முதல்வர் பதவிக்கு தகுதி உள்ளவராக இருங்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில கவர்னர் பதிலளித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு நல்ல அரசியல் தலைவரா என்ற விமர்சனத்திற்கு அப்பால் ஒரு தனி பெண்மணியாக எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அத்தனை சவால்களையும் சமாளித்து பல இன்னல்களைத் தாண்டி தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல் மேற்குவங்கத்தில் பிரச்சினைகளை சமாளித்து சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். ஆனாலும் […]
Tag: தேசிய செய்திகள்
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கான கால வரையறை வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடைய […]
இந்தியாவில் 43 சதவீத மக்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் இதுவரை 43 சதவீத இந்தியர்கள் மன […]
குதிரை பேரம் என்ற வார்த்தை வருவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வந்த குமாரசாமி. அவரின் கீழ் செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் விளைவாக குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று அங்கே பாரதிய ஜனதா கட்சியின் […]
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் இனம் உலகிலேயே 70 சதவிகிதம் இங்குதான் உயிர் வாழ்கிறது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூலை 29 ஆம் தேதியான நாளை உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணம் புலியானது அழிந்து வரும் விலங்கின் பட்டியலில் இருக்கிறது. அதனை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும்,புலிகளால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள், அவை இருப்பதால் இயற்கைக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து புரியும் விதமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஜூலை 29 ஆம் தேதி ஒவ்வொரு […]
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆகச்சிறந்த ஆசை 2020க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும். அதேபோல் இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் புதுப்புது சிந்தனைகளுடன் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்து இந்தியாவை சாதனை மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பதே. தற்போது […]
2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் 179 கல்லூரிகள் மூடப் இருப்பதாக அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக மிகத் தாமதமாக கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான மறுகணமே பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வழிகள் என்னவென்பதை இன்டர்நெட் மூலம் தேடி அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இந்தியாவில் இந்த கல்வி […]
மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லாமல் போயிருந்தால் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இந்தியாவால் சமாளிக்க முடிந்திருக்காது என்று பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கை என சமமான அளவில் கணக்கிடப்பட்டு வருகிறது. மத்திய […]
டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு கையாண்ட நடவடிக்கைகள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆலோசிக்கப்படுவதாக தெரிவித்தார்.கொரோனா நோயாளிகளுக்கென பிரத்தேகமாக உள்ள 15,500 படுக்கைகளில் 12,500 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளதாகவும், 2800 நோயாளிகள் மட்டுமே […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 31ஆம் தேதி முதல் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கடந்த 24 ஆம் தேதி அன்று கோரிக்கை விடுத்தார். அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் […]
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரின் மீது கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சமன் அனுப்புமாறு பெங்களூரு காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றபோது நவம்பர் மாதம் 23 ஆம் தேதி கோஹாக் பகுதியில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ்.எடியூரப்பா தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக […]
வெவ்வேறு பெயரில் மூன்று ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து சென்ற வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஹைதராபாத்தில் ஆஞ்சநேயலும், சொப்னாவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். விடுமுறை முடிந்ததும் […]
பல வருடங்களுக்கு பிறகு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொரோனா போன்றே இதுவரை இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. “ஆப்பிரிக்கன் ஸ்வைன் ப்ளூ” என கூறப்படும் இந்த காய்ச்சல் சீனாவிலிருந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதி வழியாக பரவி இருக்கலாம் என அசாம் மாநிலத்தின் அரசு சந்தேகிக்கிறது. இது கொரோனாவை விட இது மிகவும் ஆபத்தான நோய். காரணம் இந்த […]
ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திர பிரசாத்-அனுராதா தம்பதியினர். அனுராதா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிதேந்திரா, அனுராதா மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அனுராதாவின் மாமியார் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து […]
ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து வயலில் உழவு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் தக்காளிகளை பயிர் செய்து நல்ல விளைச்சல் கொடுக்க அதை சாகுபடி செய்து விற்க சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரது தக்காளிகள் நல்ல விலைக்கு செல்லவில்லை. அவர் நஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளியை பயிர் செய்தால் அடுத்த முறையாவது நல்ல லாபம் […]
30 ஆட்டுக்குட்டிகளை குரங்கு கூட்டம் கொடூரமாக கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கு இருந்த குரங்கு கூட்டம் ஒன்று சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் 30 ஆட்டுக்குட்டிகளையும் கொட்டகையில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயம் அப்பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் ஆடுகளை விடப்பட்டிருந்த கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குரங்குகளை விரட்ட முயற்சி […]
வறுமையில் இருப்பவர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை எடுக்க உதவும் விதமாக தொழிலதிபர் ஒருவர் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றி கொடுத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது சூரத்தை சேர்ந்த 63 வயது உள்ள காதர் ஷைக் சென்ற மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவ செலவுக்காக பல […]
மனைவிக்கு கணவன் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரமா அரோரா என்பவருக்கும் அருண்குமார் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அருண்குமார்க்கு வரதட்சணையாக பணம் நகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. இந்நிலையில்வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அருண்குமார்-ரமா தங்கியிருந்தனர். இந்நிலையில் ரமாவிடம் கணவர் அருண்குமார் தந்தையின் மருத்துவ செலவிற்கு ஒன்றரை லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது […]
விளையாடும் பொழுது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் கண்களை தானமாக கொடுக்க அவளது பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரா-சுலேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் சினேகா என்ற மகள் இருந்தால். இந்நிலையில் குழந்தை சினேகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சினேகாவை கொண்டு […]
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண்டு வருமானம் 2 லட்சம் என கூறிய நிலையில் அவரது வங்கிக் கணக்கில் 200 கோடி ரூபாய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த தாரணி என்பவர் 2005-06 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்த சமயம் ஆண்டு வருமானம் 2 லட்சம் என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் வங்கி கணக்கில் இருந்த பணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் […]
வேளாண்துறை கொடுத்த விதை முளைக்காததால் இணை இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் வேளாண்மைத்துறையின் இணை இயக்குனருடைய அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்தக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் வேளாண்மைத்துறை சார்பாக விதை நெல் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், வேளாண்மைத்துறையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சில விதைகள் தரமானதாக இல்லை […]
பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினையும் […]
வங்கிகளில் பொதுமக்கள் கீழ்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை அமுலில் இருக்கிறது. முதற்கட்ட நிலையில் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயக்க தொடங்கியுள்ளன. பொதுமக்கள் அவ்விடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக […]
முக கவசம் அணிய வலியுறுத்தியவரின் மகளை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ஏலமண்டலா என்பவர் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த அன்னப்பு ரெட்டி என்பவர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் அவரை கண்டித்து முக கவசம் அணிவதற்கு அறிவுறுத்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு மீண்டும் ஏலமண்டல மற்றும் குடும்பத்தினர் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது அன்னப்பு ரெட்டி […]
பாலத்தின் மீது ஏறி நோபல் பரிசு கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என பெண் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்காளம் கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஹவுரா பாலத்தின் மீது ஏறி நின்றார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த பெண் பாலத்தின் மீது ஏறி நிற்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அங்கு வந்த ஹவுரா காவல்துறையினர், தீயணைப்பு சிறப்பு குழு வீரர்களுடன் இணைந்து அப்பெண்ணை […]
கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தற்போது 6 வது கட்ட நிலையை எட்டிய போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், இதைத் தவிர இந்தியாவின் பிற மாநிலப் பகுதிகளிலும் பாதிப்பு […]
கடந்த ஜூன் மாதத்தில் இறுதியில் மட்டும் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் பாதிப்பு இந்தியாவின் மொத்த பாதிப்பில் 63 சதவிகிதம் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாத இறுதிக்கு முன் வரையிலும், கொரோனா பாதிப்பு சீராக கட்டுக்குள் இருந்த நிலையில், மே மாத இறுதி வாரத்திலும், ஜூன் […]
தங்களது மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக ஹரியானா மாநில அரசு அறிவித்த திட்டம் மற்ற மாநில மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. கார்ப்பரேட் எனப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களாக இருக்கட்டும், தொழிற்சாலைகளாக இருக்கட்டும் வளர்ந்து வரக்கூடிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகரங்களில் மட்டும் தான் நிறுவப்படுகின்றன. இப்படி நிறுவப்படும் தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டே அரசு முதலில் அனுமதி அளிக்கும். ஆனால் வேலை […]
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி விற்பனைக்கு வந்துவிடும் என்ற செய்தி பொய்யானது என ICMR விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கோவாக்சின் என்ற மருந்து இதற்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், வருகின்ற ஆகஸ்ட் […]
14 வயது சிறுமி விஷ நாகம் கடித்து பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்காளம் சோனமுயி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியான சோனாலி சமந்தா நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சமயம் திடீரென கையில் ஏதோ கடித்தது போல் உணர்ந்து சட்டென விழித்துக் கொண்டார். அப்போது விஷ நாகம் ஒன்றை பார்த்து தன்னை பாம்பு கடித்து விட்டது என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் […]
கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதல் முதலில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்ப கட்டத்தில் கேரளாவில் தொற்று அதிக அளவு இருந்தாலும் பின்னர் பல நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக அங்கு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 3 தினங்களில் மட்டும் 600க்கும் […]
திருமணம் முடிந்து நான்கு நாட்களில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த விஷால் என்பவர் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவரின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் இருவரும் பேசி இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து 4 தினங்களுக்கு முன்பு விஷால்-நிஷா திருமணம் நடந்துமுடிந்தது. மகிழ்ச்சியுடன் இத்தம்பதியினர் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் விஷால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு […]
ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், மாணவர்களுக்கு வீட்டில் […]
காற்றின் தரத்தில் 100 நாட்களில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டிய ஊராடங்கால், இந்தியாவில் தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இயக்கங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆகையால் இவற்றில் இருந்து வெளிவரும் புகையால் காற்றில் மாசுபாடு ஏற்படுவது என்பது குறைந்தது. இதனால் காற்றின் தரம் சிறிதுசிறிதாக உயரத் தொடங்கி 100 நாட்களில் நினைத்துப்பார்க்க முடியாத […]
திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் கடந்த மே மாதம் இறுதி வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திற்கு பிறகு பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், பிரபல கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகளை தொடங்க மத்திய அரசு சார்பில் […]
ஆட்டிறைச்சி மூலம் கொரோனா பரவுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவர் வளர்த்து வந்த சில ஆடுகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆடுகளுக்கும் கொரோனா பரவி விட்டதாக அந்த ஊர் மக்கள் கூறிவந்த நிலையில், கால்நடை மருத்துவர்கள் உடனடியாக ஆடுகளை பரிசோதனை செய்தனர். அதில் ஆட்டிற்கு […]
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தடுப்பு மருந்தை கண்டறிய சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் களமிறங்கி தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டறிய தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பணிகளை […]
உத்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்வை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நடைபெறவிருந்த தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவிவந்தது. அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்கள் தங்களது […]
வளையல் போடாதது, குங்குமம் வைக்காதது திருமணத்தில் ஈடுபாடு இல்லாததை குறிக்கின்றது என கூறி விவாகரத்து வழங்கியுள்ளனர் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2012ம் வருடம் திருமணம் செத்துக்கொண்டனர். திருமணம் முடிந்து சில தினங்களிலேயே கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் தனது மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க கேட்டு வழக்கு […]
59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் தற்போது செயலி முழுவதும் உபயோகிக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக், ஹலோ, யூசி ப்ரவுசர், youcom, ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக இந்த செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் அரங்கேறிய போது, பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. மாறாக அவர்கள் அனைவரும் டிக்டாக் செயலியை உபயோகித்துக் கொண்டு […]
மேற்கு வங்கத்தில் 1 வருடத்திற்கு இலவச அரிசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை பசி பட்டினியில் இருந்து பாதுகாக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் வரை பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் […]
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் தனது குடும்பத்தினருடன் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வீட்டிற்கு குடி போனார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு அறையில் நான்கு பேரும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயம் சுமார் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து […]
கணவரிடம் விவாகரத்து பெற்று ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் குமார் என்பவரது மகள் நீது. இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார் நீது. அதோடு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். இதன்பிறகு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார் நீது. இந்நிலையில் […]
திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள் 50 படுக்கைகளை இலவசமாக தனிமைப்படுத்தும் முகாமிற்கு வழங்கியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகின்றது மும்பையை சேர்ந்த எரிக் என்பவர் மெர்லின் என்ற பெண்ணை 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் 2000 விருந்தினர்கள் சூழ பிரம்மாண்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் கொண்டாட்டங்கள், விழாக்கள், திருமணங்கள் என அனைத்தும் சாதாரணமாக நடத்தவே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் வைத்து இந்தத் […]
தேர்வு பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா திங்கள்கிழமை நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கிரேடு தேர்விற்கு ஞாயிறு அன்று இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் அஞ்சனா. பின்னர் வெகு நேரமாகியும் மகள் வராததால் அவரது தாயாரும் சகோதரியும் அவரை பல இடங்களில் தேடினர். […]
டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் உளவு பார்த்ததால் அவர்களது எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளது டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த 2 பேர் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்று கூறி அவர்களது ஆதார் அட்டையை காட்ட அது போலியானது என கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ளவு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து உளவு பார்த்ததாக ஒப்பு கொண்டதை அடுத்து கைது […]
திருமணமான இளம்பெண் கையில் எழுதப்பட்ட உருக்கமான செய்தியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் ஒரு வருடத்திற்கு முன்பு நர்பத் மேக்வால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வந்தியின் தாய் உயிரிழந்த விட தந்தை தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தைக்கு துணையாக இருந்து வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாத காலம் தந்தையுடன் […]
பலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் ராஜஸ்தான் மாநில சஞ்சோர் பகுதியில் வானில் இருந்து விண்கல் போன்ற ஒன்று விழுந்துள்ளது பலத்த ஒலியுடன் கீழே விழுந்த அந்த பொருளினால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்து பார்த்த பொழுது அது விழுந்த இடத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியிருந்தது. மேலும் மக்களிடம் விசாரித்ததில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அது விழுந்த […]
சீனாவுக்கு கொடுத்த பணியை முடிக்காத காரணத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திற்கு 417 கிலோமீட்டர் தொலைவில் கான்பூர்-தீன்தயால் உபாத்யாய் ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 471 கோடி ஆகும். இதுகுறித்து இந்திய ரயில்வே “ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு சீன […]
உத்திரபிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கியர் உதவிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், சீக்கியர்கள், பௌத்தம் என பல பல மதங்களும், அந்த மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்பதற்கிணங்க, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக பெரும்பாலும் பழகி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் கலவரங்களில் அடித்துக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்கள் […]