கர்நாடகாவில் மைசூர்-ஊட்டி சாலையில் பேருந்து நிறுத்தம் ஒன்று மசூதி போல் கட்டப்பட்டுள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக வேண்டும் வேண்டுமென்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.பிரதாப் சிம்ஹா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் மசூதி போல் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சனைகள் […]
Tag: தேசிய நெடுஞ்சாலை
காஷ்மீரில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதையை பிரதமர் மோடி வருகின்ற 24-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார். காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதி முதல் பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருன்கிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின […]
கிருஷ்ணகிரி, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டி ஏரி பின்புறம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகட்டி உள்ள 54 பேருக்கு இடிக்க இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் அதிகாரிகள், இந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள், ஷெட்டுகள் நிலங்களில் விளைந்த இருந்த பயிர்கள் முதலியவற்றை பொக்லைன் மூலம் அகற்றினர். […]
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், நாளுக்கு நாள் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தற்போது சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை டூ திருப்பதி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கிடையே நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் ரூ.360 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக […]
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்ததால், அங்குள்ள மக்கள் பதறி ஓடினர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் இசக்கிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலையில் அவருடைய தம்பி காரில் மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி சென்னை தேசிய பிரதான நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் இருந்து புகை வந்ததை சுதாரித்து இசக்கிமுத்து […]
மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களை இணைக்கும் அந்த சாலைகளில் விரைவாக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தவதற்காக அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் […]
தமிழ்நாடு பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு புதுடெல்லியில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலையை திட்டங்கள் மீது விவாதம் செய்தார் .இந்த விவாதத்தில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை […]
விவசாயிகளின் போராட்டத்திற்காக மூடி வைக்கப்பட்டிருந்த டெல்லி-காசிப்பூர் சாலை தற்போது மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெல்லியை இணைக்கும் எல்லையோர நெடுஞ்சாலைகளில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தடுக்கும் பொருட்டு உத்தரபிரதேசம்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காசிப்பூர் எல்லையில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனை விவசாயிகள் அகற்ற முற்பட்டதால் டிசம்பர் 3 ஆம் […]
தமிழகத்தில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த பிறகு ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்க ‘பாஸ்டேக்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாஸ்டேக் முறையானது 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு ‘பாஸ்டேக் ‘ டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான கால அவகாசமும் அளிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை […]
ஐஸ்சை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா உலக சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய சாதனையாக இந்த செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை குஜராத்தின் வதோதரா நகரை மும்பை மற்றும் டெல்லி உடன் […]
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வெளியாகியுள்ளன. நிறுவனம் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: மேனேஜர் (டெக்னிகல்) – 54 சம்பளம்: மாதம் ரூ.67,700 – ரூ.2,08,700 டெபுடி ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) – 97 சம்பளம்: மாதம் ரூ.78,800 – ரூ.2,09,200 ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) – 10 மேனேஜர் (பைனான்ஸ்) – 02 சம்பளம்: மாதம் ரூ.37,400 – ரூ.67,000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் […]
இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு […]
சாலையில் இருந்த மதகில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . அப்பொழுது அங்குள்ள ஒரு மதகில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: General Manager, Manager, Deputy General Manager, Executive Director. பணியிடங்கள்: 69 சம்பளம்: ரூ.15,600 – ரூ.67,000 கல்வித்தகுதி: டிகிரி, இன்ஜினியரிங் வயது: 61க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 16 மேலும் விவரங்களுக்கு www.nhidcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது பஸ் உரசியதால் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் பயணிகள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் பலர் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஜெய்ப்பூர் மாவட்டம் அன்ஞ்ரோல் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக கிடந்த மின் கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்ஸின் […]
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன […]
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம். சென்னையை தவிர […]