மத்திய ஆயுஷ் துறை இணையமச்சருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவிக் கொண்டே வரும் நிலையில். பொதுமக்களை மட்டுமில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேபோல, எம்.பி, எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். முன்னள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடாக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் […]
Tag: தேசியம்
167 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய ரயில்வே சரிவை சந்தித்துள்ளது ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,066 கோடியை இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு திரும்ப கொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இவ்விவரங்களை பெற்றுள்ளார். அதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கொரோனா தொற்று காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற […]
ஜம்முவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதி விரைவுக் குழுவையும் காவல்துறையையும் பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் அத்துமீறல் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜம்முவில் சுதந்திர தினத்தன்று முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மினி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் அணிவகுப்பு. இதனால் அப்பகுதி மூடப்பட்டு சில நூறு நபர்களை மட்டுமே சுதந்திர தின விழாவுக்கு அனுமதிக்க […]
புதுவையில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பற்றி மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் புதுச்சேரியில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் புதிதாக 5 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 96 பேர் பலியாகியுள்ளனர். 2,616 பேர் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று […]
ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் எண்ணிக்கையானது மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா போன்ற நகரங்களில் அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் இந்த விமான சேவையை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதாலும் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை. வந்தே பாரத் திட்டத்தின் மூலம், ஏர் இந்தியா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் […]
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் பர்ன்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிகரி நிஹாரிகா பட் பொறுப்பேற்றுள்ளார் . இவர் இதற்கு முன் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். அதன்பின், புதுச்சேரி தலைமை செயலர் […]
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை, ஊசுடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்து வருபவர். இவர் சுமார் 20 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் நிலைபெற்று வருகிறார். புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் பகுதியைச் சேர்ந்த இவர், நேற்றிரவு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யும் பொழுது கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. இந்த நிலையில் […]
சுற்றுலாத் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்திய சுற்றுலா, விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அதன் துணை சங்கங்கள் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஃபெய்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா நெருக்கடி காரணமாக செயலிழந்து கிடக்கும் சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்க இந்த பருவமழை காலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடு பாதையிலிருந்து தடம் மாறி தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியது. இதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, கோழிக்கோடு வருவதற்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரிய விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்கம் தடைவிதித்துள்ளது. வருடம் தோறும் […]
கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த வந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதில், குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த 30 வீடுகள் மண்ணோடு புதைந்து விட்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், 6வது நாளாக இன்று […]
ரிலைன்ஸ் அறக்கட்டளை பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையானது இந்தியாவில் பல்வேறு சமூக நற்பணிகளை செய்து வருகிறது. இதில் சிறப்பாக மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு பல வழிகளிலும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காஷ்மீர் போலீசுடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட பாதுகாப்பு படையினரை அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி […]
ஊரடங்கால் தான் கஷ்டப்பட்டு வந்தாலும், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலத்துடன் 100 ரூபாயை சேர்த்து கொடுத்த பெண் பலரது பாராட்டையும் பரிசையும் பெற்று வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளம், மண்சரிவு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென எர்ணாகுளத்தில் உள்ள கும்பலங்கி கிராமத்தில் வசித்து வரும் மேரி ஜெபஸ்டின் என்ற பெண் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலை விலைக்குக் கொடுக்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கிராம மக்கள் பாலை விற்பனைக்கு கொடுக்காமல் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த செயல் குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது […]
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை அவுரங்காபாத்தில் ஈவ்டீசிங் செய்ததால் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாகர் பகுதியில் வசித்து வந்த சுதிக்ஷா பாட்டி என்ற பெண் உயிரிழந்ததற்கு ஈவ்டீசிங் தான் காரணம் என அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தனது தாய் மாமாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த சுதிக்ஷா என்ற பெண்ணை பின் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். பின் தொடர்ந்த இளைஞர்கள் சுதிக்ஷாவை ஈவ்டீசிங் செய்ததால், விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என சுதிக்ஷாவின் உறவினர்கள் […]
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள தொகுதி எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவால் ஏற்பட்ட வன்முறையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சொந்தக்காரர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு ஆத்திரம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை சுற்றி போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டத்தில் […]
கோழிக்கோடு விமான விபத்தில் மேலும் 74 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் மற்றும் 190 பேருடன் சென்ற 7-ஆம் தேதி இரவு தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகி துண்டு துண்டாகியது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பெய்து வரும் பேய் மழை காரணமாக உள்ள 151 வருடகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்துள்ளது. ஆலப்புழா நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் பம்பா அணை திறந்து விடப்பட்டதால் பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்து விட்டது. இதையடுத்து 151 வருட கால தேவாலயம் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாயம் குறித்து எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்ல […]
நாடு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பயணிகள் ரயில் இயக்கப்படமாட்டாது என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் அழைத்துக்கொண்டு சேர்க்கும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் […]
ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய நவம்பர் மாதம் 16ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற நவம்பர் மாதம் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கும் நிலையில் கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் காணொலி காட்சி மூலம் இது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனாவை கருத்தில் வைத்து பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி கூட்டத்தின் முடிவில், […]
இந்திய தர மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய ஹெல்மெட்டுகள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு ஹெல்மெட் அதிகபட்சம் 1 கிலோ 200 கிராம் இருக்க வேண்டும் என 2018ம் ஆண்டு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது, ஹெட்மெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதாரணமான உலோக பொருட்களை வைத்து, குறிப்பிட்ட எடைக்கு குறைந்து ஹெட்மெட்டுகளை தயாரிக்க முடியாது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். கார்பன் இழை போன்ற உயர் தரத்தில் செய்யப்பட்ட பொருட்களை வைத்து மட்டுமே […]
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6257 ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகின்ற நிலையில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 6,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் கொரோனா […]
டெல்லியில் இன்று ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இன்று ஒரே நாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]
ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா நாட்டில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி அதனை பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி மருந்து செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரித்திருக்கும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி பெறுவது தொடர்பாக மத்திய அரசு அமைத்த தேசிய […]
பெங்களூர் தென்மண்டலத்தில் கொரோனா பரிசோதனை தினமும் 7 மணி நேரம் மேற்கொள்ள இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 198 வார்டுகள் இயங்கி வருகின்றன. இந்த வார்டுகள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரு தென் மண்டலத்தில் இருக்கும் 44 வார்டுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அந்த மண்டல பொறுப்பு அமைச்சர் […]
புதிய கல்விக் கொள்கையில் பயிற்றுமொழியை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மும்மொழி கொள்கையை திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கை செயல்படுவதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் புதிய கல்வி கொள்கை பற்றி ஆராயவும், தேசிய கல்விக் கொள்கையில் […]
கனமழை காரணமாக கோவாவில் உள்ள ரயில் சுரங்கப்பதையில் ஏற்பட்ட திடீர் விபத்தால் அந்த வழியாக சென்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. கோவாவில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்து வருகிறது. மேலும் அங்கு பல பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று பெய்த பலத்த மழை காரணமாக வடக்கு கோவா பெர்னெமில் பகுதியில் உள்ள இரயில் சுரங்கப்பாதை சுவரின் ஒரு பகுதி அதிகாலை இடிந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ் 1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஓடுதளத்தில் […]
தெலுங்கானாவில் கொள்ளையடித்த கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை செல் போன்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை கைப்பற்றியுள்ளனர். இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் என்ற இருவரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் […]
அதிநவீன நெட்வொர்க் ஆன 4g சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்ற வருடம் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அதிவேக இன்டர்நெட் சேவையான 4ஜி நிறுத்தப்பட்டது. சென்ற 7-ஆம் தேதி இது குறித்த விசாரணையில் மீண்டும் 4ஜி சேவை வழங்குவதற்கான இடங்களை ஆய்வு செய்ய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு […]
ராமர் கோவிலில் பூமி பூஜை நடந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக இவ்விழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டன. பூமி பூஜையின் போது, துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்து இருந்தவாறு உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது […]
ஆண் வாரிசகளைப் போல பெண் வாரிசுகளுக்கும் பெற்றோரின் சொத்துக்களில் சம பங்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 2005 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த போது, ‘‘திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் பெற்றோரின் சொத்தில் சம பங்கை பெறும் உரிமை இருக்கின்றது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்து வைத்திருப்பவர் இறந்திருந்தாலும் ஆண்களைப் போல பெண்களுக்கும் அந்த சொத்தில் […]
கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 51 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே அமைந்துள்ள ராஜமாலை பகுதியில் இருக்கும் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு […]
மத்திய மனிதவள நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய கல்வித் துறைச் செயலாளர், பள்ளிகள் டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. பல மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய […]
மணிப்பூர் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கு எடுக்கப்படும் போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். […]
ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகளுடன் இணைந்து தாக்கியதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையறிந்து கொண்ட பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் சிலருடன் கும்பலாக சேர்ந்து கொண்டு காவல்துறையின் மீது தாக்குதல் […]
தவறான தகவல்களை கொடுத்துவிட்டு தலைமறைவானவர்களில் 3,300 பேரை சுகாதாரத்துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், அங்கு தினசரி 2,000 க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரிசோதனை எடுக்கப்படும் நபர்கள் தவறான முகவரி, தவறான செல்போன் எண், போன்றவற்றை மாநகராட்சியிடம் கொடுத்து வந்தனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளான 4,327 பேர் கடந்த 7ம் தேதி வரை சுகாதாரத்துறையின் கையில் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். இந்த மறைமுகமான […]
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. இவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துவமனைக்கு வேறொரு பரிசோதனைக்காக சென்ற பொழுது எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சென்ற வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு […]
பா.ஜக அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் அமைப்பு தீவிர போராட்டம் நடத்தும் என டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூரில், “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் டி.கே சிவகுமார் பேசியபோது, “நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதை நான் […]
ஆந்திர மாநிலத்தில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவன் அவரது உருவச்சிலையை மெழுகில் செய்து வடிவமைத்து புதுமனை புகுவிழாவில் இடம் பெறச் செய்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கோபால் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ் குப்தா. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். அதன்பின் ஸ்ரீனிவாஸ் குப்தா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி புதுமனை புகுவிழா நடத்தி […]
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய வர்த்தக தொழில் தறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய வர்த்தக தினத்தையொட்டி, நடைபெற்ற டிஜிட்டல் உரையில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும். எதிரி நாடுகளிடமிருந்து வரும் தரமற்ற பொருட்களை வாங்க வைத்து மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை நாம் அடையாளம் காண வேண்டும். மேலும் ஆத்மா நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கு வர்த்தகர்கள் […]
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வரும் நிலையில், வயது வித்தியாசம் எதுவும் இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. மேலும் இந்த மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை இந்த வைரஸ் தனது தாக்குதலை ஏற்படுத்தி […]
சர்ச்சைக்குரிய ஓவியத்தை வெளியிட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து பாத்திமா காவல்துறையில் சரணடைந்துள்ளார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19ம் தேதி அரை நிர்வாண கோலத்தில் தனது மகன் மற்றும் மகள் வரைந்த ஓவியத்தை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, ரெஹானா பாத்திமாவின் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை எதிர்த்து கேரள […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்ற 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் […]
தேசத்திலுள்ள பொய்களை சுத்தம் செய்ய முன் வரலாமே என பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினம் வருவதை முன்னிட்டு, ” குப்பைகள் இல்லா தேசம்” என்ற ஒரு வார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதி மொழி எடுத்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், “கார்பேஜ் […]
மும்பையில் மீண்டும் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் சென்ற திங்கட்கிழமை தொடங்கி, 3 நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் நகர மக்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர். அதன்பின் வியாழக்கிழமை முதல் மழை குறையத் தொடங்கியது. மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக 58.52 செ.மீ. மழை தான் பெய்யும். ஆனால் கடந்த 7 நாட்களில் மட்டும் அதைவிட அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதாவது […]
நகைக்கடை ஒன்றில் 50 கிலோ வெள்ளியையும் 10,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கடையில் இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,”கிழக்கு பெங்களூரின் […]
வேலை இழந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நபர் ஒருவர், மூன்று மகள்களையும் கொன்று வட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் ராஜக். இவர் மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தனது சொந்த கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இவரின் வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் […]