Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் தனிச்செயலாளர்…. துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்…!!

தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புக்களில் […]

Categories
உலக செய்திகள்

தாக்குதலுக்கு இந்திய அமைப்பு தான் காரணம்.. குற்றம் சாட்டும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹபீஸ் சயீத் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய உளவு அமைப்பை குற்றம் சாட்டியுள்ளார். ஹபீஸ் சயீத் அமைப்பானது, ஐநா வால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானில் சாதாரணமாக சுற்றி திரிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லாகூருக்கு அருகில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஹபீஸ் சயீத் இல்லத்தில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 24 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு”.. ஆப்கானிஸ்தான் அதிகாரி பேச்சு.. பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம்..!!

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு என்று பேசியதை, பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே அமெரிக்காவின் தலைமையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசுகையில், “பாகிஸ்தான் விபச்சார வீடு” என்று பேசியது, பாகிஸ்தானை கொந்தளிக்கச்செய்தது. இது […]

Categories

Tech |