Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ‘இனி எல்லோரும் ஈசியா ஏசியில பயணம் செய்யலாம்’…. இந்திய ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு….!!

அனைத்து மக்களும் ஏசியில் செல்லும் வகையில் புதிய திட்டத்திற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டது. தென்னக ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வருகிறது. இதனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில்களில் உள்ள ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் ஏசி வகுப்பு பெட்டிகள் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் ரயில்வே ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

‘இந்திய பிரதமரை சந்திக்க விரும்பும் உலகின் பெரும் பணக்காரர்’… காரணம் என்ன தெரியுமா….??

இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் கோரிக்கை வைத்துள்ளார். மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மாஸ்க் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக ஒரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

‘வெறும் 4 நாட்களுக்கு மட்டும்தான் இருக்குமாம்’… மின்சார ஆணையத்தின் தகவலால் மீண்டும் அதிர்ச்சி….!!!

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரித் தட்டுப்பாடு என்பது ஒரு பேசப்படும் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பல மாநிலங்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்… “தன் உயிரையும் துச்சமாக்கி 50 வயது பெண்ணை காப்பாற்றிய பெண் போலீஸ்”…. குவியும் பாராட்டு…!!!

மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணி ஒருவரை பெண் ரயில்வே போலீஸ் காப்பாற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது மும்பையில் உள்ள சாண்ட்ஹார்ஸ் ரோடு ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது சுமார் 50 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் ரயில் கிளம்பிய பிறகு அதில் ஏற முயற்சித்தார். இதனால் அவர் ரயிலுக்கும் நடைமேடை க்கும் இடையில் தவறிவிழுந்து சிக்கிக்கொண்டார். தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் வடிக்கும் கடவுளின் தேசம்…. இயற்கை பேரிடரால் தொடரும் பலி எண்ணிக்கை…. இது முடியல இன்னும் இருக்கு…!!!

கேரளாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

கார் லாரி மோதிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான சோகம்….!!

ஹரியானாவில் கார் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் உள்ள பகதூர்காரில் உள்ள கே.எம்.பி எக்ஸ்பிரஸ்வேயில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி ஒன்றின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை […]

Categories
தேசிய செய்திகள்

செஞ்சி டூ திருப்பதி… கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்…. செம குஷியில் பஸ் பயணிகள்…!!!!

செஞ்சி-திருப்பதி நேரடி பேருந்து சேவையை அமைச்சர் மஸ்தான் கொடிகாட்டி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை வழங்ககோரி அப்பகுதி மக்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு புதிய பேருந்து சேவையை கொடிகாட்டி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை… ‘உயிரை பனயம் வைத்து இதற்காக ஆற்றில் குதித்த கேரள இளைஞர்கள்’…. வைரலாகும் வீடியோ….!!!

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்மலை அணை திறக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் அணைகளும்  அதன் கொள்ளளவு எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி  உட்பட மாநிலத்தின் மொத்தம் 78 அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செருதோணி அணை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஷாருக்கான் வீட்டிற்கு சென்றதற்கு காரணம் என்ன….?? என்சிபி அதிகாரி கொடுக்கும் விளக்கம்….!!!

ஷாருக்கான் வீட்டிற்கு சோதனை நடத்துவதற்காக செல்லவில்லை என என்.சி.பி மண்டல அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை பொருள் விருந்து நிகழ்ச்சி விவகாரத்தில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரியன் கான் முன் ஜாமீன் கிடைக்காததால் தற்போது மும்பை அர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சாருகான் சிறையில் இருந்த தன் மகனை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை…. காரணம் என்ன தெரியுமா….??

மும்பையில் உள்ள சாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் உபயோகப் படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நடிகர் ஷாருக்கானின் மகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆரியன் கான் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் […]

Categories
தேசிய செய்திகள்

குடிச்சிட்டு வந்ததுமில்லாம… கெட்ட வார்த்தையால வேற திட்டிய ஆசிரியர்… அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு…!!!

குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே.  சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்ததை தாங்க முடியாத தந்தை… இறுதிச் சடங்கின்போது நேர்ந்த விபரீதம்… புதுச்சேரியில் சோகம்…!!!

புதுச்சேரியில் உடல்நலக்குறைவால் மகன் இறந்த துக்கத்தை தாங்கமுடியாமல் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சள்காமாலை ஏற்பட்டது. தொடர்ந்து மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜன் திடீரென உயிரிழந்தார். நேற்று காலை ராஜனின் இறுதி சடங்கு அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜனின் தந்தைக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டியூட்டி நேரத்தில் தண்ணிய போட்டா போலீசார்…. வைரலான வீடியோவால் சஸ்பெண்ட்…!!

கர்நாடகாவில் பணி நேரத்தில் போலீசார் இருவர் சீருடையில் மதுபானம் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் ஹாசன் அருகே உள்ள ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரங்கசாமி மற்றும் அதே ரயில் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ராமேகவுடா. இவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடம் ஒன்றில் சென்று இருவரும் காவலர் சீருடையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

‘சிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றிய வழக்கு’… நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு… எவ்வளவு அபராதம் தெரியுமா…?

குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் […]

Categories
தேசிய செய்திகள்

குஜரத்தில் வாள் திருவிழா…. கண்களை கட்டிக் கொண்டு சாகசம் செய்த வீரப்பெண்மணி….!!!

குஜராத்தில் தசராவை முன்னிட்டு நடைபெற்ற வாள்த்திருவிழாவில் கண்களை கட்டிக்கொண்டு இரண்டு கைகளிலும் வாளை சுழற்றி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார். குஜராத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு ராஜ்கோட் அரச குடும்பம் சார்பில் 5 நாட்களுக்கு நாள் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்த வாள்த்திருவிழாவில் பங்கேற்கும் போட்டியாளர் தங்களின் கண்களை கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் இரு மனிதர்களின் மீது ஏறி நின்று தங்கள் இரண்டு கைகளில் கொடுக்கப்படும் வாள்களையும் சுழற்ற வேண்டும். இந்த ஆண்டும் இதே போல் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க நகை வாங்க வந்து இருக்கோம்…. கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் திருடிய பலே கொள்ளையர்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் நகைக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள பாவா மார்க்கெட்டில் சத்குரு ஜுவல்லர்ஸ் என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கடைக்கு மூன்று நபர்கள் மோட்டார் பைக்கில் வந்துள்ளனர். அவர்களில் இருவர் மட்டும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நகைகள் வாங்குவது போல் கடைக்குள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு துப்பாக்கியை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கிரிக்கெட் பயிற்சியாளரின் கொடூர செயல்…. வலைவீசி தேடி வரும் போலீசார்….!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி முத்திரையார் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வரும் தாமரைக்கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கிரிக்கெட் பயிற்சி மைய நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட அதிர்ச்சி… ‘மகளிர் வாலிபால் அணி வீராங்கனையின் தலையை வெட்டி’… உலகையே உலுக்கும் சம்பவம்…!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் விளையாட்டு வீராங்கனையின் தலையை துண்டித்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு பல பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனிடையே அமெரிக்க படைவீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும் தலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பயன்படுத்திய தலிபான்கள் ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் ஆனதாக அறிவித்து புதிய அரசையும் அமைத்துக்கொண்டனர். அன்றிலிருந்து தாலிபன்கள் அரங்கேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் மாயம்… 65 வயது நபரை கரம் பிடித்த 25 வயது பெண்… வைரலாகும் போட்டோ.!!

கர்நாடகாவில் 65 வயதுள்ள ஒருவரை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சந்தேமவத்துர் கிராமத்தில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய மேகனாவின் கணவர் மீண்டும் வரவில்லை. இதனையடுத்து தன் கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“இதைப்பற்றி பேசவே இல்லை” ஆனால் டி20 மட்டும் விளையாடுவீர்களா..? பிரதமரை விமர்சித்த ஒவைசி….!!!

பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சீனா ஊடுருவல் போன்றவை குறித்து பேசுவதே இல்லை என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் அதிகமாக என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இதுவரையிலும் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனா இந்திய எல்லையில் ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.ஏம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெட்கமே இல்லையா…? மக்களை கொள்ளையடிக்கும் அரசாங்கம்…. லாலு பிரசாத் யாதவ் காட்டம்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் சமையல் எரிபொருள் விலையும் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

புலிய பாத்து கரடி தான பயப்படும்… ஆனா இங்க தலைகீழா இருக்கே… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

சாம்பார் ஏன் நல்லா இல்ல….? தாயை சுட்டுக் கொன்ற மகன் பரபரப்பு சம்பவம்….!!!

உத்தர கன்னடா மாவட்டத்தில் சாப்பாடு ருசியாக இல்லாததால் வாலிபர் ஒருவர் தனது தாய் மற்றும் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் சித்தாப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி இவர் தனது கணவர் மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். நிலையில் பார்வதியின் மகன் மஞ்சுநாத் குடிப்பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ப்ளூ அலர்ட்… இடுக்கி அணையின் நீர்மட்டம் உச்சத்தை அடைந்துள்ளதால் கேரள அரசு முடிவு…!!!

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 2403 அடி ஆகும். தற்போதைய நிலையில் நீர்மட்டம் 2390 புள்ளி 86 அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதி மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் வெட்டிக் கொலை…. பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய கும்பல்…!!

புதுச்சேரியில் அரசு ஊழியர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் காரைமேடு அருகே உள்ள திருநகரில் குடிநீர் தொட்டி விநியோகம் செய்யும் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு மணிவண்ணன் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக காரைமேடு பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, […]

Categories
தேசிய செய்திகள்

டீ கடைக்குள் புகுந்து நகை பணம் திருட்டு…. விஜயதசமி விடுமுறை அன்று அரங்கேறிய சம்பவம்….!!!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு ஒரு டீ கடைக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு மார்க்கெட் வீதியில் அன்பழகன் மற்றும் பாலாஜி என்ற இருவரும் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுதபூஜை என்பதால் அவர்கள் இருவரும் டீ கடையை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு பின்னர் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று உள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அதிகாலை இருவரும் தங்கள் கடைகளுக்கு சென்று கடையை திறந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலிருக்கும் ஆர்யன் கான்… மணியார்டர் அனுப்பிய தந்தை சாருக் கான்… ஏன் தெரியுமா…?

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆரியன் கானுக்கு அவருடைய தந்தை சாருகான் மணியாடர் அனுப்பியுள்ளார். கடந்த 3ஆம் தேதி இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜாமின் மனு தாக்கல்செய்த ஆரியர்கானுக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.  போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார் ஆரியன் கானின் வழக்கறிஞர். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

“அவர் ஒன்றும் கண்காட்சி பொருளல்ல”… மத்திய அமைச்சரின் செயலால்… கொந்தளித்த மன்மோகன் சிங் மகள்…!!!

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டதற்கு அவர் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நிலை சோர்வால் அவதியுற்று வந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாதவியா நேரில் சந்தித்து வந்தார். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய சம்பவம்…. உத்திரபிரதேசத்தில் பரபரப்பு நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!

சத்தீஸ்கரில் பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து…. 11 பேர் பலி….தசரா நாளில் நிகழ்ந்த சோகம்….!!

உத்திரபிரதேசத்தில் பக்தர்களை ஏற்றி வந்த டிராக்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சுமார் 30 பக்தர்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சாலையில் நின்று கொண்டிருந்த கால்நடையின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து…. பயணிகள் ரயில் ரத்து…!!

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள துண்டலா-கன்பூர் சென்று கொண்டிருந்த 24 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ருசா ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் சரக்கு ரயில் காலியாக இருந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் நடை அடைப்பு…. கோவில் நிர்வாகம் தகவல்….!!

குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை சாத்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து 10000 அடிக்கு அதிகமான தூரத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் வருடம்தோறும் நவம்பர் தொடங்கியவுடன் இந்த கோயில் சாத்தப்பட்டு விடும். இதனைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதமும் 20ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மாடுகளுக்கு சாக்லேட் கொடுங்க நிறைய பால் தரும்… மத்தியபிரதேச பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்…!!

மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

துபாயிலிருந்து தங்கம் கடத்தல்…. தொடர் விசாரணையில் 5 1/2 கிலோ தங்கம் பறிமுதல்…!!!

துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கேரளாவுக்கு விமானம் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று துபாயில் இருந்து கொச்சி வந்த சர்வதேச விமானம் ஒன்றில் இருந்து வந்த பயணிகள் அனைவரிடமும் தீவிர சோதனை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ கால் மூலம் தாய் தந்தையுடன் பேசிய ஆரியன் கான்…. சிறையில் இரவு முழுவதும் தூக்கமின்றி இருந்ததாக தகவல்….!!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆரியன் கான் மூன்று நாட்களுக்கு முன்பு சிறை காவலர் முன்னிலையில் வீடியோகால் மூலம் தந்தை ஷாருக் கான் மற்றும் தாயாருடன் உரையாடியுள்ளார். போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் மனு விசாரணை நேற்று மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாக அரசு தரப்பு வக்கீல் வாதாடியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் கோலாகலமாக நிறைவு பெற்ற… வருடாந்திர பிரம்மோற்சவ விழா…!!!

திருப்பதியில் புகழ்பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டும் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பிரம்மோற்சவத்தில் அம்மாநில முதல்வர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து 11 ஆம் நாளான இன்று சங்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் தங்க கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்குவிட் கேம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீசார்…. பெரும் வரவேற்பை வீடியோ…!!

மும்பை போலீசார் ஸ்வீட் கேம் இணையதள தொடர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களில் ஸ்குவிட் கேம் ஒன்றாகும். கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியான தொடரை இதுவரை 111 மில்லியன் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் விளையாட்டின் பெயர் ரெட் லைட் ,கிரீன் லைட் என்பதாகும். அதன்படி ரெட் லைட் என்று கூறி இந்த விளையாட்டில் வரும் ராட்சச பொம்மைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இது கொஞ்சம் ஓவரா இல்ல… 550 கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்… வைரலாகும் வீடியோ….!!!

மும்பையில் 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது கேக். வசதிபடைத்தவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் சேர்ந்த நபர் ஒருவர் தனது பிறந்தநாளை 550 செய்திகளை வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மும்பை காந்தி வாலி பகுதியைச் சேர்ந்த சூர்யா ரதுரி என்ற […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்…. மோகன் பகவத் அதிரடி….!!

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்து உள்ளார். விஜயதசமி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவரான மோகன் பகவத் சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய அவர் அனைவரும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழவே பண்டிகைகள் மற்றும் விழாக்களை கொண்டாடி வருகிறோம். எனவே சாதி மத அடிப்படையிலான பிரிவினைகளை அனைவரும் மறந்து அமைதியை நிலைநிறுத்தி தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை பெருக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரண்டு நாள் முக்கிய நிகழ்வு….. என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்து திருப்பதியில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்விற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 30 […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு…!!

வருகிற 22-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை வருகிற 22-ஆம் தேதி கூட்டபோவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை விடுவார் எனவும், கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நெறிமுறையை இந்த ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடரின் போது பின்பற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரும் இரு […]

Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி…. ஆந்திராவில் சோகம்….!!

காளகஸ்தி அருகேயுள்ள நீர்வீழ்ச்சியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய்குமார், தேவா, விஜய், காமேஷ் ரமேஷ் மற்றும் துளசிதரன் இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆந்திராவில் தற்போது கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்துள்ளது. இதனால் இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்கள்…. தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்…..!!

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வீடுகள் தோறும் கழிப்பறை கட்டும் பணிகள் ஜம்மு-காஷ்மீரில் முடுக்கிவிடப்பட்டன. திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் திகழ வேண்டுமென […]

Categories
தேசிய செய்திகள்

அப்துல் கலாம் பிறந்த நாள்…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை….!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தலைவர்கள் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள்…. 100% தடுப்பூசி போட்டாச்சு…. வெளியிட்ட அறிக்கை….!!

காஷ்மீரில் தடுப்பூசி முதல் டோஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டாச்சு…. காஷ்மீர் அரசு பெருமிதம்…!!

இந்தியாவிலேயே காஷ்மீரில் தான் 100% தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாகி உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலேயே ஜம்மு மற்றும் காஷ்மீரில் தான் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… மின்கசிவு காரணமா….? தொடரும் விசாரணை…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையான நிலையில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

Categories
தேசிய செய்திகள்

200 கோடி மோசடி வழக்கு… பிரபல நடிகையிடம் அமலாக்கத் துறை விசாரணை…..!!!

மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் 200 கோடி மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை நோகா நோரா ஃபேடேகியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஆன ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூபாய் 200 கோடி ஏமாற்றிய வழக்கில் சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி லீனா பால் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகாஷ் […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச்ச… இப்படி ஒரு தந்தையா….? பெற்ற மகளையே பலாத்காரம் செய்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய காமுகன்…!!!

ஒரு தந்தை தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து சில அரசியல் பிரமுகர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை அவருடைய தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரி டிரைவரான இந்த சிறுமியின் தந்தை இவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது டிவியில் ஆபாச படங்களை போட்டு காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை”… முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி….!!!

கர்நாடகாவில் மின் பற்றாக்குறை இல்லை. தேவையான நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேவையான அளவு நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த வாரம் கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் […]

Categories

Tech |