மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46 ஆயிரத்து 599 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 599 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 13 ஆயிரத்து 666 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின. ஒன்ஜிசி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிர்வணங்களின் பங்கு விலை […]
Tag: தேசிய செய்திகள்
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளில் 22 பேர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. போராட்டதிற்கு ஆதரவாக மேலும் பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் எல்லைகளில் குவிந்து வருகின்றன. அங்கு நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு தங்கி இருந்து போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் அனைத்து எல்லைகளையும் ஆக்கிரமித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் மக்கள் […]
சிறுவன் ஒருவன் தாய் மற்றும் தந்தை இல்லாததால் நாயுடன் நடைபாதையில் உறங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரில் சிறுவன் ஒருவன் பிளாட்பாரத்தில் நாயுடன் உறங்கி கொண்டிருக்கும் படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதை கண்டு தங்கள் கருத்துக்களை மனமுருகி பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறுவனுடைய அப்பா ஜெயிலில் இருப்பதாகவும், அம்மா விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த சசிறுவனின் பெயர் அன்கித். இவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத […]
விவாகரத்து வழங்குவதில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான வழிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் விவாகரத்து பெறும் போது மதம், பிறந்த இடம், பாலின பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தனித்தனி சட்டங்கள் பின்பற்ற படுவதாகவும்; இதனை நீக்கிவிட்டு விவாகரத்து மற்றும் ஜீவனாம்சத்திற்கு அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் […]
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 20-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் […]
இந்து பெண்ணை திருமணம் செய்த இஸ்லாமிய இளைஞரை போலீசார் சிறையில் அடைத்ததை நீதிமன்றம் கண்டித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் வசிப்பவர் இந்து பெண் பிங்கி(22). இவர் ரஹீத் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய திருமணத்தை பதிவு செய்து கொள்வதற்காக பதிவு திருமண அலுவலகத்திற்கு சென்று உள்ளனர். அப்போது திடீரென்று அங்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர் அந்த […]
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை கைவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை விசாரித்த […]
கணவர் ஒருவர் சூதாட்டத்தில் மனைவியை பந்தயமாக வைத்து விளையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசிக்கும் தம்பதிகள் ரவி – ஆஷா. ரவி சூதாட்டத்திற்கு அடிமையானவர் ஆவார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதற்குக் காரணம் ரவியின் குடிப்பழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு அடிமையான ரவி தன்னுடைய மனைவி ஆஷாவை பந்தயம் வைத்து விளையாடியுள்ளார். அப்போது தன்னுடைய நண்பர்களிடம் மனைவியை இழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த […]
தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது கிடையாது என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் ஆவார். இவருடைய படத்திற்கு என்றே உலக அளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளியான டெனெட் படம் சமீபத்தில் வெளியானது. மேலும் நோலன் மெமண்டோ, தி டார்க் நைட் மற்றும் இன்சப்ஷன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய நோலன், தான் ஸ்மார்ட் போனே உபயோகிப்பது […]
பணபரிமாற்றத்தை குறைப்பதற்காக தற்போது இந்திய தபால் துறையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கூகுள் பே, பேடிம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. இந்த நிலையில், இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் இணைந்து […]
நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வரிசையில், புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை […]
வட இந்திய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. மேலும் பருவ தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்று இந்திய வானிலை […]
மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை கையை பிடித்து இழுத்ததால் கல்யாணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி எனும் பகுதியில் ஒரு தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது. இந்நிலையில் திருமணத்தன்று மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் பரேலிக்கு சென்றுள்ளனர். அங்கு மிக விமர்சையாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் திடீரென மணப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து நடனம் […]
11 வயது மாணவி ஒருவர் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெருமையடைய செய்துள்ளது. டெல்லியில் போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி குர்சிம்ரத் கவுர்(11) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர் போராட்டங்களுக்கு மத்தியிலும், தேர்வுக்காக படித்து வருகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இந்த மாணவியும் பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து இந்த சிறுமி கூறுகையில்,” நாங்கள் எங்கள் உரிமைக்காகப் […]
பசு ஒன்று நாய் குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று விட்டு உயிரிழந்துள்ளது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குட்டி நாய்களுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அழகான இந்த காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக […]
9 வயது சிறுமியின் மூளையில் அறுவை சிகிச்சையின் போது பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் அறுவைசிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், “இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது […]
இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை வானில் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல இந்த சூரிய […]
வியாழனும் சனியும் இணையும் அந்த நாளன்று நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் வருடத்தின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது என்றும், நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் மற்றும் சனி டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன. இணையும் அந்த நாளில் வானில் தோன்றும் அதிசய நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறுகின்றனர். ஜோதிடப்படி இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வானது 800 வருடங்களுக்குப் […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தேசவிரோதிகள் என பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகத் தான்வே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து விமர்சித்துள்ள […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ள விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், […]
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் […]
டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் நாளை பல இடத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தானை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை மறியல் செய்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் நாளை நாடு முழுவதிலும் உள்ள பாஜக […]
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜலந்தர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து விவசாயிகள் திரண்டு வருவதோடு ஆங்காங்கே ரயில், பேருந்து சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பேருந்து அல்லது ரயில் மூலமாக […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வது நாளாக போராடிவரும் விவசாயிகள் டெல்லியில் இருக்கும் முக்கிய சுங்க சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள கெரிக்கிதுவாலா சுங்கச்சாவடி வழியாக பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுங்க சாவடி மூன்று மாநிலங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே தான் இந்த சுங்க சாவடியை விவசாயிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறிவிட்டால் மூன்று மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படும். […]
காவலர் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டுள்ள சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் ஒருவர் தன்னுடைய மைத்துனரின் திருமணத்திற்கு செல்வதற்காக மேலதிகாரிகளிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளது பரபரப்பாக நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலீப் குமார் அக்கிர்வார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு […]
மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மைத்துனருக்கு […]
வலையில் சிக்கிய பெரிய சுறாவை மீனவர்கள் கடலில் விடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மீனவர்களின் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல. பண்டைய காலத்தில் வணிகம் செய்ய கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்புவார்களா? மாட்டார்களா? என்ற பயம் இருந்து வந்தது. அந்த பயம் அப்போதும், இப்போதும் இருப்பது மீனவர்கலின் தொழிலில் மட்டும் தான். போகும் போது எவ்வளவு மீன் கிடைக்கும்? என்பது அவர்களுக்கு தெரியாது. எவ்வளவு உயிர் மிஞ்சும்? என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இயற்கை சீற்றம் […]
மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் […]
முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியியைச் சேர்ந்தவர் எச்.எம்.ஜி.பாஷா (65). இவர் வாடகை லாரி வைத்து நடத்தும் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவின் அருகில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதன் பக்கத்தில் ஒரு வீர அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு […]
ரத்தம் கொடுபவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நீங்கள் எங்களுக்கு ரத்தம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி கொடுக்கிறோம்” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் ரத்தத்தானத்தை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு கார்ப்பரேட்டரும், சிவசேனா உறுப்பினருமான சமாதன் சதா சர்வங்கர் என்பவர் செய்த ஏற்பாடு ஆகும். மும்பை நகரம் முழுவதும் உள்ள […]
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]
கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ […]
டி-20 போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஒரு கிஸ் என்று பெண் ஒருவர் காட்டிய பதாகை பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கு நடுவே பெண் ஒருவர். இந்த போட்டியில் எட்டாவது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் காதலருக்கு ஒரு கிஸ் கொடுப்பேன் என்று பதாகை எழுதி காண்பித்த புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் […]
வெறும் ரூ.200க்கு லீசுக்கு எடுத்த நிலத்தில் விவசாயிக்கு வைரம் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா பகுதியில் வசிப்பவர் ஏழை விவசாயியான லகான் யாதவ்(45). இவர் பத்துக்கு பத்து நிலத்தை வெறும் 200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்துள்ளார். அதில் சமீபத்தில் ஒரு குழி தோண்டி இருக்கிறார். அப்போது அதில் ஒரு கூழாங்கல் போன்று வித்தியாசமாக ஒன்று கிடந்துள்ளது. அதை அவர் எடுத்துக் கொண்டு அரசு அதிகாரியிடம் காண்பித்துள்ளார். அப்போது அது 14.98 […]
கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா […]
17 வயது வித்தியாசம் கொண்ட தம்பதிகள் வேறு வேறு அறையில் தூக்கிப்போட்டு இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் கிராமத்தில் வசிப்பவர் பால்தேவ்(42) . இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கும் ஹேமா(25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்ததால் இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் […]
ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட […]
200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் […]
397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இரு கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் அரிய காட்சியானது 397 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக எம்.பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பிரசாத்துரை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. அதன் […]
பிரபல பாடகரும், நடிகருமான ஒருவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். மத்திய அரசு வேளாண் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம் 2020 ஆகிய 3 சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]
லேடி சூப்பர் ஸ்டார் நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயசாந்தி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய […]
திருமணமாகி இரண்டு நாளில் வெளியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் அசோக் குமார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் அசோக் அவசர வேலையாக பைக்கில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலையில் அசோக் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதால், ரத்த உள்ளத்தில் சாலையோரம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]
சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும் மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால் அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது “அருந்தமிழ் மருத்துவம் 500” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் […]
LIC நிறுவனத்தின் ஜீவன் அச்ஷய் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதாமாதம் ரூ.4000 பெறுவது எப்படி என்று பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு […]
நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பாடலை மூதாட்டி ஒருவர் பாடும் அழகான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய மெல்லிய குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம் படத்தில் வரும் “கண்ணெதிரே தோன்றினாள்” என்ற பாடலை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இவருடைய இந்த பாடல் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவரது குரல் எம்.எஸ் ஜானகி குரலோடு ஒத்துக் […]
மறுமணம் செய்த பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயேந்திரா கவூர். இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்று நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கவூர் மற்றும் சிங்க் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதையடுத்து கவூர் தன்னுடைய மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கவூர், ராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் […]
இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) […]
திருப்பதி கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கைகளை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வாரி வாரி வழங்கும் நன்கொடைககளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். திருப்பதி தேவஸ்தானம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலாஜி இன்ஸ்டிடியூட் […]
நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் 73 முறை நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மறக்குண்டா கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயதாக இருக்கும்போது முதல் முறையாக நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்பிரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனாலும் அந்த நல்ல பாம்பு இவரை இன்னும் விடுவதாக இல்லை. இவருடைய ஐந்து வயதில் இருந்து தற்போது […]