Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாய், மனைவிடம் தகராறு செய்ததால்…. ராணுவ வீரர் செய்த காரியம்…. தேனியில் பரபரப்பு….!!

தாய் மற்றும் மனைவிடம் தகராறு செய்தவர்களை மிரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வ.உ.சி. நகரில் முருகன் (வயது 36) என்பவர் வசித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் மேற்கு வங்காள படைப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவருக்கு சரவணபிரியா (26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சரவணபிரியாவை போடி சர்ச் தெருவை சேர்ந்த தீனதயாளன் (26) கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக நழுவிய கைதி…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…. மீண்டும் சிறையில் அடைப்பு….!!

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் நாராயணன் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ற வாரம் காவல்துறையினர் இவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பெரியகுளம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நாராயணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த நாராயணன் காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் முறையா செய்யல…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. திடீர் மறியலால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை கால்வாய் போன்ற வசதிகள் எதுவுமே முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் செய்த குற்றத்தால்…. பறிபோன தந்தையின் உயிர்…. தேனியில் நடந்த சோகம்….!!

மகன் சிறைக்கு சென்றதால் தந்தை மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சரத்துப்பட்டியில் வைரமுத்து (55) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைபட்டு உள்ளார். இதனால் வைரமுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் பரபரப்பு”…. மாணவிகள் உள்பட 6 பேர் மாயம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தேனியில் அடுத்தடுத்து மாணவிகள் உள்பட 6 பேர் திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள திருமலாபுரம் 1-வது தெருவில் வசித்து வரும் அர்ச்சனாதேவி(17) பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து போடி டவுன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனையடுத்து உத்தமபாளையம் அடுத்துள்ள கோவிந்தன்பட்டி ஆர்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. 6 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி காவல்துறையினர் அப்பகுதியில் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மிட்டாய் கொடுக்குறேன் என் கூட வாங்க…. சிறுமிகளின் துரித செயல்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….!!

மிட்டாய் வாங்கி கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  சம்பவத்தன்று இவர் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு மிட்டாய்கள் வாங்கிக் கொடுத்து மறைவான பகுதிக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்த சிறுமிகள் உடனடியாக கத்தி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சமரசம் பேச முயன்ற தொழிலாளி…. மனைவி மற்றும் கள்ளகாதலியால் ஏற்பட்ட கதி…. தேனியில் பரபரப்பு….!!

கட்டிட தொழிலாளியை மனைவி மற்றும் கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் இன்பராஜ் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி (28) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்பராஜுக்கு அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஆனந்தி(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டதால் காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும்…. உறுதிமொழி ஏற்ற ஆட்சியர்…. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி….!!

கொத்தடிமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமாக கடைபிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தையை வெளிய அனுப்ப முடியல…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைக்காரர் போக்சோவில் கைது….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள அண்ணாநகரில் பாண்டியன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அல்லிநகரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பாண்டியன் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 கிலோ இறைச்சி இவ்வளவு தானா….? அமோகமாக நடைபெறும் விற்பனை…. சந்தேகத்தை எழுப்பிய ஆர்வலர்கள்….!!

ஆட்டு இறைச்சி விலை பாதிக்கு பாதியாக குறைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த மாதத்திற்கு முன்பு ஆட்டு இறைச்சி 1 கிலோ 800ரூபாய் முதல் 900 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இறைச்சி விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ 400 ருபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணிபுரிந்ததால்…. போடி காவல்நிலையத்திற்கு சிறப்பு கேடையம்…. அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுகள்….

தமிழகத்தில் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் சிறந்த 3 காவல்நிலையங்களில் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து தமிழக அரசு சார்பில் பாராட்டு கேடையம் வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்க்கான சிறந்த காவல் நிலையாமாக தேனி மாவட்டம் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் அனைத்து பணிகளிலும் சிறந்த முறையில் செயல்பட்டதன் அடிப்படையில் போடி காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளை கட்டாயப்படுத்திய பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே.நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் பாண்டியம்மாள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென திருமண ஏற்பட்டு செய்துள்ளனர். இதனையடுத்து பாண்டியம்மாள் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், நான் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பாண்டியம்மாளை திருமணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்னால படிக்க வைக்க முடியல…. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

மேற்படிப்பு படிக்க முடியாததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு சினேகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர் பி.காம் படித்துள்ள நிலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து போருலாதரான சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது என நாகராஜ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பாலத்தின் கீழ் கிடந்த பிணம்…. நண்பரே செய்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் போத்திராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று வடுகப்பட்டியில் உள்ள பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்கரை காவல்துறையினர் போத்திராஜனின் உடலை மீட்டு தேனி அரசு […]

Categories
அரசியல்

சுயேட்சை வேட்பாளர்கள் மூவருக்கு ஜாக்பாட்…. என்ன நடந்தது தெரியுமா…?

தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக போன்ற முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதது சுயேட்சை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்திருக்கிறது. தேனி மாவட்டத்தின் பெரிய குளத்திற்கு அருகிலிருக்கும் வடுகப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் இருக்கிறது. அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்பாளர்கள் 45 பேர், வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதில் 1, 10 மற்றும் 11 போன்ற 3 வார்டுகளில் முக்கிய கட்சிகளான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

5 நாட்களாக வீட்டில் இருந்த பிணம்…. கணவர் செய்த கொடூரம்…. தேனியில் பரபரப்பு….!!

மனைவியை கொலை செய்துவிட்டு பிணத்தை மூட்டையில் கட்டி வைத்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தனிப்பாறை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு அம்சகொடி என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளார். மேலும் மணிமாறன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதால் கணேசனும், அம்சகொடியும் அவர்களது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணேசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி…. ரூ. 69,000 பறிமுதல்…. பறக்கும்படையினர் அதிரடி….!!

உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இடுக்கியில் இருந்து அகமது சாலி என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாடி வழியாக நுழைந்த வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஓட்டுனரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரம் பகுதியில் ஹரிமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படி வழியாக மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ஹரிமூர்த்தியின் செல்போன் மற்றும் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ஹரிமூர்த்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆழத்திற்கு சென்ற வாலிபர்…. சோகத்தில் உறைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. தேனியில் பரபரப்பு….!!

தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலியானதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள செங்குளம் கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செங்குளத்தில் இருந்து  மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டனை அருகே உள்ள வருசநாடு-தேனி சாலையில் சென்ற போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் சிக்கிய 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….

கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுகொண்டு உள்ளே மாட்டிகொண்ட 2 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் உள்ள சடையால் கோவில் தெருவில் ராம் பரத் என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், சர்வேஸ்வரன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பரத் வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில் சரண்யாவும் வீட்டிற்கு பின்புறம் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடிக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் விற்பனை…. மேலும் 2 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கோடங்கிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொடாங்கிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாண்டி பணம் போகாது…. பறக்கும்படையினர் அதிரடி…. ஆட்சியரின் திடீர் சோதனை….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதிலும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி முத்துதேவன்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் முரளிதரனும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே…. இப்படியா நடக்கணும்?…. அதிர்ச்சி வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கிய முதல் நாளிலேயே போதுமான பேருந்து வசதி இல்லாததால், ஒரே பேருந்தில் ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை…. இருசக்கர வாகனத்தோடு சிக்கிய நபர்…. 4 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வாராமா தண்ணீர் இல்ல…. கிராம மக்கள் ஆத்திரம்…. சாலை மறியலால் பரபரப்பு….!!

குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மொட்டனூத்து அருகே உள்ள ராமசந்திராபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமசந்திராபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆம்புலன்ஸ் மோதி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் பகுதியில் பீமராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீமராஜ் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது உறவினரின் வாகன பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-கம்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென கட்டுபாட்டை இழந்து பீமராஜ் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த சண்டைக்கே இப்படியா…. மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்…. கணவர் அதிரடி கைது….!!

தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு காயத்ரி(28) என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு காயத்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு தேவதானப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாமனார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி…. 475 பேர் கைது…. தேனியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் 475 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கிய வகாப் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் தேனி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடனால் நடந்த சோகம்…. மேலாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன் தொல்லையால் அவதிப்பட்ட மனமகிழ் மன்றத்தின் மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள  என்.கே.பி.ராஜூ கவுண்டர் தெருவில் வசித்து வந்த ரவிவர்மா என்பவர் கம்பம்மெட்டு சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால் ரவிவர்மா தனது இளைய மகன் சரண் கிருஷ்ணாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் ரவிவர்மா அவதிப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யூடியூபை பார்த்து தயாரித்தோம்…. வனத்துறையினரின் அதிரடி…. 2 பேர் கைது….!!

வெடி மருந்து தயாரித்து காட்டுபன்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சந்தமலைப்பகுதியில் வனச்சரகர் நாகராஜன், வனவர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வனப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து விசாரணை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கு மட்டுமல்ல…. பல்வேறு வழக்குகளில் தொடர்பு…. குண்டரில் வாலிபர் அதிரடி கைது….!!

கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உள்ள தெற்கு தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் தங்கபாண்டியை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தங்கபாண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் தங்கபாண்டியை குண்டர் சட்டத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமானதில் இருந்து கொடுமை….. போலீஸ் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய போலீஸ் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் செல்வபிரியா கொடுத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய…. 2 பேர் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ரவிக்குமாரை கடந்த 6ஆம் தேதி 2 பேர் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசித், கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உணவு தேடி வரும் விலங்குகள்…. பாலித்தீன் பைகளை தின்பதால் அபாயம்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

பாலித்தீன் பைகளை தின்று வனவிலங்குகள் உயிரிழப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி, பெருமாள் கோவில் மலை, கழுதைமேடு ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இச்சூழலில் அப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவை தேடி வனவிலங்குகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 நாளாக போட்ட திட்டம்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 9 பேர்….!!

பழமை வாய்ந்த யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவதானப்பட்டி அடுத்துள்ள புல்லக்காபட்டி அருகே உள்ள புறவழி சாலையில் சிலர் சந்தேகப்படும்படி சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 மாதத்தில் அவ்வளவு கொடுமை…. தரையில் உருண்ட போலீசின் மனைவி …. காவல்நிலையத்தில் பரபரப்பு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசின் மனைவி காவல்நிலையம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக ஏற்கனவே செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு மட்டும் போதாது…. குண்டரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பாஜகவினர் ஆர்ப்பாட்டம்….!!

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி பாஜகாவினர் மற்றும் இந்து இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் பாஜகவினர் மற்றும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கியவர்களில் இதுவரை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். எனவே வழக்குபதிவு செய்த 4 பேரையும் குண்டர் தடுப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும்…. சுகாதார பேரவை கூட்டம்…. ஆட்சியரின் வேண்டுகோள்….!!

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் மருத்துவ நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது ஆட்சியர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியதால் 80% பிரசவங்கள் அரசு மருத்துவமனையிலே நடப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே உஷாரா இருக்கணும்…. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிப்பானங்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயப்பாட்டு வரும் உணவகங்களில் காலாவதியான உணவுகள், குளிர்பானங்கள், அதிக சாயம் பூசப்பட்ட உணவு பொருட்கள், பண்டங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களான மணிமாறன், சரண்யா, ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், சக்தீஸ்வரன் ஆகியோர் கம்பம், வேலப்பர் கோவில் தெரு போன்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சித்தியே செய்த கொடூரம்….!!

சொத்து தகராறில் சித்தியும், சகோதரனும் இணைத்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில்  கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலிபர்களுக்குள் ஏற்பட்ட மோதல்…. கலவரத்தில் முடிந்ததால் பரபரப்பு…. ஏராளமான போலீஸ் குவிப்பு….!!

2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அப்பகுதி உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென அந்த வாலிபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை விலக்கி விட்டு வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் அவரது தரப்பினரை அழைத்துக்கொண்டு கோகிலாபுரத்திற்கு சென்று மீண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனையில் போலீஸ்…. வசமாக சிக்கிய 2 பேர்…. 40 கிலோ புகையிலை பறிமுதல்….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விற்பனைக்காக கொண்டுவந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி மணிகண்டனின் உத்தரவின்படி அபிராமம் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ 200 கிராம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை தான் எப்பவும் சொல்றீங்க…. அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்…. பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு….!!

பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ன பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி அலுவலகத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அருவிக்கு அனுமதிக்க மறுப்பு…. சோதனை சாவடி அடித்து சேதம்…. 2 பேர் கைது….!!

சோதனை சாவடியை சேதப்படுத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கோம்பைத்தொழுவில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக மேகமலை அருவி உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று கோம்பைத்தொழுவை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மேகமலை அருவி குளிக்க சென்றுள்ளனர். அப்போது சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த பிணம்…. கொலையாளிகளுக்கு வலைவீச்சு…. தேனியில் பரபரப்பு….!!

தொழிலாளியை கொலை செய்து எரித்துவிட்டு குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில்  கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு…. முன்னேற்பாடு நடவடிக்கைகள்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்….!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்ற 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழாவை கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாலிபரை தனியாக வரவழைத்து…. கொலைமிரட்டல் விடுத்த கும்பல்…. 3 பேர் மீது வழக்குபதிவு….!!

முன்பகை காரணமாக வாலிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் தாரிக் உசேன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த லெனின் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு லெனின் தாரிக் உசேனை தொடர்புகொண்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த […]

Categories

Tech |