Categories
மாநில செய்திகள்

தேஜஸ், முத்துநகர் ரயில்களில்….. கூடுதல் பெட்டிகள் இணைப்பு…. தென்னக ரயில்வே அறிவிப்பு….!!!!

தேஜஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: ” தமிழ் புத்தாண்டையொட்டி தேஜஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். மேலும், தேஜஸ் ரயிலின் குளிர்சாதன இருக்கைப்பெட்டிகள் இன்று கூடுதலாக இணைக்கப்படும். தூத்துக்குடி-சென்னை முத்துநகர் ரயில் மற்றும் சென்னை-கன்னியாகுமரி ரயிலிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட  பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |