Categories
தேசிய செய்திகள்

“நீரஜ்” பெயர் கொண்டவர்களுக்கு…. பெட்ரோல் இலவசம் இலவசம்…. அசத்தல் அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இதனையடுத்து இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் பாருச் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் “நீரஜ்” என்ற பெயர் கொண்ட அனைவருக்கும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக கொடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேற்றும் இன்றும் கொடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-15 முதல் ரயில் சேவை…. ஆனால் ஒரு கண்டிஷன்…. மும்பை அரசு அதிரடி…!!!

இந்தியாவில்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது மும்பை நகரம் தான். அங்கு நோய் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு உயிர்ரிழந்தனர். இதனால் அங்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மும்பையில்கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் 15 முதல் புறநகர் ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு வாங்குவதற்கு இரண்டு தவணை […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பிரபல நடிகை மரணம்…. கண்ணீரில் ரசிகர்கள் – அதிர்ச்சி…!!!

பிரபல மலையாள நடிகை சரண்யா சசி(34) இன்று உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு பதினொரு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலபாவு, பாம்பே மார்ச் 12 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

PM கிஷான்: விவசாயிகளுக்கு ரூ.2000 விடுவித்தார் பிரதமர்…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

“குறையும் பாதிப்பு” இன்று வாரச்சந்தைகள் திறப்பு…. டெல்லி அரசு அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று முதல் வார சந்தைகள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடைய வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சந்தைகள் திறக்கப்படுகிறது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் 50% பேர் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சாலையோரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு…. கேரள அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் கொடுக்கப்படும் நிதியுதவி, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளும் ரேஷன் கார்டு மூலமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீதிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று கேரள உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர் அனில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாடகை […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.200 சேமித்தால்…. கடைசியில் ரூ.28 லட்சம் கொடுக்கும்…. எல்ஐசியின் கலக்கல் திட்டம்…!!!

எல்ஐசி நீண்ட கால முதலீட்திற்கான ஒரு சிறந்த நிறுவனம் ஆகும். இது  உங்களுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியாகவும், யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்கான ஏதுவாக நிறைய லாபம் தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம். இந்த திட்டத்தில் சிறிய முதலீடு செய்து ஓய்வு காலத்தில் பெரிய தொகையை பெறலாம். இதற்கு சிறப்பு காப்பீடு வசதியும் உள்ளது. 12 வயதுக்கு மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பைக் சாவியை போலீஸ் எடுப்பது சரியா…? அபராதம் வசூலிக்கலாமா…? வாங்க பார்க்கலாம்…!!!

வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை சீருடை அணிந்த காவல்துறையினரும், கிராமப்புறங்களில் காக்கிச் சீருடை அணிந்த காவல்துறையினரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ரூ.2000 உங்களுக்கு வந்து சேரும்…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் டிபி நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.வீட்டில் இருக்கும்போது முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்தனர். இவ்வாறு ஊரடங்கால் நாட்டில் காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2019 காசநோயால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரை 18 லட்சம் பேர் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் விருப்பமில்லாமல்…. பாலியல் உறவில் ஈடுபட்டால்…. அதிரடி உத்தரவு…!!!

கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் கேரள […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே வாங்குங்க…. இன்று தங்கபத்திரம் வெளியீடு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

தங்கம் என்பது மக்களிடையே ஒரு முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. தங்கம் மிகப் பெரிய சொத்தாகவும் உளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு இன்று துவங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தங்க வெளியீட்டில், தங்கத்தின் விலை இந்த  முறை கிராமிற்கு ரூ.4,790 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில்…. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு…. பிசிசிஐ அறிவிப்பு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

கொரோனா தடுப்பூசி சான்றிதழை…. இனி வாட்ஸ் அப்பிலேயே எடுக்கலாம்…. வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியா முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல் டோஷ் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000 பணம்…. நாளை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

60 பிச்சைக்காரர்களுக்கு நிரந்தர வேலை…. ராஜஸ்தான் அரசு அதிரடி…!!!

வறுமையின் காரணமாக பலரும் பிச்சை எடுத்து அதன் மூலம் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ராஜஸ்தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக உருவாக்குவதே மாநில அரசின் நோக்கமாகும். இதன் முயற்சியாக “கௌரவமான வாழ்வு” என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வருடம் தொழிற் பயிற்சி கொடுக்கும் முயற்சியோடு மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.168 முதலீடு செய்தால் போதும்…. ரூ.4000 பென்சன் கிடைக்கும்…. மத்திய அரசின் திட்டம்…!!!!

அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்களும் பென்சன் பயன்களை அனுபவிக்கும் விதமாக பிரதமர் மோடி அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு சாமானிய தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் எந்த ஒரு இந்தியரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் முதலீடு செய்ய 18 முதல் 40 வயது வரம்பில் இருக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு…. ரூ.6 கோடி பரிசுத் தொகை…. ஹரியானா அரசு அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கி சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களிடம் மக்கள் பலரும் ஏமாறி தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். அதிக விலைக்கு வாங்கப்படும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்திக்கொண்டு பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாகவும் அதற்கு பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு…. மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால்  மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அவசர காலத் தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே ஒரு டோஸ் செலுத்திக் கொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில்…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!!

ஜம்மு காஷ்மீர் புட்காமின் மொச்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினரை அங்கிருந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர் வினையாற்றிய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். மேலும் அந்த இடத்திலிருந்து ஒரு AK 47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த நாட்களில் கட்டாய முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருப்பினும் மீண்டும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதில் மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை நீட் தேர்வுக்கு…. விண்ணப்பித்த மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

முதுநிலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்றும், முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேசிய தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் மாதம் புதிய தடுப்பூசி…. பயன்பாட்டுக்கு வரும்…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனாவை ஒழிப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால்  மக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூணாவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

நகைக்கடன், வீட்டுக்கடன், கார்கடன் வாங்குவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான மஹாராஷ்டிரா வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது நகை கடன், வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவற்றுக்கான பிராசஸிங் கட்டணத்தை ரத்து செய்வதாக பாங்க் ஆப் மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடன்களுக்கு 6.90 சதவீதமும் கார்களுக்கு 7.30 சதவீதமும் வட்டி விதிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு 1 மணி நேரம் நீட்டிப்பு…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

இரு மடங்கு லாபம் கொடுக்கும்…. பிளக்சி டெபாசிட் திட்டத்தில்…. இணைவது எப்படி…???

எஸ்பிஐ வங்கியின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் ஒன்று பிளக்சி டெபாசிட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும்.அதிகபட்ச தொகைநிர்ணயிக்கப்படவில்லை . முதலீடு எவ்வளவு செய்யலாம்? இந்த திட்டத்தில் ஒரு ஆண்டில் அதிகபட்சம் ரூ.50000 டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.5000 டெபாசிட் செய்யலாம். ஒரு தவணைக்கான குறைந்தபட்ச தொகை ரூ.500 . இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு காலம் ஐந்து வருடங்கள். ஆனால தேவையெனில் அதிகபட்சம் ஏழு வருடங்கள் வரை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குறவங்க…. வட்டி பணத்தை சேமிக்க…. செம சூப்பர் திட்டம்…!!!

கொரோனா வந்த பிறகு மக்கள் தங்களுடைய நிதி நெருக்கடியை இழந்து தவித்து வருகின்றனர்.  ஊரடங்கால் பல துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  பண நெருக்கடியில் மக்கள் சிக்கி கொண்டதன் காரணமாக வீடு வாங்குவதும் குறைந்தது. வந்த பிறகு மக்கள் பலரும் தங்களுடைய நிதி நெருக்கடியை இழந்து தவித்து வருகின்றனர் இதனால் பல துறைகளிலும் பாதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. பண நெருக்கடியில் மக்கள் சிக்கி கொண்டதன் காரணமாக வீடு வாங்குவதும் குறைந்தது.இதனால் ரியல் எஸ்டேட் துறையும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்க்ளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதலும், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்சர் – போலீஸ் அதிரடி…!!!

திருப்பதியில் அதிக சத்தம் ஏற்படுத்தும் சைலன்ஸர்களை அகற்றி அவற்றை “ரோட் ரோலர்” மூலம் நசுக்கி அழித்த சம்பவம் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. அதிக சத்தத்தின் மூலம் ஒலி மாசு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் பயத்தை உண்டு பண்ணும் சைலன்சர்களை மாற்றக்கூறி எச்சரிக்கை விடுத்த பின்னும் அவற்றை மாற்றாத காரணத்தால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத் ஸ்டேடியத்தின்…. பெயரையும் மாற்றுங்கள்…. ஷங்கர்சிங்க் வகேலா…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருக்கு ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயர் மாற்றப்பட்டது போல குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை  சர்தார் படேல் ஸ்டேடியம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் நோக்கத்திற்காக சுயநலம் – பிரதமர் மோடி கவலை…!!!

செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் கடந்த சில தினங்களாகவே மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாடு முன்னேற்ற தவிர யாராலும் தடுக்க முடியாது. ஒரு புறம் நம் நாடு ஒலிம்பிக் பதக்கங்களை அடித்து தனது இலக்கை அடைகிறது. மற்றொருபுறம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கியின் தந்தையாக கருதப்படுகிறார். இவருடைய பெயரில் இனிமேல் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விருது பெறும் வீரர்களுக்கு பதக்கம், […]

Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…. காசோலை பரிவர்த்தனை வசதி…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

வங்கிகளில் 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை வசதி கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்னும் வசதி இந்த மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளாக இருந்தாலும் கூட காசோலை கிளியரிங் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் இந்த வசதி கிடையாது…. ரயில்வேத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

ரயிலில் பயணிகளின் வசதிக்காக கடந்த 2019 ஆம் வருடம் வை-பை திட்டத்தை அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தத் திட்டமானது நான்கு வருடங்களில் விரிவுபடுத்தப்பட்டு முக்கிய ரயில்கள் அனைத்திலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வை-பை  திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், வை-பை தொழில்நுட்பம் அலைவரிசை கட்டணங்களின் வடிவத்தில் தொடர்ச்சியாக செலவுகளை ஏற்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி முகவரிசான்று இல்லாமலேயே…. ஆதாரில் அட்ரஸ் மாற்றலாம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் அட்டையில் சில திருத்தங்கள், புதிய ஆதாருக்கு விண்ணப்பித்தல் போன்றவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்றும் செயல்முறையை ஆதார் ஆணையம் எளிமைப்படுத்தி வருகிறது. அதன்படி ஆதார் அட்டையில் முகவரி மாற்றுவதற்கு முகவரி சான்று இல்லாமலேயே எளிதாக மாற்ற ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே முகவரி சான்றுக்கு பதிலாக வெறும் ஒப்புதல் கடிதத்தை மட்டுமே வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நாளை வரை…. வங்கி சேவைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி வரை எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு இணைய சேவையையும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதலும், […]

Categories
தேசிய செய்திகள்

Fast Tag பயன்படுத்துபவர்கள்…. இந்த 5 விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க…!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  பல வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியிருந்தாலும் அந்த அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்யாமலிருப்பது, செயல்படாத பாஸ்டேக் வைத்திருப்பது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்நிலையில் பாஸ்டேக் வைத்திருப்பவர்கள் முக்கியமான ஐந்து விஷயங்களை […]

Categories
தேசிய செய்திகள்

உங்க PF கணக்கிலிருந்து…. கொரோனா சிகிச்சைக்கு பணம் எடுப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவால் மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ செலவுகளுக்கு கூட பணமில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழலில் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அனுமதி அளித்தது. அதன்படி நிறைய வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருந்து […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம்…. இது இல்லையென்றால் அபராதம்…. தேவஸ்தானம் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தேவஸ்தானம் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5 லட்சம் சேமித்தால்…. ரூ.10 லட்சம் பணம் கிடைக்கும்…. இந்த திட்டத்தில் உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான்  கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் வங்கி சேவைகள் இயங்காது…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி வரை எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு இணைய சேவையையும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.5000 பென்ஷன் கொடுக்கும்…. மத்திய அரசின் திட்டம்…. இணைவது எப்படி…??

தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 8-10% லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக…. பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி…. கணவரே வீடியோ எடுத்த அவலம்…!!!

மத்திய பிரதேசம் போபாலில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கணவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார். ஆனால் அந்த மந்திரவாதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவியை அழைத்து வரச்சொல்லி அவரோடு தான் உறவு வைத்துக்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த கணவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா…? என்னுடன் வாருங்கள்…. போலி சாமியாரின் அதிர்ச்சி செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சாமியார் என்ற பெயரில் பலரும் பல மோசடிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை பக்தி என்ற பெயரில் சீரழித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது போன்றவர்களை காவல்துறையும் கைது செய்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆசிரமம் நடத்தி வந்த சாய் விஸ்வ சைதன்யா என்னும் சாமியார் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். அதுமட்டுமன்றி பலரையும் வசியப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார். இவர் டிவி, யூடியுப் சேனல்களில் ஆன்மீக […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

வெண்கலப்பதக்கம் வென்ற…. பஞ்சாப் வீரர்களுக்கு…. தலா ரூ.1 கோடி பரிசு…!!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது […]

Categories
தேசிய செய்திகள்

சுயமாக தொழில் செய்வோருக்கு…. ரூ.1 லட்சம் வரை கடன் தரும்…. மத்திய அரசின் திட்டம்…!!!

சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் கார்ப்பரேட் அல்லாத விவசாயம் சாராத சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனானது வங்கிகள், சிறிய பைனான்ஸ் […]

Categories

Tech |