Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.டி.ஒ கையொப்பத்தை பயன்படுத்தி…. நில அபகரிப்பு மோசடி…. அதிகாரிகள் தீவிர விசாரணை….!!

ஆர்.டி.ஒவின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறில்…. வியாபாரியின் விபரீத முடிவு…. பூங்காவில் ஏற்பட்ட பரபரப்பு….!!

கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகராட்சி கமிஷனர் இடமாற்றம்…. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி…. வெளிவந்த அறிவிப்பு….!!

கம்பம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த அதிகாரியை சத்தியமங்கலத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கமிஷனராக சரவணகுமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமாரை சத்தியமங்கலம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து அவருக்கு பதிலாக மணப்பாறை நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவரை கம்பம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்றதால்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நடுத்தெருவில் சன்னாசி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சன்னாசி நாகராஜை கண்டித்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்…. பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. எச்சரிக்கை விடுத்த நிர்வாகிகள்….!!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் பங்களாமேடு பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி குறித்த பயனாளிகளின் குறித்த பட்டியலை விரைந்து நிறைவு செய்ய வேண்டும், அரசின் உத்தரவின்படி ஓய்வூதியம், கருணைத்தொகை வழங்க வேண்டும், பதவி உயர்வை விரைவில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும்….. அனுமதியின்றி நடந்த ஊர்வலம்…. முஸ்லிம் லீக் கட்சியினர் கைது….!!

அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேரை கைது செய்துள்ளனர்.  தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அவதிப்பட்டு வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர தலைவர் அஷார் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து கம்பம் மெட்டு சாலையில் உள்ள பழைய தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூங்காவிற்கு சென்ற தொழிலாளி…. செய்த விபரீத செயல்…. தேனியில் பரபரப்பு….!!

கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழக-கேரள எல்லைகளில்…. கண்காணிப்பு தீவிரம்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி….!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழக-கேரள எல்லைகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. எனவே  தமிழக-கேரளா எல்லையான தேனியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, மற்றும் குமுளி போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மினி லாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தன்பட்டியில் உள்ள சர்ச் தெருவில் சூசை ஆரோக்கியம் என்ற சுருளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக உத்தமபாளையம்-கோவிந்தன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று திடீரென நிலைதடுமாறி சூசை ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. அகற்றும் பணியில் அதிகாரிகள்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்றும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் தலைமையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 940 பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 96 பள்ளிகளில் மிகவும் பழமையான மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கீழ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய மூதாட்டி…. 2 வீடுகள் சேதம்….!!

சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் சுருளிப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வ.உ.சி திடல் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சிக்கிய மீனம்மாள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மையகவுண்டம்பட்டியில் அமரேசன் என்பவர் வசித்து வந்தார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர் கம்பத்தில் இருந்து பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு சென்ருல்ல்ளர். இந்நிலையில் வீரபாண்டி வழியாக சென்று கொண்டிருந்தபோது தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது வீரபாண்டி புதுப்பாலம் பைபாஸ் பிரிவு சாலையில் வைத்து எதிர்பாராத விதமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்றும் சரியாகல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக் குறைவால் அவதியடைந்த பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ராமையா கவுண்டர் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெனோவா, கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் ஜெனோவா மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில்  விரக்தியடைந்த ஜெனோவா வீட்டில் யாரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒருதலை பட்சமாக செயல்படும்…. போலீசாரை கண்டித்து…. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்….!!

ஒருதலை பட்சமாக செயல்படுக் காவல்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள சுப்பன் தெரு சந்திப்பில் உள்ள டீக்கடையில் கடந்த 13-ஆம் தேதி இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தேனி மாவட்ட ஆதிதிராவிட உறவின்முறை சார்பில் அல்லிநகரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகரித்த பன்றிகள் தொல்லை…. சுகாதாரத்திற்கு பாதிப்பு…. நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை….!!

போடி நகராட்சியில் சுற்றித்திரிந்த 40 பன்றிகளை பிடித்து ஊருக்கு வெளியே விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி நகராட்சி மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் பன்றிகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் போடி நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நகராட்சி ஆணையர் உடனடியாக அப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நகராட்சிகளில் சுற்றித்திரிந்த சுமார் 40 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டப்பட்ட குப்பை கழிவுகள்…. அவதி அடையும் பொதுமக்கள்…. மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை….

கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் தேங்கிய நிலையிலும், குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக கூடலூர் அப்பாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதல்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் கோவில் தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை மூக்கையா மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது தந்தைக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் தனது தந்தைக்கு சாப்பாடு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த தொழிலாளி…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வாலிபர் மீது வழக்குபதிவு….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள மேற்கு தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வயல்பட்டியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி முருகன் மீது மோதியுள்ளது. இதில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 2 பேர் கைது….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய சிறுவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் கொட்டக்குடி ஆற்றில் சிறுவன் உள்பட 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் போடி புதூர் வலசைத்துறை பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கல…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேலை கிடைக்காத வேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள செல்லையாபில்லை தெருவில் ரஞ்சித்குமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். பி.ஏ. ஆங்கிலம் படித்த இவர் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி ரஞ்சித்குமார் தனது சகோதரி ராதா வீட்டிற்கு சென்றார். அப்போது ரஞ்சித்குமார் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆணவ கொலையை தடுக்க வேண்டும்…. வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க வேண்டும், ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு தேனி தாலுகா தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க தலைவர் நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. வசமாக சிக்கிய லாரிகள்…. 7 டன் அரிசி பறிமுதல்….!!

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவது அதிகரிக்கும் நிலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. அதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரியரில் நடக்கும் கடத்தல்…. போலீஸ் அதிரடி சோதனை…. 22 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் மூலம் கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தேனி அரண்மனை புதூர் பகுதியிலுள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்ததில் போலியான தனியார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. டி.என்.ஏ முடிவில் வெளிவந்த உண்மை…. தந்தை அதிரடி கைது….!!

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு 18 வயது ஆகாததை அறிந்த மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தை நல குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நலக்குழுவினர் மருத்துவமனைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

படபிடிப்பில் ஏற்பட்ட தகராறு…. யோகிபாபு உதவியாளர் காயம்…. டிரைவர் மீது வழக்குபதிவு….!!

திரைப்பட நடிகர் யோகிபாபுவின் உதவியாளரை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு நடிக்கும் வரும் “மலையோரம் வீசும் பூங்காற்றே” என்ற திரைபடத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மற்றும் கொட்டகுடி மலைப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி பாபுவிற்கு உதவியாளராக சேலத்தை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து சதாம் உசேனுக்கும், யோகி பாபுவின் கார் டிரைவரான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 10 அடி பாம்பு…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு துறையினர் அதிரடி….!!

கூலி தொழிலாளி வீட்டில் புகுந்த 10 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள புதூர் ரயில் ரோடு தெருவில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வேலையை முடித்துவிட்டு வீட்டில் இருந்த போது பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காசி உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய திட்டம்…. 34 கோடி மதிப்பீட்டில்…. சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்….!!

தமிழக அரசு சார்பில் 34 கோடி மதிப்பீட்டில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 58க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் சுமார் 2749 8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட மற்றும் கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிக்கவும் தண்ணீர் இல்ல….. பெண்கள் சாலை மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, க.புதுப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிக்கவும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் உத்தமபாளையம்-கம்பம் நெடுஞ்சாலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கிய வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…. விவசாயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல்….!!

தொழிலாளியை காத்தியால் தாக்கிய விவாசயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினரான நாகராஜனும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணனுக்கும், நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. மறவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி மறவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட மறவர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் உத்தரவின்படி சீர்மரபினர், சீர்மரபினர் பழங்குடியினர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறவர் […]

Categories
பல்சுவை

தமிழகத்தில் டிசம்பர் 19…..மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை சேர்ந்து வரும் 19-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த விருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மக்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதமாக அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்…. கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை…. நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட அமைப்பு குழு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் நடக்கும் விற்பனை…. 75 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்ததிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள பண்டாரவூத்து வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பண்டாரவூத்து வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும்…. திமுக அரசை கண்டித்து…. பாஜகவினர் நுதன போராட்டம்….!!

கருத்து சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் நுதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பாஜகவினர் மீது பொய் புகார் போடும் காவல்துறையை கண்டித்தும், குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தும் திமுக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்த லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலை தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து புண்ணாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாற்றி ஒன்று தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளது. இந்த லாரியை சந்திரன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி போடி அருகே உள்ள அணைக்கரபட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென லாரி ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளார். இதனையடுத்து அங்கிருத்த தடுப்பு சுவரில் போது லாரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன்…. சிகிச்சை பலனின்றி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நாகலகவுண்டன்பட்டியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். துர்கேஷ் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மல்லிகா மற்றும் துர்கேஷ் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்திற்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. நுதன முறையில் போராட்டம்…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் கோரிக்கை….!!

மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் வாகனத்தில் சாலையில் நிறுத்தி நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் நேரு சிலை சிக்னல் அருகே சிஐடியூ சங்கத்தினர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இருசக்கர வாகனத்தை 10 நிமிடங்கள் நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப் புதிய திட்டத்தை கண்டித்து…. விவசாயிகள் தர்ணா போராட்டம்…. போலீசார் பேச்சுவார்த்தை….!!

லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் அலுவலகத்தின் முன்பு முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் உள்பட 6 விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் இருந்து மதுரைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 21 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டை சோதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்…. கைது செய்த வனத்துறையினர்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்றுகோம்பை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் ஒருநபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிக்க கூட தண்ணீர் இல்ல…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…. போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட பரபரப்பு….!!

குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள கீழசொக்கநாதபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் உடனடியாக வழங்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான…. முப்படை தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு…. பல்வேறு அமைப்பினர் அஞ்சலி….!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி அதிகாரி உள்பட ராணுவ அதிகாரிகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உருண்டு விழும் நிலையில் ராட்சத பாறை….. சேதம் ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

மூஞ்சில்கரடு மலைப்பகுதியில் உள்ள ராட்சத பாறையை ஒன்று உருண்டு கீழே விழும் சூழலில் இருப்பதால் அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மூஞ்சில்கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் மழையின் அடிவாரத்தில் விவசாயிகள் தக்காளி, நிலக்கடலை, மிளகாய், பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் பற்றி தெரிந்தால்…. உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்…. மாணவர்களுக்கு விழிப்புணர்வு….!!

குழந்தை திருமணம் மற்றும் போதை பொருள் தடுப்பு ஆகியவை குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சி.பி.யு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறையினர் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போதைப்பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் ஆகியவை குறித்த விழிப்புணர்ச்சி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் துணை சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போதைப் பழக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 மாசம் தான் ஆச்சு…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணமாகி ஒரு மாதங்களிலேயே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள உலகதேவர் தெருவில் கவுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த புவனேஸ்வரி கடந்த 3 நாட்களாக கணவர் உள்பட யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவுதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது அரிவாளை வீசிய நபர்…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்…. போலீசார் வலைவீச்சு….!!

தனியார் பேருந்து மீது அரிவாளை வீசிவிட்டு  தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் குமுளியில் இருந்து தேனியை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த பேருந்தை க.புதுபட்டியை சேர்ந்த சாம் என்பவர் ஒட்டி வந்தார். அப்போது போடேந்திரபுரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஒருநபர் பேருந்துக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதனால் பேருந்து ஓட்டுனர் சாம் அந்த நபரை கண்டித்துள்ளார். இதனையடுத்து டிரைவருக்கும் அந்த நபருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…. ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…. தேனியில் நடந்த அதிசயம்….!!

நெற்றில் கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை கிராமமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன் கோட்டை கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்க்கும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் வீட்டில் வளர்ந்த ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டியின் நெற்றியில் 2 கண்கள் இருந்துள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் மிகவும் வியப்படைத்து நெற்றியில் கண்ணுடன் பிறந்த அதிசய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தையிடம் கொடுத்த 16½ பவுன் நகை…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி வீட்டில் இருந்த 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவேதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுவேதாவும் அவரது கணவரும் தினமும் வேலைக்கு சென்று வருவதால் சுவேதா தனது 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற முதியவர்கள்…. திடீரென வழிமறித்த கரடி…. அச்சத்தில் கிராம மக்கள்….!!

ஆடு மேய்க்க சென்ற 2 பேரை வழிமறித்து கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள மல்லையாபுரத்தில் மணி, ராஜப்பன் ஆகிய முதியவர்கள் வசித்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள சின்னமலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் மீண்டும் ஆடுகளை அழைத்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென கரடி ஒன்று அவர்களை வழிமறித்து இருவரையும் தாக்க முயன்றது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் நினைவு தினம்…. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்…. பெரியகுளத்தில் ஊர்வலம்….!!

அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினைத்தை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதிமுருகன், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் […]

Categories

Tech |