Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் நல்ல பலன் – மக்களுக்கு நிம்மதியான செய்தி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களிலும் பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை அம்மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றது. இதன் பலனாக பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு குறைந்து நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இன்று மட்டும் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வரும் டிசம்பருக்குள் அனைவருக்கும்…. மத்திய அமைச்சர் உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்பதால், முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி போடும் பணிகள் மட்டும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றது.  […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்து வரும் பாதிப்பு…. ஊரடங்கில் தளர்வு அறிவிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததன் காரணமாக மே-31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது என்பதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Categories
தேசிய செய்திகள்

பெருந்தொற்று காலத்தில்…. ஏன் விவசாய சட்டம்…? – ப.சிதம்பரம் கருத்து…!!

மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக திருப்பிக்கொள்ள அரசு நினைக்கிறது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெருந்தொற்று காலத்தில் ஏன் போராட்டம்? என்று மக்களிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை உருவாகும்” இது தவறான தகவல்… மருத்துவர்கள் தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்நிலையில் வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி! குப்பையில் எறிந்த மாஸ்க்கை கழுவி…. மீண்டும் விற்கும் அவலம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் ஒரே வழி என்றாலும், கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றை அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் முக கவசம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தொற்று பரவல் குறைந்த மாவட்டத்திற்கு தளர்வு…. மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மகாராஷ்டிராவில்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10%க்கு மேல் உள்ளதால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விலக்கப்படாது எனவும், தொற்று பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

தளர்வுகளற்ற ஊரடங்கை நீடிக்க…. துணைநிலை ஆளுநர் வலியுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கை நீடிக்க தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி பாதிப்பு சற்று குறைந்து வருவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று முதல்… கிராமம் தோறும் – அரசு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா இல்லாத கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கையாக இன்று முதல் கிராமம் தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. தலா ரூ.3 லட்சம், மாதம் ரூ.2000 – கேரள முதல்வர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே வழி ஆகும். ஆனால் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதற்கு மக்களிடையே தயக்கமும், அச்சமும் இருந்து வருகிறது. எனவே தடுப்பூசி குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையூட்டும் விதமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் தவிர பிற மாநிலங்களில்….100-ஐ கடந்து விற்பனையாகும் பெட்ரோல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.89.39 க்கும் விற்பனையாகிறது. ஆனால் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஜூன்-1 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி கேரளாவிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 10, 12 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5,500 – முதல்வர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5,500 மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி 15,983 குடும்பங்களுக்கு ரூ.8.79 கோடி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ஜூலை-5 ஆம் தேதி சிஏ தேர்வு – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் காரணமாக பல்வேறு முக்கியமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படியே சிஏ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாத இறுதியில் நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஜூலை 5ஆம் தேதி நடைபெறும் என்றும், தேர்வுகளுக்கான முழு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

577 குழந்தைகள் பெற்றோரை இழப்பு…. குழந்தைகள் நல அமைச்சகம் தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல குழந்தைகளும் தங்களுடைய பெற்றோரை இழந்து அனாதையாக உள்ளனர். அவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல அரசுகளும் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 26ம் தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 577 குழந்தைகள் கொரோனா தொற்றிற்கு பெற்றோரை இழந்து அனாதையாக உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியின் 10 வயதுக்கு மேற்பட்ட…. குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…!!!

உங்களுடைய குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே சேமிப்பு, முதலீடு போன்ற நிதி சார்ந்த விஷயங்களை கற்றுகொடுப்பது மிகவும் அவசியம். முதலாவதாக பணத்தை சேமிக்க கற்றுக் கொடுங்கள். எனவே குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கலாம். அந்தவகையில் SBI வங்கி சிறுவர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் Pehla Kadam. இதில் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இணைந்து Joint account தொடங்கலாம். இதுபோக, Pehli Udaan திட்டத்தை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் ஆரம்பிக்கலாம். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்கபடும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் வீணடிப்பு – எந்த மாநிலம் முதல் இடம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதில் முதல் இரண்டு இடங்களில் ஜார்கண்ட் 37.3 சதவீதம், சத்தீஷ்கர் 30.2 சதவீதமாக உள்ளது. தமிழகம் 15.5 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது. தேசிய அளவில் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று வானில் தோன்றும் சந்திரகிரகணம்…. ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கும் தெரியுமா…??

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா இன்று மாலை வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் இன்று மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மாலை 3:15 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000…. புதுச்சேரி அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறியது யாஸ்…. இன்று கரையை கடக்கிறது…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில்கரையை கடக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 3.15 முதல் 6.22 வரை…. வானில் “ஒரு ரத்த நிலா”..!!!

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா இன்று மாலை வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் இன்று மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மாலை 3:15 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

60 வயது வரை முழு சம்பளம், காப்பீடு, கல்வி – வாவ் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும் நிதி உதவியையும், பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. இந்நிலையில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது கொரோனாவால் உயிரிழந்தானல் அவர்களுடைய குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் வயது வரை அவரின் சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் […]

Categories
தேசிய செய்திகள்

மிக முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!

இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70. இவர் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் தன் பணியை தொடங்கிய பின் அந்த மையத்தின் இயக்குனர் பொறுப்பை எட்டினார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

குறைந்து வரும் பாதிப்பு…. முழுஊரடங்கை தளர்த்த…. மகாராஷ்டிரா அரசு திட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஊரடங்கை ஜூன் 1 வரை அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-7 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – கர்நாடக அரசு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. அந்தவகையில் கர்நாடகாவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே -10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல்…!!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா இடையே மே 26-இல் யாஸ் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்ய…. ஜூன்-7 ஆம் தேதி முதல்…. புதிய இணையதளம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது 2021-2022 வருடத்திற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ரூ.3000, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

மின்விசிறி கீழ் அமர்ந்திருப்பது போல…. புதியவகை பிபிஇ கிட் கண்டுபிடிப்பு…. குவியும் பாராட்டுக்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் ஒருபுறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு மிகவும் போற்றத்தக்கது. இவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழுகவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த கவச உடைகள் காற்றோட்ட வசதி இல்லாததால் அவர்களுக்கு அசவுகரியமாக தான் […]

Categories
தேசிய செய்திகள்

மே-26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும்…. வானிலை மையம் அறிவிப்பு…!!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறவுள்ளதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் ஒடிசா இடையே மே 26 இல் யாஸ் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

உபியில் மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,046 பேர்  பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பகுதிநேர ஊரடங்கை மே […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கையில் 4 நாட்களுக்கு தடை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில், பேருந்து, போக்குவரத்துக்கு ஆகியவற்றிற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தொடங்கிய இந்த தடை செவ்வாய்க்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என்றும், சுகாதாரம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மே-31 வரை முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “புதுச்சேரியில் ஊரடங்கால் […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது… ஆதாரில் முகவரியை மாற்ற…. இதை செய்தால் போதும்…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

“மே-26 இல் வானில் ஓர் அதிசயம்” வெற்றுக்கண்களால் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா வருகிற 26-ஆம் தேதி வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் வரும் 26ம் தேதி மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் மே-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மே-22 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக கேரளா முதல்வர் பினராயி […]

Categories
தேசிய செய்திகள்

60 குரங்குகளுக்கு கொரோனா உறுதி…. 14 நாட்கள் தனிமை…. டெல்லி வனத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வேதங்களும் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தீவிர மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றபடி லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கொரோனாவால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஜெய்ப்பூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் வீட்டிலேயே…. 2 நிமிடங்களில் பரிசோதனை…. 15 நிமிடத்தில் முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் ஒரேவழி என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் எவ்வளவுக்கு எவ்வளவு பரிசோதனைகள்  விரைந்து செய்யப்படுகிறதோ? அந்த அளவுக்கு நோயிலிருந்து தப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சிலர் பயத்தின் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே சுயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தாலி காட்டும் நேரத்தில்…. தாலியையே ஆட்டைய போட்ட ஐயர்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருமணம் என்றாலே ஐயர் வந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைப்பது வழக்கம். இதுதான் ஐயர்களின் வேலை. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்க வந்த ஐயர் தாலி சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் ஜன சுந்தர் என்பவருக்கு  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக ஐயர் வந்துள்ளார். இதையடுத்து மந்திரங்கள் ஓதிய பின்னர் மணமகன் மஞ்சள் கயிற்றை மணமகள் கழுத்தில் கட்டியுள்ளார். பின்னர் தங்கச்சங்கிலியை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 22 மணிநேரம் கடும் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு…!!!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் முழுவதுமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை […]

Categories
தேசிய செய்திகள்

2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற…. பினராயி விஜயனுக்கு சீமான் வாழ்த்து…!!!

கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், பினராயி விஜயனுக்கு பதவிப் […]

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய…. கால அவகாசம் நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது 2021-2022 வருடத்திற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாருடன் செல்போன் நம்பர் இணைப்பு…. எப்படி தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஏதாவது குறிப்பிட்ட தகவல்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் செல்போன் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் செல்போன் நம்பருக்கு அனுப்பப்படும் OTP நம்பர் மூலமாகத்தான் ஆதாரில் அப்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில்…. தமிழக அமைச்சர் பங்கேற்பு…!!!

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கேரள சட்டமன்ற தேர்தல் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரளா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவானது திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ரத்த நிலா” தோன்றும் அரிய நிகழ்வு…. என்னைக்கு தெரியுமா..??

வானில் தோன்றும் அரிதான ரத்த நிலா வருகிற 26-ஆம் தேதி வானில் தோன்றும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத் திவாரி கூறுகையில், “சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம். இந்நிலையில் வரும் 26ம் தேதி மிகவும் அரிதான, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டாவது முறையாக இன்று….. முதல்வராக பொறுப்பேற்கிறார் பினராயி விஜயன்…!!!

கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவானது இன்று மாலை 3 […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ரூ.2000 பணம் வரலையா…? அப்ப இதை உடனே பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories

Tech |