ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை […]
Tag: தேசியம்
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் […]
14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தச் […]
கணவன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மனைவிக்கு வீடு கொடுக்காத வீட்டு உரிமையாளரை போலீசார் சமாதானம் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் அந்த நபர் உயிரிழந்து விட்டார். கணவனை இழந்த மனைவி வெங்கடகிரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் […]
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் இன்று காலை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவனின் தந்தை வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சியடந்துள்ளார். அதன்பின் சிறுவனை அக்கம்பக்கத்தில் தேடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், சிறுவனை கடத்தி வைத்துள்ளதாகவும், அவன் திரும்ப […]
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலங்கள் […]
ராணுவ அமைச்சகம் சீனா அத்துமீறி நுழைந்து விட்டதை ஒப்புக் கொள்ளும் பொழுது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதாவது இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாகவும், இதனை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். […]
புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நோயாளிகள் பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் அதிவேகத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு திரிபுராவையும் அச்சுறுத்தி வருகிறது. திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சங்கீதா சக்கரவர்த்தி ஆவார். இவர் பகத்சிங் இளைஞர் விடுதியில் உள்ள கொரோனா நிலையத்திற்கு புதிதாக பிறந்த குழந்தைகளுடன் வந்த ஐந்து பெண்களை அனுமதிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளிகள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது மகளை அவரது காதலுடன் சேர்த்து எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த போலா மற்றும் பிரியங்கா என்ற இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிரியங்காவை அவரது வீட்டில் வைத்து போலா சந்தித்துள்ளார். இதனை அறிந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் போலா மற்றும் பிரியங்கா […]
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டும் பணிகளை ஆளும் கட்சி எம்எல்ஏ நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் குறைவான வயதில் முதல்வர் பதவியில் இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறார். அவர் கொடுத்துள்ள நலத்திட்டங்களில் குறிப்பாக அவரது ‘நவரத்தினா’ திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட, மேற்கு கோதாவரி […]
பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் கிணற்றில் தூக்கி எறிந்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள யெல்லாபுரம் வட்டத்தின் சஹஸ்ராலி கிராமத்தில் வசிப்பவர், சந்திரசேகர பட் -பிரியங்கா பட். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2ம் தேதி, அடையாளம் காண முடியாத நபர் ஒருவர் தங்கள் ஒரு மாத பெண் குழந்தையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதால், தங்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, யெல்லபுரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் […]
கிழக்கு லடாக்கின் சில பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளதாக இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது. ஆனால், சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய அரசு மறுத்தது. இந்த நிலையில், முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சீனாவின் ஊடுருவல் ஒப்புக்கொண்டு இருக்கிறது. இது பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஆவணத்தில், ”எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் […]
ராவணன் கோயிலுக்கு பூஜை செய்து வரும் பூசாரி நாளை நடக்க இருக்கும் ராமர் கோவில் பூஜையை கொண்ட இருப்பதாக கூறியுள்ளார். அயோத்தியிலிருந்து கிட்டத்தட்ட 650 கிமீ தொலைவில் உள்ள ராவணன் கோவில் பூசாரி மஹந்த் ராம்தாஸ். இவர் ராமர் கோவிலில் நடக்க இருக்கும் பூமி பூஜையைத் தானும் கொண்டாட இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 5ம் தேதி பூமி பூஜை நடந்து முடிந்தவுடன் மஹந்த் ராம்தாஸ் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து மஹந்த் […]
சிவசேனா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதமர் மோடியிடம் மக்கள் ராஜினமா கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி பத்திரிகையின் சாம்னா கட்டுரை பகுதியில் அந்த கட்சியில் உள்ள எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி உள்ளதாவது, “நாட்டில் கொரோனா பிரச்சினை காரணமாக 10 கோடி மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டு […]
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மூன்று வயது உள்ள குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் aluva வை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் பிரித்திவிராஜ் இவன் நேற்று காலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காயினை விழுங்கி விட்டான். இதனால் அதிர்ச்சியான பிருதிவிராஜன் பெற்றோர்கள் உடனே அவனை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார்கள். அங்கு சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தை நல சிறப்பு […]
ரக்ஷா பந்தன் அன்று அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் இலவசமாக சென்று வரலாம் என உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை ரக்ஷாபந்தன் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அண்ணன்களுக்கு தங்கை மற்றும் தம்பிகளுக்கு அக்கா கையில் ராக்கி கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தும் நாளான அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ரக்ஷபந்தன் திருநாளை முன்னிட்டு சகோதரத்துவத்தை போற்றும் விதமாக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் […]
கொரோனா பரிசோதனைக்கு பின் தொற்று உறுதியான 110 வயது மூதாட்டி சிகிச்சைக்குப் பெற்று நேற்று பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய வீரியத்தை தினந்தோறும் அடைந்து வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் 3 மாதங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற ஜூன் மாதம் முதல் ஜெட்வேகத்தில் உயர்ந்து உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அத்துடன் 2,500 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த பயங்கர கொரோனாவானது வயதானவர்கள், […]
போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானம் குடித்து 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், படாலா, தரன் போன்ற மாவட்டங்களில் போலி மதுபானம் குடித்த 21 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து ஜலந்தர் பிரிவு மண்டல ஆணையர் தலைமையில் விசாரிக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
டாக்ஸி டிரைவர்களை கொலை செய்து முதலைகள் உள்ள கால்வாய்களில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்தர் தர்மா என்பவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 7 டாக்ஸி டிரைவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 16 வருட சிறை தண்டனையை அனுபவித்த தர்மா கடந்த ஜனவரி மாதம் 20 நாள் பரோலில் வெளிவந்தார். ஆனால் பரோல் முடிந்தும் சிறைக்கு திருந்தாமல் தர்மா தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் […]
கர்நாடகா அமைச்சருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் வீட்டில் பணிபுரிந்த 5 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல். கொரோனா பரிசோதனைக்குப் பின் அமைச்சருக்கு அறிகுறிகள் இருந்தன. அதனால் பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார். அதன்பின் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் 11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது. ஒரு வாகனத்துடன் 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த கியா மோட்டார்ஸ் 11 மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதன் முதல் வாகனமான கியா செல்டோஸ் விற்பனையில் பழம்பெருமையான நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இந்திய வாகனச் சந்தையில் பார்க்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ், கார்னிவல் […]
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ வழுக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அவரை மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது, பித்தோராகரில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த பகுதியை அவர் கடந்தபோது வழுக்கி விழுந்து வெள்ள நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப் பட்டார். இதையடுத்து அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உடனடியாக எம்.எல். ஏ வை மீட்டு விட்டனர். இதில், எம்எல்ஏ […]
வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் மாநில போக்குவரத்துத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல் போன்களைப் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. புதிய விதிகளின் கீழ், வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துபவர்ளுக்கு 10,000 அபராதம் விதிக்கப்படும். மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. “வாகனம் ஓட்டும் போது செல் போன்களைப் பயன்படுத்தினால் ₹.10,000 […]
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா தொற்று பரவாது என ஜிப்மர் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பச்சிளம் குழந்தைகள் நலத்துறை சார்பில் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்பாலில் சரியான அளவிலும் விகிதத்திலும் நிறைந்திருப்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு […]
ராமர் பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அயோத்தியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் ராக்கியை தயாரித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியை வரவேற்க இஸ்லாமியர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, உத்தரப் […]
குடும்பத் தகராறில் காயமடைந்த தனது மனைவியை தள்ளு வண்டியில் அழைத்து மருத்துமனைக்கு கொண்டு சென்ற சோகம் பஸ்தி மாவட்டத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர், கூலி வேலை பார்த்து வருகிறார். நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை தள்ளு வண்டியில் ஏற்றிக்கொண்டு சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்ற அவலம் தினேஷ் குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, “வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக என் சகோதரர் எனது மனைவியை […]
மது கிடைக்காததால் சானிடைசரை எடுத்து குடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நேற்று மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளுக்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மதுப்பிரியர்களுக்கு திடீரென ஒரு யோசனை வந்துள்ளது. “மதுபானம் கிடைக்கவில்லையென்றால் என்ன ஆல்கஹால் சானிடைசரை குடிப்போம்” என எண்ணி, கும்பலாக சேர்ந்து ஆல்கஹால் சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் நேற்றிரவு நான்கு […]
ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாட்டு சாணம், கோமியம் கொண்டு சஞ்சீவ்னி ராக்கிகளை தயாரித்து வருகின்றனர். கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள எல்லை கோட்டில் கடந்த மாதம் சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீன தயாரிப்பு பொருள்களை இந்தியா புறக்கணித்து வருகிறது. இதனால், மின்னணு பொருள்களின் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத்தின் கட்ச் சார்ந்த ராமகிருஷ்ணா பரம்ஹான்ஸ் அறக்கட்டளை ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. […]
22 நாட்களில் ராமாயணம் கதையை புத்தக வடிவில் எழுதிய சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பில் இடம் பிடித்துள்ளார். ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியின் பெயர் இஷ்ஹிதா ஆச்சாரி. கொரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறையில் உள்ள அவர், ஊரடங்கு காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத ஆர்வம் காட்டியதால், இஷ்ஹிதாவிற்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளித்துள்ளனர். […]
2018-19ஆம் நிதியாண்டிர்க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2018-19ம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2020ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை […]
அரசியல் நெருக்கடி காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது என்று கவர்னர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோனதை அடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் மற்றும் 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 […]
பா.ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சி கூட்டம் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடாது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீடியோ காணொளி மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறியுள்ளார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்துள்ளார். இந்நிலையில் […]
கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் எடியூரப்பா நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லட்சுமணன் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டது. ஆனாலும் அவர் பா.ஜனதாவில் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக இருக்கிறது. குறிப்பாக வட கர்நாடகாவில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அந்த வட கர்நாடகத்தில் […]
வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளி வழக்கறிஞரான பிரீத்தம் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஜூலை 10-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் பி.ஏ.பி., எனப்படும் மக்கள் செயல் கட்சி, 83 இடங்களில் வெற்றி அடைந்து, நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்(43) பொதுச் செயலராக இருந்த தொழிலாளர் கட்சி 10 […]
கொரோனா வைரஸ் காரணமாக ரயில் வண்டிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக ரயில் உள்பட பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு முடியாமல் பல […]
அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தலைமை செயலாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயங்கும் ஐ டி அலுவலகங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களை பணியாற்றுமாறு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான காலத்தை அதிகரித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் […]
கொரோனா பாதிக்கப்பட்ட காரணத்தால் வீட்டின் உரிமையாளர் தாய் மகன் இருவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில், சட்டெனபள்ளி பகுதியை சார்ந்த 28 வயதுள்ள வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது வீட்டு உரிமையாளருடன் அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கூறிவிட்டு வந்து உள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டு உரிமையாளர் கொரோனா பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். அதன் பின் […]
59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 47 செயலிகள் தடை செய்ய இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக சென்ற மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகள் ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலியாக உள்ள 47 சீன செயலிகளை இந்தியா மீண்டும் தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட […]
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாகிய நமது தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்தது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பின்னும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பின்னும் நமது […]
கொரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்துள்ள அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் முந்தைய விசாரணையில் உச்ச நீதிமன்றம், […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொலி வாயிலாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம். 2. கொரோனா காலத்தில் வற்றிப்போன வாழ்வாதாரத்தை , மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பண உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க. அரசை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 3. உயிர்த் தியாகம் செய்த கொரோனா […]
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று […]
அரசை கவிழ்க்க எதற்காக செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜக மீது சாடி இருக்கிறார். மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தன்னுடைய 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-” மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையாக இருக்கின்றன. மூன்று கட்சிகளின் அனுபவத்தோடு இந்த அரசு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தினுடைய எதிர்காலமானது எதிர்க்கட்சிகளின் […]
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு […]
கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த தாயால் தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவி விடும் என்று கூறி வீட்டினுள் அனுமதிக்காத சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம் நகரைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயால், தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் […]
கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆம்புலன்சில் கூட்டிச் செல்ல டிரைவர் அதிக பணம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா மாநிலம் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை, மற்றும் 9 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐ.சி.எச் குழந்தைகள் சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இந்நிலையில், சிறுவர்களை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவர்களின் தந்தை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். பின்னர், […]
கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1, 84,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்க்கு ஒரே வழி பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே. இதனால் நேற்று மட்டும் இந்தியாவில் 4.2 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை இன்னும் விரைவாகத் தெரிந்து கொள்ள கராக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று […]
சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), மற்றும் அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் […]
நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துளளார். கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவில் இருந்து […]
தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய […]