சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் இருக்கும் லிங்கம்பள்ளி கிராமத்தில் உள்ள சிஆர்பிஎஃப் 50ஆவது பட்டாலியன் முகாமில் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாக பஸ்தர் ரேஞ்ச் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முதற்கட்ட தகவலின்படி, ஒரு சிஆர்பிஎஃப் வீரர் ஏகே-47 துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டதாக உயர் அலுவலர்கள் […]
Tag: தேசிய செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளோடு கலந்துரையாடினார். அதுமட்டுமின்றி மேடையில் தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார். அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தற்போது ராகுல்காந்தி டுவிட்டர் […]
வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கபட்ட இவர், சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், குமிட்டாபுரத்தில் நடைபெற்ற பீரேஸ்வரர் சாணியடி திருவிழாவில், தந்தையுடன் மகன் புனித் ராஜ்குமார் கண்ணாம்பூச்சி விளையாடும் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மறைந்த நடிகர் புனித் படத்தைஅவருடைய ரசிகர்கள் தலையில் சுமந்தபடி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் குறித்து தமிழக முதல்வரிடம் பேசி தெரிந்து கொண்டேன். மேலும் […]
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக பின்னடைவு சந்தித்ததை தொடர்ந்து தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நேரிலும். வெளியே உள்ள உறுப்பினர்கள் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தொண்டர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வெற்றி பெறுவோம் என்று மாநில பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று மற்றும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி திறப்பு […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், யமுனோத்ரி கோவில்களின் நடை குளிர்காலத்தையொட்டி நேற்று அடைக்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே கேதார்நாத் கோவிலில் காலை 8 மணிக்கும், யமுனோத்ரி கோவிலில் நண்பகல் 12.15 மணிக்கும் நடைகள் சாத்தப்பட்டன. அதன்பின் சிவபெருமான் பாபா கேதாரின் சிலை உக்கிமாத்துக்கும், யமுனா தேவியின் சிலை கர்சாலிக்கும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் எடுத்துச்செல்லப்பட்டன. குளிர்காலம் முழுவதும் திருவுருவச் சிலைகள் அங்கேயே இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய யமுனோத்ரி, […]
ஹரியானா மாநிலத்திலுள்ள ரோதக் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்த மனீஷ் க்ரோவர் என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சர்மா என்பவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள் அவர்கள் இருவரையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து வெகு நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த எம்பி அரவிந்த் சர்மா, மனீஷ் க்ரோவரை எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவேன் என்றும் கண்களைப் பறித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை […]
திருப்பதி தேவஸ்தான அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றுபவர் தர்மா ரெட்டி இவருக்கு கடந்த தீபாவளி தினத்தன்று கடுமையான சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்த தர்மா ரெட்டிக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சாமி தரிசனத்திற்கு வந்த […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்தது வந்ததன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு குறைந்தாலும் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இரவு நேர […]
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சீனி, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். கடந்த காலங்களில் இலவச பொருட்களுக்கு பணம் மட்டுமே பயனாளிகளினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை இலவச பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே மூடிக்கிடக்கும் நியாயவிலைக் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரையை வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரேஷன் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி […]
ஜம்மு-காஷ்மீரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் சற்றே தணிந்து வரும் நிலையில் பருவகால நோய்கள் தலை தூக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பல இடங்களில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ஜம்மு மாவட்டத்தில் மட்டும் சுமார் 659 கும் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 20க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இந்த வார்டில் திடீரென தீப்பற்றியது. இந்த திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இறந்து […]
மராட்டிய கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட 53 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் அந்த வங்கியின் இயக்குனரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக 53 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பான் கார்டு எண் பெறாமல் சுமார் 1200க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் […]
வரும் 19ம் தேதி இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நடக்க உள்ளது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழலானது படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 18ம் தேதி இரவு தொடங்கி, 19ம் தேதி வரையில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் […]
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அந்த குழந்தைகளிடம் கூறியுள்ளார். ஆனால் கேட்காமல் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், பக்கத்தில் இருந்த 2 பெண்கள் மீது ஆசிட் […]
கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டமானது ஜூலை முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து […]
டெல்யை சேர்ந்த ஜுங்கு, சோனு மற்றும் தாமஸ், லோகேஷ் பகதூர் ஆகியோர் நடைபாதைகளில் தங்கி தினக்கூலியாக வேலைப் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தாமஸும், லோகேஷ் பகதூரும் ஜுங்குவிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.50 கடனாக பெற்றுள்ளனர். ஆனால் கடனை திருப்பி தராததால் ஜுங்கு கடனை திருப்பி கேட்டிருக்கிறார். அப்போது பொதுவெளியில் வைத்து ஜுங்குவை, தாமஸும், லோகேஷும் கிண்டல் செய்து அனுப்பியுள்ளனர். இதனை ஜுங்கு சோனுவிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் தாமஸையும் பகதூரையும் தீர்த்துக் கட்ட […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியில் தீபாவளிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இஸ்லாமியப் பெண்கள் சிலர் ராமருக்கு சிலை நிறுவி, பூஜை செய்து வழிபட்டுள்ளனர். கடந்த 14 வருடங்களாக ராமரின் படத்தை வைத்து, பூஜை செய்து வந்த இந்த பெண்கள் இந்த வருடம் சிலை நிறுவி, “மஹா ஆரத்தி” எடுத்து, இஸ்லாமியப் பெண் நஸ்னீன் அன்சாரி எழுதிய ஆரத்தி பாடலைப் பாடி வழிபட்டனர். இது குறித்து அந்த இஸ்லாமிய பெண்கள் கூறுகையில், ” மக்களாகிய […]
உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பே இன்னும் குறையாத சூழலில், ஜிகா வைரஸ் பாதிப்பு மக்களை மிரட்டி வருகிறது. கான்பூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 13 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. ஜிக வைரஸ் பரப்பும் கொசு காலை நேரத்தில் கடிக்க கூடியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரஸ் […]
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பலரும் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்பார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து மாநில தேர்தல் […]
கர்நாடக மாநிலத்தின் தட்சின கன்னடா மாவட்டம் குத்திகார் கிராமத்தில் உள்ள பாக்கு தோட்டத்தில் அடிக்கடி திருட்டு போயுள்ளது. எனவே அந்த இடத்தின் உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடன் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாக்கு தோட்டத்தில் பாக்குகளை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் சேர்ந்து, அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. […]
கேரள மாநிலத்தில் கடந்த 9 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படாமல் இருந்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பாக போக்குவரத்துத்துறை மந்திரியுடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். முதல்நாள் போராட்டத்தில் நீண்டதூர பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால் கேரளா பயணிகள் மட்டுமில்லாமல் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நாளை முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் நாளை முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே நாளை முதலே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிகளவு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி தினத்தில் பங்குச்சந்தையில் நடந்த முகூர்த்த நேரம்(6:15 pm – 7:15 pm) சிறப்பு வர்த்தகத்தில் முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார். ஆம் அந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் அவரிடமிருந்த பங்குகளின் விலை அதிகரித்து அவருக்கு 101 கோடி ஆதாயம் கிடைத்துள்ளது. இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளின் ஏற்றமே அவருக்கு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் அரசு […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் மாநிலங்கள் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தனியார் ஓட்டலில் வரும் 14ஆம் தேதி தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும், யூனியன் […]
ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 70% வேலைவாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் விதமாக புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமானது 2022 ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக அந்த மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்கள் வேலை பெற உத்தரவாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக அதிகபட்சமாக மாதம் ரூ.50,000 சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குஜராத் மாநிலத்தில் 80%. மராட்டியம் 70%, […]
நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அந்த கண்கள் கண்பார்வையற்ற 4 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அவர் இறந்த பிறகு 4 பேருக்கு இந்த உலகை காண ஒளி கொடுத்துள்ளார். அவர் கண்கள் தானம் செய்தது கர்நாடகத்தில் மக்களிடையே குறிப்பாக அவரது ரசிகர்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மாநிலத்தில் கண்களை தானம் செய்வதாக கூறி தங்களின் பெயர்களை […]
மும்பையின் ராய்காட் பகுதியில் வசிப்பவர் சந்தோஷ்(30). இவர் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்து உள்ளார். ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ருத்ரா என்ற பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி ருத்ராவின் 2 வயது மகள் மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, சந்தோசுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்தோசை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை […]
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசிப்பவர் அப்துல் சதார். இவருடைய மகளுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குஞ்சிப்பள்ளியில் உள்ள மசூதிக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இமாம் உவைஸ்ஸி என்பவர் சிறுமிக்கு புனித நீர் என்ற பெயரில் தண்ணீரை தெளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேண்டாம். இரவுக்குள் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார். இமாமின் பேச்சைக் கேட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலியே வைத்திருந்த நிலையில், சிறுமிக்கு […]
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஆண்டாலியாவில் வசித்து வருகிறார். மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முகேஷ் அம்பானி லண்டனில் வசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஸ்டோக் […]
மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் […]
கரம்ஜித் சிங்(28) என்ற இளைஞர் சமீபத்தில் போதைப் பொருள் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். பின்னர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பர்னாலா சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக அவர் மான்சா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் முறையிட்ட அவர், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளுக்கு, தனி அறைகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் கைதிகளை தவறாக நடத்துவதற்கு எதிராக, தான் […]
சமையல் எரிவாயு விலை உச்சம் தொட்டதை தொடர்ந்து பல ஏழை குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் இணையதளத்தில் இந்தி மொழியில் வெளியான கட்டுரை செய்தி ஒன்று 42 சதவிகிதம் கிராம மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் மீண்டும் விரகு அடுப்பு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி தனது […]
கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டமானது ஜூலை முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து […]
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் வரும் 8ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்க பட உள்ளது. அன்று முதலே மாணவர்களுக்கு மதிய […]
நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்,சோயாபீன் எண்ணெய் மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் மழலையர் […]
கேரள சட்டசபையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் ஐடி பார்க்குகள் உள்ளன. இங்கு புதியதாக நிறுவனம் ஆரம்பிக்க வருபவர்கள் ஐடி நிறுவனங்களில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் பல நிறுவனங்கள் திரும்பி சென்றுவிட்டன. இதனால், ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் ஆரம்பிக்க கடந்த இரு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. […]
கேரளாவில் போக்குவரத்து ஊழியர்கள் இரண்டு நாள் ஸ்டிரைக் தொடங்கியதால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய முழுவேலை நிறுத்த போராட்டத்தால் கேரளா மக்கள் பேருந்து வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை வீழ்த்தினார். அதன்பிறகு அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறைபிடிக்கப்பட்ட அவர் மார்ச் 1 அன்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இது இந்திய மக்களிடையே மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் விங் கமாண்டர் ஆன அபிநந்தனுக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி […]
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே இலங்கை தமிழர் நலன் குறித்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை மாற்றி இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம் என அவர் உத்தரவிட்டார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் நல வாழ்வுக்காக ரூபாய் 317 கோடி […]
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் திடீரென மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமில்லாது, மற்ற திரையுலகினர் அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் புனித் ராஜ்குமார், தான் உயிருடன் இருக்கும் போது ஏராளமான உதவிகளை செய்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இரு கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி, தற்போது அவருடைய இரண்டு கண்களும் பெங்களூரூவில் இருக்கும் நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்படிருந்த நிலையில், அவரது கண்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4 நபர்களுக்கு […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான அடையாளமாக இந்த சான்றிதழை வைத்திருந்தால் தான் வெளிநாடுக்ளுக்கு பயணம் செய்ய முடியும். இவ்வாறு இந்தியா அளிக்கும் சான்றிதழை ஒரு சில நாடுகள் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு இந்தியா அளிக்கும் சான்றிதழை மேலும் 5 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, […]
ஜிஎஸ்டி வரி வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.23,861 கோடி, மாநில சரக்கு மற்றும் […]