நாடு முழுவதும் இன்று தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தேசிய உழவர் நாள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம் ” என்று பதிவிட்டுள்ளார்.
Tag: தேசிய விவசாயிகள் தினம்
நாடு முழுவதும் இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுவதால் விவசாயிகளின் பிரச்சினைக்கு மத்திய அரசு இன்று செவிசாய்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளான இன்று “தேசிய விவசாயிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம், விவசாய பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 30 நாட்களாக டெல்லியில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு […]
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று நாடுமுழுவதும் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நமக்கு தினமும் உணவளிக்கும் விவசாயிகளைப் போற்றுவது மிகவும் அவசியம். அதன்படி இன்று விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “உலகின் தலையாய தொழிலாக உழவுத் தொழில் செய்து வரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தேசிய விவசாய தின வாழ்த்துக்கள்’ […]