பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகர்சாமிபுரத்தில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் மதுராபுரியில் செயல்பட்டு வரும் மதுபான கடையின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய குற்றத்திற்காக அல்லிநகரம் காவல்துறையினர் புவனேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது […]
Tag: தேனி மாவட்டம்
மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் மொத்தம் 98 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் […]
குடிநீர் விநியோகம் செய்யாததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள மக்களுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 2 ஆழ்துளை குழாய்களின் மின் மோட்டர்களும் பழுதடைந்த நிலையில் வார்டில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 3 நாட்களாக […]
வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெங்களூரில் வேலைபார்த்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 2 ஆண்டுகள் முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு 1 வயதில் மகள் உள்ள நிலையில் இரண்டாவதாக சங்கீதா இருந்துள்ளார். இதனால் பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து சங்கீதாவிற்கு […]
இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலனின் பிறந்த நாளை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த தினத்தை இந்து எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடியுள்ளனர். இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, நகர தலைவர் கருப்பையா, ஒன்றிய தலைவர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் பலரும் […]
மொபட்டை ஓட்டிய சிறுமி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டிசெல்வி என்ற மகள் உள்ளார். 10ஆம் வகுப்பு படிக்கும் இவர் விளையாட்டுத்தனமாக வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த தனது தந்தையின் மொபட்டை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது அவரது உறவுக்கார சிறுமியான 7ஆம் வகுப்பு படிக்கும் ராகவியையும் ஏற்றிக்கொண்டு கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து […]
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் தெருவில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் வேலை பார்க்கும் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் யோகேஷ், தர்சினி என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த விஜயலட்சுமி […]
குடும்ப தகராறு காரணமாக காப்பகத்தில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பு.கிள்ளனூரில் துரைபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி கோபித்துகொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள […]
தொடர்ந்து அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகிறனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள கோம்பை சாலைதெருவில் முகமது தமீம் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்.எப்.மெயின் ரோட்டியில் உள்ள வணிக வளாகத்தில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நீடூர் முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு முகமது வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், கடையில் வைத்திருந்த […]
கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி அரவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிராதுகாரன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் போஸ் என்பவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக கருப்பத்தேவன்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு பிச்சையம்மாள் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த கன்வேயர்பெல்ட்டில் பிச்சையம்மாளின் சேலை சிக்கி […]
பெண்ணின் கர்ப்ப பையில் இருந்த 31/2 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ராஜ வீதியில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திராணி சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரின் வயிற்றின் அடிப்பகுதி வீங்கி காணப்பட்ட நிலையில் இதுகுறித்து பரிசோதனை செய்தபோது இந்திராணியின் கர்ப்ப பையில் சதை பிடிப்பு […]
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் […]
சமுதாய நலக்கூடத்தை அகற்ற கூடாது என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள 11-வது வார்டில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த நலக்கூடம் ஆக்கிரப்பு இடத்தில் உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஆக்கிரப்பு இடத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் […]
குடும்ப தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி ஆவட்டம் தவதனபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். வேன் டிரைவரான இவர் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சித்திரைக்கனி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்துமாறும், […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை 600ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட […]
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவில் செல்வக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்துள்ளார். இந்த கண்மாய் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை […]
முன்பகை காரணமாக தொழிலாளியை வீடு புகுந்து கத்தியால் தாக்கிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள கீழத்தெரு ஜாமீன் தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான மருதுபாண்டியன் என்பவருக்கும் கீழத்தெரு கள்ளர் பள்ளி அருகே வசித்து வரும் சன்னாசி என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கு மருதுபாண்டிக்கு ஆதரவாக கண்ணன் இருந்ததால் சன்னாசி கண்ணனுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சன்னாசி கண்ணன் வீட்டிற்கு சென்று […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையின் அப்பகுதியில் உள்ள 18-ஆம் கால்வாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது […]
பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைத்து பெண்ணை கத்தியால் குத்திய கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி அருகே உள்ள மீனாட்சி நகரில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது சென்னையில் பணிபுரிந்து வருவதால் அவரது மனைவி ஜோதி சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். இநிலையில் கடந்த 8ஆம் தேதி போடி பகுதியில் உள்ள சுப்புராஜ் நகரை சேர்ந்த கொத்தனாரான வீரராஜ் (எ) பாண்டி ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நான் உங்கள் கணவருக்கு வேண்டியவர் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணி காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை காவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை […]
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரத்தில் போபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். பிசியோதெரபி மருத்துவரான இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபிநாத் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பெரியகுளம்-வத்தலகுண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கலை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோபியின் […]
மாதசீட்டு என்று கூறி பலரிடம் இருந்து பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வரும் காஜா என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மாதசீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டுத்தொகையில் பணம் செலுத்தினால் சீட்டு காலம் முடிந்ததும் சமந்தபட்டவர்களுக்கு வீட்டுமனை வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பலரும் சீட்டில் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த […]
டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் பெண் காவலர் சபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், மாநில […]
குழந்தை இல்லாததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் மாணிக்கம் அடிக்கடி வைஷ்ணவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் வைஷ்ணவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விரக்தியடைந்த வைஷ்ணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி செல்லாயம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வனிதா, பாப்பு ஆகியோருக்கும் இடையே கடந்த மே மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வனிதா, பாப்பு ஆகியோரின் உறவினர்கள் இணைந்து முருகனை தாக்கியுள்ளனர். இதனை பார்த்த முருகனின் உறவினர்கள் வனிதாவை கண்டித்துள்ளனர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், […]
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள குள்ளபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவாதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுவாதியின் பெற்றோர் வீட்டு வேலைகளை செய்யுமாறு கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுவாதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் மகள் விஷம் […]
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கும் 1,800 கனஅடிவீதம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்போக பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது சில வாரங்களாக மழை எதுவும் இல்லாத காரணத்தால் வைகை அணையின் […]
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-4க்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து வகுப்புகளில் இலவச பாடக்குறிப்புகள், குழு விவாதங்கள், வினாடி-வினா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் […]
மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உரக்கடைகளில் அனுமதி இல்லாத உரங்கள் விற்கப்படுகின்றதா எனவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யபடுகின்றதா எனவும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]
நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் நகர வீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சூப்பிரண்டு அதிகரி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா […]
மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் தெருவில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பலத்த காயமடைந்த […]
மாமனாரை காயபடுத்திவிட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒண்டிவீரன் தெருவில் அரசன் மற்றும் அவரது மனைவி சரோஜா வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் சத்யாவை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையறிந்த சத்யாவின் பெற்றோர்களான அரசன் மற்றும் சரோஜா முருகேசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து இதே போல் போடியை அடுத்துள்ள தம்மிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞன் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை அடுத்துள்ள சிறப்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவர் தடுத்ததால் அந்த பெண்ணின் மகனை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உடனடியாக கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]
கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அன்டிபட்டியை அடுத்துள்ள வருசநாடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாண்டியம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நேற்று முன்தினம் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் […]
இருசக்கர வாகனம் நிலை தடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மரிக்குண்டு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவரும் இருசக்கரவாகனத்தில் க.விலக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது கண்டமனூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்புசுவரில் […]
அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி சென்ற 2 டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பாலக்கோம்பை கென்னடிநகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த 2 டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தது தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் பாலக்கோம்பை பகுதியை […]
காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் கோம்பை ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் 3 காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் தண்ணீர் செல்லும் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் […]
புதிதாக கட்டப்பட்டு வரும் தேனி ரயில் நிலையத்தில் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த வேலைபாடுகளுடன் கூடிய சிற்பச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி-மதுரை இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்ததை அகற்றிவிட்டு அகல ரயில்பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரை செல்லும் ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் ரயில் என்ஜின் அதிவேக […]
கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் சங்கத்தினர் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் வக்கீல் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் மானாமதுரை வக்கீல் சங்க செயலாளர் குரு முருகானந்தம் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்த வக்கீல்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி நகர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே ஒரு மூதாட்டி கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சரஸ்வது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 1 […]
உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து குடிநீர் கட்டணத்தை பல மடங்குகளாக உயர்த்தியுள்ளனர். அதன்படி ஒரு ஆண்டில் வீடுகளுக்கான குடிநீர் கட்டணம் 600 ரூபாயாக இருந்ததை 2,820 ரூபாயாகவும், வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 8,460 ரூபாயாக அதிகரித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கட்டண உயர்வை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மட்டும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கார்டு வழங்க வேண்டும் என்றும், 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் திருமுருகன் […]
சொத்து பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் உள்ள 7-வது வார்டில் சின்னகருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி அமிர்தசெல்வி. இந்நிலையில் அமிர்தசெல்விவின் தந்தையான சுடலை முத்துவிற்கு பூர்விக சொத்து உள்ளது. இந்த சொத்தை முழுவதுமாக சுடலை முத்து அவரது மகனுக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என அமிர்தசெல்வி கேட்டுள்ளார். ஆனாலும் சொத்தில் பங்கு […]
மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளி வீட்டில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி சோலை சொக்கலிங்கம் நகர் 4-வது தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகேயன் வீட்டின் குளியலறையில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு […]
கொடிகம்பம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் ஏகலூத்து சாலை பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து கடத்த மாதம் சிலம்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் […]
3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சிறந்த கலைஞர்களுக்கான கலை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கலை விருதுகள் வழங்கப்படாத நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து 15 கலைஞர்களுக்கு கலை […]
உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று எராளமான மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 1,500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆர்பாட்டத்திற்கு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் […]
கத்தியை காட்டி மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ராஜதானி காமாட்சிபுரத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த யாழினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு யாழினி குழந்தையை அழைத்துக்கொண்டு […]