Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகள்- இந்திய ராணுவத்தினர் இடையே துப்பாக்கி சூடு…. இரண்டு வீரர்கள் வீரமரணம் எய்தினர்….!!!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் வீரர் உட்பட 2 பேர் பலியாகினர். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மற்றும் அதிகாரி என […]

Categories
தேசிய செய்திகள்

தசரா விழாவின் புகழ் பெற்ற தசரா ஊர்வலம்….. முதல்-மந்திரி தொடங்கி வைக்கிறார்…!!!

மைசூரில் தசரா திருவிழா ஊர்வலத்தை நேற்று அம்மாநில முதல் மந்திரி தொடங்கி வைக்கிறார். இதில் 400 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைசூருவில் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் காவல் தெய்வமாக கருதப்படும் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை கொண்டாடும் விழாவாக இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 411 ஆவது தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏவுகணை நாயகன் கலாம்.’…. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம்…!!!

அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி “இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்றுவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் கலாம்” என புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 90ஆவது பிறந்த தினமாகும். எனவே அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் நினைவிடத்தில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழ் […]

Categories
அரசியல்

அதிகாரிகள் அரசு ஊழியர்கள் இல்லை…. அரசியல் ஊழியர்கள்…. ஜெகதீப் தங்கர் விமர்சனம்…!!!

மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் கிடையாது அவர்கள் அரசியல் ஊழியர்கள் என்று மேற்கு வங்க கவர்னர்  ஜெகதீஷ் தங்கர் கடுமையாகப் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்க கவர்னர் ஜெகதீஷ் தங்கர் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் மதிப்புகள் சீர்குலைந்து போனதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அல்ல. அவர்கள் அரசியலுக்கு வேலை செய்யும் ஊழியர்கள். மேற்கு வங்கத்தின் அரசியலமைப்பின் கீழ் மாநில கவர்னரின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆரியன் கான் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்…. அரசு தரப்பு வக்கீல் குற்றச்சாட்டு….!!

ஆரியன் கான் பல வருடங்களாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். என அரசு தரப்பு வக்கீல் வாதாடினார். பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அங்கு போதை பொருள் விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டு பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன்சிங் உடல்நிலை சீராக இருக்கிறது…. நேரில் சென்று நலம் விசாரித்த மத்திய அமைச்சர்….!!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமடைந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மன்மோகன்சிங்கிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் சோர்வாக காணப்பட்ட அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மன்மோகன் சிங்கை டாக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு…. மேற்கொள்ளப்போகும் ஏற்பாடுகள் குறித்து விளக்கம்….!!

திருமலையில் பக்தர்கள் வசதிக்காக பல முக்கிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று கோவிந்தராஜா அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி மற்றும் சில மூத்த அதிகாரிகள் நேற்று திருமலையில் விரிவான ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

இழப்பீடு தொகையாக ரூபாய் 25 ஆயிரம் வழங்க முடிவு…. யாருக்கெல்லாம் கிடைக்கும்….?? மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!

மகாராஷ்டிராவில் பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல லட்சக் கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த பயிர்களை நாசம் அடையச் செய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!

கருக்கலைப்புக்காண கால வரம்பை 20 லிருந்து 25 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் பொதுவாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய 12 வாரங்களுக்குள் ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்வது எனில் இரண்டு டாக்டர்களின் பரிந்துரையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார்…. எதற்கு தெரியுமா…?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த தசரா பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதிக்கு செல்லும் அவர் லே, மற்றும் சிந்துப் படித்துறையில் சிந்து தர்ஷன் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. பின்னர் மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன் உரையாற்றுகிறார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…. மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி….!!

ஆயுத பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆயுத பூஜை வாழ்த்து செய்தியில்,” அநீதியை அழித்ததன் அடையாளமாக பெண் சக்தியின் கடவுள் வடிவமான துர்க்கையை நாம் வணங்குகிறோம். தேச கட்டுமானத்தில் பெண்களுக்கு மரியாதையும் சம பங்களிப்பும் வழங்க உறுதி ஏற்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியிருந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,” நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவையே மிஞ்சிய சேசிங்.. மோட்டார் சைக்கிள் திருடியவர்களை… துரத்திச் சென்று பிடித்த போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய மூன்றுபேரை சினிமா பட பாணியில் போலீசார் ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி பகுதியை சேர்ந்தவர் சிவா 51 வயதாகும் இவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். சிவா நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு அவருடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

நாங்க உதவி பண்றோம்…. நீங்க கவலைப்படாதீங்க… முதியோருக்கு உதவுவது போல் நடித்து ஏமாற்றிய கும்பல்….!!

வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் நகை மோசடி செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வினோபாபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புது பட்டான் இவருடைய மனைவி ராகினி. இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரான்சில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதி மட்டும் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சரியா சம்பளம் போடல…. அரசு ஊழியர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!!

சரியாக சம்பளம் கொடுக்காத காரணத்தினால் அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கோமளவல்லி பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். 56 வயதாகும் இவர் அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் சம்பளம் வழங்கப்படாததால் சௌந்தர்ராஜன் குடும்பம் நடத்தவே கடும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த சௌந்தர்ராஜன் சம்பவத்தன்று எலி பேஸ்ட் தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் மற்றுமொரு கட்டிட சரிவு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்ட உயிர்சேதம்….!!

பெங்களூருவில் கனமழை காரணமாக சரிந்து விழும் நிலையில் இருந்த 4 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கமலா நகரில் பழமையான 4 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் கனமழை மற்றும் பலமற்ற அஸ்திவாரம் காரணமாக இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து அங்கு வசித்து வந்த இரண்டு குடும்பத்தினர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நேற்று அந்த கட்டிடத்தில் இருந்த மீதி ஆறு குடும்பத்தினரும் வெளியேறினர். மேலும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் திடீர் தீ விபத்து…. 25க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்து நாசம்….!!

மும்பையில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலுள்ள நேரு நகரில் அமைந்துள்ள தம்ம சொசைட்டி என்கிற கூட்டுறவு சங்க வளாகத்தின் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீரென பயங்கர தீ ஏற்பட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமார் 25 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின.மோட்டார் வாகனங்களில் தீப்பற்றி இருந்ததால் அப்பகுதியே பெரும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டது. பின்னர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மதுரை- திருப்பதி பிளைட்…. ஏழுமலையான் பக்தர்களுக்கு மீண்டும் ஒரு ஜாலி அறிவிப்பு….

மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவையை இண்டிகோ நிறுவனம் முதன் முறையாக தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்க வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்கள் சிலர் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை,பெங்களூர், மும்பை, ஹைதராபாத் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ ஜாலி எங்க அப்பாதான் பைலட்”…. வைரலாகும் சிறுமியின் இன்ப அதிர்ச்சி வீடியோ….

சிறுமி ஒருவர் விமானத்தில் பயணம் செய்யத்தயாராக இருந்தபோது, சிறுமியின் தந்தையே விமானத்தில் பைலட்டாக இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சான்யா மோடிகர் என்ற அந்த சிறுமி டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். விமானத்தில் கையில் டிக்கெட்டுடன் இருக்கை மீது ஏறி நின்று ஆச்சரியத்துடன் விமானத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைலட் உடையில் வந்த தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். தனது […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டரில் பயணம் செய்ய வைத்த மழை…. பெங்களூர் விமான பயணிகளுக்கு நேர்ந்த நிலைமை….!!

தொடர் கனமழை காரணமாக பெங்களூருவில் விமானநிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் பயணிகள் டிராக்டரில் விமான நிலையம் வந்தடைந்தனர்.  பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு பெய்த கனமழையால் விமான நிலையம் நீரால் சூழப்பட்டதால் வெளியே பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, பல பிரதான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடு… வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் கலைஞர்கள்… அரசு உதவுமா…?

நவராத்திரி விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வருமானம் இல்லாமல் கலைஞர்கள் சிலர் சிரமப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 15ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வட மாநிலங்களில் ராமன் ராவணனை அளித்ததை குறிக்கும் நிகழ்ச்சியான ராம்லீலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் வில் மூலமாக தீயிட்டு ராவணனின் உருவபொம்மையை பொசுக்கும் நிகழ்ச்சி முக்கியமான ஒன்றாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

போலீசிடமே தண்ணிய போட்டு தகராறு செய்த இளைஞன்…. கைது செய்த போலீசார்….!!!

இளைஞர் ஒருவர் குடிபோதையில் போலீசை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மங்கலம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் விநாயகம். இவர் மதக பட்டியில் டாட்டா ஏஸ் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கரமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை பார்த்த போலீஸ்காரர் விநாயகம் அதனை படம் எடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சக்கபோடு…. பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு…. செம ஜாக்பாட் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கும்படி 7வது ஊதிய குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றும் சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்பிஎஸ்எஸ் எனப்படும் ரயில்வே வாரிய செயலக ஸ்டெனோகிராஃபர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பணியாற்றும் அதிகாரிகள் அடுத்த கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தேடப்பட்டு வந்த குற்றவாளி…. சுற்றி வளைத்த போலீசார்…. இளைஞன் செய்த அதிர்ச்சி சம்பவம்…!!

போலீசார் சுற்றி வளைத்தால் குற்றவாளி ஒருவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெகுன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவன் ரோப் சந்த் என்ற சுக்லா. இவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனால் இவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்திருந்தனர். மேலும் சுக்லா போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை…. ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலின் கதவைத்திறந்து சிறுவன் பலி….. கழிவறை கதவு என தவறாக நினைத்தால் நேர்ந்த விபரீதம்…!!

கேரளாவில் ஓடும் ரயிலில் சிறுவன் ஒருவன் கழிவறை கதவை திறப்பதாக நினைத்து ரயிலின் வெளிக்கதவை திறந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோட்டயம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது சித்திக்கின் பத்து வயது மகனான முகமது இசான் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

அவரால் பணியாற்ற முடியாது…. ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்…. சித்த ராமையா பரிந்துரை….!!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என சித்த ராமையா பரிந்துரை செய்துள்ளார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இல்லாததால் காங்கிரஸ் தலைவரின் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டு விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது “காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என நான் பரிந்துரை செய்தேன். […]

Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஸ்ரீ பூமி பூஜா பந்தல்… “கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள்”… அதுலயும் இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

கொல்கத்தாவில் தசரா பண்டிகைக்காக செய்யப்பட்டுள்ள பந்தல் அலங்காரம் துபாயின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் தசரா பண்டிகை தொடங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா போன்ற அமைப்பில் செய்யப்பட்டுள்ளது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் இந்த உயரமான பந்தல் அமைப்பு விமான […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்… கேரளாவில் “சுற்றுலா கேரவன்கள்”…. அட்டகாசமான அறிவிப்பால் மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சுற்றுலா கேரேவன் வாகனத்தை நாட்டின் சுற்றுலா துறை மந்திரி அறிமுகம் செய்து வைத்தார். கேரளாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு மிக நெருக்கமான பயணத்தை உருவாக்கும் வகையில் கேரள அரசு கடந்த 15ஆம் தேதி ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை கேரளா சுற்றுலா துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்று…. “இது கடவுளின் அவதாரம்” வழிபாடு செய்யும் பொதுமக்கள்….!!

ஒடிசா மாநிலத்தில் விவசாயி ஒருவரின் பசு மூன்று தலைகளுடன் கன்றுக்குட்டியை ஈன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நப்ரங்கூர் மாவட்டம் பீஜப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தனி ராம். விவசாயியான இவர் தனது வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார் . அந்த பசு நவராத்திரி தினத்தில் கன்று குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று இரண்டு தலைகள் மற்றும் மூன்று கண்களுடன் பிறந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

13 வருடம் டெல்லியில் வசித்து வந்த பாக். தீவிரவாதி… “யாருக்கும் தெரியாமல் இருந்தது எப்படி”…? போலீஸ் விசாரணை…!!!!

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஷ்ரப் என்பவர் சில போலி ஆவணங்களை பயன்படுத்தி 13 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதி என்பதும், மேலும் அவன் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குமூலம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி…. விரைவில் பரிசோதனை….!!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோர்பேவக்ஸ் என்ற பூஸ்டர் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் உருவாக்கியுள்ளது. தடுப்பூசி ஒன்றே கொரோனா எதிரான சிறந்த ஆயுதமாக கருதப்படுகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் கோவிசில்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி என்று மூன்றாவது தவணையாக ஒரு தடுப்பூசியைப் போட தொடங்கியுள்ளனர். பிற நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக பரிந்துரைக்கப்பட்டு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய செம்பரி ஆடுகள்…. மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை பொதுமக்கள் சிலர் சேர்ந்து மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மன்னிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆடு ஒன்று அந்த வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை கவனிக்காமல் கண்டி நதிக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த பிற செம்மறி ஆடுகளும் அதே பள்ளத்தில் வரிசையாக குதித்தன. இதனால் வெள்ளம் அந்த ஆடுகளை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

கார் புக்கிங்கை கேன்சல் செய்த பெண்…. ஆபாச வீடியோ அனுப்பி பலிவாங்கிய ஓட்டுனர்….!!

மும்பையில் கேப்ஸ் சவாரியை ரத்து செய்த பெண்ணை பழி வாங்கும் விதமாக ஆபாச வீடியோ அனுப்பிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பயணத்திற்காக ஒரு கேப் நிறுவனத்தில் வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஏசி பழுதடைதிருந்தது மற்றும் அதிக கட்டணம் கேட்டதற்காக அந்தப் பெண் அந்த புக்கிங்கை ரத்து செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கேப்ஸ் நிறுவனத்தின் 18 வயது ஓட்டுநரான உத்தவ் குமார் பிரமோத் சுக்லா. […]

Categories
தேசிய செய்திகள்

துர்கா பூஜை மின்விளக்குகளால் விமானங்களை இயக்குவது பாதிப்பு…. கேப்டன்கள் புகார்…!!

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகாக அமைக்கப்படகுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   மேற்கு வங்கத்தி தற்போது துர்கா பூஜை தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் தயார் செய்து அதன்மீது துர்காதேவி சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தல் சுற்றிலும்  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள்…. அதிரடி சோதனை நடத்திய ஐ.என்.ஏ அதிகாரிகள்….

  மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட  நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ திடீர் சோதனை நடத்தியது. கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதாக சிவகங்கையை சேர்ந்த வாலிபரான காளிதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திடீரென சிவகங்கையில் உள்ள காளிதாசின் அண்ணன் வீட்டில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் இருவர் திடீர் அதிரடி சோதனையில் இறங்கினர். மேலும் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலியகுளம் பகுதியிலுள்ள மருத்துவர் தினேஷ் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பெண்ணும் இப்படி ஒரு தியாகத்தை செய்யமாட்டாங்க”… தாய்ப் பாசத்திற்கு ஏங்கிய காதலனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி..!!!

தாயை இழந்து தவித்த தன் காதலனுக்காக அவருடைய தந்தையை திருமணம் செய்து தாயாகவே மாறியுள்ளார் ஒரு காதலி. ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி தாயை போல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்காக தாயாகவே மாறி விட்டால் என்னவாகும்? அவ்வாறு தன்னுடைய காதலி,  தாயாகவே மாறிய ஒரு காதலனை பற்றிய தொகுப்பு தான் இது. இந்த வீடியோவானது டிக்டாக் தளத்தில் @ys.amri என்ற பயனர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரது தாயார் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு ஊரே சேர்ந்து காளைக்கு ஹாப்பி பர்த்டே கொண்டாடி இருக்காங்க”… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு காளை மாட்டின் பிறந்தநாளை ஒரு ஊரே சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கேரிமிட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான லிங்கராஜ்,பிரகாஷ், மால்தேஷ், கர்பாசு ,பசவராஜ் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காளை கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் பெயர் ராட்சஷா என்பதாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த காளைக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…. பத்தாயிரம் பொம்மைகள் பயன்படுத்தி கொலு…. அசத்திய பெண்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் 10,000 பொம்மைகள் பயன்படுத்தி கொலு வைத்திருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் பெண்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கமாகும். கொலு வைக்கும் கலாச்சாரம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வட இந்தியாவில் நவராத்திரியின்போது இதுபோன்ற கலாச்சாரம் பின்பற்றப்படுவது இல்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாக்கியலட்சுமி […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… மருத்துவர்கள் கோரிக்கை..!!!

கேரள அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கிராமங்கள் தோறும் அரசே இலவசமாக முகாம்கள் அமைத்து கோவிசில்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வந்தது. இதன் […]

Categories
தேசிய செய்திகள்

தியேட்டர்களை திறக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சினிமா ரசிகர்கள்….!!

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க மராட்டிய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு எந்த துறையையும் விதிவில்லக்கல்ல, இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில் சினிமா மற்றும் திரையரங்குகளும் ஒன்றாகும். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை இயக்குவது தொடர்பாக சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடந்த மாதம் மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி…. ஒப்புதல் வழங்கியது இந்திய அரசு….!!

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா வைரசானது இந்தியாவில் கோவிசில்டு மற்றும் கோவாசின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் வந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்த தடுப்பூசி பயன்பாடு 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் என மத்திய அரசு அறிவித்திருந்தது சற்றே கவலையளிக்கும் விஷயமாகவே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அனுமதிக்க மாட்டோம்…. அதானி குழுமத்தின் அதிரடி அறிவிப்பு…!!

அதானி துறைமுக நிர்வாகம் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை கையாள போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குஜராத் மாநிலம் முத்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த போதை பொருளின் தேசிய மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகின. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த திட்டத்தை மறுபடியும் தொடங்கப் போறோம்…. டெல்லியில் முதல்வர் அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ‘ரெட் சிக்னலில் இன்சின் நிறுத்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சாலையில் வண்டியில் செல்லும்போது சிவப்பு விளக்குகள் எரியும் போது வண்டியின் எஞ்சினை அணைத்து விடுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இலவசமாக தடுப்பூசி போடுறதனால தா இப்படி நடக்குது… பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் கொடுத்த விளக்கம்…!!!

நீங்கள் இலவசமாக தடுப்பூசி போடுவதால் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது என மத்திய மந்திரி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தற்போது பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இது நடுத்தர மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலிய இணை மந்திரி ராமேஷ்வர் டெலி நிருபர்களிடம் கூறியதாவது, ” பெட்ரோல் விலை ஆனது உயர்த்தப்படவில்லை. அதன் மீதான வரி விகிதமே அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தை பொருத்தமட்டில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டத்தின்போது பலியான விவசாயிகளுக்கு… பிரியங்கா காந்தி அஞ்சலி…. லகிம்பூர் கெரி செல்கிறார்…!!

கடந்த 3ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார் விவசாயிகள் மீது மோதியது இதில் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது காரை மோதியது மத்திய மந்திரி மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களில் 2 முறை நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்….!!!

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை பதிவு செய்த தேசிய நிலநடுக்க மையம் ரிக்டர் அளவுகோலில் 3.6 சென்டிமீட்டர் உணரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறியது. இதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்திற்கு டிராக்டரில் சென்ற பயணிகள்… கனமழை காரணமாக கடும் அவதி…!!!

தொடர் கனமழை காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் விமான நிலையத்தில், மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பயணிகள் விமான நிலையத்திற்கு டிராக்டரில் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவின் கோனப்பன அக்ரஹார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பெங்களூருவில் இன்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட்…. கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, கேரளாவில் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வயசுல இவ்வளவு டேலண்டா….? சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி….!!

அசாத்திய நினைவாற்றல் கொண்ட சிக்கமகளூரு வைத்து சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் பனகல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாஸ்வத் மற்றும் சுமிதா தம்பதி இவர்களுக்கு ஆர்வி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. சிறுவயது முதலே இந்த சிறுமிக்கு அசாத்திய நினைவாற்றல் இருப்பதை அறிந்த பெற்றோர் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் அவளது சிறுமியின் நினைவாற்றலை பதிவு செய்ய விரும்பியுள்ளனர். இதனால் அந்த நிறுவனத்திற்கு இணையதளம் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை…. சுவர்கள் இடிந்து விழுந்து கார்கள் சேதம்….!!!!

பெங்களூருவில் தொடர் கனமழை காரணமாக இரண்டு இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் பழமையான வீடுகள் மற்றும் சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில் […]

Categories

Tech |