ்சய் ராவத் விளக்கம்…!!

உலக சுகாதார அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் தொற்று பரவி இருக்கிறது என சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசியபோது, கொரோனா பரவலுக்கு உலக சுகாதார அமைப்பு தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும் டாக்டர்களை விட கம்பவுண்டருக்கு அதிகம் தெரியும் என்று அவர் கூறிய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விமர்சனத்துக்காக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநில… சுகாதாரத்துறை இணை அமைச்சர்… கொரோனாவால் பாதிப்பு…!!

உத்திரப்பிரதேச சுகாதாரத்தறை இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்ற . வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆகஸ்ட் 15ம் தேதி தனக்கு பிசிஆர் சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இல்லை என்றும், நேற்று இரவு […]

Categories
தேசிய செய்திகள்

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்… இரக்கமில்லாமல் வெளியேற்றிய அதிகாரிகள்…!!

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்காக அப்னா கேர் என்ற பெயரில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்களை கொண்ட தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தப்படும் இந்த முகாமில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, குழந்தைகளை வேறு முகாமிற்கு மாற்றிவிட்டு முகாமை மூடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்ற மாவட்ட அதிகாரிகள் நேற்று அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு வேலைகள் அனைத்தும் மாநில மக்களுக்குதான்”… முதல்வர் சிவராஜ் சிங்… !!

மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் மாநில மக்களுக்காக ஒதுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திரதின விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,  “ஒற்றை குடிமக்கள் கணக்கீடுக்கு மாநில அரசு தயாராகிவருகிறது. அதனால், ஒவ்வொரு சலுகைக்கும் மாநில மக்கள் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டாம். அரசு வேலையில் மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தநிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!.

மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்த நிலையில், தீயணைப்பு, மீட்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்… அதிரடியாக செயல்படும் பாதுகாப்பு படையினர்… !!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதில் இருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர். சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்.பி ரசிகர்களுடன் இணையும் புதுவை முதல்வர்… மீண்டுவர டுவிட்டரில் பதிவு…!!

பிரபல பாடகர் எஸ் பி விரைவில் குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. சென்ற 5ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார். எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி…. ராணுவ மருத்துவமனை அறிவிப்பு…!!

கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சென்ற 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎம் கேர்ஸ்” நிதியை மாற்ற கோரிக்கை… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…!!

பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றுவதற்கு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் பெயரில் பெறப்பட்ட நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி Centre For Public Interest Litigation சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேசிய பேரிடர் சட்ட விதிகளுக்கு எதிராக இந்த பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாமல் பொதுத்துறை மற்றும் தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில்… “தமிழர்கள் புறக்கணிப்பு”… விளக்கம் கொடுத்த ரயில்வே நிர்வாகம்…!!

எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியமனம் நடைபெறுகிறது என ரயில்வே துறை விளக்கம் கொடுத்துள்ளது. ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் பெரிதும் பரவி வரும் நிலையில் இது பற்றி தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், 2018-ம் ஆண்டு நடந்த ரயில்வே பணி நியமன தேர்வில் தேர்ச்சியடைந்த 541 பேருக்கு, திருச்சி பொன்மலை பணிமனையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதில், 40 பேர் மட்டுமே தமிழர்கள் என தெரியவந்ததால், ரயில்வே துறையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுதலையான அமித்ஷா… மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வுகளை பங்கேற்காமல் தவிர்த்து, தனது வீட்டிலேயே தேசியக்கொடி ஏற்றி கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு போன்ற சில காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

போரிஸ் ஜான்சன் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டதாக…. தீயாய் பரவும் வைரல் பதிவு…!!

போரிஸ் ஜான்சன் வெளியிட்டதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிவிட்டு இருப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில்,” 74 வருடங்களுக்கு முன் பிரிட்டன் இந்தியாவுக்கு செய்ததற்கு என்னை மன்னியுங்கள், இதனால் இந்தியர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்தியாவுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. வைரல் பதிவை ஆய்வு செய்து பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு… கௌசல்யா தந்தை விடுதலையை எதிர்த்து… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்க்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது சென்ற 2016 ஆம் ஆண்டு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிரிழந்து விட்டார். மாநிலத்தையே உலுக்கி எடுத்த இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 6 பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனையில் சாதனை… ஒரே நாளில் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை….!!

இந்தியாவில் நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரி 50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 7.31 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று புதிய உச்சமாக 8.99 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… “நீதி கிடைக்க வேண்டும்”… தேவகவுடா கோரிக்கை…!!

பெங்களூரில் நடந்த வன்முறை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த சட்ட திருத்தங்களுக்கும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹாசனில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பெங்களூருவிலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்… “இனி கல்வி அமைச்சகம்”… பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய ஜனாதிபதி…!!

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றப்பட்டதற்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வித்துறை அமைச்சகம் என மாற்றி வைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் பெயரை கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

94% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… “ஆன்லைன் வகுப்புகள் எவ்வாறு கற்பது?”… க்ரை அமைப்பு கேள்வி…

ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கு 94% மாணவரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என க்ரை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கு ஆன்லைன் முறைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் இருக்கின்றனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக […]

Categories
தேசிய செய்திகள்

கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 2 பேர் பலியான சோகம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கெமிக்கலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கெமிக்கல் ஆலையில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 2 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில்… சாதி வன்முறை… பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… ராகுல் மற்றும் பிரியங்கா கண்டனம்…!!

உத்தரபிரதேசத்தில் ஜாதி வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சத்யமேவ் என்பவர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் காட்டாட்சியில், சாதி வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. பட்டியல் இன பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டது, அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சரத்பவார்… வீட்டில் பணியாட்கள் 5 பேருக்கு தொற்று…!!

காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பங்களா வீடு தென்மும்பை பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள், ஒரு சமையல்காரர் மற்றும் அவரது மகன் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்  சரத்பவார் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில், […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா சிறையில்… விடாமல் துரத்தும் கொரோனா… 1345 பேருக்கு தொற்று உறுதி…!!

மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 302 காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 1043 கைதிகளுக்கும் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை தெரிவித்து இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரை அச்சுறுத்தும் கொரோனா… “ஊரடங்கு நீட்டிப்பு”… முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகாரில் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. ஆனாலும், நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு மற்றும் தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, நோய் பாதிப்புகளை குறைக்கும் விதமாக பீகார் மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்”….இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம்… மத்திய அமைச்சர் உத்தரவு…!!

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடத்த முடியாமல் இருக்கும் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் நேற்று பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை… காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு… நாராயணசாமி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். புதுவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை 7,732 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, 4,443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 1,596 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,583 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற 10ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மூளைக்கட்டி அகற்றப்பட்டது. அப்போது அவர் கோமா நிலையை அடைந்தார். மேலும், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 ஆம் தேதி… போலீஸ் தினமாக கொண்டாடப்படும்… மம்தா பானர்ஜி அறிவிப்பு…!!

செப்டம்பர் 1ஆம் தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள் போன்றோர் முன்களப் பணியாளர்களாக விளங்குகிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்வதும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு கொடுத்து வருவதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எல்லோரையும் சந்திக்கும் நி்லை ஏற்பட்டுள்ள போலீசார், கொரோனா தாக்குதலுக்கும் உள்ளாகும் நிலை அதிகமாக ஏற்பட்டுள்ளது. சிலர் உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில்…பயங்கரவாதத் தாக்குதல்… பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில் மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் உள்ளனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இன்று பாரமுல்லா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

“முதலில் டான்ஸ் ஆடு… அப்புறம் எப்ஐஆர் போடலாம்” … கண்டிஷன் போட்ட ஆய்வாளர்… அதிர்ச்சியான சிறுமி…!!

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற சிறுமியை நடனமாட சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் தபேலி பகுதியில் உள்ள கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் கோயில்களில் பஜனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், அவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்துவதோடு மட்டுமின்றி […]

Categories
தேசிய செய்திகள்

“சாண்ட் ஆர்ட் அனிமேஷனில்” தோனி ஓவியம்… அசத்தும் ரசிகர்… வெளியாகும் வீடியோ பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனியினுடைய போட்டோவை மணலில் வரைந்து ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனியின் ரசிகரும் […]

Categories
தேசிய செய்திகள்

“6 வருடத்திற்குப் பின் 60 அடி தொட்ட கோதாவரி”… 3ஆம் கட்ட எச்சரிக்கை கொடுத்த மாவட்ட நிர்வாகம்…!!

ஆறு வருடங்களுக்கு பிறகு 60 அடியை எட்டிய கோதாவரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருவதால், கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியது. 6  ஆண்டிற்கு பிறகு கோதாவரி ஆற்றின் நீர் அளவு 60 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோதாவரி ஆற்றில் 3ஆம் கட்ட எச்சரிக்கை 2018ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை”… அமெரிக்க ஊடகத்திற்கு… ஃபேஸ்புக் விளக்கம்…!!

எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அரசியல் சித்தாந்தத்துக்கோ ஆதரவாக எங்கள் தளம் செயல்படவில்லை என்று ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளையும், ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகளையும் ஃபேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ஊடகமான வால் ஸ்ரிட் ஜெர்னலில் செய்தி ஒன்று வெளியானது. அந்த செய்தியில், “இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத் விவகாரம், இஸ்லாமியர்கள் உள்நோக்கத்துடன் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோக்கள் தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து… தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு படையினர்…!!

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… தலா 250 ரூபாய் வழங்கும் புதுவை அரசு… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!

புதுச்சேரியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு தலா 250 ரூபாய் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், “புதுச்சேரியில் மட்டும் 1,088 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 302 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 8 ஆயிரத்து 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்… மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ… கொரோனாவுக்கு பலி…!!

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்(71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா முன்வராத நிலையில் மட்டும் ஐபிஎல் டைட்டிலுக்கு முயற்சி செய்வோம்” …. பாபா ராம்தேவ்

எந்த இந்திய நிறுவனங்களும் முன்வரவில்லையென்றால் மட்டும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்பை வாங்கும் முயற்சியில் இறங்கும் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து அதனை வாங்கி விட்டதாக வெளியாகி வரும் செய்திகளை அவ்வாறு இல்லை என மறுத்துப் பேசியிருக்கும் ராம்தேவ், “பதஞ்சலி, ஐபிஎல் டைட்டிலுக்கான எந்த விதமான ஆவணங்களையும், விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியச் சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை டைட்டிலுக்கு வேறு எந்த இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றின் நடுவே தத்தளித்த இளைஞர்…. பத்திரமாக மீட்ட விமானப்படையினர்…!!

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை இந்திய விமானப்படையினர் பத்திரமாக ஹெலிகாப்டரில் மீட்டனர். பிளாஸ்பூர் அருகே குதாகத் என்ற அணை இருக்கிறது. அந்த அணை அருகே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் தண்ணீருக்கு நடுவே உள்ள மரத்தை பிடித்துக்கொண்டு தவித்து வந்தார். உடனடியாக களத்தில் இறங்கிய இந்திய விமானப்படையினர் கயிறு கட்டி தண்ணீருக்கு நடுவே தத்தளித்த இளைஞரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பிளாஸ்பூர் எல்லை அருகே திபான்ஷூ கப்ரா என்ற இடத்தில் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப்பெருங்கடலில் எண்ணெய் கசிவு… மொரிசீயசுக்கு 30 டன் பொருட்களை கொடுத்து உதவிய இந்தியா…!!

மொரீசியஸ் நாட்டில் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக இந்தியா நாட்டிற்கு விமானம் மூலம் உதவியுள்ளது. வகாஷியோ கப்பல் உடைந்து இந்தியப் பெருங்கடலில் டன் கணக்காக டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதன் விளைவாக மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர் கொண்டுள்ளது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்து விட்ட நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வழங்கினார். இதற்காக, மொரீஷியசுக்கு இந்திய அரசு  உதவிப்பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்தியக் கடலோர […]

Categories
தேசிய செய்திகள்

ஆவணி மாத பூஜை… ஐயப்பன் கோவிலில் தொடக்கம்… பக்தர்களுக்கு அனுமதி கிடையாது…!!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை மற்றும் உச்ச பூஜைக்கு பின் […]

Categories

Tech |