இந்தியாவில் பணியிலிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து சுமார் 6 மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து […]
Tag: தேசியம்
கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் சென்ற 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்த நிலையில் உள்ளன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி […]
வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை […]
அரசியல்வாதிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்கள் மாநில புலனாய்வுத்துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். அதே நேரம் பாதுகாப்பு படையினரை குறி பார்த்து பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காவல்துறையினர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு தொற்று ஏற்பட்டு 941 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் […]
கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சென்ற மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. சென்ற ஒரு வார காலமாக 7 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மக்கள் […]
இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா பரிசோதனைக்காக 7.31 லட்சம் சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளன என ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 7 லட்சத்துக்கும் அதிகமான சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக தினமும் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது. தற்போது கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. நேற்று […]
ராணுவ இந்தியாவின் தேசிய கீதத்தை அமெரிக்காவில் இசைத்த காட்சி வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை வெகுவாக கொண்டாடியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வழக்கமான ஆரவாரமில்லாமல் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையே ராணுவம் இந்தியாவின் தேசிய கீதத்தை இசைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. வைரல் வீடியோவை ஆய்வு செய்து பார்த்த போது, அது சென்ற 2019 […]
பெண்ணின் பிரசவத்திற்காக டிராக்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதனால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, […]
சசிகலாவை விடுதலை செய்ய கூடாது என முதல்வர் எடியூரப்பாவுக்கு காங்கிரஸ் பிரிவு செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தையின் அடிப்படையில் முன்னதாகவே வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்வர் எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் […]
காய்ச்சலால் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய உதவ யாரும் முன்வராத செயல் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் சென்ற 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் பெலகாவியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பி உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா […]
பிரதமர் மோடியின் கோழைத்தனம் தான் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு காரணம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “எல்லோரும் இந்திய ராணுவத்தின் துணிச்சல், திறமை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரதமருக்கு மட்டுமே நம்பிக்கை இல்லை. அவரது கோழைத்தனம்தான், நமது நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க காரணமானது. அவரது பொய்களால்தான் அதை […]
அதிநவீன தனியார் ரயில்கள் 2023-ம் ஆண்டுக்குள் இயங்க தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்க அனுமதிப்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்., இத்திட்டம் ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுக்கு வழிவகைை செய்யும். தனியார் ரெயில்களை இயக்குவது பற்றிய ஆலோசனை கூட்டத்தில் 23 நிறுவனங்கள் ஆர்வமாக கலந்து […]
கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார். திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் […]
உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றுள்ளார். நெடு நேரமாகியும் அவள் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை இருவர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சென்ற 24 மணி நேரத்தில் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணிபுரிந்து கொண்டிருக்கும் காவல் துறையினரும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிராவில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 303 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 12,290 […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் 73 வயதான சேத்தன் சவுகான். இவர் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். மேலும் சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார். இதேபோன்று மராட்டியம் மற்றும் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளிலும் அவர் விளையாடி இருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் பா.ஜ.க.வில் […]
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் மாலை 7.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் […]
தடுப்பூசி மூலம் சுயசார்பை ரஷியா வெளிப்படுத்தியுள்ளது என சிவ சேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனைகளில் இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். சுயசார்பு இந்தியா என்று நாம் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தடுப்பூசி கண்டுபிடித்து சுயசார்பை ரஷியா காண்பித்து விட்டது என்று சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது பற்றி சிவ சேனாவில் முக்கிய […]
கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்தவர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர். இவரும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் உத்பாலுக்கு, நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. […]
இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையை மேற்கோள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று பதவிட்டுள்ளார். BJP & RSS control […]
புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,853 […]
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு தலைவர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி இருவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அவர்கள் அளித்த […]
இந்தியாவில் கொரோனா தலைநகரமாக மகாராஷ்டிரா மாறி வருகிறது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் தலைநகராக மகாராஷ்டிரா மாறி இருக்கிறது என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்: “நாங்கள் எந்த குற்றமும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் […]
எல்லை மோதலில் சீனாவின் பெயரை சொல்வதற்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கேள்வி கேட்டுள்ளார். நேற்று நடைபெற்ற 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். அப்போது எல்லை மோதல்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் […]
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணிநேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கேரள முதல் அமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 42,885 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கேரளாவில் […]
ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் […]
பிரதமர் மோடியின் அரசாங்கம் பல ஊழல்களை செய்து வருகிறது என ரன்தீப் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திர தினத்துக்கு ஒரு நாளைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி “வெளிப்படையான வரிவிதிப்பு” என்ற புதிய தளத்தை தொடங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நரேந்திர மோடியின் அரசாங்கம் வரி பயங்கரவாதம் மற்றும் ரெய்டு ராஜ்ஜியம் இவற்றை நடத்தி வருகிறது. சென்ற 6 வருடங்களில் வரி விதிப்பு 129 விழுக்காடு அதிகரித்துள்ளது. […]
புதுவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி மரக்கன்றுகளை நட்டு தேசிய பசுமை திட்டத்தை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார். அதற்குமுன் காவலர்கள் கொடுத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் சட்டப் பேரவை எதிர் வளாகத்தில் மா மரக் கன்றை நட்டு தேசிய […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு மரியாதை செலுத்தினார். நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவனே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா போன்றோர் குடியரசுத் தலைவரை […]
ஹைதராபாத் நகரத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் என அங்கீகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட மொஸம்ஜாஹி சந்தையை நேற்று தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் திறந்து வைத்தார். மொஸம்ஜாஹி சந்தை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மஹ்மூத் அலி, தலசனி சீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி, வி. ஸ்ரீனிவாஸ் கவுடா, மக்களவை உறுப்பினர் கே. கேசவ ராவ், அசாவுதீன் ஓவைசி, […]
சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் செல்போன் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் செல்போன் சேவையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ஜம்மு எல்லையில் இப்பொழுது வரை எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை என்றும் எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி ஜம்வால் […]
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் வருடம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும். மேலும், இந்த ஆண்டு […]
சொத்துக்காக தங்கையை கொன்று விட்டு பெற்றோரையும் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் 48 வயதான பென்னி. இவரின் மனைவி பெஸ்ஸி. இந்த தம்பதியினருக்கு ஆல்பின் (22), ஆன்மேரி (16) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். ஆல்பின் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள கம்பம் பகுதியில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். கொரோனா காரணமாக தற்போது காசர்கோட்டில் உள்ள குடும்பத்தினருடன் சொந்த ஊரில் தங்கியுள்ளார். அப்போது, குடும்ப சொத்து முழுவதையும் அனுபவிக்க வேண்டும் […]
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டரில் பதிவில், “எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். […]
கொரோனா முன் தடுப்பு நடவடிக்கை கண்டிப்பாக தேவை என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் வைத்துள்ளார். புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இப்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போது சக்தி, பணம் மற்றும் முன் தடுப்பு என்பது தேவையான ஒன்றாக உள்ளது. நமது மூத்தோர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை இழந்துகொண்டிருக்கிறோம். இது ஒரு மோசமான நிலை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால்தான் இதை நாம் தவிர்க்கலாம். இதற்கு […]
பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் ஒலியும் தொலைபேசியில் தங்களுடைய சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு பேசினர். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை அலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக […]
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 112 பேர் பலியாகியுள்ளனர். அசாமின் வடக்கு பகுதியிலும் பிஸ்வந்த், பக்சா போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. லக்கிம்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தி்ன் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அசாமில் வெள்ளத்தால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கோரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் லக்கிம்பூரில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விட்டன. […]
கல்வான் பள்ளத்தக்கில் இருந்து படைகளை திரும்பப் பெற இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்தில் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இருப்பினும் பாங்காங் லேக்கின் வடக்கு பகுதியில் இருந்து சீன படைகள் வெளியேறாமல் இருக்கின்றன. இந்நிலையில், சீன ராணுவ தலைமை தளபதி சி குவியை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி […]
இந்தியாவின் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டை புரட்சியைக் கொண்டுவரும் என தெரிவித்தார் பிரதமர் மோடி. 74-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பின்பு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் ஆற்றிய உரையில், கொரோனா தடுப்புக்காகவும், சிகிச்சைக்காகவும் போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பின், அவர்களின் சேவைக்கு முன்பு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை தொடக்கி வைத்த […]
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நாள்தோறும் தகவல்களை தெரிவித்து வந்தவர் லாவ் அகர்வால். மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளரான அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறும் லாவ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்த நிலையில், அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சி இல்லாமல் இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று இருப்பதையும், மூளையில் ரத்தக்கட்டி இருப்பதையும் கண்டுபிடித்து […]
பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆற்றிய உரையில் சோதனையில் மூன்று தடுப்பூசிகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்தியாவில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், * கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். * நம் நாட்டிற்காக போராடி வரும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். * தற்போது […]
இந்தியாவிற்கு தீங்கு செய்யும் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,” எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு தீமை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். […]
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வாரம் ஒரு முறை 850 கி.மீ பயணம் செய்து ஏனாம் பிராந்தியம் சென்று வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதிகளாகும். அதில் ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். அவர் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மல்லாடி […]
கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை சேர்க்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை அடையாது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் ஆரம்பிக்கப்பட்ட ‘மார்மிக்’ என்ற வார இதழின் 60-வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசுகையில்: “மும்பையில் மராத்தி பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராட சிவசேனா தொடங்கப்பட்டதற்கு காரணமே இந்த இதழ் தான். இந்த இதழ் விரைவில் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக முழுவதும் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . குறிப்பாக சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50,000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது., இந்நிலையில் இந்தியாவில் சென்ற 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 24 மணி […]
கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் கொடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை […]