புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் […]
Tag: தேசிய செய்திகள்
28 வயதான கணவர் ஒருவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் வசித்துவந்த காதல் ஜோடிகள் ஹஹாகுமாரி(51) – அருண்(28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இருப்பினும் 51 வயதான ஹஹாகுமாரிக்கும், 28 வயதான அருணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் கணவன் […]
2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆப்பை எடுக்காமல், பொது நுழைவுத் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, […]
தமிழக காங்கிரசின் பிரபல பெண் தலைவரான டி.யசோதா உடல்நலக்குறைவால் காலமானார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர் கட்சியில் உயர்ந்த தலைவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். 1980, 1984, 2001, 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் […]
2021ஆம் வருட சிபிஎஸ்இ தேர்வுக்கான தேதிகள் குறித்து டிச.,31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக்தந்திரி கட்சி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளை மீறி 3 புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேல் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் […]
மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். […]
இந்தியாவில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் சூடான ஏர் பலூன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்கு சென்று சுற்றிப்பார்ப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒரு காடு வழியாக தரையில் சுற்றுவது பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது காட்டில் உள்ள அபாயங்கள் குறித்து பயப்படாமல் காற்று வழியாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் சூடான ஏர் பலூன் வனவிலங்கு சஃபாரி மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் புலி காப்பகத்தில் இன்று வனத்துறை […]
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு தமிழக பொது சுகாதாரம் அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் புதியதாக ஒரு வைரஸ் பிரிட்டனில் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் அதிகமாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் மக்கள் தங்களுடைய நிம்மதி இழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கான அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பிரிட்டனை தொடர்ந்து நைஜீரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட […]
மேற்குவங்கத்தில் தாமரை மலரும் வரை நான் தூங்க மாட்டேன் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்ன,ர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். அப்போது, “இங்கே திரிணாமுல் […]
பூனை ஒன்று வித்தியாசமாக 4 காதுகளை கொண்டுள்ளது அப்பகுதியிலனரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதிகள் மனோகரன் – ஷர்மிளா. இவர்கள் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் வைத்துள்ளனர். செல்லப்பிராணியாக வளர்த்து வந்த இந்த பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு சிறிய ககாதுகளும் […]
காவல்துறையினரின் உதவியால் ஒரு நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக இதயமானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவிற்கு கொண்டு வரப்பட இருந்துள்ளது. இந்த இதயத்தை விமான நிலையத்திலிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக டெல்லி காவல்துறையினரின் உதவி தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ஏர்போட் டடர்மினல் 2 லிருந்து 18.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எய்ம்ஸ் […]
மாரத்தான் போட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 62 நிமிடத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது. பெங்களூரில் டிசிஎஸ் நடத்திய 10 கிலோமீட்டர் மராத்தான் போட்டியில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். இதில் அங்கிதா என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பாக ஓடியிருக்கிறார். மேலும் 10 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 62 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
இளைஞர் ஒருவர் தன்னிடம் காதலி பேச மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர்பகுதியில் வசிப்பவர் சினேகலதா(19). இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா அந்த பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜேஷ் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்ரிமெண்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து வேலைக்கு போனதிலிருந்து சினேகா ராஜேஷிடம் பேசுவதை கொஞ்சம் […]
டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள நங்கிலோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நடுக்கத்தால் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. . தற்போது ஒரு சில மணி நேரத்திற்கு முன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த […]
இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]
பிளஸ்-2 மாணவர்களுக்கு செல்போன், டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் இருக்கிறது. அங்கு அங்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், பாஜகவின் வளர்ச்சி தான். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முன்னர் எப்போதும் இல்லாத அளவில் பாஜக வெற்றி கண்டது. அதோடு மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய […]
ஸ்மார்ட் போனில் கடன் ஆப் மூலமாக கடன் எடுப்பவர்கள் இதை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 1.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன் முழுவதுமே ரிசர்வ் வங்கியால் NBFC பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் ஆப் களில் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள். 2.இந்த அப்ளிகேஷன் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லாத் தகவல்களையும் சேகரித்து உபயோகிப்பவர்களின் உரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன. 3.கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் தங்களின் […]
கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 59 ஆயிரம் கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 35, 534 கோடி ஒதுக்கப்படும் என்றும் […]
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ்அப் வசதியை அனைவரும் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் வசதியானது செல்போனில் மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்று இருந்தது. இதில் வீடியோ கால், மெசேஜ், வசதி பணம் அனுப்பும் வசதி போன்றவை கொண்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. மேலும் இதை லேப்டாப் மற்றும் கணினியில் பயன்படுத்த முடியாது. ஆனால் வாட்ஸ்அப் வெப் மூலமாக தற்போது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் சாட் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. இந்நிலையில் வீடியோ மற்றும் […]
அங்கீகாரமற்ற ஆப் மூலமாக மக்கள் கடன் வாங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத ஆப்கள் மூலம் மக்கள் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க […]
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் பாம்பு வந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மகா துவாரம் பக்கத்தில் பக்தர்கள் செல்லும் வரிசையில் சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாரைப்பாம்பு எங்கும் செல்லாதவாறு பிளாஸ்டிக் வாளி கொண்டு மூடியுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளால் பாம்பு பிடித்து செல்லப்பட்டு பத்திரமாக […]
கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொலை வழக்கில் 28 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது மதபோதகர்ருக்கும் கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவை நேரில் கண்டதாக கேரளா மாநிலம் கோட்டயத்தில் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்பவர் 28 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மதபோதகர் தாமஸ்க்கும் இரண்டாம் குற்றவாளியான கன்னியாஸ்திரி செபிக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் திருவனந்தபுரம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு […]
பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதே திட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு […]
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரியில் நடக்காது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற தேதி அரசு தரப்பில் தெரிவிக்கப்படும். மாணவர்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் அதன் […]
பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் போன்ற புதியதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தொற்று அதிகமாகவும் பரவி உள்ளது. எனவே பல நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. இந்தியாவிலும் இன்று நள்ளிரவு 11.59 மணியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை […]
விவசாயிகள் தங்கள் ரத்தத்தில் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தையும் நெருங்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது விவசாயிகள் ரத்தத்தைக் கொண்டு பிரதமர் […]
புலி ஒன்று யானையை கண்களில் நெருப்போடு தாக்க இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் குடகுமலை பகுதியில் உள்ள நாகர்கோல் என்று பகுதியில் யானை ஒன்று நிற்கும்போது அந்த யானையை புலி ஒன்று தாக்க இருந்துள்ளது விடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஆனந்த மஹிந்திரா தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய சகோதரி இதை தெரிந்த வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் வில்லியம்ஸ் என்ற ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய […]
சிறுமி ஒருவர் தன்னுடைய அக்காவால் பாலியல் தொழிலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் நடவடிக்கைகள் சில நாட்களாகவே சரியில்லாமல் இருந்துள்ளது. திடீரென்று வீட்டிலிருந்து காணாமல் போவது, வீட்டில் அனைவரிடமும் வித்தியாசமாக நடந்து கொள்வது என இருந்துள்ளார். இதனால் அந்த சிறுமியின் தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் உறவினர் ஒருவரால் அந்த சிறுமி சாலையில் கடும் போதையான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். […]
தடுப்பு மருந்தினால் பெண்களுக்கு உடலில் முடி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர். இதையடுத்து தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. கொரோனா பரவி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பு […]
மிக முக்கிய பிரபலம் காலமானார்….!!
மிக முக்கிய பிரபலமான எம்.ஜி வைத்யா அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான எம்ஜி வைத்தியா(92) நாக்பூரில் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் மீண்டு வந்த இவர் திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய கோட்பாட்டாளரான இவர், அதன் முதல் ஊடகத் தொடர்பாளராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மரணத்துக்குப் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விவசாயின் வீட்டில் அமித்ஷா அமர்ந்து உணவருந்தியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு அமித்ஷா உணவு அருந்தியுள்ளார். அப்போது […]
கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பரவிய இந்த வைரஸ் […]
புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து எரிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்சட்ட மசோதாவை எதிர்த்து புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புதுவை அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் இருவர் திருவள்ளுவரில் கைதுசெய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஏடி.எம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் இருவரை காவல்துறயினர் தேடி வந்த நிலையில் அவர்கள் காஞ்சிபுரத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் என்ற இடத்தில் இருப்பது தெரிய […]
கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர். இதையடுத்து […]
வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னை -திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை செல்லும் ரயில்கள் டிசம்பர் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் இந்த தேதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22, 23, 24 ஆகிய தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 21ம் தேதியே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வரும் […]
பிரதமரின் அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாரணாசி தொகுதியில் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை சில மர்மநபர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அதை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு தருவதாக பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலகமானது ஜவகர் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை […]
நபர் ஒருவர் தனக்கு வெங்காயம் தர மறுத்த உணவு பரிமாறியவரை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் ரியாசத் அலி(59). கூலித் தொழிலாளியான இவர் 30 வருடங்களாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திஷ்பூர் பெரி என்ற பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு கூலித் தொழிலுக்காக இவர் சென்றுள்ளார். அங்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சாப்பிட கேண்டீன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. […]
யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை […]
பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னப்பா […]
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் கொரோனவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வந்த நிலையில் தற்போது ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]
துக்க நிகழ்ச்சிக்கு சென்று பெண்ணா நதியில் குளித்த போது நீரில் மூழ்கி ஏழு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி பகுதியை சேர்ந்த வெங்கட சிவாவின் தந்தை சந்திரசேகர் உயிரிழந்தார். இவர் துக்கநிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் சீதமண்டலம் புதுப்பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வெங்கட சிவா திருப்பதியை சேர்ந்த அவர் நண்பர் உள்ளிட்ட 11 பேர் கடபாவிற்கு சென்றுள்ளனர். பின்னர் சித்த வட்டம் […]
கொரோனா காரணமாக மாணவர்களின் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என்று அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து வருகின்றது. கொரோனா பரவலால் பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் […]
டிக் டாக் செயலுக்கு இணையான புது ஆப்பை களமிறக்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்தது. ஏற்கனவே இந்த செயலின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பிறகு டிக் டாக் செயலியை தடை செய்ய இந்தியா முடிவுக்கு வந்தது. டிக் டாக் சீனா உருவாக்கிய செயலி என்பதால் நாட்டின் பாதுகாப்பு […]
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக விற்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான இழப்பை சந்தித்து வருவதால் நீண்ட காலமாக அதனை விற்க இந்திய அரசு முடிவு செய்தது. எனவே ஏர் இந்தியாவை வாங்க பல நிறுவனங்களும் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனர். மேலும் ஏர் இந்தியா நிறுன ஊழியர்களும் ஏலம் கோரியுள்ளனர். 2018 ஆம் வருடம் முதலே ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இந்திய […]
அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு […]
தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பள்ளியில் வைத்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக, அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 2020 முதல் 7-16 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பள்ளியிலேயே வைத்து தலைமை ஆசிரியர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை […]
2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற […]