Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு…? – அரசு அதிரடி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து விடுவோம் என தெரிந்தும்…. ஏன் மது குடிக்கிறார்கள்…? முதல்வர் நிதிஷ்குமார்…!!!

மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும்  62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மது காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் 77 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மது […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! 5000 பேருக்கு பிரசவம் பார்த்த நர்ஸ்…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!!

மராட்டிய மாநிலம் ஹிங்கொலி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜோதி கவ்லி. இவர் 5 ஆயிரம் பெண்களுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனை அடுத்து மீண்டும் கற்பமாகிய ஜோதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் விடுமுறை எடுக்காமல் தன்னுடைய பணியை செய்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசவ வலி ஏற்பட்ட அவர் அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது குழந்தை நலமுடன் பிறந்தது. ஆனால் ஜோதிக்கு திடீர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மதுபான கடைகளில்…. மதுபிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இனி டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் பாரின் சரக்கு, உள்நாட்டு சரக்கு என வகைவகையான சரக்குகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும் நாளை முதல் தனியார்மயமாகிறது. இதனால் குளிர் சாதன வசதி, சிசிடிவி கேமரா, பார் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும். காற்று மாசால் அவதிப்பட்டு வரும் டெல்லி மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இது அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

13 வயதில் சிகரம் தொட்டு…. தேசிய கொடியை ஏற்றிய சிறுமி…!!!

தெலுங்கானாவைச் சேர்ந்த சிறுமி முறிக்கி புலாகிதா ஹஸ்வி(13). இவருக்கு புதிதாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின் காரணமாக உயரமான மலையில் ஏறி சாதனை படைக்கலாம் என முடிவெடுத்த அவர், மலையேறுதல் தொடர்பான வீடியோக்கள், திரைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதற்கான டிரெக்கிங் பயிற்சியும் எடுத்துள்ளார். இவரது ஆர்வத்தை கண்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொரானா காலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் ஹஸ்விக்கு பயிற்சி எடுக்க நிறைய அவகாசம் கிடைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா ஊரடங்கால் தொழில் நஷ்டம் ஆனதால் கஞ்சா கடத்தினேன்.”… மும்பைக்கு கடத்தவிருந்த 1240 கிலோ கஞ்சா…. பறிமுதல் செய்த போலீசார்…!!

ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற 1240 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் போதை பொருள் கடத்தல் என்பது சமீப காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் ஒரு கோடி மதிப்பிலான போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் எல்லை பகுதியில் உள்ள பொடூப்பால் என்ற பகுதியில் இருந்து மும்பைக்கு கடத்த இருந்த ஆயிரத்து 240 கிலோ போதைப் பொருள் பறிமுதல் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் அசைவ உணவு கிடையாது…. IRCTC ஷாக் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் “Vegetarian Friendly Travel” சேவை வழங்க உள்ளதாகவும், அசைவ உணவுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது. எனவே மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். சாத்விக் கவுன்சில், Vegetarian Freindly சேவைகளை வழங்குவதற்காக IRCTC உடன் இணைந்துள்ளது. IRCTC-யால் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி என நினைத்து…. கணவர் செய்த கொடூரச்செயல்…. முகக்கவசத்தால் வந்த வினை…!!!!

கேரளாவைச் சேர்ந்தவர் பிஜு. இவருடைய முதல் மனைவி கோழிக்கோடு மாவட்டம் நன்மண்டா பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் விவாகரத்து ஆனதையடுத்து பிஜூ இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் விவாகரத்து ஆன நிலையில் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்துள்ளார். எனவே அவர் வழக்கமாக அமர்ந்து வேலை செய்யும் இருக்கையில் சக ஊழியரான ஸ்ரீஷ்மா என்பவர் அமர்ந்து வேலை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தரிசனதிற்கு அனுமதி…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொட்டிய கனமழை…. 25 வீடுகள் சேதம்…. 2 குழந்தைகள் பலி…!!!

கேரள மாநிலத்தில் சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அன்று கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில் நேற்று இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதில் அதிக அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த கனமழையால் 25 வீடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அதிரடி மாற்றம்…! இனி இரவு நேரங்களிலும்…. மத்திய அரசு அனுமதி…!!!

மருத்துவமனைகளில் பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பணிகள் இயக்குநரகத்தின் தொழில்நுட்ப குழு சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே இரவு நேரங்களில் பிரேத பரிசோதனையை சில நிறுவனங்கள் நடத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனவே மருத்துவமனைகளில் இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை நடத்த மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று இடிந்த கட்டிடம்…. பலியான 2 தொழிலாளர்கள்…. உ.பியில் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதமபுத்தர நகரில் உள்ள பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவமானது நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு யாரும் வரவில்லை. எனவே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூர் வன்முறை…. சிறப்பு புலனாய்வு விசாரணை…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் இந்த வன்முறை வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆட்சேபணை இல்லை என்று உத்தரபிரதேச அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு நாளை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இவ்வளவா! நெஞ்சை பதறவைக்கும் செய்தி…. SHOCKING…!!!

இந்தியாவில் இளம் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது. தற்போது, கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி ஒருசில ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலநிலை உருவாக்கி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளையும் விடுமுறை தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு […]

Categories
தேசிய செய்திகள்

சாமியோய் சரணம் ஐய்யப்பா…! இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறும். இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சைக்காக புதுச்சேரியில்…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்…!!!

தேசிய தன்னார்வ ரத்த தானம் முகாமானது புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி கதிர் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று என்பது பெரிய சவாலாக […]

Categories
தேசிய செய்திகள்

மூடி மறைத்துவிட்டார்கள்…. பழங்குடியினர் புறக்கணிப்பு…. பிரதமர் மோடி கவலை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவு தினம் நேற்று  கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ராஞ்சியில் பிரசா முண்டா நினைவாக அருங்காட்சியகத்தினைகாணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடியினர் சமூக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பழங்குடியின மக்களின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் வெளியில் சொல்லவில்லை. அவர்கள் அனைத்தையும் மூடி மறைத்து […]

Categories
தேசிய செய்திகள்

‘எங்களையும் சேருங்கள்’…. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்…. சம்மதம் தெரிவித்துள்ள ராணுவம்….!!

பெண் அதிகாரிகளை நிரந்தர ஆணையத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் 11 பேருக்கு ராணுவ நிரந்தர ஆணையத்தில் இணைக்கப்படாமல் நிராக்கரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் கூட நிராக்கரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களை வருகின்ற நவம்பர் 27 ம் தேதிக்குள் ஆணையத்தில சேர்தல்துவிட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

‘அடடே இது நல்ல யோசனையா இருக்கே’…. அலைமோதும் மக்கள் கூட்டம்…. மாநகராட்சியின் அதிரடி திட்டம்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகளை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நமது மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறது. அதனை மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி முகாம்கள்களும் அமைக்கப்பட்டு மக்களை ஊக்குவிக்க  பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

‘ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை’…. அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம்…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தாய்மொழி பாடமாக கற்பிக்கப்பட வேண்டும். பஞ்சாபி மொழி குறித்து இரு மசோதாக்கள் அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக அம்மாநில மொழிப் பாடமாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளி நிர்வாகத்திற்கு சுமார் 2,00,000 […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

‘இவர்களும் பெறலாம்’…. விசா கட்டுப்பாடுகளுக்கு தடை…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்….!!

H4 விசாவை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்டு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்நாட்டில் பணிபுரிவோரின் மனைவி அல்லது கணவன் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசா அளிக்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு வேலை புரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதிலும் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு […]

Categories
தேசிய செய்திகள்

‘பூஜையை முடிச்சுட்டு தான் வந்தாங்க’…. ஒன்பது பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

கனரக வாகனம் ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அசாம்- திரிபுரா எல்லையை ஒட்டியுள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பதர்கண்டி என்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த கனரக வாகனமானது எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியுள்ளது. இக்கோர விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

‘கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்’…. இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை….!!

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. அதிலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது “பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். மேலும் நடமாடும் […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் செய்யுங்க…. எருமை மூலம் பிரதமருக்கு மனு…. விவசாயிகள் நூதன போராட்டம்…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு அவர்களுக்கு இன்னும் தீர்வு அளிக்கவில்லை. இந்த நிலையில் திருச்சியில் தொடர்ந்து 29 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எருமை மூலம் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மழையால் அழிந்து வரும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். லக்கிம்பூரில் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்…. ஒரே நாள் நைட்டுல…. கோடீஸ்வரராக மாறிய மரத் தச்சர்…!!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த நபர் நரேஷ் குமார். மரத்தச்சர் வேலை செய்து வரும் இவர், அம்மாநில அரசு வெளியிட்ட தீபாவளி பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார். இதனையடுத்து அதிர்ஷ்டவசமாக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. தனக்கு பரிசு கிடைத்ததைது உறுதி செய்த அவர் சொல்ல வார்த்தை இல்லாமல் திக்குமுக்காடிப் போயுள்ளதாகவும், தன்னுடைய கனவுகள் இப்படி நனவாகும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பின்னர் தான் பெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் சென்ற பைக்…. திடீர்னு துணிக்கடைக்குள்…. அதிர வைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநில நாட்டிலுள்ள கம்மம் மாவட்டம் பஜார் வீதியில் பைக் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக் அதிவேகமாக சென்று அங்கிருந்து துணிக்கடை ஒன்றுக்குள் புகுந்தது. எதிர்பாராத விதமாக உள்ளே பைக் புகுந்ததை எதிர்பார்க்காத அங்கிருந்த ஊழியர்கள் உட்பட 3 பேர் விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பைக் ஓட்டி வந்த நபரும் இந்த விபத்தில் இருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தது “குட் மார்னிங்” மெசேஜ்…. பறிபோனது ரூ.5 லட்சம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் “குட் மார்னிங்” என்று மின்னஞ்சல் வந்துள்ளது. இதை ஒரு பெண் அனுப்பியதாக நினைத்து அவரும் தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் உரையாடி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அவர் அனுப்பிய முகவரிக்குச் சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அந்த மூன்று பேரும் காவல்துறை அதிகாரிகள் என […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு முதல்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த எதிர்த்த ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு இந்த உறுதியை அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடடா..! டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் அடித்த டிஐஜி தந்தை…. நெகிழ்ச்சியான தருணம்…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் டிஎஸ்பி-யாக பொறுப்பேற்ற அபெக்ஷா நிம்பாடியா தனது தந்தையான எபிஎஸ் நிம்பாடியா அவர்களுக்கு சல்யூட் செய்துள்ளார். அப்போது அதை பெருமையுடன் ஏற்ற அவருடைய தந்தையான டிஐஜி, தன் மகளுக்கு மீண்டும் சல்யூட் அடித்துள்ளார். தன்னுடைய மகளின் பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை இந்திய – திபெத் எல்லைக் காவல்படையின் (ITBP) இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பெருமைமிகு தருணத்தை நெட்டிசன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘இந்த ஆண்டு அமோக வசூல்’…. சரக்குகள் ஏற்றுமதி அதிகரிப்பு…. தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை….!!

சரக்குகள் மூலமாக கிடைத்துள்ள வருவாய் குறித்து தென்மேற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே சரக்குகள் வாயிலாக கிடைத்த வருவாய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கையாளப்பட்ட மொத்த சரக்குகள் மூலமாக தென்மேற்கு ரயில்வேக்கு சுமார் 3,37,00,00,000 வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட  […]

Categories
தேசிய செய்திகள்

‘ஹிந்தி, ஆங்கிலம் தெரியாது’…. தலைமை செயலாளரை மாற்றக் கோரிக்கை….. மிசோரம் முதலமைச்சரின் கடிதம்….!!

தலைமை செயலாளரை மாற்றக்கோரி மிசோரம் மாநில முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மிசோரம் மாநிலத்தின் தலைமை செயலாளராக லால்னுமாவியா சாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29  ஆம் தேதி ரேணு சர்மாவை நியமனம் செய்தது. ஆனால் ரேணு சர்மாவுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். குறிப்பாக மிசோ மொழி தெரியாது என்பதால் நிர்வாக ரீதியாக பல இன்னல்கள் எழுந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அட! காசு ரொம்ப செலவாகுது…. எங்க ஊர்ல மதுக்கடை வையுங்க…. வீதிக்கு வந்த பெண்கள்…!!!

ஆந்திர மாநிலம் விழியநகரம் மாவட்டத்தில் உள்ள பெடமெடப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களுடைய கிராமத்தில் சீக்கிரமாக மதுக்கடை வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அந்த பெண்கள் இந்த கோரிக்கையை அதிகாரிகளுக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்காததால் தற்போது வீதிக்கு வந்து போராடியுள்ளனர். தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து பேசிய அப்பெண்கள், “எங்கள் கிராமத்து ஆண்கள் குடிக்கக் கூடாது என நினைத்தோம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியை தேடி வந்த பெண்…. மது கொடுத்த ஆண் நண்பர்…. பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!

ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் வசிக்கும் தன்னுடைய கல்லூரி தோழி ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த தோழியின் ஆண் நண்பர், 23 வயது பெண்ணை அவரின் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி ஏமாற்றி ஒரு இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு அந்த பெண்ணுக்கு மது ஊற்றி குடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் மயங்கி விழுந்ததால், அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

நாய்க்கு கூட இரங்கல் செய்தி சொல்றாங்க…. ஆனால் விவசாயிகளுக்கு…. ஆளுநர் சத்ய பால் மாலிக்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், “டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு நாய் செத்தால்கூட இரங்கல் தெரிவிக்கிறார்கள். இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஒரு வார்த்தைகூட இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர்தான் அகங்காரம் பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

தேவையில்லாம பேசினால்…. நாக்கை அறுப்பேன்…. சந்திரசேகர ராவ் சாடல்…!!!

பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதனை குறைக்க வேண்டும் என மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை குறைக்கச் சொல்வான்? வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான செஸ் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கியபடி தந்தை…. ரத்த வெள்ளத்தில் தாய், 2 மகன்கள்…. அதிர்ந்துபோன உரிமையாளர்…!!!

கேரளாவை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன் (55) – அனிதா (40). இந்த தம்பதியின் மகன்கள் ஆதித்ய ராஜ் (24) அமிருதராஜ்(20). அமிர்தராஜ் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியாகியும் அவர் வேலைக்கு வராததால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கி […]

Categories
தேசிய செய்திகள்

4 நாட்களாக தொடரும் காற்று மாசு…. டெல்லியில் பொதுமக்கள் அவதி…!!!

டெல்லியில் தீபாவளியை தொடர்ந்து நான்கு நாட்களாக புகைமூட்டம் நீடித்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு அதிகம் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகையால் காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் சுமார் நான்கு நாட்களாக பனிமூட்டம் நீட்டித்து வருகிறது. காற்று சுத்தத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் “AQI” முறையில் நூற்றுக்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் அது அசுத்தம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில் AIQ ஆனது 580 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 ஆண்டுகளில்…. மின்சார கார்களின் விலை குறையும்…. ஹேப்பி நியூஸ்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்சார வாகனங்களின் விலையானது அதிகமாகவே உள்ளது. இதனால் ஒரு சிலர் மட்டுமே இந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG…! அம்பானிக்கு ஆபத்து…. வீட்டின் முன் குவிந்தது காவல்துறை…!!!

மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டின் தகவல்களை மர்ம நபர்கள் 2 பேர் கேட்டதாக கால் டாக்சி டிரைவர் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கால்டாக்சி டிரைவர், ஆசாத் மைதானம் பக்கத்தில் உள்ள கில்லா நீதிமன்றத்தில் அருகில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்திய மாருதி வேகன் ஆர் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த 2 பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் சீட்டின் கீழ் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. 4 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் கமலா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 36 குழந்தைகள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்ததால் தான் என்று கூறப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் தற்போது 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பேபி அணையில் மரங்களை வெட்டும் உத்தரவுக்கு…. கேரள அரசு திடீர் அனுமதி மறுப்பு…!!!

முல்லைபெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. பேபி அணையை வலுப்படுத்த அதனை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அனுமதி வழங்கியதால் கேரளாவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! வெறும் 2 மணி நேரத்தில்…. திருப்பதியில் தரமான சம்பவம்…!!!

தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதலே நல்ல மழை பெய்துள்ளது. இதனால் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர் . வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற முடியாத சிக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி..! “கொஞ்சம் பொறுங்க வாரேன்” மனைவி சொன்னதால்…. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் ராஜ்குமார் பாஹே (வயது 50)-புஷ்பா பாய் ( வயது 45) . ராஜ்குமார் வனத்துறையின் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வருகிறார் . இந்த தம்பதிகளுக்கு 23 வயது ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சனிக்கிழமை வேலை முடித்து வந்த ராஜ்குமார் குளித்து விட்டு வந்து மனைவியிடம் துண்டு கேட்டு உள்ளார். அப்போது புஷபா பாய் பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த்தால், ராஜ்குமாரை சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறி உள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று நள்ளிரவு முதல் திடீர் போராட்டம்…. பயணிகள் கடும் அவதி…!!!

மகாராஷ்டிராவில் எம்எஸ்ஆர்டிசி எனப்படும் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்றும், நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து கழகத்தினை மாநில அரசுடன் இணைப்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு…. நள்ளிரவு முதல் அமல்…. மாநில அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெட்ரோல் விலையில் ரூ.10 மற்றும் டீசல் விலையில் ரூ.5 குறைக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 மற்றும் 5 ரூபாய் குறைக்கபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

33 லட்சம் குழந்தைகள்…. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதி…. அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா காரணமாக மிகவும் வறுமையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதி பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம் பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகிறவர்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம்…. தேசிய மையம் தகவல்…!!!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் தென்கிழக்கே 218 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள்…. 100க்கும் மேற்பட்ட வீடு கட்டிய சீனா…. பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீன […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 15-ஆம் தேதி நடை திறப்பு…. ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா […]

Categories

Tech |