Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தொடரில் ஆபாச படம்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர்…. எழுந்துள்ள சர்ச்சை…!!

கூட்டத்தொடரில்  உறுப்பினர் ஒருவர் செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவருடைய செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் Grabage Cafe அறிமுகம்” 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால்…. சாப்பிட்டு வரலாம்…!!

தெற்கு டெல்லியில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்து சாப்பிட்டு வரும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. தெற்கு டெல்லி மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் இலவசமாக சாப்பிட்டு விட்டு வரலாம். மாநகராட்சியின் “Grabage Cafe” என்ற பெயரில் இதை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக சத்தீஷ்கர் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டும் இந்த “Garbage Cafe” அறிமுகம் செய்யப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

புனிதம் இழந்து போன கங்கை…. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை…!!

கங்கை நீரை குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உபி மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கங்கை நதியில் சென்று குளித்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு புனிதமானது கங்கைநீர். ஆனால் தற்போது கங்கை நதியில் அசுத்தம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போது கூட ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. இளைஞர்கள் சிலர் திமிங்கலம் ஒன்றை கோடரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்து ரத்தக்காடாக மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மீது பொய் வழக்கு….செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை….!!

செங்கோட்டைக்கு நாங்கள் செல்லவில்லை என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தும் போது விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி சென்றதாக விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்நிலையை போராடும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! சிறுமி பாலியல் வழக்கு…. மீண்டும் பரபரப்பு தீர்ப்பு…!!

சிறுமியின் பாலியல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எனவே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றம் பல சட்டங்களை இயற்றி வருகிறது. இந்நிலையில் சிறுமிகளின் கைகளைப்பற்றி ஒருவரின் பேண்ட் ஜிப்பை திறக்க செய்வது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றத்தில் வராது என மும்பை உயர்நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதாரில் பிரச்சினையா…? அலைய வேண்டாம்…. இந்த நம்பருக்கு அழையுங்கள் – UIDAI அறிவிப்பு…!!

ஆதாரில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த நம்பருக்கு அழைத்து தீர்வு காணலாம் என்று UIDAI அறிவித்துள்ளது. ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மாற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பா துணைவேந்தர் பதவிக்கு எதிர்ப்பு… வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்…!!

சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி  கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

போக்சோவில் குற்றவாளி கைது…! பாதிக்கப்பட்ட பெண் தாய் போட்ட மனு… வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் …!!

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் வழக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு தடையாக இருப்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டிரைவராக இருக்கும் இந்திரன் என்பவர் சிறுவயதுப் பெண்களை கடத்தி அவர்களை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் […]

Categories
தேசிய செய்திகள்

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே – ராகுல் முழக்கம்…!!

மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு டெல்லியில் ராகுல் காந்தி முழக்கம் எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி…!!

விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பததர்மமான சூழல் நிலவி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வோமே தவிர இந்த இடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

63 வயதில்…. சந்தோஷமாக நடந்த திருமணம்…. சிறிது நேரத்தில் நேர்ந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவரின் 63 வயதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வசிப்பவர் கல்யாண்குமார்( 63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரியை கவனித்து கொள்வதிலேயே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் லைலா(40) என்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை – மோடி பெருமிதம்…!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஒவ்வொரு இந்தியருக்கு  பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளும் அவசர ஒப்புதல் அளித்தது . இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சிங்கப்பூர் ஜாலியா…. பஸ்லயே போகலாம்…. கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை திட்டத்தை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு தற்போது ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. என்னவென்றால் நீங்கள் பஸ்ஸிலே சிங்கப்பூருக்கு சென்று விடலாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் குருகிராமிலிருந்து ஒரு பயண நிறுவனம் அண்மையில்  இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஆரம்பிக்க போவதாக அறிவித்தது. இந்த பேருந்து மூன்று நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு செல்லும். இந்த அறிவிப்பை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை காப்பாற்ற…… 30% ஏழைகளுக்கு பணம் கொடுங்க…… ப.சிதம்பரம் கருத்து…..!!

இந்தியாவை காப்பாற்ற 30% ஏழைகளுக்கு பணத்தை கொடுக்குமாறு பா.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், “அடுத்த ஆறு மாதங்களுக்கு 30 சத ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கினால் தான், சந்தையில் தேவையின் பக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி அடைய தொடங்கும். மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதியமைச்சர் அலங்கார பட்ஜெட்டை  தாக்கல் செய்து விடுவாரோ என அஞ்சுகிறோம். சமூகத்தில் பொருளாதார சமமின்மை, இடைவெளி அதிகரித்து விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில்…. தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு அபராதம்…. தீர்வு என்ன…??

ஏடிஎம்மில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை கட்டணம் வசூலிப்பதற்கு தீர்வு கிடைக்குமா என்பது குறித்து பார்க்கலாம். நம்மில் பலரும் சில நேரங்களில் பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று அவசர அவசரமாக பணத்தை எடுப்போம். மேலும் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமலேயே பணத்தை எடுப்பது உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொண்டு பணம் எடுப்பார்கள். சிலர் அப்படி எடுப்பதில்லை. ஒருவேளை வங்கிக் கணக்கில் 400 […]

Categories
தேசிய செய்திகள்

பிப்-1 முதல்….. ATM இல் பணம் எடுக்க முடியாது….. அதிரடி அறிவிப்பு…..!!

பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

PMAY வீட்டு மானியம் பெற…. இதை கட்டாயம் தெரிச்சிக்கோங்க…. வாங்க என்னனு பார்க்கலாம்…!!

வீடு கட்டுவதற்கான மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது மற்றும் உங்களின் விவரங்களை செக் பண்ணுவது குறித்து பார்க்கலாம். நாட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை 2015ம் வருடத்தில் மத்தியில் மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 2022ஆம் வருடத்திற்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்ஆப்பில் புக் செய்தால்…. சிலிண்டர் வீடு தேடி வரும்…. புக் செய்வது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

வாட்ஸ்அப் மூலமாகவே சமையல் சிலிண்டரை மிக எளிதாக புக் செய்து எப்படி வாங்க முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். வீட்டு உபயோக சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், செல்போன் செயலி போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது மிகவும் ஈஸியாக இருக்கிறது. இந்த வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜனவரி-31 வரை…. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…!!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் மயமாக்க…. சிபிஎஸ்இ திட்டம்…. வெளியான தகவல்…!!

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளில் மனித தலையீடு மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் ஏற்கனவே இயங்கும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் மூன்று முறை அவகாசம் அளிக்கப்படும். அங்கீகாரத்தை நீடிக்க மார்ச் […]

Categories
உலக செய்திகள்

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை …! அமெரிக்காவிலும் போராட்டம்… உலகளவில் கேள்விக்குறியாக இந்தியா …!!

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த கலவரத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா அன்று  பேரணி முடிந்த பின்பு விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அதற்கு முன்பாகவே டிராக்டர்களை கொண்டு வந்து டெல்லியினுள் நுழைந்துள்ளனர். இதனால் காவல்துறையினர் விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு துப்பாக்கிசூடு நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு…!!

பிப்ரவரி-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொற்று பரவல் சற்று குறைந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் ஆடைக்கு மேல்…. தொட்டால் பாலியல் குற்றம் இல்லை…. ச்சீ…!!

ஆடையணிந்த பெண்ணை தொடுதல் பாலியல் குற்றம் ஆகாது என்ற மும்பை ஐகோர்ட்டுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆடையணிந்த பெண்ணை தொடுதல், தடவுதல் போன்றவை பாலியல் குற்றம் கிடையாது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை துன்புறுத்த நினைக்கும் ஒரு ஆண் எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“பழைய 100 ரூபாய் செல்லாது”…. ஆதாரமற்ற செய்தியை நம்ப வேண்டாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்த ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட போது இருந்த உயர் மதிப்பு நோட்டுகளான 100, 500, 1000 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மேலும் அவருக்கு அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் பண புழக்கத்தினை  அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! உங்களுக்கு வருது ஆப்பு – எச்சரிக்கை…!!

சாலை விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் மீறலுடன் வாகன காப்பீட்டை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால் அவை குறித்து தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு, வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும். அதிக விதிமீறலில் ஈடுபட்டால் காப்பீட்டு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பழைய விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

Categories
தேசிய செய்திகள்

“நன்மைகள் கிடைக்கும்” பிள்ளைகளை காவு கொடுத்த…. படித்த பெற்றோர்களின் முட்டாள்தனம்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.210 செலுத்தினால்….. மாத மாதம் ரூ.5000 பென்ஷன்…. பெறுவது எப்படி…..?

ரூ.210 செலுத்தி மாத மாதம் ரூ.5000 ரூபாய் பென்ஷனை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களின் ஓய்வு காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு சேமிப்பு என்பது அவசியமாகும். இதற்கு இப்போது இருந்தே நீங்கள் தயாராக வேண்டும். உங்களுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் பார்ப்பார்கள் என்று நினைக்காமல் உங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்குவதற்கு பென்சன் திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் மொபைல் நம்பர்….. இதை செய்யலைனா சிக்கல் தான்….. UIDAI முக்கிய அறிவிப்பு….!!

ஆதார் அட்டையுடன் செல்போன் நம்பரை இணைப்பது  குறித்த முக்கிய செய்தியை UIDAI அறிவித்துள்ளது. தனிநபர் அடையாள அட்டையாள அட்டையான ஆதார் அட்டையை அரசின் நலத்திட்ட உதவிகளுக்கும், மற்ற வேலைகளுக்கும் முக்கிய ஆவணமாகவும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக்கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் இணைப்புகளும் ஆதார் அட்டை அவசியம் ஆகிறது. குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடம்பன் மோசடிகளை குறைப்பதற்கும் பான் கார்டுடன் உங்கள் ஆதாரை கண்டிப்பாக இணைக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போது வந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் புதிய தேசிய வங்கி – வெளியான தகவல்…!!

பட்ஜெட்டில் புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 – 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 இல் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வங்கியில் மத்திய அரசு ரூபாய் 20 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

விவரங்கள் சரியாக பதிவு செய்யாவிட்டால்…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…!!

ஊழியர்களின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! விவசாயிகளை ஒடுக்க நினைக்காதே… விபரீத முடிவே ஏற்படும் – வைகோ எச்சரிக்கை…!!

விவசாயிகளின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் 62 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தியபோது போலீசார் வைத்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளின் ஆவேசம்” 62 நாட்கள் மெத்தனம் காட்டிய அரசு…. அனுமதி அளித்தும் தடியடி…. இது தான் காரணம்…??

விவசாயிகளின் இந்த ஆவேசத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விவசாயிகள் இன்று டெலல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார் வைத்திருந்த தடுப்பணையை மீறி நுழைந்ததாக போலீசார் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே […]

Categories
தேசிய செய்திகள்

வன்முறை களத்தில்…. விவசாயிகளின் நெகிழ்ச்சி செயல்…. வைரலாகும் காணொளி…!!

போராட்ட களத்தில் தனியாக சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை விவசாயிகள் பத்திரமாக அழைத்து செல்லும் காணொளி இணையத்தி வைரலாகி வருகின்றது. டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 12 மணிக்கு முன்பே விவசாயிகள் காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி எல்லைக்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கபட்ட வழி தவிர மற்ற வழிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களோட ஆயுள் கூடும்…! மகள்களை நிர்வாணமாக்கி கொடூரம்…. பெற்றோரின் பகீர் வாக்குமூலம்…!!

ஆந்திராவில் தம்பதிகள் இருவர் தங்கள் இரண்டு மகள்களையும் கொன்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் காலனியில் வசிக்கும் தம்பதி புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா. மகளிர் கல்லூரியில் புருஷோத்தம நாயுடு துணை முதல்வராக பணியாற்றுகிறார். பத்மஜா மாஸ்டர் மைண்ட் என்ற பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

கலவர நாளான “குடியரசு தினம்” மர்ம நபர்களின் ஊடுருவல்…. விவசாயிகளுக்கு தொடர்பில்லை – பாரத் கிசான் சங்கம்

வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு இல்லை என பாரத் கிஷான் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர் ஆனால் விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய மர்ம நபர்களினால் அமைதியான பேரணி வன்முறையாக வெடித்துள்ளது இது குறித்து  பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பதட்டமான “குடியரசு தினம்” செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு இருந்த விவசாய சங்கம் இன்று  தான் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகளை விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் நுழைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கம் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆஹா…. ஓஹோ…. ரூ23,00,000 சம்பாதிக்க…… ரூ160 க்கு சூப்பர் பாலிசி…..!!

தினமும் ரூ.160 சேமித்து வந்தால் கடைசியில் ரூ.23 லட்சம் தொகையை எப்படி பெறுவது என்று இப்போது பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்கு இப்போதிலிருந்தே பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்க தயாராக வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நம்மை  காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல், இறுதிக் காலத்தில் நம்மை நமே […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பதற்றம்! விவசாயியை லத்தியால் தாக்கும் காவலர்…. கொதித்தெழுந்த தமிழக விவசாயிகள்…!!

போலீசார் ஒருவர் விவசாயின் தலையில் லத்தியால் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஈடுபட்டுவருகின்றனர் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர் இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதையடுத்து டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் வாக்காளர் அட்டை…. செல்போனின் பதிவிறக்கம் செய்வது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கடந்த 20 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்தல் கமிஷனால் வாக்காளர் அடையாள அட்டையை  அச்சிட்டு வழங்கப்படும்.  இந்த வருடம் முதல் வாக்காளர் அட்டையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது . பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாக்காளர்களும் இணையதளம் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

PASSPORT சீக்கிரம் வேண்டுமா…? வீட்டிலிருந்தே ஆன்லைனில்…. இதை பார்த்து அப்ளை பண்ணுங்க…!!

வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் இருந்து வேறு எந்த நாட்டுக்கும் செல்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை முன்பெல்லாம் பாஸ்போர்ட் வாங்குவதற்காக இடைத்தரகர்களை நாடி செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் இப்போது ஆன்லைனிலேயே எளிதாக பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் மிக விரைவாக பாஸ்போர்ட் கிடைக்கும். மேலும் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படுகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை: passportindia.gov.in/AppOnlineProject என்ற […]

Categories
தேசிய செய்திகள்

JustIn: வாகன ஓட்டிகளுக்கு புதிய வரி – மத்திய அரசு அதிரடி…!!

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன் அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய போக்குவரத்து வாகனங்களுக்கு வரி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் புதுச்சேரி மாநில செய்திகள்

பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி… அதனை விரட்டி அடிப்போம்… வெகுண்டெழுந்த நாராயணசாமி …!!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி என்று  புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் நாராயணசாமி, “டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தேன். அப்போது அவர் புதுச்சேரிக்கு பரப்புரைக்கு  வருவதாக கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்திக்கு புதுச்சேரியின் மீது  ஒரு தனிப் பற்று உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது…. இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன என்று பார்க்கலாம். இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் மார்ச்-31க்கு பிறகு இயங்காது – அதிரடி அறிவிப்பு…!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மார்ச்-31 க்கு பிறகு IFSC மற்றும் MICR குறியீடுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடுகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பழைய குறியீடுகள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு இயங்காது. நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்றினால் அதற்காக வங்கியிலிருந்து புதிய குறியீட்டை பெற வேண்டும். மேலும் தகவலுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18001802222 […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்…. தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் அன்னாசோ காவனே – மலன். காவனே காவல் அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு முகேஷ் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டில் யாரும் வெளியே நடமாடததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

“அற்புதம் நடக்கும்” பெற்ற பிள்ளைகளை…. நிர்வாணமாக நிற்க வைத்து…. பெற்றோர் செய்த கொடூரச்செயல்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு கல்லூரிகளில் வசூலிக்கும்…. அதே கட்டணம் வேண்டும்…. தொடரும் போராட்டம்…!!

அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் துணைவேந்தர் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் 47 வது நாளாக இன்னும் தொடர்கிறது. இந்நிலையில் விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பதவி வேண்டாம்…! நான் பாஜகவுக்கு போறேன் ? முடிவெடுத்த காங்கிரஸ் அமைச்சர்…!!

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜக-வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்காக  தனது ஆதரவாளர்களுடன்  கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதன்படி அவர் நாளை மறுநாள் டெல்லி சென்று பாஜகவின் தலைவர் நாட்டாவை  சந்தித்து பாஜக கட்சியில் இணையப் போகிறார். மேலும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பாஜகவில் இணைவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுபாஷ் சந்திர போஸை கொன்றது… இவர்கள் தான்… பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!!

பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“வாக்களிப்பது வாக்காளர்களின் கடமை” இன்று தேசிய வாக்காளர் தினம்…!!

இன்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம் வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதுதான். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.

Categories

Tech |