Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 எப்போது தெரியுமா…? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள பத்தாவது தவணை 2000 பணம் புத்தாண்டு அன்று ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 33 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 17 மாணவிகளுக்கு கொரோனா…. பள்ளி மூடல் – அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. தொழில் அதிபர் வீட்டில் 177 கோடி ருபாய் பறிமுதல்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் தொழில் அதிபர் பியூஷ் ஜெயின் வசித்து வருகிறார். இவர் வாசனை திரவிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பல தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கான்பூரில் உள்ள பியூஷ் ஜெயினின் பங்களாவிலும், பீரோக்களிலும் பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. கேரளாவில் ஒமிக்ரான் பரவலை தடுக்க கேரள அரசு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை செய்வதை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துதல் ஆகிய பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமான மெடிசெப் திட்டத்தை அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான்…. மாநில சுகாதாரத்துறை தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு ….!!!!

இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குதாரர்களும் அதிகளவில் ஏடிஎம்மை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் வங்கிக்கு வருகை புரிவதை தவிர்த்து ஏடிஎம், இணையதளம் ஆகியவற்றின் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டில் இருந்து ஏடிஎம் கார்டு பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்களுக்கு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி தகவல்…. அரசின் முடிவு என்ன?….!!!!!

ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் கல்லூரிகளை மூடுவது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் அதிகளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு […]

Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய்க்காக நடந்த பயங்கரம்…. தலைநகரில் பதற வைக்கும் சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நண்பர்களான பங்கஜ், ஜதின் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று நண்பர் ஒருவரின்  பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பங்கஜ், ஜதின் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்த இருவரிடமும் இருந்த 3 ஆயிரம் ரூபாயை 7 பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றனர். அதன்பின் இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடிந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்தது. இந்நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற தொற்றுக்கள் மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

டியூசன் சென்ற பள்ளி மாணவி…. 4 பேரின் கொடூரச்செயல்…. மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி….!!!!

டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலமான சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பக்கத்து கிராமத்தில் டியூசன் பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பின் தொடர்ந்த 2 பேர் அவரை கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்த மேலும் 2 பேருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”…. 3 திருமணம் செய்தவரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணை டாக்சி டிரைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காளத்தில் ஷபிகுல் இஸ்லாம் வசித்து வருகிறார். இவர் டாக்சி டிரைவராக இருக்கிறார். இவருக்கு 3 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஷபிகுல் இஸ்லாம் தன் 3-வது மனைவியுடன் அரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார். இதனிடையில் ஷபிகுலுக்கு குருகிராமில் வசித்து வந்த  நர்ஹிஸ் ஹடூன்(25) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

“பஞ்சாப் கோர்ட்டில் குண்டு வெடிப்பு”….. உயிரிழந்தது யார் தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலமான லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று குண்டு வெடித்தது. அதாவது கோர்ட் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு,  தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தது. எனினும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் வைரசை தடுப்பதற்காக இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

பாம்புடன் ஜாலியாக நடனமாடும் பெண்…. ஹேர்பேண்ட்க்கு பதிலாக பாம்பு…. திகிலூட்டும் புகைப்படம்….!!!!

பெண் ஒருவர் தலையில் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்புடன் மாலில் சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் ஹேர் பேண்டுக்கு பதில் பாம்பை தலைமுடியில் சுற்றி வளைத்தபடி வணிக வளாகத்திற்குள் சாதாரணமாக வந்துள்ளார். அந்தப் பெண் தன்னுடைய தலைமுடியில் பாம்பை ஹேர் பேண்டு போல் சுற்றிக் வளைத்திருந்ததை அங்கு இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை. அப்போது வணிக வளாகத்திற்குள் இருந்த ஒரு நபர் அந்த பெண்ணை படம்பிடித்துள்ளார். எனினும் தலைமுடியில் இருந்தது  உண்மையான பாம்பு […]

Categories
தேசிய செய்திகள்

1 கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள்…. அரசு சரவெடி அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 1 கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை அம்மாநில இன்று அரசு வழங்குகிறது. இந்நிலையில் அம்மாநிலம் முழுவதிலும்  உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்டுகளையும் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. 91 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டாங்க…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!!

ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 % பேர் 2 டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தி இருப்பதாகவும், 3 பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான ஒமிக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையில் ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 7 பேர் தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் யாரையும் கொலை செய்வோம்…. உறுதிமொழி எடுத்த பா.ஜ.க.வினர்….!!!!

உத்தரகாண்ட மாநிலமான ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17-ஆம் தேதி முதல் 19 வரை 3 நாட்கள் ஒரு மாநாடை நடத்தியது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து இறுதிநாளில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காக கொலையும் செய்வோம்” என்று உறுதி மொழி எடுத்து உள்ளனர். இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த இளைஞர்…. ஆணுறுப்பை துண்டித்த பெண் வீட்டார்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சம்மதமின்றி திருமணம் முடித்ததால் கோபமடைந்த மணமகள் குடும்பத்தினர் மணமகனின் ஆணுறுப்பை துண்டித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியின் சாகர்பூர் பகுதியில் 22 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் 3 வருடங்களாக நெருங்கி பழகி உள்ளனர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு பெண் விட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் ரஜவ்ரி பூங்கா காவல் நிலையத்தில் திருமணம் குறித்த தகவல்களை அளிக்க தம்பதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்காக வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இன்னும் இரண்டே மாதம் தான்…. ஐஐடி ஆய்வு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேரியன்ட் கொரோனா பரவியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வேரியன்ட் அல்ல என்றும் கூறப்படுகிறது. எனினும் மக்களிடம் பீதி குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வேரியன்ட்டால் 3வது அலை உருவாகும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாலியோ ஜாலி”… 113 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான 2022 பட்டியல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான 2021-2022 ஆம் வருடத்துக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி  2022 ஆம் ஆண்டிற்கு 113 நாட்கள் விடுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 237 தினங்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரையிலும் மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறையாக இருக்கும். இதனிடையில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போர்டு தேர்வுகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 2022 ஆம் வருடத்திற்கான பொது விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?…. மாநில அரசு தடாலடி….!!!!

இந்தியாவின் தலைநகர் டில்லியில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் அடிப்படையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதிலும் அரசு மற்றும் அரசு சாரா என்ற அனைத்து விதமான நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவருமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வரியானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையில் இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய ITR போர்ட்டலில் சிறிது தொழிநுட்ப சிக்கல் ஏற்பட்டதால் முன்பே இரண்டு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ.1000 முதலீடு செய்தால்…. நல்ல லாபம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. எப்படினு தெரிஞ்சிக்கோங்க…!!!

பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கலாம் எடுக்காமலேயே நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். இதில் “தேசிய சேமிப்புச் சான்றிதழ்” என்ற திட்டம் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலீடு செய்துள்ளார். இந்தத் திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு நம்முடைய பணத்தை எடுக்க முடியாது. கூடுதல் வட்டி மூலம் கிடைக்கும் லாபம் மெச்சூரிட்டியின் போது கிடைத்துவிடும். […]

Categories
தேசிய செய்திகள்

Omicran: ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 108-ஐ தாண்டிய நிலையில் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2020-ஐ போல மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு பரபரப்பு தகவல்….!!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கை விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி: இன்று முதல் தடை…. மாநில அரசு அதிரடி…!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தனியார் ஐசிஐசிஐ வங்கி (ICICI ) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து புதிய வட்டி விகிதங்கள் (டிசம்பர் 24) முதல் அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது. 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காணலாம். இவை உள்நாட்டு ஃபிக்ஸட் டெபாசிட், NRO மற்றும் NRE டெபாசிட் போன்றவற்றுக்கும் பொருந்தும். 7 – 14 நாட்கள் = 2.50% 15 – 29 நாட்கள் = […]

Categories
தேசிய செய்திகள்

இனி வருமானவரி செலுத்துவோருக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு இனி ரீ-பண்ட மறுநாளே கிடைக்கும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி தாக்கல் செய்தவர்கள் இனி ரீ-பண்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

மனித உடலின் புதிய பாகம்…. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!!

மனித உடலின் புதிய பாகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாகம் தாடையின் மாஷெட்டர் தசையின் ஆழமான அடுக்கில் காணப்படுகின்றது. மாஸேட்டர் தசை தாடையின் கீழ் பகுதியை உயர்த்துகிறது. உணவை மெல்லுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு ANALS OF ANATOMY என்ற அறிவியல் இதழின் ஆன்லைன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு: மாநிலம் முழுவதும் தடை…. அரசு திடீ உத்தரவு…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களே…! சுயதொழில் தொடங்க…. ரூ.3 லட்சம் வரை கடன்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மேலும் சுயமாகவே சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டனர். வீட்டிலிருந்தபடியே சில பெண்கள் சுய தொழில் ஆரம்பித்து வெற்றியும் கண்டு வருகின்றனர். இவ்வாறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு பணம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு அரசும், சில தனியார் வங்கிகளும், தனியார் அமைப்புகளும் சில திட்டங்களை செயல்படுத்தி அதன் கீழ் கடன்  உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து சிறப்பு கடன் […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: இதெல்லாம் தீவிரமா கண்காணிங்க…. ஊரடங்கை அமலுக்கு கொண்டு வாங்க…. ஒன்றிய அரசு அதிரடி….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைர வேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிட்டு விடக் கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், புதிய பாதிப்புகள், இரட்டிப்பு விகிதம், மாவட்டங்களில் ஏற்படும் கிளஸ்டர்கள் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களே”…. சம்பள உயர்வு எவ்வளவுன்னு தெரியுமா?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

நீண்ட காலமாகவே சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் அண்மையில்தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி தரும்வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயருவதாக தகவல் வெளியானது. எனினும் இது தொடர்ப்பன அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 34 % அகவிலைப்படி கிடைப்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்ல சூப்பர் திட்டம்…. 40 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அஞ்சல் துறையில் தங்களுடைய சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனென்றால் அஞ்சல் துறை முதலீடு என்பது சிரமம் இல்லாத ஒரு முதலீடு ஆகும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர். தங்களின் முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. மொபைல் நம்பரை அப்டேட் செய்யணுமா?…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யலாம். இந்த செயலி மூலமாக எஸ்பிஐயில் புதிய கணக்கை தொடங்கலாம். மேலும் பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வேண்டுமா…? இந்த வங்கிக்கு போங்க…. டிச-31 வரை மட்டுமே…!!!!

இந்தியா முழுவதும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்த வங்கி அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தால் டிசம்பர் 31 வரை குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனினும் இந்தச் சலுகை டிசம்பர் 31 வரை மட்டுமே என்று அறிவித்துள்ளது. எனவே வீட்டுக் கடன் பெறுபவர்கள் உடனே […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…! ரூ.1.6 கோடி செலவு பண்ணம்டா…. ஒரே ஒரு தேங்காயை உடைச்சி இப்படி பண்ணிட்டீங்களே….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.1.6 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு தேங்காயை உடைத்தபோது சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலையை பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள கெடா அஜிஸ்புரா கிராமத்தில் பாசனத்துறையினர் அமைத்து உள்ளனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று முழு சாலையையும் சீரமைப்பதற்காக, முதல் கட்டமாக சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலையை அமைத்துள்ளனர். இதனையடுத்து அதன் திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ.வையும் அழைத்துள்ளனர். இந்நிலையில் அந்த சாலையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக எம்.எல்.ஏ சுசி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறுஉத்தரவு வரும் வரை இரவுநேர ஊரடங்கு…. மாநில அரசு அதிரடி…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச  அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் நாமினி பெயரை…. ஆன்லைன் மூலம் இணைப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  269 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. 2 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக மோசமாக ஒமிக்ரான்  பாதிப்புக்குள்ளான 3 மாநிலங்களில் தெலுங்கானாவும் இருக்கிறது. இதனிடையில் நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 14 புதிய ஒமிக்ரான் பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் மொத்தம் 38 பேருக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி புதன்கிழமை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 259 பயணிகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மீண்டும் இரவு ஊரடங்கு…? – அரசு பரபரப்பு உத்தரவு…!!!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான்  நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச  அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜனவரி 20 வரை…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது பெர்முடா அரசாங்கமும் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட விலக்குகளை சரிபார்க்கவும், நிலையான அபராத அறிவிப்புகளை வெளியிடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் கூறியபோது “தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாரன்ஸ் ஸ்காட் உத்தரவின்படி டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத கட்டண தரிசனத்துக்கும் முந்தைய மாதத்தின் இறுதியில் 300 ரூபாய் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் வருகின்ற 2021 டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. வழக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினர். தற்போது இந்திய அஞ்சல் துறை பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் அதிக முதலீடுகளை செலுத்த தொடங்கினர். மேலும் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலமாக குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலம் அதிக வட்டிகளை பெற முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. இந்தியாவில் நிலவரம் என்ன?…. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்…!!!!

தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கியதுமே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா உறுதிசெய்யப்பட்டால் ஒமிக்ரான் பாதிப்பா என்று கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்காக மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி இந்த வைரஸ் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் 2 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் இந்த வைரஸ் தற்போது நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இனி 2 தவணை தடுப்பூசி கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இனி அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் 2022 ஜனவரி முதல் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அரியானா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன கொடுமையா இருக்கு”…. ஒரு வாலிபருக்காக 2 பெண்களின் செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஒரு வாலிபருக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அனகாபல்லி பகுதியில் வாலிபருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்?….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநில அரசு நவம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 20 % அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. இந்த உத்தரவில் ஜனவரி 1, 2016 முதல் திருத்தி அமைக்கப்பட்ட ஊதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தை 28 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதமாக இருக்கும். ஜனவரி 1, 2006 திருத்தப்பட்ட ஊதிய […]

Categories

Tech |