குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து […]
Tag: தேனி மாவட்டம்
வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் வாழ்வில் விரக்தியடைந்து விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாட்டை அடுத்துள்ள கீழபூசனூத்து கிராமத்தில் நாகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நாகராஜ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் நாகராஜ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த நாகராஜ் வாழ்வில் விரக்தியடைந்து திடீரென விஷம் […]
வாரசந்தையில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் சந்தையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி எடுத்து நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சரியாக பராமரிக்க வேண்டும், 4ஜி, 5ஜி இணையதள சேவையை பி.எஸ்.என்.எல் சார்பில் வழங்க வேண்டும், தற்போது உயர்த்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் இணையதள சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் […]
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மூலவைகை ஆற்றின் பிறப்பிடமாக வெள்ளிமலை வனப்பகுதி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகமானது அப்பகுதி […]
உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கோவில் காளை உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஊர்காலப்பர்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் தலைமுறை தலைமுறையாக காளைகளுக்கு பட்டம் சூட்டி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 21 ஆடுகளுக்கு முன்பு ஒரு காளைக்கு பட்டம் சூட்டப்பட்டு அதே பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எதிரே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் பண்டிகையன்று காளைக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் நடத்தப்படும். […]
விமான நிலையத்தில் வேலை வாங்கி குடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாயை ஏமாற்றிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகின்றார். டிப்ளமோ படைத்த இவர் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்கு விமான நிலையத்தில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை நன்றாக தெரியும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி செய்யும்படி அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள ராசிங்கபுரத்தில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மகாதி நகரில் மருத்துவப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 15ஆம் தேதி லக்னோ நகரில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது […]
போடியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையினால் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் குரங்கணி பகுதியில் சுமார் 2 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதனால் பிள்ளையார்பட்டி தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து போடி பகுதியில் பெய்த கனமழையினால் சாலையோர கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மழைநீருடன் கலந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் […]
மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை 7 குண்டுகள் முழங்கி அடக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள கோவில்பாறை கிராமத்தில் முத்தையா என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவ வீரரான இவருக்கு ஆறுமுகவள்ளி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்தையா இமாச்சலபிரதேசத்தில் இந்தோ-திபெத் காவல்படை பிரிவில் பணியாற்றி வந்த முத்தையாவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முத்தையா சிகிச்சை பலனின்றி […]
கால்வாயில் குளிக்க சென்ற ஆட்டோ டிரைவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் இருளப்பன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள குரும்பபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருளப்பன் அப்பகுதியிலுள்ள 58-ம் கால்வாய்க்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருளப்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் […]
ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். துணை ராணுவ வீரரான இவர் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சஞ்சைராஜ் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தந்தை ஜெயக்கனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
கால்நடை மருத்துவமனை செயல்படாததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தங்களது கால்நடைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடமலைகுண்டுவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் வராததை கண்டித்தும், கால்நடைகளுக்கு காணை நோய்க்கான தடுப்பூசி செலுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் பங்கேற்றதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் தீரஜ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மாணவர் சங்க நிர்வாகிகளை புதுச்சேரியில் பல்கலைகழகத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து […]
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான ரவிக்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் […]
கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 268 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் போடி நகர், காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சுமார் […]
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கசாமி என்ற நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
சிறுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள டி.ஒவுளாபுரத்தில் சூர்யா என்ற வாலிபர் வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு இருவரும் சேலத்திற்கு சென்றனர். தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்ததால் மீண்டும் இருவரும் தேனிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரது பெற்றோரும் சிறுமியை பராமரிக்க மறுத்ததால் தனியாக […]
சாலையை கடக்க முயன்ற விற்பனையாளர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையம் சாலையில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். தேனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் இவருக்கு ராஜ செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று செல்லதுரை வழக்கம்போல டாஸ்மாக் கடைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்து மணி, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வண்டியூர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் மலை ஒன்று உள்ளது. இந்நிலையில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் அந்த மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது மலையின் பாறைகள் மீது பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து நடத்திய […]
காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினிவேன் போடிமெட்டு சாலையில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு மினிவேன் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் போடிமெட்டு வழியாக சென்ற அந்த வேன் முதல் கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்த வேன் டிரைவரை மீட்டு அரசு […]
வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தச்சு தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் ரவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு […]
மகன் துரத்தி விட்டதால் மனமுடைந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள சுப்பையாபுரம் பகுதியில் செல்லமாயி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனையடுத்து திடீரென மூதாட்டி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். […]
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தாத்தப்பன்குளம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரான் அமைப்பின் தேனி மாவட்ட தலைவரான இவர் கம்பம்-குமுளி சாலையில் இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று […]
தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிலர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சியினுடைய கொடியை வேனில் கட்டி வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து அந்த வேன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியாக சென்று கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியின் நகர செயலாளர் புஷ்பராஜ் அந்த வேனை நிறுத்தி […]
கள்ளகாதலை கண்டித்த பெண் கவுன்சிலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கடமலை-மயிலை ஒன்றியத்தின் 5-வது கவுன்சிலராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடமையிலைக்குண்டு பகுதியில் கணவர் வேல்முருகன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உமா மகேஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் உமா மகேஸ்வரி […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் நகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக புகைப்பழக்கம் மற்றும் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் […]
உரக்கடை உரிமையாளரிடம் 9 லட்சம் மோசடி செய்த அக்காள், தம்பி என 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது கடையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கடையில் இருந்து 7 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனின் […]
பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்தும், அவர் உருவ பொம்மையை எரித்தும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் பாஜகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற்பதற்க்காக சென்றுள்ளார். அப்போது சிலர் பிரதமர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விழாவை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி மீண்டும் திரும்பி […]
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை […]
முககவசம் அணியாமல் வீதியில் உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை […]
கடனை செலுத்த கால அவகாசம் வேண்டும் என வங்கியின் முன்பு பால்பண்ணை உரிமையாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகின்றார். பால் பண்ணை நடத்தி வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடும்பாறை தனியார் வங்கி ஒன்றில் 12 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அதற்க்கான தவணை தொகையை மாதந்தோறும் தவறாமல் செலுத்தி கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக […]
கொரோனா 3-ஆம் அலை தடுப்பதற்க்கான பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா 3-ஆம் அலை தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் வைரஸ் அத வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதித்த பின்னரே அவர்களை அனுமதிக்கின்றனர். இதனையடுத்து கூடலூர் நகராட்சி சுகாதாரதுறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரி கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் குமுளி அருகே உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து உள்ளது.இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
பணியில் இருந்தபோது மது அருந்திய ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக மதுரை சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் சரவணன் லட்சுமிபுரத்தில் உள்ள நீதிபதியின் குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று நீதிபதி குடியிருப்புக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும்போது சரவணன் மது அருந்திவிட்டு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து பணியில் இருக்கும்போது மதுபோதையில் நிற்கக்கூட […]
சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் பாலசரவணன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் பாலசரவணன் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாலசரவணனின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி நடந்த உண்மைகளை […]
சாலையோரம் உயிரிழந்து கிடந்த காட்டெருமையை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் புதைத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள அரசரடி வனப்பகுதியில் உள்ள வெள்ளிமலை சாலையில் காட்டெருமை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் மேகமலை வனசரகர் சதீஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறையினர் காட்டெருமையை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சென்ற கால்நடை மருத்துவர் உயிரிழந்த காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு அல்லது நோய் […]
காலாவதியான அனுமதிசீட்டை வைத்து கற்களை கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் சோதனை சாவடியில் குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி சென்ற 3 டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் இருந்தது கேரள மாநிலம் ராஜாக்காட்டை சேர்ந்த […]
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள தர்மாபுரி மேற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு முத்துசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துசெல்வி தனது ஸ்கூட்டரில் எஸ்.பி.எஸ். காலனி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அந்த மர்ம […]
முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதியினர் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சரிவர குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் […]
அனுமதி பெறாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஜெய்பீம் புரட்சி புலிகள் அமைப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சொந்த வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு 1,22,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ஆட்சியர் முரளிதரனிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி மொத்தம் 379 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]
கருகலைப்பு செய்யும் போது பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் பாண்டிய பாபு என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழிலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும். 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இந்திராணி இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இதற்காக அரண்மனைபுதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கருவின் வளர்ச்சி குறைவாக […]
வெளிநாட்டிற்கு செல்ல முடியாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை பகுதியில் தாமோதரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் பெங்களூரு மற்றும் தேனி லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் என்ஜினீயரிங் படித்த தாமோதரன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து தாமோதரனுக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்பதற்கு ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமோதரன் தனது தாயார் […]
வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை அடுத்துள்ள தேவதானப்பட்டி மற்றும் மேல்மங்கலம் பகுதியில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் இரண்டு நபர்கள் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை […]
கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம் புதர் மண்டி காணப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையை கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சார்பில் லோயர்கேம்ப்பில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதி கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் 181 வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக […]
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் […]