மராட்டிய மாநிலத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் மராட்டிய மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த நிறுவனமே தானே மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளன. மேலும் இது குறித்து […]
Tag: தேசிய செய்திகள்
கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் மற்றும் அவருடைய ஆறு வயது குழந்தை இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை சரிவர கவனிக்காத காரணத்தினால் குழந்தையின் தாயார் குழந்தைக்கு முகம், கால்மூட்டி, அந்தரங்க உறுப்பு […]
இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியில் மணமகன் எனக் கூறிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பிரதிக் ஸ்ரீவத்ஸவா எனும் இளைஞர் தன்னை மோசடி செய்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது இந்த இளைஞர் தன்னை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் என கூறிக்கொண்டு ஆப்பிள் பொருட்கள் அனைத்தையும் 40 சதவிகிதம் தள்ளுபடி விலையில் […]
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டூரிஸ்ட் விசா விநியோகம் செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விசா வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு டூரிஸ்ட் விசா வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி […]
பண்டிகை காலங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக கொண்டாடும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஷாப்பிங், கொண்டாட்டம் என்று செல்ல தொடங்குவார்கள். தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாடினால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று […]
பண்டிகைக் காலம் என்றாலே வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு பொருள்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் தொடங்கி விட்டதால் பண்டிகை காலம் நெருங்கி விட்டது. எனவே இதனை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]
பெங்களூருவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் சிட்டி ரயில் நிலையத்தில் குழந்தைகள் விற்பனை நடப்பதாக குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இரண்டு பேரும் பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் […]
ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக […]
உத்தரபிரதேசத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பேருந்து ஒன்று டெல்லியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாபுர்ஹியா கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் . இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 […]
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றி சரியான நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு செய்பவர்களுக்கு ரூபாய் 5,000 பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வருடத்திற்கு 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்த புதிய திட்டம் வரும் அக்டோபர் […]
கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மகரப்பி கிராமத்தில் அசுத்தமான குடிநீரை உட்கொண்டதால் ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க புதிய குழாய் அமைக்கும் போது பழைய குழாய் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்துள்ளது. இதை அறியாத பொதுமக்கள் பலரும் அந்த நீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். […]
குடிபோதையில் கார் ஓட்டி தொழிலாளர்கள் மீது மோதிய வழக்கில் பிரபல மாடல் அழகி மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார். பிரபல மாடல் அழகியான ராஜகன்னி கடந்த வாரம் குடிபோதையில் சொகுசு கார் ஒன்றை ஓடிச்சென்று சாலையோர தொழிலாளர்கள் மீது மோதி உள்ளார். இதில் 8 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் உடல் நலம் சரியில்லை என கூறிய […]
பெங்களூருவில் குழந்தைகளைத் திருடி விற்று வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திவந்த விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் குழந்தைகள் இல்லாத தம்பதியிடம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பின்னர் இவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து […]
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேற்று முதல் தடை விதித்துள்ளது. இந்த வரிசையில் சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்துக்காக விளையாடக் கூடிய ஆபத்தான விளையாட்டுக்கள் போன்ற அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை திறக்கும்போதே மாநில […]
விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, கொரோனா […]
திருப்பதி கோயிலின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ள அரசு அதிகாரிகள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தேவஸ்தானத்தின் தலைவராக பதவி ஒய்.வீ. சுப்பா ரெட்டி பதவி வகித்து வருகிறார் செயல் அதிகாரியாக ஜவகர் ரெட்டி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசு அதிகாரிகளிடம் திருமலைக்குச் சென்று தேவஸ்தானத்தின் செயல்பாடுகள் குறித்து கற்றுத் தெரிந்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருப்பதி தேவஸ்தான […]
பாஜகவைச் சேர்ந்த ஆஷிஸ் தாஸ் திரிபுரா மாநிலத்தின் சூர்மா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தொடர்ந்து முதலமைச்சர் பிப்ளாப்தேப் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயிலுக்கு சென்று தனக்கு மொட்டை அடித்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆசிஷ் தாஸ், தான் பாஜகவில் இருந்து தான் விலகுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் கூறினார் […]
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்டார். அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்துவுக்கு பதவி வழங்கப்பட்டதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமரீந்தர் சிங்க் ராஜினாமா செய்தது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்க் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். […]
மைசூரு தசரா திருவிழாவையொட்டி புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ் பெற்ற தசரா திருவிழா வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்கி 15ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் […]
பெங்களூருவில் குழந்தைகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஆர்.டி. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு ஆறு மாத கைக்குழந்தையும் அடங்கும். இந்த தம்பதி பணம் நகைகள் திருடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த குழந்தைகளின் தாய் அவர் வசிக்கின்ற பகுதியை சுற்றியுள்ள குடியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு அதனை தன் கணவனிடம் கூறுவார். பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுடைய குழந்தைகளை பயன்படுத்தி அந்த […]
டெல்லியில் சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆனந்த் பாரட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் சுசீலா. இவருக்கு ஏழு வயதான மான்சி மற்றும் மோகன் என்ற இரு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று வீட்டில் உள்ள சமையல் கேஸ் எதிர்பாராதவிதமாக கசிய தொடங்கியுள்ளது. இதனால் உடனே அங்கு தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுசீலா மற்றும் […]
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2020- 2021 ஆம் ஆண்டுக்கான ரயில்வே ஊழியர்களின் போன்ஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என அறியப்படுகிறது. மேலும் அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூருக்குச் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த ஞாயிறு அன்று லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் காண ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் லக்னோ வந்தடைந்தார். அப்போது அவரை வெளியே வரவிடாமல் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ராகுல் காந்தி எந்த சட்டத்தின் கீழ் என்னை […]
கர்நாடகாவில் ஓடும் பஸ்ஸில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் படா கிராமத்தை சேர்ந்தவர் வந்தனா(30 வயது ). இவருடைய அத்தை மகன் பிரவீன்(28 வயது) இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிரவீனும் வந்தனாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரவீனின் நடவடிக்கையை பிடிக்காமல் வந்தனா அவருடைய காதலை கைவிட்டதாக தெரிகிறது. மேலும் வந்தனா இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது […]
ஆந்திரா விமான நிலையத்தில் பெண்ணின் கைப்பையிலிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ஹைதராபாத் சென்ற பெண் ஒருவரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்து 13 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தகவலறிந்த ஆயுதப்படை போலீசார் அவரை ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாமில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அசாமின் க்ரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிங்கலா ஆற்றின் மீது தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் செராகி மற்றும் அருகே உள்ள கிராமத்தை இணைக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக பல ஆண்டுகளாக ஆற்றை கடந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் பாலத்தின் வழியே ஆற்றை கடந்து செல்லும்போது […]
திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்க இருக்கிறது இதற்கு பயன்படுத்தப்படும் தார்ப்பாய் மற்றும் கயிறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தார்ப்பாய் மற்றும் கயிறு ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் தார்பாய் ஒவ்வொரு ஆண்டும் வன ஊழியர்களால் வடமலைப்பேட்டை சுற்றியுள்ள வயல்களில் வளரும் தார்பாயை சேகரித்துக் கொண்டு […]
சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பை சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிலில் பக்தர்கள் அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாலும் நாளை முதல் கோயிலில் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே […]
சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்.சி.பி காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் மேலும் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு வந்த தகவலின் பேரில் கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப் பொருளுடன் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் […]
பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய எம்.எல்.ஏ தன் பாவத்தை போக்க மொட்டை அடித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏவான ஆசிஸ் தாஸ் என்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி என்பவரை கொல்கத்தாவில் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னராக அவர் யாகம் வளர்த்து மொட்டை அடித்துள்ளார். மேலும் கலிக்கட் இடத்தில் கங்கை ஆற்றில் புனித நீராடியும் உள்ளார். […]
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகளை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக […]
திருப்பதிக்கு செல்லும் நடைபாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் மலைப்பாதை வழியே நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவில் அருகே சிறுத்தை புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை அவ்வழியாக காரில் […]
மூணாறில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பகுதியான மூணாறுவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது அவ்வப்போது நடைபெறும் ஒரு விஷயமாக இருந்து வந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் கள்ள நோட்டு புழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது புத்துயிர் பெற்றுள்ளது. 200 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுகள் வழக்கமாக உள்ள ரூபாய் […]
வாகனங்களில் ஹாரனுக்கு பதில் புதிய ஒலியை பொறுத்த சட்டம் இயற்றப்பட உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளதால் அதனை மாற்ற போவதாகவும் அதற்கு பதிலாக ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் ஒலிக்கும் ஆகாஷ் வாணி இசையை மற்றும் போலீஸ் வாகனங்களில் பொருத்த போவதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் அனைத்து வாகனங்களும் ஹாரன் சத்தங்களுக்கு பதிலாக புல்லாங்குழல்,தபலா, […]
திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுதினம் தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மதியம் 12 மணி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. புதன்கிழமை மாலை 5.10 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் 8ஆம் […]
மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ரூபாயை உணவு பொட்டலம் என நினைத்து குரங்கு தூக்கிச் சென்று பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து வீசியது அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஒருவர் தனது துண்டில் ஒரு லட்சம் ரூபாயை முடிச்சுப்போட்டு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு திடீரென்று வந்து அவர் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை மின்னல் வேகத்தில் தூக்கி சென்றது. இதனால் பதறிப்போன அந்த […]
உலக அமைதிக்கான புகைப்பட போட்டியில் பெங்களூர் சிறுமிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. யுனஸ்கோ மற்றும் ஆஸ்திரியா நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் உலக அமைதிக்கான புகைப்பட விருது என்ற பெயரில் புகைப்பட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் சங்கர் என்பவருடைய மகள் ஆத்யா(4 வயது) கலந்து கொண்டார். அவருக்கு சர்வதேச விருதும் கிடைத்துள்ளது. ஆதித்யாவின் தாயாரான ரோஷினி தனது பெற்றோர் வீட்டில் அவருடைய தாயின் மடியில் படுத்தபடி ஓய்வெடுத்தார். அதை மகள் […]
மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுத்து முடக்க போவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்களை வாங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் சிறப்பு மளிகை தொகுப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகையும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. […]
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்கள் மீது காரை ஏற்றிச் செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள பன்வீர்பூரில் அரசியல் ரீதியான நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முதல் […]
உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தியை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மகன் பயணித்த வாகனம் ஏற்றியதால் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரியங்கா லக்னோ சென்றார். சம்பவ இடத்திற்கு அவர் செல்வதை தடுக்க நேற்று இரவே போலீசார் அவரை தடுத்தனர். ஆனால் போலீசார் அறிவுரையை மீறி இரவோடு இரவாக கொல்லப்பட்ட விவசாயிகளின் கிராமத்திற்கு பிரியங்கா புறப்பட்டார். சுமார் […]
காங்கிரஸ் கட்சி சொகுசு கப்பலில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுப்படுவது அனைத்தும் உண்மை பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்டதற்காக கைது […]
உலகின் மிக பெரிய தேசிய கொடி இந்திய எல்லையான லடாக் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும், லே நகரில் உலகத்தின் மிகப்பெரிய தேசியக்கொடி நிறுவப்பட்டது. கதர் துணியில் செய்யப்பட்ட இந்த தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செய்துள்ளனர். தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர்கே மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியான இது 150 அடி அகலமும் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலையினை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வெடிக்கவும் விற்பனை செய்யவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. நவம்பர் மாதம் 4ஆம் […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கா பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நெலமங்கா பகுதியில் வசித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர் பிரசன்னகுமார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகியும் அந்த துக்கத்தில் இருந்து வெளியில் வர முடியாத அவருடைய மனைவி தன் குழந்தைகளுடன் தற்போது தற்கொலை செய்து […]
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ பணியாளர்களை லிப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டை பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அனைவரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மற்றொரு உணவகம் உணவு வினியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகம், புதுச்சேரி டெல்லி, போன்ற மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் அதிகமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று பறவல் குறைந்து வருகிறது. அதனால் அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதனையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில […]
கேரளாவில் டீக்கடை நடத்தி வரும் வயதான தம்பதி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கேரளாவில் டீக்கடை நடத்தி வருபவர் கேஆர் விஜயன் மற்றும் இவருடைய மனைவி மோகனா. இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். இவர்கள் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிகிறது. அதோடு வருகிற 21ம் முதல் 28ம் வரை ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர். அப்போது அவர்களுடைய பேரனையும் அழைத்து செல்கிறார்களாம். கே ஆர் விஜயன் […]
திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக திருமலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பக்தர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என […]
ட்ராபிக் போலீஸ்காரர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் உள்ள ஆசாத் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் டிராபிக் போலீஸ் விஜய்சிங் குராவ். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை அவர் வழிமறித்து உள்ளார். விதிமுறைகளை மீறி வந்த அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து போலீஸ்காரர் மீது மோதியுள்ளது. இதில் அவர் முன்பக்கம் உள்ள பேனட்டின் மீது விழுந்தார். இருப்பினும் அந்த […]