Categories
தேனி மாவட்ட செய்திகள்

கெட்டுபோன உணவுகள் விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… உணவகங்களுக்கு எச்சரிக்கை…!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உணவகங்களில் இருந்த கெட்டுபோன இறைச்சி மற்றும் உணவுகளை அழித்துள்ளனர். தேனி மாவட்டம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், மணிமாறன், சுரேஷ் கண்ணன் ஆகியோர் கம்பம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கம்பம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை செய்தபோது அங்கு குளிர்சாதன பெட்டிகளில் கெட்டுப்போன இறைச்சி, மற்றும் உணவுகள் இருந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை… போலீஸ் அதிரடி சோதனை… 1700 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி. கள்ளிப்பட்டியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தென்கரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பாஸ்கர் வீட்டில் சுமார் 1,700 மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற மூதாட்டி… மர்மநபர்கள் செய்த காரியம்… போலீசார் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ராஜாத்தி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனை பார்ப்பதற்காக விஐபி நகருக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் சார்பில்… குப்பைகளை அகற்றும் பணி… மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு…!!

வனத்துறையினர் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட மாணவ மாணவிகள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட புறவழிச்சாலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாலிதீன் பைகள், மட்காத குப்பைகள் குவிந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் வனத்துறையின் சார்பில் அப்பகுதியில் தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்த தூய்மை பணிகள் கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் தொடங்கி புறவழிச்சாலையில் உள்ள வனத்துறை நாற்றுப்பண்ணை வரை நடைபெற்றுள்ளது. மேலும் முகாமில் வனத்துறையினர் தேசிய மாணவர்படை, தேசிய பசுமைப்படை, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்… இந்து முன்னணியினர் எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!

அறநிலையத்துறை கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி அதனை தங்க கட்டிகளாக மாற்றி வைப்பு நிதி மூலம் வருவாய் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தமிழகம் முழுவதிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற லாரி டிரைவர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!!

லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் மீனாட்சி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் மீனாட்சி முத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 10 பவுன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுற்றுலாவிற்கு சென்ற நண்பர்கள்… நைசாக திருடிய டிரைவர்… போலீஸ் நடவடிக்கை…!!

சுற்றுலா சென்றபோது காரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது உறவினர் காரில் அவரது நண்பர் முருகேசன் என்பவருடன் கொடைக்கானலுக்கு கடந்த 23 ஆம் தேதி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் காரில் தேனிக்கு திரும்பியுள்ளனர். இந்த காரை பூமலைக்குண்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குரு பாலன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை… சிறுவன் செய்த காரியம்… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 17 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சட்டவிரோத செயல்கள்… போலீஸ் தீவிர ரோந்து… 6 பேர் கைது…!!

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் லோயர்கேம்ப் பகுதியில் வசிக்கும் சரவணன், விஜய், முத்தையா, ஜெயக்குமார், கல்யாணி, கார்த்திக் என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம்… ஆட்சியர் அளித்த உத்தரவு… ஆர்.டி.ஒ நேரில் ஆய்வு…!!

புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய தாலுகா அலுவலகம் கட்ட கடந்த ஆண்டு இடம் தேர்வு செயப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கெட்டுபோன இறைச்சி, மீன் விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 100 கிலோ பறிமுதல்…!!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ கெட்டுபோன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மீன்கள் மற்றும் இறைச்சிகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஜ்சராஜ் மற்றும் அலுவலர்கள் பெரியகுளம் மற்றும் தென்கரை பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமிக்கு தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… முதியவர் போக்சோவில் கைது…!!

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தில் வெள்ளத்துரை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-கார் நேருக்கு நேர் மோதல்… பெண் உள்பட 3 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கார் டிரைவரான இவர் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை சவாரிக்கு ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல செல்வம் 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் வேலை முடிந்ததும் கூடலூரை நோக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விளையாடிகொண்டிருந்த சிறுவன்… நாய் கடித்ததால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாய் கடித்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேட்டுவளவு பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 5 வயதில் பாலகேஸ்வரன் என்ற மகன் உள்ளது இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு அருகே சிறுவன் அவரது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை விரட்டியுள்ளது. இதனையடுத்து அலறியடித்து ஓடிய பாலகேஸ்வரனை விரட்டி பிடித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள்… பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா… கலந்துகொண்ட டி.ஜி.பி…!!

பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அலுவலகத்தில் பாராட்டு சான்றிதல் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கொலை, கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆன்லைன் மோசடி போன்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆன்லைன் மோசடி வழக்கில் டெல்லி வரை சென்று குற்றவாளிகளை பிடித்த போடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண்மாயில் மிதந்த பிணம்… மூதாட்டியின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…

குடும்பத்தகராறு காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி செல்லும் சாலையில் பங்காருசாமிநாயக்கர் கண்மாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கண்மாயில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக அப்பகுதியினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த மாணவி… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வளையப்பட்டி பகுதியில் அசோகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் பவித்ரா பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி வாகன சோதனை… 2 பேர் கைது…

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்கு லாட்டரி சீட்டுககளை சட்டவிரோதமாக கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் லோயர்கேம்ப் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பங்களாபட்டியில் மதன்குமார் என்பவர் என்ற இளைஞர் வாசித்துள்ளார். கூலித்தொழிலாளி இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… பேருந்து டிரைவர் போக்சோவில் கைது…!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பகுதியில் மணிவண்ணன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 17 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிடம் ஆசை வார்த்தைகள் கூறி மணிவண்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த மனைவியின் பெற்றோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கைவிட முடியாத பழக்கம்… ராணுவ வீரரின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுபழக்கத்தை கைவிட முடியாததால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிவாஜி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை கண்டித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மதுப்பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து மதுபழக்கத்தை கைவிட முடியாமல் கண்ணன் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இலவச வீடு கட்டித்தர வேண்டும்… ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை… தேனியில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், சொந்த வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ மற்றும் மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய பெண்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருநாக்கமுத்தன்பட்டி பாம்பு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது விற்பனை செய்ததற்காக இந்திராணி மீது வழக்குப்பதிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு ஏற்பட்ட தொல்லை… பெற்றோர் அளித்த புகார்… வாலிபர் போக்சோவில் கைது…!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டியில் சரத்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த தீ… லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் சேதம்… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…!!

தலையணை நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்ததால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள 5 வது வார்டு பகுதியில் மகபூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தலையணை, பஞ்சு மெத்தை ஆகியவை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தின் பணியாளர்கள் வழக்கம்போல பஞ்சுகளை கடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீப்பொறி பட்டு பஞ்சுகள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்… தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம்… ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…!!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும், அனைத்து ஊராட்சி செயலர்களுக்கு சார்புநிலை கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்… வனத்துறையினர் கண்காணிப்பு… மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை…!!

மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்ன சுருளி என அழைக்கப்படும் மேகமலை அருவி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த அருவிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாயமான வாலிபர்… கிணற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!!

ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான வாலிபர் உயிரிழந்து கிணற்றில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கொங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அமீர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜவகர் சாதிக் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்… பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உள்பட 9 பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அடுத்துள்ள நாராயணதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். ஜீப் டிரைவரான இவர் சவாரிக்கு கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் இருந்து 9 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாடுகளை குளிப்பாட்ட சென்ற சிறுவன்… குளத்தில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்த மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலைமணி தெற்கு தெருவில் கூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ராம்குமார் என்ற  மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை குளிபாட்டுவதற்காக அப்பகுதியிலுள்ள சப்பானி குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் வைத்து கடத்தல்… போலீஸ் அதிரடி சோதனை… 596 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்த வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் காவல்துறையினர் கணேசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்த சாக்குபையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த அம்மாபட்டியை சேர்ந்த ஜெகன், தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருந்த பெண்… மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரக்கையுடன் மின்மோட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் கங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கங்கா ஈரக்கையுடன் மின் மோட்டரை போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் கங்கா மீது பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கங்கா அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்த முயற்சி… பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை… வாலிபர் கைது…!!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 1 1/2டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடகரையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வடகரைக்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொதித்து கொண்டிருந்த எண்ணை… மனைவி செய்த காரியம்… தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை…!!

குடும்பத்தகராறில் கணவன் என்றும் பாராமல் மனைவி கொத்திக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கே.புதுப்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா சமயலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து முருகன் மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருநங்கைகள் கோரிக்கை… ஆட்சியரின் உத்தரவு… 15 பேருக்கு புதிய ரேஷன் கார்டு…!!

ஆட்சியரின் உத்தரவின்படி உத்தமபாளையத்தை சேர்ந்த 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையத்தில் வைத்து 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய நெல் கொள்முதல் நிலையம்… திறந்து வைத்த எம்.எல்.ஏக்கள்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கூடலூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் கோடை, சம்பா என இரண்டு போக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் கம்பம் எம்.எல்.ஏ மகாராஜன், தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் எம்.எல்.ஏ  ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகளுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு நிலங்கள் அபகரிப்பு… அதிகாரிகளுக்கும் தொடர்பு… தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்…!!

அரசு நிலங்கள் அபகரித்ததர்க்கு துணையாக இருந்த 2 தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் தாசில்தார்களுக்கும் இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த வாகனம்… மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதியலில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள அழகாபுரி பகுதியில்  அபிமணி என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் இணைந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அபிமணி மற்றும் நாகராஜ் கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை பிரித்து விடுவார்கள்… காதல் ஜோடியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அச்சத்தில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள  வெற்றி காளியம்மன் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளிலாளியான இவருக்கு ரித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் அவரது உறவினர் மகளான ரிவேதா என்பவரும் 12ஆம் வகுப்பு படித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த பெண்… எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

கணவனை கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள புள்ளக்கவுண்டன்பட்டியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் வைஷ்ணவிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததால் கடந்த ஏப்ரல் மதம் ஜெய்சந்திரனுடன் இணைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவோயிஸ்டுகள் வீட்டில் சோதனை… என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி… தேனியில் பரபரப்பு…!!

மாவோயிஸ்டுகள் 2 பேர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவோயிஸ்ட் ஆக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு காவல்துறையினர் வேல்முருகன் மற்றும் அவருடன் இருந்த பழனிவேல், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாவோயிஸ்ட் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள்… ஊழியர் வீட்டில் திடீர் சோதனை… லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடவடிக்கை…!!

வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் குவித்த அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் என்.ஆர். டி நகரில் முரளிதரன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் அவரிடம் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் பயணம்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்… குழந்தைகள் நலக்குழுவினர் கோரிக்கை…!!

மாணவர்கள் பேருந்துகளில் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்ககோரி குழந்தைகள் நலக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் மாணவ-மாணவிகள் மிகவும் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்வது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் வேப்பம்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லூரி தேனி செல்வதற்கு காலை, மாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து அரசு அறிவித்த கொரோனா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்… மொத்தம் 318 மனுக்கள்… மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்ட நாற்காலிகள்…!!

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அதன்படி கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறையின் சார்பில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்… மாணவர் சங்கத்தினர் கோரிக்கை… ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…!!

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை போன்றவைகளை செய்து தர வேண்டும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு மாணவர் விடுதியிலும் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதிய திட்டத்தை கைவிட வேண்டும்… விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை… ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…!!

லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யகோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த திட்டத்தினால் ஏற்படும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மெக்கானிக்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்கள் கைவரிசை…!!

மெக்கானிக் கடைக்காரரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வன அலுவலக சாலையில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மெக்கானிக்கான இவர் அப்பகுதியில் பஸ், லாரி ஆகியவை பழுது நீக்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கருநாக்கமுத்தம் பெட்டியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மகன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறிய மலைகிராம மக்கள்… வனத்துறை அலுவலகம் முற்றுகை… அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை…!!

விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மலைகிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் போன்ற மலை கிராமங்களும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை வெளியேற  உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டிருந்துள்ளது. அதன் அடிப்படையில் மலைகிராம மக்களை வெளியேற்றுவதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு தகவல்… வழக்கறிஞரை கண்டித்து… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் கேரள வழக்கறிஞரை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லையான தேக்கடியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல் ஜோய் என்பவர் சமூக வலைதளங்களில் முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

400க்கும் மேற்பட்ட இடங்கள்… 5-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்… கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு…

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் படி தேனி மாவட்டத்தில் 5-ஆம் கட்ட சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 60000 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் மாவட்டங்களில் பல்வேறு […]

Categories

Tech |