அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பொது செய்தி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும் டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்க வழி இல்லை. மொழி சொல்லித் தருவதை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தாய்மொழி கல்வியை தான் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகின்றார்கள். தாய் […]
Tag: தேசிய கல்விக் கொள்கை
கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான புதிய திட்டங்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் “தேசிய கல்வி கொள்கை 2020 ” நடப்பு 2021 – 2022 கல்வி ஆண்டிலேயே அமல் படுத்தப்படுவதாக அறிவித்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். இது பற்றி பேசிய அமைச்சர், நாட்டில் முதல் மாநிலமாக தேசிய கல்விக் […]
தேசிய கல்விக் கொள்கை குறித்த விவரங்கள் மாற்று மொழிகளில் வெளியிடப்பட்டதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்டு அதில் பரிந்துரைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் விபரங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில், தமிழ் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழி பெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் முதலில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக்கொள்கை தற்போது மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட 17 மொழிகளில் அனைவருக்கும் புரியும்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு தமிழர்களை தொடர்ந்து அவமதிப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.