Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரத்த கொடையாளர் தினம்… 1,150 யூனிட் ரத்தம் சேகரிப்பு… பாராட்டு தெரிவித்த ஆட்சியர்…!!

உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட கொடையாளர்களுக்கு ஆட்சியர் கேடயம், சான்றிதல் வழங்கி பாராட்டியுள்ளார். தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்த கொடையாளர் தினம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ரத்த தானம் வழங்கிய 100க்கு மேற்பட்ட கொடையாளர்களுக்கு ஆட்சியர் கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறிய டிரைவர்… 12 லட்சம் மோசடி… தந்தை மகனுக்கு வலைவீச்சு…!!

வேலை வாங்கி தருவாதாக கூறி 12 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தந்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் செல்லாயிபுரம் பகுதியில் செல்வலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் அல்லிநகரம் அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேருந்து ஓட்டுனரான அழகுமலை என்பவரது மகன் பொன்ராமிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அழகுமலையும் கடந்த 2018ஆம் ஆண்டில் செல்வலிங்கம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீஸ் அதிரடி வாகன சோதனை… 50 கிலோ அரிசி பறிமுதல்…!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊழியர்கள் பணியிடை நீக்கம்… நகராட்சி அலுவலர்கள் எதிர்ப்பு… ஆணையாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

நகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து ஆணையாளரை கண்டித்து அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமீப காலத்தில் நகராட்சி ஊழியர்கள் 3 பேரை எவ்வித விசாரணையுமின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி ஆணையாளரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் உடைய நகர தலைவர் முனிராஜ் தலைமை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற… மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் போன்ற உபகோட்டங்கள் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணம் தடுப்பு பிரச்சாரம்… நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி… ராக்கி கட்டிவிட்ட குழந்தைகள்…!!

குழந்தை திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், சமூக நலன் மற்றும் மக்கள் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழுப்புணர்வு பிரச்சாரம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும், இதனால் குழைந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்…. சிறுவன் செய்த காரியம்… போலீஸ் நடவடிக்கை..!!

ரேஷன் கடை ஊழியரின் செல்போனை திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அன்னஞ்சி மேற்குத் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் நைசாக கணேசனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கணேசனின் வீட்டில் இருந்து வெளியே வருவதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காணை நோயால் மாடுகள் பாதிப்பு… மருத்துவமுகாம் அமைத்து சிகிச்சை… அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு…

காணை நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்வையிட்டு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள முதலக்கம்பட்டி, அம்சாபுரம், காமக்காபட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாடுகளுக்கு காணை நோய் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு குழு உதவி இயக்குனர் கணபதி ராமன் தலைமையில், மருத்துவ குழுவினர் அப்பகுதிகளுக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்தந்த பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகளின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ரசீது சீட்டு மூலம் மோசடி… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 6 பேர் மீது வழக்குபதிவு…!!

போலி ரசீது சீட்டு தயார் செய்து 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் நெல்லிகுத்தி தெருவிலும், காமயகவுண்டன்பட்டியிலும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த இரண்டு கடையின் கணக்கு வழக்குகளை கார்த்திகா என்று பெண் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் உரிமையாளர் கவுதம் திடீரென கடையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கேமராவில் பதிவான கட்சிகள்… மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேனி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்து விட்டு பாலன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 60,000 ரூபாய் திருடு போயிருந்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் வேதனை… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத வேதனையில் கட்டுமான தொழிலாளி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள வள்ளுவர் காலனியில் அருண்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டுமான தொழிலாளியான இவருக்கு முத்துமீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்துள்ளனர். இதனையடுத்து விரக்தியடைந்த அருண்பாண்டி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டி அருகே உள்ள ஆர்.எம்.டி.சி காலனியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பழனிசெட்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ராமரின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்த இருவர் பிணம்…. விரைந்து சென்ற போலீசார்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

காவிரி ஆற்றில் மிதந்த மூதாட்டி உள்பட 2 பேர் உடலை மீட்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கரட்டுப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலும், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடலும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்ம நபர்கள் செய்த காரியம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நாடார் தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மணலுடன் டிராக்டர் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மொட்டனூத்து பகுதியில் ராஜதானி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி சென்று கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணல் அள்ளிய காமட்சிபுரத்தை சேர்ந்த மணிமாறன், கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள விநாயகர் நகரில் தரணிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தையை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தரணிதரன் தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் கல்லூரிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற விவசாயி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… வாலிபர் கைது…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள வாலிப்பாறை பகுதியில் வனம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த வாலிபர் தன்னை அனாதை என்றும் எனக்கென யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு பரிதாபப்பட்ட வனம் தனது வீட்டிலுள்ள ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலை கொடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி வனம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள குமணன்தொழு கிராமத்தில் விருமாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல விருமாண்டி கடையை திறப்பதற்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8,000 ரூபாய் திருடு போனது தெரியவந்துள்ளது. இதேபோல் விருமாண்டி பெட்டி கடைக்கு அடுத்துள்ள முத்தையா என்பவரின் பலசரக்கு கடையில் இருந்த 4,000 ரூபாயும் திருடு போயுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை… டாஸ்மார்க் மேற்பார்வையாளர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரகார தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு மகேந்திரன் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகமுடியததால் வேதனை… தொழிலாளியின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

வேலைக்கு போகமுடியாமல் மனமுடைந்த தொழிலாளி விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கீழே விழுந்து வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வலியால் துடித்த டீக்கடைக்காரர்… எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்றுவலியால் அவதிப்பட்ட டீக்கடைக்காரர் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மேக்கிழார்பட்டியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீராசாமி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த வீராசாமி கடந்த 7 ஆம் தேதி டீக்கடையில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆடுமேயத்து கொண்டிருந்த நபர்… திடீரென ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள அ.ரெங்கநாதபுரம் பகுதியில் போதுமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வாடிப்பட்டி அருகே உள்ள 18ஆம் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கால்வாய் அருகே நின்று கொண்டிந்தபோது திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்து உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து போதுமணி உடல் கால்வாயில் மிதப்பதை பார்த்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த பிரச்சனை… மாணவனின் விபரீத முடிவு… சோகத்தில் ஆழ்ந்த பெற்றோர்…!!

செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அரவிந்த் அப்பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் படிக்காமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். எனவே கண்ணன் அரவிந்தை சொல்போன் பார்க்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் வீட்டில் விஷம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடங்கப்பட்ட கட்டுபாட்டு அறை… தயார் நிலையில் வீரர்கள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

வடகிழக்கு பருவமழையையோட்டி பேரிடர் மீட்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.  இதனையடுத்து தாழ்வான பகுதிகள் மற்றும் எளிதில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தந்தை இறந்ததால் சோகம்… மகனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த சோகத்தில் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி அரசுத்து மருத்துவமனையில் உள்ள ஆய்வக மையத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு சீனிவாசனின் தந்தை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் சீனிவாசன் மனமுடைந்து யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கள்ளர் கிழக்கு தெருவில் பரதன் என்பவர் வசித்து வந்துள்ளார் இவரது 2-வது மகள் சுபஸ்ரீ 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபஸ்ரீ கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த மாணவி வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்… ஒருவர் உடல் மீட்பு… போலீஸ் விசாரணை…!!

வராக நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடலை மீட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் அக்ரஹாரம் பகுதியில் வித்யபாரதி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மதுரையை சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் உள்ள வராக நதியில் ஓடிக்கொண்டிருந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே ஆண்டில் 3-வது முறை… சீராக உயரும் வைகை அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

ஒரே ஆண்டில் 3வது முறையாக வைகை அணை நிரம்பவுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த செய்தியை கேட்டு… தாய்க்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேக்கிலு கவுடர் தெருவில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். டி.வி. மெக்கானிக்கான இவருக்கு மாதா என்ற மனைவியும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹரிஹரன் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே ரவி மகனை வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட சென்றபோது…. வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து மின் வேன் மீது மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், விபூஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் மணி மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முன்பகையால் ஏற்பட்ட தாக்குதல்… வாலிபருக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணை…!!

முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதலில் வாலிபருக்கு அரிவாளால் வெட்டிய நபரை மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.வி.கே.கே நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் போடி புதூர் பகுதியில் வசிக்கும் தங்கபாண்டியன் என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தங்கபாண்டியன் திடீரென பிரபாகரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… மினி லாரி டிரைவர் கைது..!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் உதவி சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில், கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா மற்றும் காவல்துறையினர் லோயர் கேம்ப்-குமுளி மலைப்பாதையில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் பொறியாளர் அளித்த புகார்… கணவர், மாமியார் மீது வழக்குபதிவு…!!

பெண் உதவி பொறியாளரை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள காந்திநகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி தேனி பொதுபணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் அவரது தாயார் சந்திரலேகா இருவரும் இணைத்து ராஜேஸ்வரியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தொடர்ப்பு… ஆட்சியரின் அதிரடி உத்தரவு… வாலிபர் குண்டரில் கைது…!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அணைக்கரப்பட்டியில் நல்லதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக நல்லதம்பி தனது உறவினரை முருகனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் நல்லதம்பி மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் நல்லதம்பி மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே நல்லதம்பியை குண்டர் சட்டத்தின் கீழ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பதவி உயர்வு வழங்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்… சுகாதார ஆய்வாளர் சங்கம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பணிகளில் ஓய்வில்லாமல் பணிபுரியும் 1,002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை உறுதி செய்யவேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் இரண்டாவது நிலை பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மும்முரமாக நடைபெறும் வியாபாரம்… வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி… கடந்த ஆண்டை விட விலையுயர்வு…!!

தீபாவளி பண்டியையையொட்டி சந்தையில் ஆடு வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆடு, கோழி வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக வெள்ளாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவுவதால் வெள்ளாடுகளின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 15 கிலோ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை… தோண்டிமலையில் மண் சரிவு… வாகன ஓட்டிகள் அவதி…!!

பரவலாக மழை பெய்து வருவதால் தோண்டிமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பூப்பாறை வரை 11 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு தொடங்கிய இந்த பணிகள் தற்போது 90% வரை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தேனியில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டுவில் இருந்து பூப்பாறை செல்லும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு… நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி… நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கத்தோடு கேரள நடிகர்கள் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி… உயிர் தப்பிய டிரைவர்… தேனியில் கோர விபத்து…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கம்பம்மெட்டு மலைபகுதியில் லாரி கவிழ்ந்து விபத்தடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள யாதவர் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து கால்நடைத் தீவனங்களை கேரள மாநிலம் இடுக்கிக்கு சவாரிக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல கால்நடைத் தீவனங்களை ஏற்றிக்கொண்டு லாரி கம்பத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கம்பம்மெட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்துவரும் மழை… வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வினாடிக்கு 1,369 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதனடிப்படையில் சுமார் 70 அடி உயரம் கொண்ட வைகை அணையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுத்தைபுலி நடமாட்டம்… வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு… குண்டுகள் அமைத்து நடவடிக்கை…!!

சிறுத்தை புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை மற்றும் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஈஞ்சமலை  உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடு,ஆடு போன்றவற்றை சிறுத்தை புலி அடித்துக் கொன்றுவிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில்  வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி சிறுத்தை புலியின் காலடி தடத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் 15 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் புகுந்த உடும்பு… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்… வனத்துறையினரிடம் ஒப்படைப்பு…!!

கூலித்தொழிலாளி வீட்டில் நுழைந்த உடும்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள அமராவதி நகர் 3வது தெருவில் மூக்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்குள் திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மூக்கையா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போடி தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது எழுந்த புகார்… லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… போலீஸ் தீவிர விசாரணை…!!

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் கேட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை  காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐம்பொன் சிலைகள் கொள்ளை… சரணடைந்த வாலிபர்… 2 பேர் சிறையில் அடைப்பு…!!

கோவிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த 2 வாலிபர்களை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் அரண்மனை புதூர் அருகே உள்ள முல்லை நகரில் தட்சிணாமூர்த்தி கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி கோவிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சிலைகளை கொள்ளையடித்து பெருங்குளத்தை சேர்ந்த ஸ்ரீதர், மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 27ம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஜீப்… பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

கம்பம்மெட்டு மலை அடிவார பகுதியில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டத்திற்கு தொழிலாளர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்காபுரத்தை சேர்ந்த பெண் தோட்டத் தொழிலாளர்களை அழைத்து கொண்டு ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வேலையை முடிந்ததும் தொழிலாளர்களுடன் மாணிக்ககாபுரத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது கம்பம்மெட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிரடி வாகன சோதனை… தப்பியோடிய லாரி டிரைவர்… 10டன் அரிசி பறிமுதல்…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த 10டன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தமபாளையம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி ஸ்ரேயா குப்தா தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள புறவழி சாலையில் தீவிர வாகன […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி… திடீரென மாயம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நடைபயிற்ச்சிக்கு சென்ற மூதாட்டி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள தென்றல் நகரில் பாண்டியன் என்பவர் தனது மனைவி மயில்தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மயில்தாய் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த 27ஆம் தேதி வழக்கம்போல மயில்தாய் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரவாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் மயில்தாயை கண்டுபிடிக்க முடியாததல் பாண்டியன் இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி கொலை வழக்கு… 9 ஆண்டுகளுக்கு பிறகு… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பவுன்தாய் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து பவுன்தாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த தகவலும் சின்னதுரைக்கு தெரிவிக்கவில்லை. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை… சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு… 120 கண்காணிப்பு கேமராக்கள்…!!

குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே விசாரணை நடத்தி மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீடிர் சோதனை… ஊழியர்களிடம் விசாரணை… நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்துப்பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார […]

Categories

Tech |