Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில்…. பெட்ரோல்-டீசல் விலையை குறைங்க… ராமர் சந்தோஷப்படுவார் – கடும் கண்டனம்…!!

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலின்போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்ந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளும் […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் முடிஞ்சவுடனே…. “புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்”… குவியும் பாராட்டுகள்….!!

திருமணம் முடிந்தவுடன் கணவனும்- மனைவியும் சேர்ந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு  பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் குழந்தைக்கு செலுத்துவதற்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ஆனால்  அந்த பெண் குழந்தையின் ரத்த வகை உள்ளவர்கள் யாரும்  முன்வந்து ரத்தத்தை கொடுக்கவில்லை. இந்த தகவலை அறிந்து கொண்ட புது ஜோடி ஒன்று திருமணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

புதுவையில் ஆளுநர் ஆட்சி…. தமிழிசை பரிந்துரை – வெளியான தகவல்…!!

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி ராஜினாமா செய்ததையடுத்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதல்வர்  நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நடந்த சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலகியது. இந்நிலையில் புதுச்சேரியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த திட்டத்தின் கீழ்…. விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி…. மத்திய அரசு அதிரடி…!!

இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அதற்கு மத்திய அரசு தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தியது. அதில் ஒன்று தான் pm-kisan திட்டம். புதிய வேளாண் சட்டம் அமல்படுத்தப்பட பிறகு விவசாயிகளுக்கு மற்றொரு நல்ல திட்டத்தையும் அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில் தொடங்குவதற்காக 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். pm-kisan FPO yojana திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்தி மையங்களுக்கு நிதி கிடைக்கும். இதில் பயன்பெற வேண்டுமானால் 11 விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.18, டீசல் விலை ரூ.11 குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் கிடையாது…. இந்த கார்டு எல்லோருக்கும் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். ஆயுஷ்மான் அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். முன்னதாக இந்த அட்டைகளை வாங்குவதற்கு இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை மத்திய அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது.இருப்பினும் இதற்கான நகல் அட்டைகள் அல்லது மறுமதிப்புகளை வழங்குவதற்கு 15 ரூபாய் கட்டணம் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர் கொலை வழக்கு… கனடாவில் “plan” போட்டு… இந்தியாவிற்கு வந்து “execute” செய்த கொலைகாரர்கள்….!!!

இந்திய அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அரசியல் பிரமுகரான Gurlal Singh  என்பவர் தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  Gurlal Singh பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  Gurvindhar Pal, Sukhwindher Singh, Saurabh  Verma என்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் கூறியதாவது,” […]

Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்! பாஸ் டேக் கட்டாயம்…. ஒரே நாளில் ரூ102 கோடி அள்ளியாச்சி…!!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளினால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய பிரச்சினைகள் தீரும் வகையில் பாஸ் டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். சுங்க சாவடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் டிஜிட்டல் இந்தியாவா…? டவர் கிடைக்காததால்…. ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்…. நெட்டிசன்கள் கலாய்…!!

போன் டவர் கிடைக்கவில்லை என்று ராட்டினத்தின் உச்சியில் ஏறி அமைச்சர் போன் பேசியுள்ள புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து  ஒவ்வொரு நாளும் அரசியல் குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அம்மாநில பாஜக அமைச்சர் ராஜேந்திர […]

Categories
தேசிய செய்திகள்

டேட்டிங் ஆப்பை நம்பி “பாடி மசாஜ்”…. இளைஞருக்கு அப்பார்ட்மெண்டில் நடந்த அவலம்…!!

ஆன்லைன் ஆப்பை நம்பி பாடி மசாஜ் செய்ய சென்ற இந்திய இளைஞர் 3 பெண்கள் பணத்தை பறித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் வசித்து வருகிறார். அவர் டேட்டிங் ஆப்பில் அழகிய பெண்கள் “பாடி மசாஜ்” செய்வதாக இருந்த ஒரு விளம்பரத்தை நம்பி அதிலுள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மறுமுனையில் பேசிய பெண் அவரை Al Refaa என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படியே அவர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நெஞ்சே பதறுகிறது”… இளம் பெண்ணை தர தரவென்று இழுத்து… ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளி கொல்ல முயன்ற இளைஞன்…..!!

மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகியுள்ளார். இருவருக்குமிடேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் இளைஞருடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞன் பின் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. நெஞ்சில் கத்தியால் குத்தி…. முட்புதரில் கிடந்த பரிதாபம்…!!

பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவருடைய மகன் ரேஷ்மா(17) . இவர் இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை தேடுதல் வேட்டையில் சிறுமி நெஞ்சில் கத்தியால் குத்தி […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: அட ச்ச்சீ…. எச்சில் துப்பி துப்பி சப்பாத்தி சுடும்…. திருமண நிகழ்ச்சியில் அதிர்ச்சி…!!

இளைஞர் ஒருவர் எச்சிலை துப்பி சப்பாத்தியை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் சமையலறையையில்  சம்பாத்தி சுட்டு கொண்டிருந்துள்ளர்.  அப்போது அவர் சப்பாத்தியில் எச்சில் துப்பிக்கொண்டு சப்பாத்தியை சுடுவதை பார்த்த அங்கிருந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவில் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகளின் வகுப்புகள் ரத்து…. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறாது…. திடீர் ஸ்டிரைக்…!!

70% கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை கர்நாடகா பள்ளிகள் ஒரு நாள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோன பரவலின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து எட்டாம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கர்நாடக நிதியுதவி பெறாத பள்ளிகள், கர்நாடக பிரைமரி மற்றும் செகன்ட்ரி […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பள்ளிகள் திடீர் போராட்டம்…. மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து…. வெளியான அறிவிப்பு…!!

நாளை கர்நாடக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அனைத்தும் 70% கல்வி கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! கவலை வேண்டாம்…. பெட்ரோல் முற்றிலும் இலவசம்…. சூப்பர் சலுகை…!!

வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று  HDFC வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ  தாண்டிவிட்டது. இதையடுத்து இந்த சுமையில் இருந்து ஏதாவது வழி கிடைக்காதா? என்று வாகன ஓட்டிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 […]

Categories
தேசிய செய்திகள்

58 வருடங்களாக நிகழாத… வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு…பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டர் பதிவு…!!

நாகலாந்தில் 58 வருடங்கள் கழித்து முதன் முதலாக தேசிய கீதம் இயற்றப்பட்டது அரசியல் வரலாற்றில் அரிதாக கருதப்படுகிறது.  வடகிழக்கு இந்திய மாநிலம் நாகலாந்தில் 13வது சட்ட மன்ற கூட்டத்தில் 7 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என் ரவி உரையாடுவதற்கு முன் மற்றும் உரையாடிய பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. அதாவது 1963 ஆம் வருடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நாகாலாந்து 16ஆவது தனி மாநில அந்தஸ்தை பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன டோக்கன்கள்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட…. முக்கிய அறிவிப்பு…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனாவால் மூடப்பட்ட ஏழுமலையான் கோயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி 50,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாதம்தோறும் ரூ.300 விலையில் தரிசன […]

Categories
தேசிய செய்திகள்

வணிகர்களுக்கு இனி…. வியாபாரம் களைகட்டும்…. எஸ்பிஐ வெளியிட்ட சூப்பர் செய்தி…!!

எஸ்பிஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்பிஐ பேமன்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து “யோனோ மெர்சண்ட்” என்ற ஆப்பை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்கு ஏற்றவாறு வர்த்தகர்களுக்கு பொருந்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த இணையத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு கோடி வர்த்தகர்கள் இணைப்பதற்காக எஸ்பி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே உஷார்! இதை செய்யாவிட்டால்…. உங்கள் பணத்திற்கு ஆபத்து…!!

கடந்த சில வருடங்களில் நாடு முழுதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமான முறையில் நடக்கிறது. சாதாரண மக்கள் பணத்தை திருடுவதற்காகவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் சைபர் சைபர் கிரிமினல்கள் அட்ராசிட்டி அதிகமாக உள்ளது. சமீப காலமாக கொள்ளைகள் அதிகரித்துள்ளன. அதாவது இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் பணத்தின் மீது பாதுகாப்பாக கவனம் செலுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : உண்மையான விலை தெரிஞ்சிக்கணுமா….? அப்ப இதை படிங்க…..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்படி உயர்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது தான் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள். அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோல் டீசல் தயாரிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாயில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் அதில் அடங்கியிருக்கும். அமெரிக்க டாலரின்படி இதன் விலை நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் விற்பனை சந்தைக்கு வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

விமானம் தரையிறங்கியபோது…. மின்கம்பத்தில் இறக்கை உரசியதால்…. பெரும் பரபரப்பு…!!

விமானம் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் இறக்கை மோதியுள்ள சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டு வந்துள்ளது. அப்போது இந்த விமானம் மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கி உள்ளது. அப்போது ஓடு பாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விமானத்தின் இறக்கை மோதி பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்கம்பம் […]

Categories
தேசிய செய்திகள்

பூங்காவில் உயிரிழந்த நபர்… “கல்லாக உறைந்த இருதயம்”… காரணத்தை கேட்டா அதிர்ந்து போயிருவீங்க….!!

கோவாவில் ஐம்பது வயது மதிப்புள்ள ஒருவரின் இருதயம் உறைந்து கல்லாக மாறி அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் பிரபலமான பூங்கா ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அதிகாரிகள் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில் அவர் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால்  […]

Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்…. ரயிலுக்கு அடியில் படுத்து…. நூலிழையில் உயிர் பிழைத்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஹரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் ரயில் சிக்னலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்து விட்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து அப்ப்டியே தண்டவாளத்தில் நின்றுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் பலர் அப்படியே அந்த பெண்ணை தரையில் படுக்கும்படி கூறியுள்ளனர். அப்போது ரயில் மெதுவாக நகரும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. கொரோனா 2ம் அலையில் விளிம்பில் இந்தியா…. நிபுணர்கள் கருத்து…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி இருக்கிறது. இந்த உருமாறிய கொரோனாவால் தான் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மும்பை ஆகிய பகுதிகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி 1 இல்ல…. 2 மாஸ்க் கட்டாயம் போடணும்….கட்டுப்பாடு விதித்த அரசு…!!

மக்கள் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டும் என்று மஹாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து covid-19 […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தினக்கூலி உயர்வு…. ஒரே அறிவிப்பில் அரசு பல்டி…!!

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அசாம் மாநில வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமான அளவில் வாக்கு வங்கியாக இருக்கின்றர். […]

Categories
தேசிய செய்திகள்

“வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்” என் சாவுக்கு அவங்க 2பேரும் வரணும்…. யஷ் ரசிகர் தற்கொலை…!!

KGF படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகா மாநிலத்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணா(25). இவர் தீவிர நடிகர் யஷ் மற்றும் சித்தாராமையாவின் தீவிர ரசிகர் ரசிகர் ஆவார். இந்நிலையில் ராமகிருஷ்ணா தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன் என்றும், அம்மாவிற்கு நல்ல மகனாக இருக்க முடியல. அண்ணனுக்கு நல்ல தம்பியாக இருக்க முடியவில்லை. காதலில் […]

Categories
தேசிய செய்திகள்

ஈசியாக Passport பெறுவதற்கு இனி…. மத்திய அரசு மகிழ்ச்சி செய்தி…!!

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் என்பது அவசியம். தேவையானங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பின்னர் அது வந்த பிறகுதான் வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இந்நிலையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் சமர்ப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களை காகித முறையில் டிஜிட்டல் ஆவணங்களாக நாட்டு மக்கள் சமர்ப்பிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மீட்டிங்கில் முத்தம் கொடுக்க வந்த மனைவி…. அதிர்ந்து போன கணவர்…. வைரல் வீடியோ…!!

மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும் கணவருக்கு மனைவி ஒருவர் முத்தம் கொடுக்க வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவர் ஒருவர் ஷூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி முத்தம் கொடுக்க வந்துள்ளார் இந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த கணவர் தான் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதாக கூறி என்ன செய்வதென்று அறியாது அதிர்ந்து போகிறார். இதையடுத்து நிலைமையை உணர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் உதவித்தொகை பெற…. இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்…!!

கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேட் அல்லது ஜிபா ட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு M.E, M.TECH, M.ARCH, M.PHARM ஆகிய பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.aicte-india.org/schemes என்ற இணையதளத்திற்கு சென்று பிப்ரவரி-28 வரை விண்ணப்பிக்கலாம்.

Categories
தேசிய செய்திகள்

காந்திய சுட்டவங்க கைது இல்ல…. அவருக்காக போராடுறவங்க கைது – பொன்வண்ணன் குமுறல்…!!

கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றியதால் தர்ணாவில் ஜோதிமணி ஈடுபட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர் அதற்கு காங்கிரஸ் கட்சியினர் மறுத்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு கைது செய்து வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கைது செய்ததற்கு இயக்குனர் […]

Categories
தேசிய செய்திகள்

ரதயாத்திரையை போலீஸ் தடுத்ததால்…. பெரும் பரபரப்பு…!!

ராமர் கோயிலுக்கு நிதி திரட்ட மதுரையில் நடந்து வரும் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சத்து 20 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று ஏற்கனவே விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது ஆரம்பித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இருந்து 1 கோடி குடும்பங்களை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! 250க்கும் மேற்பட்ட நாய்கள் பலி…. கொடிய வைரஸ் தான் காரணம்…. வெளியான தகவல்…!!

250க்கும் மேற்பட்ட நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பங்குரா அடுத்த பிஷ்ணுபூரில் கடந்த மூன்று தினங்களில் 250க்கும் மேற்பட்ட நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அனைத்து நாய்களுக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி ,இரத்தத்துடன் கூடிய இருமல் ஆகிய ஒரே மாதிரியாக அறிகுறிகள் இருந்ததாக அந்த பகுதியில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகருக்கு வெளியே உள்ள மயானம் அருகே இந்த நாய்களை புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாய்களின் தொடர் மரணம் […]

Categories
தேசிய செய்திகள்

“சீச்சீ” 8 வயது சிறுவனிடம் மோசமாக நடந்து கொண்ட 16 வயது சிறுவன்… பஞ்சாயத்து குழு கொடுத்த வினோத தண்டனை….!!

உத்திரபிரதேசத்தில் 8 வயது சிறுவனை 16வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து குழுவினர் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் என்ற பகுதியில் 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.  சம்பவத்தன்று அந்த 8 வயது சிறுவனை 16 வயது மதிக்கத்தக்க  சிறுவன் ஒருவன் அருகிலுள்ள வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அவன் 8 வயது சிறுவனுடன் தவறான முறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளான். அதனால் சிறுவன் வலி தாங்க […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலையேற்றம்: தர்மசங்கடமாக உள்ளது…. என்னோட பதில் இது தான் – நிர்மலா…!!

பெட்ரோல் டீசல் விலையேற்றம் ஒரு எரிச்சலூட்டும் போரச்சினையாக உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது உள்ள மிகப்பெரிய பிரச்சினை ஒன்று பெட்ரோல் டீசல் விலையேற்றம். தங்கம் விலை கூட விலை உயர்வாக இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்பு வந்தது கிடையாது. அந்த அளவுக்கு இப்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. நகரங்களில் பெட்ரோல் விலை 100 க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் […]

Categories
மாநில செய்திகள்

வாடிக்கையாளர்களே! இதை செய்யாவிட்டால்…. அரசு மானியங்களை பெற முடியாது…. எஸ்பிஐ அறிவிப்பு…!!

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்கவிட்டால் அரசின் மானியங்களை பெற முடியாது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வரும் பிப்-24 ஆம் தேதி முதல்…. கூகுள் பிளே மியூசிக் இயங்காது…. வெளியான அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது.  பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கூகுள் பிளே மியூசிக்கில் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் அனைவரும் யூடியூப் சேவைக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூகுள் பிளே மியூசிக் தெரிவித்துள்ளது. அதேபோல் பிளே மியூசிக் செயலில் உள்ள லைப்ரரி, பாடல்கள், இசைக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்… “என் தாயை மன்னியுங்கள்”… ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்த சிறுவன்…!!

உத்திரபிரதேசத்தில் தன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்ற பெண்ணின் மகன் தன் தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷப்னம் அலி என்பவர் தன் குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள்,மைத்துனர், உறவினர், 10 மாத குழந்தை போன்ற ஏழு பேரை கொலை செய்ததாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரின் மகன் முஹம்மத் தாஜ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, “என் தாய்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வரை கொசு கடித்ததால்….. அடுத்த நொடியே அதிகாரி சஸ்பெண்ட்…..!!

மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வீட்டில் சிறப்பு விருந்தினராக அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சவுகான் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டி தேங்கிய நீர் நிறைந்து வழிந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பொது துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சவுகான் வருவது ஏற்கனவே அந்த அதிகாரிக்கு தெரியும் எனவும், அரசு தங்கும் இடத்தை தூய்மையாக […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : கொஞ்ச நாளுக்கு “ADJUST” பண்ணிக்கோங்க, அப்புறம்…..? அமைச்சர் சர்ச்சை பதில்….!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள் பஸ்சில் செல்வதால் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பீகார் மாநில அமைச்சர் நாராயண பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவர் பேசுகையில், ” சாதாரண மக்கள் பேருந்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா வந்துட்டே இருக்கு….. மீண்டுமொரு நிலநடுக்கம்….. அதிர்ச்சியில் மக்கள்….!!

வடமாநிலங்களில் வரிசையாக நிலநடுக்கங்கள் வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 40 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.38 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தரையிலிருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. ஏற்கனவே உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! விவசாயிகளின் போராட்டம் பலவீனமாகாது…. விவசாயிகள் சங்கத்தலைவர்…!!

விவசாயிகளின் போராட்டம் பலவீனம் அடையாது என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் சட்டங்கள் ரத்து செய்ய கோரும் விவசாயிகள் போராட்டம் பலவீனம் அடையாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!

வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் பகுதியில் இருந்து 4:38 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்ரோகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகள் பற்றிய விவரம் இல்லை. கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு படையினர் மீது…. திடீர் துப்பாக்கிசூடு…. பரபரப்பு வீடியோ…!!

பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே ராணுவ வீரர்களின் முக்கிய கடமையாகும். அவர்கள் எல்லையில் மிகுந்த கடமையுடன் போராடி வருகின்றனர். சில சமயங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படுவதும் உண்டு. மேலும் நம்முடைய எல்லைக்குள் தீவிரவாதிகள் புகுந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

PM ஆவாஸ் யோஜனா வீட்டு மானியம் பெற…. விண்ணப்பிப்பது எப்படி…? உடனே இதை பண்ணுங்க…!!

மத்திய அரசின் திட்டமான ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு 2.67 லட்சம் வரையிலான மானியம் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பித்தால் அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவிலே இதுதான் முதல் முறை”… பெண்ணிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை… அவர் செய்த குற்றம் என்னவென்று தெரியுமா…?

இந்தியாவில் இதுவரை இல்லாமல் முதன்முதலில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கடுமையான குற்றம் செய்த பல பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றவும்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது முதன் முதலில்  உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“என் மனைவிகிட்ட தப்பா நடந்தாரு” கூலிப்படைக்கு 2 லட்சம் கொடுத்து…. தந்தையை கொன்ற மகன்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் பவன்(45). இவர் சம்பவத்தன்று 10 மணி அளவில் கரும்பு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். ஆனால் விடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கரும்புத் தோட்டத்திற்கு நடுவில் பவன் சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில் பவனின் மகன் அமித் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரை தொடர்ந்து விசாரித்த போது தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! தினமும் ரூ.7 சேமித்தால் போதும்…. நல்ல வருமானம் கிடைக்கும்…. அருமையான திட்டம்…!!

அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp-ல் மெசேஜ் மட்டுமல்ல…. பணமும் அனுப்பலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்…!!

வாட்ஸ்அப் மூலமாக உங்களுடைய நண்பர்களுக்கு பணத்தை அனுப்புவது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம். இன்றைய பல கட்டத்தில் அனைவருமே ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றனர். மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனையை செய்யும் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே கூகுள்-பே, பேடிஎம் போன்ற நிறைய செயலிகள் உள்ளன. இதற்காக ஒரு செயலியை வைத்திருப்பதை விட ஏற்கனவே இருக்கும் வாட்ஸ்அப் மூலமாக பணத்தை அனுப்புவது எளிதாக இருக்கும். அண்மையில் தான் வாட்ஸ் அப் மூலமாக பணத்தை அனுப்பும் வசதி வந்ததும். மூலமாக வாட்ஸ் […]

Categories

Tech |